Aggregator
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு இஸ்ரேல் திட்டம் - மனித குலத்திற்கு எதிரான குற்றம் என கடும் கண்டனங்கள்
காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு இஸ்ரேல் திட்டம் - மனித குலத்திற்கு எதிரான குற்றம் என கடும் கண்டனங்கள்
Published By: RAJEEBAN
08 JUL, 2025 | 11:11 AM
guardian
காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார்.
இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர்.
ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார்
பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுடன் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுக்கான ஒரு மாநாட்டில்இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய படைகள் தளத்தின் சுற்றளவைக் கட்டுப்படுத்தி ஆரம்பத்தில் 600000 பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதிக்குள் "நகர்த்தும்" - பெரும்பாலும் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள்.
இறுதியில் காசாவின் முழு மக்களும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் மேலும் இஸ்ரேல் "குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அது நடக்கும்" என்று என ஹரெட்ஸ் செய்தித்தாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை "சுத்தப்படுத்த" வேண்டும் என்று பரிந்துரைத்ததிலிருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கட்டாய நாடுகடத்தலை உற்சாகமாக ஊக்குவித்து வருகின்றனர் பெரும்பாலும் இது ஒரு அமெரிக்க திட்டமாக முன்வைக்கின்றனர்.
காட்ஸின் திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான மைக்கேல் ஸ்ஃபார்ட்தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார்." என்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்.. "இது காசா பகுதிக்கு வெளியே நாடுகடத்தப்படுவதற்கான தயாரிப்பில் தெற்கு முனைக்கு மக்கள்தொகை பரிமாற்றத்தைப் பற்றியதுஎன்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்
ஒருவரை அவர்களின் தாயகத்திலிருந்து விரட்டுவது ஒரு போர்க்குற்றமாகும் ஒரு போரின் பின்னணியில். அவர் திட்டமிட்டது போல அது மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டால் அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மாறும்" என்று ஸ்ஃபார்ட் மேலும் தெரிவித்துள்ளார்."
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்- கனடா பிரதமர்
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்- கனடா பிரதமர்
Published By: RAJEEBAN
08 JUL, 2025 | 07:54 AM
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் நம்பகத்தன்மை சீர்குலையும்; அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் நம்பகத்தன்மை சீர்குலையும்; அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை
Published By: VISHNU
08 JUL, 2025 | 01:41 AM
(நா.தனுஜா)
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஜயம் அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என்ற பதவியையும், அக்கட்டமைப்பையும் கேள்விக்குரியதாக மாற்றியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
'எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 60 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாரகள் இணைந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பிவைத்திருந்தனர். அதற்கு முன்பதாக வருகைதரும் பட்சத்தில் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையின் காத்திரத்ன்மையை வலுவிழக்கச்செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
'இருப்பினும் அக்கரிசனைகளுக்கு மத்தியில், அவற்றை மீறியே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உயர்ஸ்தானிகர் செயற்படாவிடின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீதான நம்பகத்தன்மை முற்றுமுழுதாக இழக்கப்படும்' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மாற்றான் தாய் மனநிலையுடன் தமிழர்களை கையாள்கிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்; அரசின் படுகொலைகளை அரசே விசாரிப்பது ஏற்புடையதல்ல - தமிழரசுக்கட்சி
மாற்றான் தாய் மனநிலையுடன் தமிழர்களை கையாள்கிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்; அரசின் படுகொலைகளை அரசே விசாரிப்பது ஏற்புடையதல்ல - தமிழரசுக்கட்சி
Published By: VISHNU
07 JUL, 2025 | 09:42 PM
(நா.தனுஜா)
உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்துரைத்த சிறிதரன், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச அரங்கில் நிறுத்தமாட்டோம் எனவும், உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கிறார் என விசனம் வெளியிட்டார்.
அதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் விஜித்த ஹேரத் அவ்வாறு பேசுவதாகக் குறிப்பிட்ட சிறிதரன், இருப்பினும் மீறல்களாலும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான் தமது தேவை என்னவென்பதைக் கூறவேண்டும் எனக் குறிப்பிட்ட சிறிதரன், இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணைகளை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச சபையின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கிய இந்திய தூதரகம்!
காரைநகர் பிரதேச சபையின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கிய இந்திய தூதரகம்!
08 JUL, 2025 | 08:54 AM
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே நேற்று திங்கட்கிழமை (07) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
கருத்து படங்கள்
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.