Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
வாத்தியார் அண்ணா ம‌ற்றும் செம்பாட்ட‌ன் அண்ண‌ அகஸ்தியன் அண்ண ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் க‌ட‌சியாக‌ வ‌ரும் அணிய‌ பிழையாக‌ க‌ணித்து விட்டின‌ம் வாத்தியார் அண்ணா தென் ஆபிரிக்கா க‌ட‌சியாக‌ வ‌ரும் என‌ தெரிவு செய்த‌தை நினைக்க‌ மேல் ஓட்ட‌மாய் சிரிப்பு வ‌ருது😁😁😁😁😁😁😁😁...................

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

2 months ago
நீங்கள், ஏன் என்னை காவடி என்று சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காவடி தூக்குவதென்றால்; ஒருவர் என்ன செய்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பது. ஆனால், அனுரா தவறு செய்தாலும் விமர்சிப்பேன், அதே மஹிந்த நல்லது செய்தாலும் வரவேற்பேன். அவர்தான் எதுவும் தமிழருக்கு செய்யவுமில்லை, செய்பவரை விடுவதுமில்லை, தீயதாவது செய்யாமல் இருக்கலாம். இது நடுவு நிலைமை. இன்று மட்டுமல்ல பல தடவை இவர்களின் செயற்பாட்டை நான் விமரிசித்துள்ளேன், நீங்கள் அதை கவனிக்கவில்லைப்போலும். இன்னும் பலதடவை சொல்லுங்கள், அதனால் எனக்கேதும் குறையப்போவதில்லை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
அரை இறுதி போட்டிகள் நடக்கும் போது மழை வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அரை இறுதி, இறுதி போட்டிகள் மழை காரணமாக நடைபெறாவிட்டால் மறுநாளும் ( Reserve Day)விளையாடுவதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

2 months ago
20ம் நூற்றாண்டின் தொடக்கம் தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
காவ‌ல்துறை என்ன‌ தூங்கிட்டு இருந்திச்சா க‌ந்த‌ப்பு அண்ணா ச‌ர்வ‌தேச‌ விகையாட்டு ம‌க‌ளிர்க‌ள் வ‌ரும் போது கொட்ட‌லில் இருந்து மைதான‌ம் போகும் வ‌ரை காவ‌ல்துறையின் பாதுகாப்பு முக்கிய‌ம்................ கொட்ட‌லில் த‌ங்கும் இட‌த்தில் கூட‌ கிரிக்கேட் வாரிய‌ம் அவ‌ர்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌னும்...............................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
இன்னொரு மிக முக்கியமான விடயம். தற்போது மேலே சொன்ன வழக்குக்கு மேலதிகமாக, இவர்கள் இருவரின் நடத்தையையும் Insolvency Service உம் விசாரிக்கிறது. இதில் குற்றம் காணப்பட்டால் disqualification from directorship போன்ற பல தண்டனைகள் இருவருக்கும் கிடைக்கலாம்.

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

2 months ago
நான் அன்று ஸ்கான் செய்ய மறுத்திருந்தால் அடுத்த தடவை சாடையான நித்திரை வரப் பண்ணி உள்ளே அனுப்பியிருப்பார்கள். உங்களுக்கும் அதே தான் நடந்திருக்கும். அது டொம் டொம் டொம் என்று பெரிய சத்தமாக கேட்கும். இந்த சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக கேட்காமல் காதை மூடியிருப்பார்கள். அதையும் மீறி தூங்க முடியாது.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
ஏலவே நட்டத்தில் ஓடும் கம்பெனியை வாங்கி இலாபகரமாக மாற்ற முயன்று இருக்கலாம். அப்போது நல்லெண்ணத்தில்தான் இறங்கி இருக்கலாம். 169 மில்லியனின் 20% ஐ இவர்கள் போட்டார்கள் என்பது சாதாரண வியாபார கடன் போல கருதி சொல்கிறீர்கள், நான் அறிந்தவரை சில பெரும் வியாபார கடன்கள் 110% வங்கி கொடுப்பதும் உண்டு. ஆகவே இதில் இவர்கள் தங்கள் சொந்த பணத்தை முதலிட்டார்கள் என்பது வெறும் ஊகமே. அப்படி எந்த ஆதாரமும் நான் காணவில்லை. அப்படியே ஆகினும் - போட்டகாசில் கொஞ்சத்தையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் deceit, misrepresentation செய்திருக்கலாம் அல்லவா? 5. நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் கூட பேராசையால் அகல கால் வைத்து, ஆப்பை செருகி கொண்டு, பின் அதில் இருந்து தப்ப, தப்பு மேல் தப்பு செய்துள்ளார்கள் என்றல்லவா ஆகிறது?

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

2 months ago
என்ன காவடி சுருதி மாறுது 😂. இராமநாதன், செல்வா வுக்கே தீத்தினவனுக சிங்கள இனவாதிகள்… உங்களை இப்படி தனியா புலம்பவிடுவார்கள் என்பது அப்பவே தெரியும். ஆனால் இவ்வளவு கெதியா நடக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
ஆனால் இது கட்டாயம் கிரிமினல் குற்றசாட்டில் முடியும் என நான் கூறவில்லை. சிவில் வழக்கை விட கிரிமினல் வழக்கை நிறுவுவது கஸ்டம். இதை அமெரிக்காவின் ஓஜே சிம்சன் விடயத்திலும் பார்த்தோம். ஆனால் சஞ்சீவ் deceit, misrepresentation பண்ணி உள்ளார் என ஏலவே administrators சிவில் வழக்கு போட்டுள்ளார்கள். Deceit = ஏமாற்றுதல் Misrepresentation = பொய்யான தகவல் வழங்கல் (உதாரணம் 15,000 சம்பளம் எடுத்து கொண்டு, மோர்ட்கேஜ் எடுக்கவென, பொய் pay slip 65,000 ena கொடுத்து வங்கிக்கு பிழையான தகவல் வழங்குவது, 2008 வரை இது நடந்தது, இப்போ கஸ்டம்). Deceit, misrepresentation இரெண்டையிம் எங்கள் ஊர் தமிழில் களவு எண்டுதான் சொல்வார்கள். இங்கே எழுதும் சிலரின் ஊரில் இவையிரண்டுக்கும் பெயர் தர்மகாரியம் ஆக்கும் 😂.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
டெலிகிராப் paywall க்கு பின்னால் இருக்கும் கட்டுரையின் தலைப்பையும் படத்தையும் மட்டும் பார்த்து கருத்து எழுதாமல், முடிந்தால் முழு கட்டுரையையும் இணக்கவும். இந்த கட்டுரையில் சஞ்சீவ் கூறியதாக Winston Soosaipillai, who ran Lindsey oil refinery owner Prax, said he cannot provide details of the company’s £1.5bn debt pile, nor does he know how much money the company still has after its collapse earlier this year. கம்பெனியில் இப்போ இருக்கும் பணம் எவ்வளவு என்பது தனக்கு தெரியாதாம். அதே போல் 1.5 பில்லியன் கடன் பற்றிய தகவல் எதுவும் தெரியாதாம் 😂. கம்பெனியின் CFO வை சாட்டி உள்ளாராம். இவரே சேர்மன், டைரக்டர், மனைவியும் இவரும் ஓனர் ஆனால் இப்படி சொல்கிறார் என எழுதியுள்ளது டெலிகிராப். அத்தோடு இவர் கொடுத்த சத்திய வாக்குமூலத்தை, “so called” statement of truth என விபரித்துள்ள டெலிகிராப் - இவர் மீது அட்மினிஸ்டெர்ஸ் - தவறான தகவல்களை வழங்கியது, ஏமாற்றியது ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் கூறுகிறது. The administrators of Prax have since issued a lawsuit against Mr Soosaipillai – in which they have accused him of deceit and misrepresentation. இது நான் இதுவரை எழுதியவற்றை மேலும் உறுதி செய்கிறது. இந்த டெலிகிராப் கட்டுரை புதியதும் அல்ல. இதன் நகலை யாஹூ 28/09/25 அன்று வெளியிட்டுள்ளது. நான் இந்த திரியை ஆரம்பித்தது 13/10/25. முன்னர் ஒருமுறை UK vetting பற்றி அரைகுறை புரிதலோடு எழுதியது போலவே இப்போ Serious Fraud Office பற்றியும். Intelligence gathering stage இல் இருக்கும் போது அவர்கள் மூச்சு கூட விடமாட்டார்கள்.

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

2 months ago
நடந்த ஒன்றை, இல்லையென்று நிறுவ முயற்சித்து தோல்வியை தழுவப்போகிறார்கள். இப்படியான நிலைப்பாட்டில் இவர்கள் இருந்தால்; நாடு முன்னேறவே முடியாது. இவர்களும் நாளை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. படடலந்தை வதை முகாம் பிரச்சனையை ஜெனீவாவுக்கு கொண்டு போகப்போவதாக இவர்களே கூறினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதை ஜெனிவாவில் முறையிடப்போவதாக மறு பகுதி கூறுகிறார்கள், இதனால் நாட்டின் இறையாண்மை கெடாதா? ஒட்டுமொத்த இனத்தையும் கொத்தாக அழித்து கெத்து காட்டுவதை மட்டும் சர்வதேசத்துக்கு கொண்டுபோகக்கூடாதாம். நாட்டை அழிப்பது என்று அவர்களே முடிவெடுத்து விட்டால், யார் தடுப்பது? நாடு இன்று இந்த நிலைக்கு சீரழிந்ததென்றால் அதற்கு காரணம் சீரற்ற சட்டம், இந அழிப்பு. அழியும் வரை உண்மையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்

2 months ago
நானும் இருக்கிறேன் சேர்! இப்படி ஏதும் சொல்லி தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது இவருக்கு. அவருக்கு தனது பழைய எஜமானரது நினைவு வருகிறது. பயங்கரவாதிகள் என்று கூறி பட்டப்பகலில் பறவை சுடுவதுபோல் வயது வேறுபாடின்றி தெருக்களில் தமிழரை கொலை செய்து வீசும்போது, வெள்ளை வானில் ஏற்றி சென்று காணாமல் ஆக்கப்பட்டபோது, இந்த நினைவு ஐயாவுக்கு வரவில்லை, கேள்வி கேட்கவில்லை. இப்போதான் பலருக்கு ஞானம் பிறக்குது. முன்பெல்லாம் கதைக்க, விமர்ச்சிக்க பயந்திருந்தவர்கள் இப்போ, விமர்ச்சிக்கிறார்கள். பாதாள போதைக்குழு, தங்களை பாதுகாக்க அதன் பின்னால் இருப்பவர்களை போட்டுத்தள்ளுகிறார்கள். அதன் தலைவன் பிடிபடும்வரை அல்லது கொல்லப்படும் வரை இது தொடரும். இது அவர்களின் தொழில் தர்மமாக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அதன் விளைவையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், அவர்களே தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். விமர்ச்சிப்பவர்கள் யார்? இதனால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களா?

இனிய தீபாவளி

2 months ago
உண்மைதான். பகல் குறைந்து இருள் கூடும் காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏதோ ஒரு மத,இன சம்பவத்தை வைத்து ஒளியேற்றும் நிகழ்வுகளை காண்கின்றோம்.எம்மவருக்கு கார்த்திகை விளக்கு போன்று...... நீங்கள் வெடி போட்டால் சிரிச்சு முடிய இரண்டு நாள் எடுக்கும்....😂 கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣 செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂

தவெக உட்கட்சி மோதல்

2 months ago
உங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏 தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன். இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது. திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன். ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

2 months ago
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது. அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது. https://www.kuriyeedu.com/?p=704009

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

2 months ago

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on October 23, 2025 by சமர்வீரன்

342 0

K800_IMG_4047-300x225.jpgயேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது.

அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது.

நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது.

K800_IMG_3911.jpg

K800_IMG_3908.jpg

K800_IMG_3912.jpg

K800_IMG_3914.jpg

K800_IMG_3955.jpg

K800_IMG_3956.jpg

K800_IMG_4047.jpg

K800_IMG_3915.jpg

QKMP3513.jpg

FJIR2655.jpg

LNCF4789.jpg

XTAS2169.jpg

XTIF3381.jpg

NDDV5467.jpg

XBHP1592.jpg

CMWE8159.jpg

CMWE8159-1.jpg

QRYI5917.jpg

VNGF0866.jpg

XTSN2311.jpg

EZNG0331.jpg

XHSZ2436.jpg

PFLL8463.jpg

XJYK1850.jpg

XLAX3417.jpg

K800_LNCF4789.jpg

K800_XHDU1293.jpg

GBDH7282.jpg

XPAE6833.jpg

K800_QKMP3513.jpg

K800_IZAP5402.jpg

K800_NTHU2536.jpg

K800_XHDU1293.jpg

K800_FJIR2655.jpg

K800_LNCF4789.jpg

K800_UGRW1986.jpg

K800_XTAS2169.jpg

K800_XTIF3381.jpg

K800_LIWN2571.jpg

K800_NDDV5467.jpg

K800_XBHP1592.jpg

K800_PYPF4416.jpg

K800_RKKQ5293.jpg

K800_CMWE8159.jpg

K800_EJRS3148.jpg

K800_PMVU5554.jpg

K800_QRYI5917.jpg

K800_HFLI5021.jpg

K800_JVGW1872.jpg

K800_VNGF0866.jpg

K800_XTSN2311.jpg

K800_EZNG0331.jpg

K800_XHSZ2436.jpg

K800_HTZG0369.jpg

K800_XAJB6791.jpg

K800_WYGG5820.jpg

K800_XBGR9137.jpg

K800_PAAA0397.jpg

K800_QUQW3632.jpg

K800_VEVT7872.jpg

K800_MWBF5053.jpg

K800_UCRP7334.jpg

K800_NZJX5538.jpg

K800_ADUO8593.jpg

K800_CYAP3445.jpg

K800_KZVI0011.jpg

K800_PUVM3272.jpg

K800_EDIU8195.jpg

K800_BPDH0793.jpg

K800_LUPT0838.jpg

K800_XUHR9433.jpg

K800_EKUZ1046.jpg

K800_GIKZ3824.jpg

K800_HYAF4076.jpg

K800_HTGN2283.jpg

K800_NONQ4884.jpg

K800_RMCI4048.jpg

K800_MBMO9762.jpg

K800_NEXL4153.jpg

K800_OPML6297.jpg

K800_OZII3836.jpg

K800_PDTF4045.jpg

K800_PFLL8463.jpg

K800_RHQY6343.jpg

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_5b4

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_5ae

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_0f7

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_667

WhatsApp-Bild-2025-10-23-um-18.03.05_8bd

https://www.kuriyeedu.com/?p=704009

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால், இது இப்பொது சட்டத்தின் பிடியில். எனவே, சட்ட ஆலோசனை இல்லாமல் வாயை திறந்து இருக்க மாட்டார் என்றே நினைக்கிறன். (ஆனால், அவரின் சிரித்த படத்துடன் அவர் சொன்னார் என்று பார்க்கும் போது பகிடியாகத்தான் இருக்கிறது.)