Aggregator
கருத்து படங்கள்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும்.
இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது.
“2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிந்ததிலிருந்து, Malabar Home Stay போன்ற குடும்பத்தால் நடத்தப்படும் தங்குமிடங்கள் யாழ்ப்பாணத்தை மீண்டும் ஒரு கலாச்சார சுற்றுலா இலக்காக உயிர்ப்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான வரலாற்றை புரிந்துகொள்ள, போரின்போது தீ வைத்து எரிக்கப்பட்ட பின்னர் புதுப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம், 1619 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஐந்து மூலையுடைய யாழ்ப்பாணக் கோட்டை, மேலும் Fox Jaffna Resort எனும் சொகுசு விடுதியில் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்ட இரண்டு பங்கர்கள் ஆகியவற்றைக் காணலாம்,” என குறிப்பிடுகிறது.
“யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மணி நேர பேருந்து பயண தூரத்தில் அமைந்துள்ள சிறிய தீவு நெடுந்தீவு (Delft) — தாழ்ந்த பாறைக்கடல், பவளக் கற்களால் வேலி இட்ட வீடுகள் மற்றும் Delft Village Stay போன்ற தங்குமிடங்களுடன் — அமைதியான தீவு. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளுக்கிடையில் மெதுவாக மிதிவண்டியில் சுற்றுவதற்கு இது சிறந்த இடமாகும்.”
யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரடி விமானங்களும் இயக்கப்படுகின்றன.
“எல்லாவற்றிலும் மேலாக, இங்கு உள்ள மக்களின் அன்பும் விருந்தோம்பலும் ஆழமாகப் பதிந்துள்ளன — வெதுவெதுப்பான புன்னகைகள், நுரை நிறைந்த தேநீர் கிண்ணங்கள், நண்டு கறி விருந்துகள் எல்லாம் நிரம்பியிருக்கின்றன,” என்று Lonely Planet குறிப்பிடுகிறது.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நயினாதீவு தீவிற்குப் பயணிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன — இந்துக் கோவில் நாக பூஷணி அம்மன் கோவில் மற்றும் பௌத்த நாகதீப விகாரை. புராணக் கதைகளின்படி, புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வந்தபோது இத்தீவிற்கே வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், தீவின் பெயர் இலங்கை நாட்டுப் புராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நாக மக்கள் என்பவர்களிடமிருந்து வந்ததாக Lonely Planet தெரிவித்துள்ளது.
குறிப்பு : CHATGPT துணை கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டது
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
சிரிக்கவும் சிந்திக்கவும் .
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து

மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரச தரப்பால் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருவது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது. மாகாணசபைத்தேர்தல் அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது. மறுபக்கத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதியாக்கப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றது.
பாராளுமன்றில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் அன்று எதிர்த்தார்கள். தற்போது தேர்தலை வைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடத்தலாம்.
ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. அடுத்த வருடம் தேர்தலை வைப்பதாக இருந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாராளுமன்ற அனுமதி தேவையாக உள்ளது.
அவ்வாறு இல்லாமல் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் அதற்கு பல வருடங்களாகும். ஆகவே தேர்தலுக்கு உடனடியான சத்தியமில்லை. அந்த வகையில் அரசாங்கம் உண்மையாக என்ன செய்ய போகிறது என்பதை கூறவேண்டும்.
கடந்த காலத்தில் எல்லைகளை நிர்ணயம் செய்யவதற்கு முற்பட்டபோதுதான் தென் பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது, மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது என்ற பிரச்சினை தோற்றம்பெற்றது.
ஆகவே எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு காலஅவகாசம் வேண்டும். அதற்கு ஒருவருடம் போதாது. எனவே அரசாங்கம் உண்மையாகவே தேர்தலை வைக்கப்போகின்றார்களா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது.
ஐனாதிபதி அநுர மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவர் மௌனமாக இருக்கிறார். அமைச்சர்கள் தான் மாறிமாறி பலவிதமாக கருத்துகளை கூறிவருகிறார்கள்.
ஆனால் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அடுத்தவருடம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருடம் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்பதே கேள்வியகவுள்ளது.
ஆகவே அரசாங்கம் தேர்தல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால் தான் தேர்தல்கள் ஆணையாளர் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிப்பார்.
தற்போது, இப்போது மாகாணங்கள் ஆளுநர்களின் கைகளில் உள்ளன. ஆளுநர்கள் ஐனாதிபதி, அரசாங்கம் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் அதனைத்தான் செய்ய முடியும் இதனை விட வேறு எதனையும் செய்ய முடியாது.
எனவே மாகாண சபையில் மக்கள் ஆட்சி தேவை என்பதை தமிழ் மக்கள் கிளர்தேழுந்து அரசாங்கத்திற்கு அழத்தமாக கூறவேண்டும். அவ்வாறான முயற்சி செய்யாவிட்டால் அரசு மாகாண சபை தேவையில்லை என்பதை கூற முன்வந்துவிடும்.
கிடைத்த அதிகாரம் மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும் எனவே தேர்தல் நடாத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் தேர்தலை வைக்காது இழுதடிக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்ற என்றார்.