ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.
அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................
"பனையின் கீழ் இருந்து பால் குடித்தது போல் " கண்ணதாசன் போன்றவர்கள் எந்தப் பெண்களையும் நல்ல மனத்துடன் பாராட்டினாலும் கூட அது சரியாக சமூகத்தில் எடுபடாது கவிஞரே ..........! 😂
உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?
எல்லாப் பக்கம் இருந்தும்… ஒரே நச்சரிப்பு வரும் போது, நோபல் பரிசு ட்ரம்புக்கு கிடைக்கும் போல்தான் இருக்கு. போதாக் குறைக்கு… ட்ரம்பும், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று வாய் விட்டு கேட்ட பிறகு… நோபல் பரிசு கமிட்டிக்கு வேறை வழி இல்லை என நினைக்கின்றேன். 😂
புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்கள் அரசியல் மயப்படுத்தப் படாத மாபெரும் பேரணி ஒன்றைச் செய்ய வேண்டும்.
நான் என்ன எழுதினேன், நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் அண்ணை? ஓரு அரைபைத்தியம் பள்ளி சிறுமிகளை (18 வயதுக்கு கீழானவர்களை) கர்ப்பம் தரிக்க உதவி தொகை கொடுக்கிறது, அதை நீங்கள் நல்ல விடயம் என்கிறீர்கள். ஒரு மைனர் பெண் குழந்தை இன்னொரு குழந்தையை சுமப்பதை நல்ல விடயம் என்றா சொல்கிறீர்கள்?
இந்தியாவும் தமிழ் நாடும் அப்படித்தான் ஐயா, பெரியவரே. ஆனால் பாலகன் நான் சொல்ல வந்தது - இப்படியான கொலைகள் நடக்கும் போது முன்னர் இருந்த அரச அலட்சியம் இங்கே இல்லை. மாறாக ஒரு மாநில அரசு செய்ய கூடிய, வேண்டியதை தா நா அரசு செய்துள்ளது. 🤣 ஈ வே ரா வோ…. வே. பி யோ…. நல்லதை நல்லதெனவும், அல்லதை அல்ல எனவும் சொல்லியே பழக்கம். அப்படி சொல்லும் போது எந்த வண்ணத்தை எவர் தீட்டினாலும் பரவாயில்லை 🤣.