Aggregator
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
07 Jan, 2026 | 05:02 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார்.
முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார்.
பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது .
இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது.
இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk
கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
08 Jan, 2026 | 04:58 PM
![]()
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது.
திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது.
இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
08 Jan, 2026 | 04:17 PM
![]()
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.
இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம்.
அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர்.
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து | Virakesari.lk
இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
08 Jan, 2026 | 06:21 PM
![]()
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது.
ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வியாழக்கிழமை (8) மாலை 5.30 மணி எதிர்வுகூறியுள்ளதன்படி,
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது.


இது தொடர்ச்சியாக மேற்கு, வடமேற்கு, திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது.
நகர்வு 1. ஏற்கனவே இருந்தது போன்று இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10.01.2026 அன்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசித்தல்.
நகர்வு 2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையில் நிலப்பகுதிக்குள் எதிர்வரும் 09.01.2026 அன்று இரவு அல்லது 10.01.2026 அன்று அதிகாலை பிரவேசித்தல்.
நகர்வு 1இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் நான் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 12.01.2026 வரை மிக மிக கனமழையைப் பெறும் (04 நாள் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மில்லிமீட்டரை விட அதிகம்).
நகர்வு 2இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் கனமான (200 மி.மீ. திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்). ஆனால் கிழக்கு மாகாணம் எதிர்வரும் 13.01.2026 வரை ( 05 நாட்கள்) 350 மி.மீ.இனை விட கூடுதலான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெறும்.
நகர்வு 2இன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் என்பன 300 மி.மீ. இனை விட கூடுதலாக திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்.
ஆனால் நகர்வு 1ஐ விட நகர்வு 2 இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மீளவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நகர்வு 2இன் மையப் பகுதியாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அமையும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழவுகளுக்கான அதிகூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆனால், இந்த நிகழ்வின் நகர்வு பற்றிய இறுதி முடிவை நாளை (09.01.2026) காலையே தீர்மானிக்க முடியும். நகர்வு 2 உறுதியானால் மீளவும் மலையகத்தின் பல பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகவே இது தொடர்பாக மிக மிக முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள் | Virakesari.lk