Aggregator
இரசித்த.... புகைப்படங்கள்.
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி
11 JUL, 2025 | 10:13 AM
மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது.
இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவம் "ஹமாஸ் பயங்கரவாதி"யைத் தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் வருந்துவதாகவும் கூறியது.
இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 66 பேரில் அவர்களும் அடங்குவர்.
ஊட்டச்சத்தின்மை தொற்றுநோய் உட்பட பல நோய்களிற்கான மருத்துகளை பெறுவதற்காக மருத்துவநிலையம் திறப்பதற்காக காத்திருந்த மக்கள் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என புரொஜெக்ட் ஹோப் தெரிவித்துள்ளது.
திடீரென ஆளில்லா விமானங்களின் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் வெடிப்பு இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்த யூசுவ் அல் அய்டி என்பவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
நிலத்திற்கடியில் பூமி அதிர்ந்தது,எங்களை சுற்றியிருந்த அனைத்தும் குருதியாகவும் பெரும் அலறல்களாகவும் மாறியது என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலின் உடனடி விளைவுகளைக் காட்டின பெரியவர்களும் சிறு குழந்தைகளும் ஒரு தெருவில் கிடந்தனர்இ சிலர் பலத்த காயமடைந்தனர் மற்றவர்கள் நகரவில்லை.
அருகிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் பிணவறையில் இறந்த குழந்தைகளின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு வெள்ளை துணிகள் மற்றும் உடல் பைகளில் போர்த்தி அழுதனர்.
ஒரு பெண் பிபிசியிடம் தனது கர்ப்பிணி மருமகள் மணாலும் அவரது மகள் பாத்திமாவும் அவர்களில் இருந்ததாகவும் மணலின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் கூறினார்.
"சம்பவம் நடந்தபோது குழந்தைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக அவர் வரிசையில் நின்றிருந்தார்" என்று இன்டிசார் கூறினார்.அருகில் நின்ற மற்றொரு பெண் "அவர்கள் என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டார்கள்?" என்று கேட்டாள்.
"நாங்கள் முழு உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் முன்பாக இறந்து கொண்டிருக்கிறோம். முழு உலகமும் காசா பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் மக்கள் கொல்லப்படாவிட்டால் அவர்கள் உதவி பெற முயற்சிக்கும் போது இறக்கிறார்கள்."
புரொஜெக்ட் ஹோப் ப்ராஜெக்ட் ஹோப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரபிஹ் டோர்பே உதவி குழுவின் மருத்துவமனைகள் "காசாவில் ஒரு புகலிடமாக இருந்தன அங்கு மக்கள் தங்கள் சிறு குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு பெறுகிறார்கள்இமக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெறுகிறார்கள் மேலும் பல" என்று கூறினார்.
"ஆயினும்கூட இன்று காலை கதவுகள் திறக்கும் வரை வரிசையில் நின்ற அப்பாவி குடும்பங்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "திகிலடைந்து மனம் உடைந்து இனி நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சரியாகத் தெரிவிக்க முடியவில்லை."
"இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் மேலும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் காசாவில் யாரும் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. இது தொடர முடியாது."
யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்: "உயிர்காக்கும் உதவியைப் பெற முயற்சிக்கும் குடும்பங்களைக் கொல்வது மனசாட்சிக்கு விரோதமானது."
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
Published By: VISHNU
11 JUL, 2025 | 05:43 AM
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது. இற்றைவரை இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை.
இவ்வாறாணதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம்.
அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல் கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம்.
இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம்.
இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார்.
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !
11 JUL, 2025 | 10:00 AM
மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு சம்பவதினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடையவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
11 July 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் (Jeremy Laurence) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக ஜேர்மி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமான காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
https://hirunews.lk/tm/409807/91-percent-of-seized-lands-in-the-north-and-east-released
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
adminJuly 11, 2025
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது
கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர்.
அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.