Aggregator
சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு
சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு
Published By: DIGITAL DESK 3
07 JUL, 2025 | 03:21 PM
சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்? ஊடகவியலாளரின் சாட்சியம்
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!
யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது.
உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல.
செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!!
பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves
https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்? ஊடகவியலாளரின் சாட்சியம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
Published By: DIGITAL DESK 3
07 JUL, 2025 | 04:00 PM
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும்.
ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றபனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவருடைய மகளான மகளான 21 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை!
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை!
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை!
அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க இலங்கை முயன்றதை அடுத்து, நிறுவனம் அந்த முடிவை எடுத்தது.
அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட கடந்த அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவை NPP அரசாங்கம் ஏற்கவில்லை.
வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரி நகரங்களில் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, காற்றாலை மின் நிலையத் திட்டத்தை இந்த நிறுவனம் நிர்மாணிக்கவிருந்தது.
இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம், நிறுவன அதிகாரிகள், இலங்கையில் நிலையான எரிசக்தி ஆணையத்துடன் (SEA) இணைந்து ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்காக ஆரம்பத்தில் செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.
இருப்பினும், SEA-க்கு செலுத்தப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடு செய்யப்பட வேண்டிய சரியான தொகையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை.
திருப்பிச் செலுத்துவது குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும் என்று மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏதேனும் பணம் செலுத்தப்பட வேண்டியிருந்தால், அது அமைச்சரவை ஒப்புதல் மூலம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.