Aggregator
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்
“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.”
“எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது கோபப்படுவேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.”
இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார்.
இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது.
கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள்.
பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர்.
சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும்.
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.
கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது.
அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது.
சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும்.
இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.”
https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf
தகவல் உதவி - maatram
Just now, alvayan said:இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்

கவ்வாது கேள்விப் பட்டிருக்கிறன்...அதென்ன கத்னா....
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் — கருணாகரன் —
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் — கருணாகரன் —
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்
— கருணாகரன் —
சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க.
நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் ‘அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று எழுதினேன்.
கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம்.
இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும்.
இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே.
செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள்.
இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது.
எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்…
இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது.
அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ, நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது.
ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது.
ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம்.
இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன்.
செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது.
என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.
இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது.
நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது.
ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர்.
அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும்.
“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா?
குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர்.
இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள்.
இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே!
இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது?
‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும்.
‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!!
ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு?
ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம்.
நிச்சயமாக அப்படியில்லை.
இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை.
ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம்.
இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது.
ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும்.
இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது.
சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும்.
அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது.
இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும். இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்..
புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது. நாடாவெட்டி ஆரம்பமான வணிக சந்தையானது தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர்.
வணிகத்துறை சார்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பாடசாலை மட்டத்தில் உருவாக்குவதும், வர்த்தகத் துறை சார்ந்த விடயத்தை கல்வி துறையில் ஒரு உயர்ந்த பகுதியாக மாற்றும் நோக்கிலும் இந்த வணிக தினமும் வணிக வாரமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க
அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க
06 Jul, 2025 | 05:55 PM
(இராஜதுரை ஹஷான்)
கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பெறுபேற்றை வெகுவிரைவில் அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டு கடன் தொகை உயர்வாக காணப்பட்டது.
அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த வன்முறைகள் பொறுப்புக்கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது விடுதலை புலிகளின் தாக்குதலினால் அரச நிர்வாக கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு பொறுப்புக்கூற வேண்டுமா என்பதையும் ஆராய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு 8.6 சதவீதத்தில் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் போது அதன் பிரதி விளைவை எவரும் ஆழமாக ஆராயவில்லை.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிதியே பாரியளவில் மோசடி செய்யப்பட்டன.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.கோட்டாவுக்கு வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்தார். நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்;டபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள்.
அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும்.
தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது என்றார்.
அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க | Virakesari.lk
இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர
இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர
07 Jul, 2025 | 12:16 AM
(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும்.
அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன.
தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார்.இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர | Virakesari.lk