Aggregator
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு!
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு!
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு!
இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும் நோக்கிலும், பிரித்தானிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இந்த புதிய வர்த்தக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு, இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய வர்த்தக திட்டம், தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்றிக், இது இலங்கையின் ஆடைத்துறைக்கும் பிரித்தானியாவின் நுகர்வோருக்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குவதுடன் மொத்த வர்த்தகத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகளவான ஆடைகள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஆடைகள் மாத்திரமின்றி, பரந்த அளவிலான பொருட்களுக்கும் பிரித்தானியாவின் வர்த்தக திட்டத்தை, வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன.
சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு, சிறுவரினுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது.
குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது.
இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்களை நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம்.
இது ஒரு முக்கிய விமான நிலையமாக இல்லாவிட்டாலும், மாற்று விமான நிலையமாக இது அவசியம்.
விமான பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கு விமான நிலையத்தைப் பயன்படுத்தவும், பிரதான விமான நிலைய வளாகத்திற்கு வெளியே உள்ள நிலத்தை சூரிய மின்சக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது என்றும் கூறினார்.
நேற்று மத்தள விமான நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை!
பாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!
வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!
வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!
உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது.
79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது.
வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல.
கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உருவாக்கப்பட்ட தனது படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒகஸ்ட் 1 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை (10) அறிவித்தார்.
இது இரண்டு வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கிடையேயான விரிசலை ஆழப்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஏனைய பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15 முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி இதுவரை 22 நாடுகளுக்கு வரி அறிவிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரிகளும் அடங்கும்.