Aggregator
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு.
”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மற்றும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி ” ‘கடலூரில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை” இவ்வாறு கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு!
இரசித்த.... புகைப்படங்கள்.
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.
இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் 2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது.
எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார்.
இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது. வாங் யாங்கை ஜனாதிபதி பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது.
இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.