Aggregator

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

2 months 1 week ago

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

By SRI

July 10, 2025

IMG-20250709-WA0017.jpg

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் தமிழ்பேசும் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையாவது நியமித்தல், வன்னியிலுள்ள பிரதேசசெயலகங்களில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக்குழுக்களைச் செயற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளே நடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinews.com/2025/07/3.html

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்?

2 months 1 week ago
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்? 10 July 2025 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, புதுக்குடியிருப்பு காவல்துறையினர் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து பதுங்கு குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://hirunews.lk/tm/409717/ltte-gold-in-mullaitivu

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்?

2 months 1 week ago

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்?

10 July 2025

1752115004_7439310_hirunews.jpg

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. 

அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். 

நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதேவேளை, புதுக்குடியிருப்பு காவல்துறையினர் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து பதுங்கு குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://hirunews.lk/tm/409717/ltte-gold-in-mullaitivu

அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

2 months 1 week ago
அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822

அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

2 months 1 week ago

அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

Editorial   / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01

image_6c1c967bdc.jpg

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார்.   

முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்!

2 months 1 week ago
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர். அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின. இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். https://globaltamilnews.net/2025/217721/

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்!

2 months 1 week ago

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்!

adminJuly 10, 2025

Navali-Attack1.jpeg?fit=951%2C641&ssl=1

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

Navali-Attack2.jpeg?resize=800%2C446&sslNavali-Attack3.jpeg?resize=800%2C444&ssl

https://globaltamilnews.net/2025/217721/

சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்!

2 months 1 week ago
சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச ட்டம் நிறைவேற்றப்பட்டது .அதை நீங்கள் சென்று படித்துப்பாருங்கள். விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் ஆனால் அது நிறை வேற்றப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஒரு நீதிபதி நீக்கப்படும்போது வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் நீதிபதி நீக்கப்படுவது சரியா இல்லையா என்பதை விசாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மசோதா கூறியது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும், அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே உங்கள் துறையில் இவ்வாறான சட்டம் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இருக்காது,இல்லையா? ஒருவேளை நீங்கள் இந்த அவையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு ஒரு சில ஜனாதிபதி மன்றங்களுடன் பேசி சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான தகவல் இல்லாமல் தெளிவில்லாமல் எனது தீர்மானத்தின் அடிப்படையை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சர்வதேச பங்கேற்பைக் கொண்டிருக்க இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்குள் போதுமான இடம் உள்ளது. எனவே உங்களுக்கு இவை பற்றி தெரியாவிட்டால், அதைச் சொல்லாதீர்கள். மேலும் நான் உங்கள் சுயாதீன வழக்கறிஞர்களுடன் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை, நான் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறேன்” இவ்வாறு சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1438664

சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்!

2 months 1 week ago

Sanakkiyan-012.jpg?resize=580%2C375&ssl=

சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்!

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்
நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார்.

அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன.

இதற்கான OMP ச ட்டம் நிறைவேற்றப்பட்டது .அதை நீங்கள் சென்று படித்துப்பாருங்கள். விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் ஆனால் அது நிறை வேற்றப்படவில்லை.

ஆனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஒரு நீதிபதி நீக்கப்படும்போது வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் நீதிபதி நீக்கப்படுவது சரியா இல்லையா என்பதை விசாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மசோதா கூறியது.

இது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும், அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எனவே உங்கள் துறையில் இவ்வாறான  சட்டம் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இருக்காது,இல்லையா? ஒருவேளை நீங்கள் இந்த அவையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு ஒரு சில ஜனாதிபதி மன்றங்களுடன் பேசி சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான தகவல் இல்லாமல்  தெளிவில்லாமல் எனது தீர்மானத்தின் அடிப்படையை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்.

சர்வதேச பங்கேற்பைக் கொண்டிருக்க இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்குள் போதுமான இடம் உள்ளது. எனவே உங்களுக்கு இவை பற்றி தெரியாவிட்டால், அதைச் சொல்லாதீர்கள்.

மேலும் நான் உங்கள் சுயாதீன வழக்கறிஞர்களுடன் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை, நான் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறேன்” இவ்வாறு சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார்.

https://athavannews.com/2025/1438664

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

2 months 1 week ago
செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது. குறித்த பகுதியிலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217712/

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

2 months 1 week ago

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

adminJuly 10, 2025

Semmani-2nd-place2.jpg?fit=1170%2C781&ss

யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது.

குறித்த பகுதியிலும் மனித எலும்பு  சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Semmani-2nd-place2-1.jpg?resize=800%2C53

https://globaltamilnews.net/2025/217712/

அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை!

2 months 1 week ago
அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும், ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும், இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும் தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438652

அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை!

2 months 1 week ago

20151117173447-prision-jail-man-inmate-u

அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை!

நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும்  பற்றாக்குறை காணப்படுவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு  சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும்,  ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும்,  இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும்  தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438652

நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

2 months 1 week ago
நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438657

நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

2 months 1 week ago

WaterSupply_029.jpg?resize=750%2C375&ssl

நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு  நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கேட்டுக்கொள்கிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438657

பால்மாவின் விலை அதிகரிப்பு!

2 months 1 week ago
பால்மாவின் விலை அதிகரிப்பு! இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438673

பால்மாவின் விலை அதிகரிப்பு!

2 months 1 week ago

Imported-milk-powder-price-increased-in-

பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால்  அதிகரித்துள்ளது.

இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438673

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 1 week ago
செம்மணி மனிதப் புதைகுழி: 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று 14வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438665

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

2 months 1 week ago
குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு! குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்பீரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மாநில முதலமைச்சர் ரூ.212 கோடி மதிப்பிலான புதிய பாலத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறெனினும், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். வதோதரா மாவட்டத்தின் பத்ராவில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1438581