Aggregator
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
Published By: Digital Desk 3
06 Jan, 2026 | 05:35 PM
![]()
அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது.
அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
டாம் பென்னட்
6 ஜனவரி 2026, 07:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு "டான்றோ கோட்பாடு" என்று மறுபெயரிட்டார்.
சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கிரீன்லாந்து
கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே உள்ளது. ஆனால், டிரம்ப் அந்த முழுத்தீவையும் கைப்பற்ற விரும்புகிறார்.
"தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் "ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் குறிப்பிட்டார்.
டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவுக்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன.
தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது.
வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு "கற்பனை" என்று டிரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
"இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக்கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
கொலம்பியா
வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது.
இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக 'கோகைன்' கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் கும்பல்கள் "செழிக்க" பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
"கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவுக்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார்.
கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், "அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது" என்று பதிலளித்தார்.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரான்
இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது "மிகக் கடுமையான தாக்குதல்" நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
"நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கோட்பாட்டு ரீதியாக, இரானானது "டான்றோ கோட்பாட்டின்" எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது.
இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.
கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது.
2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ
2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் "சுவர் எழுப்பப்படும்"என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது.
2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , "அமெரிக்க வளைகுடா" என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் "பெருக்கெடுத்து ஓடுவதாகவும்", நாம் "நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார்.
அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் "மிகவும் வலிமையாக" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.
கியூபா
புளோரிடாவுக்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது.
இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது.
கியூபா "வீழ்வதற்குத் தயாராக" இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார்.
மேலும், "அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை," என்று தெரிவித்த டிரம்ப் , "அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்," என்றும் குறிப்பிட்டார்.
கியூபாவுக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும்பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்"என்றார்.
மேலும், "அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாம்புக்கடிக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு
பாம்புக்கடிக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு
பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு
Jan 6, 2026 - 06:51 PM
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி
Jan 6, 2026 - 07:42 PM
நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் "போதைப்பொருள் அற்ற நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது.
போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம்(05.01.2026) இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடந்த 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர் விடுவிப்பு கோரிக்கை
கைது செய்யப்பட்ட பிரபு(49), நாகராஜ்(47), ரூபன்(45) ஆகிய மூன்று கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/reel/837653312421458
இந்நிலையில், கைதான பிரபு, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து எடுத்துக் கொள்பவர் என்றும், இவருக்கு கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் சிகிச்சை பெற இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கடற்றொழிலாளர் பிரபு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உடன் இருக்கும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அவரை உயிருடன் தங்களிடம் ஒப்படைக்குமாறும் உறவினர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://tamilwin.com/article/tamil-nadu-demands-release-of-fisherman-1767696094