Aggregator
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
September 13, 2025

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர்.
அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.
பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர்.
https://www.ilakku.org/walking-tour-from-mullaitivu-in-support-of-mannar-wind-farm-protest/
சிரிக்க மட்டும் வாங்க
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
கொஞ்சம் ரசிக்க
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
13 Sep, 2025 | 01:08 PM
![]()
வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.
தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார்.
இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்; தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
13 Sep, 2025 | 12:06 PM
![]()
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண "இரு- நாடுகள் தீர்வை" (Two-State Solution) செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இது காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், அதன் மூலமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியம் என்றும் கூறுகிறது.
அதேநேரம், இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கிறது.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கவும் கோருகிறது.
ஐ.நா.வின் தகவலின்படி, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64,750-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அத்துடன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
13 Sep, 2025 | 09:48 AM
![]()
இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஏனைய நாடுகளுடன் இணைந்து கொண்டது.
டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்று கட்டாருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் முக்கியப் பங்கையும் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக கட்டார் திகழ்வதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது.
ஹமாஸ் தலைவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தகர்க்கும் முயற்சி என கட்டார் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கட்டாரை வளைகுடா பிராந்தியத்தில் ஒரு வலுவான நட்பு நாடாக வொஷிங்டன்கருதுகிறது, ஏனெனில் அமெரிக்காவின் அல் உதேத் விமானப்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது.
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் காரணமாக அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
13 September 2025

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர்.
https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
adminSeptember 13, 2025

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது.
யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.