Aggregator
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா
07 Jan, 2026 | 05:22 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம்.
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார்.
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
07 Jan, 2026 | 02:38 PM
![]()
"அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது
நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?

கட்டுரை தகவல்
சேவியர் செல்வக்குமார்
பிபிசி தமிழ்
7 ஜனவரி 2026, 13:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்
உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது.
இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இரு புலிகளுக்கு இடையில் நடந்த 'ஏரியா' சண்டை!
உதகை அருகேயுள்ள போர்த்தி ஆடா என்ற கிராமத்தையொட்டியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று ஒரு புலி படுத்துக்கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த புலி, வேறெங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. தகவல் கேள்விப்பட்டு, வனத்துறையினர் அங்கு வந்தனர். டிரோன் மூலமாக புலியின் நடமாட்டத்தைப் பார்த்தபோது, அதன் முன்னங்கால் ஒன்றில் பலத்த காயமடைந்திருப்பதால் நடக்க முடியாமலிருப்பதைக் கண்டறிந்தனர்.
அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புலியைப் பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கோபமடைந்த சிலர், 'அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதுவரை அதற்கு உணவாக இறைச்சி வழங்கவேண்டுமென்றும்' ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர்.
புலியைப் பிடிப்பதற்கு வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர், நேரடியாகவும், டிரோன் மூலமாகவும் புலியின் நிலையை கண்காணித்து வந்தனர். அங்கிருந்து வேறெங்கும் நகராமலிருந்த புலி, கடந்த 5 ஆம் தேதியன்று உயிரிழந்தது. அதே இடத்தில் அந்த புலிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு புதைக்கப்பட்டது.
புலிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டபோதுதான் காயமடைந்திருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ.) வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இதுவொரு இயற்கையான நிகழ்வு என்பதால் அந்த புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்தோம்.'' என்றார்.
வனத்துறையினரின் இந்த விளக்கம், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காயமடைந்துள்ள ஒரு புலிக்கு சிகிச்சை அளிக்காமலிருக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறை அறிவுறுத்துகிறது என்றால், புலிகளை கையாள்வது தொடர்பாக வேறு என்னென்ன வழிகாட்டுதல்கள் உள்ளன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 248 பக்கங்களுக்கு மிக விரிவாகவுள்ளது. புலிகளைக் கையாள்வது குறித்து அதிலுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சிலர் பிபிசி தமிழிடம் விளக்கினர்.
வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த கேள்வி–பதில் தொகுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்தது ஏன்?
கேள்வி: உதகை அருகே காயம்பட்டிருந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்ததற்கு காரணமென்ன...இயற்கையாக நடந்த சண்டையில்தான் இந்த புலி காயமடைந்தது என்பது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது?
''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சண்டை நடந்துள்ளது. அந்த சண்டையில் படுகாயமடைந்த பின்பே அந்த புலி, தேயிலைத் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்பதால், அதற்கு சிகிச்சை அளிக்காமல் அதனால் மக்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் கண்காணிக்க வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை'' என்கின்றனர் வனத்துறையினர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் எல்லையை வரையறுப்பதில் சண்டை நடந்துள்ளது. நாங்கள் அந்த சூழல் காரணிகளை ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து இரு புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்துள்ளதை உறுதிசெய்துள்ளோம். அதில் புலியின் 2 முன்னங்கால்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்திருந்தன. இறந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும். அதை விட வயது முதிர்ந்த ஒரு புலி இதைத் தாக்கியிருக்கலாம். '' என்றார்.
''அதன் உடலில் வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இயற்கையாக நடந்த சண்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பதால்தான் சிகிச்சை தரவில்லை. என்.டி.சி.ஏ. கூறியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையின்படி அதைக் கண்காணித்தோம். வேறு ஏதாவது விபத்து போன்ற மனித செயல்களால் காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் சிகிச்சை அளித்திருப்போம்.'' என்றார்.
இறந்து போன புலிக்கு, சண்டைக்குப் பின் நிறைய ரத்தம் வெளியேறியதுடன் 3–4 நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அந்த புலி இரையை அடிப்பதற்கு உதவும் முன்னங்கால்கள் இரண்டும் முற்றிலும் சேதமடைந்திருந்ததாகக் கூறிய வனத்துறையினர், அதற்கு மேல் அந்த புலியால் வேட்டையாடவும் முடியாது என்ற தகவலையும் பிபிசியிடம் பகிர்ந்தனர்.
புலி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியல் ஒன்றில் (schedule 1 animals) இருக்கும் உயிரினம் என்பது போலவே, கடமானும் அதே பட்டியலில் உள்ள உயிரினம்தான் என்று கூறிய மாவட்ட வன அலுவலர், ஒரு புலி அடித்து கடமான் காயப்பட்டிருந்தாலும் அதற்கு சிகிச்சை தரமுடியாது என்றார். அப்படிச் செய்வது காடு மற்றும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியை அறுக்கின்ற ஒரு செயலாக இருக்குமென்கிறார் அவர்.

படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம்
'தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம்'
கேள்வி: இதுபோன்று காயமடைந்த ஒரு புலிக்கு சிகிச்சையளித்து, வன உயிரினப் பூங்காவில் வைத்து பாதுகாத்திருக்க முடியாதா?
இதற்கு பதிலளித்த கெளதம், ''அதற்கான தேவையும், அவசியமும் எழவில்லை'' என்றார்.
''புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் அனுமதி பெற வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. தரும் வழிகாட்டுதல். அதேபோன்று பிடித்து வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு செல்லவும் அவரின் அனுமதி பெறவேண்டும்.'' என்றார் கெளதம்.

'சட்டமே சொல்கிறது'
கேள்வி: இதே புலி ஓர் ஊருக்குள் நுழைந்திருந்தால் அதைப் பிடிக்காமல் கண்காணிக்க முடியாது என்பதால், அப்போது வனத்துறை என்ன செய்திருக்கும்? இதுகுறித்து என்.டி.சி.ஏ. கூறும் வழிகாட்டுதல் என்ன?
''என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் என்பது எல்லாப்பகுதிகளுக்கும் ஒரே மாதிரியானதுதான். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் புலியை காட்டுக்குள் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். முடியாதபட்சத்தில் மாநிலத்தின் தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு (Chief Wildlife Warden) முறைப்படி விண்ணப்பித்து, அதை கூண்டு வைத்து அல்லது மயக்க மருந்து செலுத்திப்பிடிப்பதற்கு அனுமதி பெற்று பிடிக்கப்படும்.'' என்றார் கெளதம்.
கேள்வி: ஒரு புலியால் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறவேண்டியது அவசியமா?
இதுகுறித்து விளக்கிய பெயர் கூற விரும்பாத மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி, ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலி உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு மட்டுமே உள்ளது. '' என்றார்.
''ஒரு புலி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கே வந்துவிட்டாலும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் அதைப் பிடிக்கவோ, சுடவோ கூடாது என்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை. எந்த சூழ்நிலையாக இருந்தால் வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியதும் கட்டாயம். இதை வழிகாட்டுதல் விதிகளில்லை; வன உயிரினப் பாதுகாப்புச் சட்டமே சொல்கிறது. '' என்றார் அவர்.

படக்குறிப்பு,கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஒரு புலி
கேள்வி: ஒரு புலியைப் பிடிப்பதற்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது?
''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு புலியால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால் அதைப் பிடிக்கவும், பிடித்து இடமாற்றம் செய்யவும் அல்லது சுடவும் தலைமை வன உயிரினக்காப்பாளரால் அனுமதியளிக்க முடியும். அதேபோன்று அறிவியல்பூர்வமான காரணங்களுக்காக ஒரு புலியைப் பிடிப்பதாக இருந்தாலும் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. மாவட்டம் அல்லது மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், சூழ்நிலை அல்லது நிர்பந்தத்துக்கேற்ப புலிகளைப் பிடிக்கவும் கொல்லவும் அனுமதியளிக்கும் அபாயம் இருப்பதால்தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என கூறினார் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர்.
இயற்கையாக இறக்கும் காட்டுயிர்களை காப்பாற்றினால் என்னவாகும்?
கேள்வி: காயமடைந்த புலியை சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை என்ற முடிவை எதன் அடிப்படையில் தலைமை வன உயிரினக்காப்பாளர் எடுக்கிறார்?
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பாதுகாப்பது குறித்த முடிவை தலைமை வன உயிரினக் காப்பாளர் எடுக்கிறார் என்று வனத்துறையினர் விளக்குகின்றனர்.
''நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை நன்றாகவுள்ளது. மாவட்டம் முழுவதும் 250–300 எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, இதுபோன்று இயற்கை நிகழ்வில் காயம் ஏற்படும் புலிகளையும் காப்பாற்றினால் இயற்கையாக நடக்கும் புலிகளின் பிறப்புக்கும், இறப்புக்குமான விகிதாச்சாரம் மாறுபட்டு, புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும். அதனால் இது தேவையற்றது.'' என்றார் கெளதம்
கேள்வி: யானை, புலி போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் நோய் அல்லது காட்டுக்குள் உள்ள சூழல் பாதிப்பில் இறக்க நேரிட்டால் அப்போதும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கையாளப்பட வேண்டுமா?
இதற்கு பதிலளித்த வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''சாலை விபத்து, வேட்டை, மின்சார வேலி, வெடி போன்ற மனித செயல்பாடுகளால் காட்டுயிர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுக்குள் இயற்கையாக நிகழும் காட்டுயிர்களின் மரணங்களைத் தடுக்கக்கூடாது. '' என்றார்.
உதாரணமாக 300 யானைகள் வாழும் ஒரு காட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் யானைகள் இயற்கையாக இறக்கும் எனும்போது, அவற்றுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றப்படும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என்பதை விளக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அப்படி அதிகரித்தால் காடு அழியும் ஆபத்து இருப்பதாக கூறினர்.
ஜிம்பாப்வே போன்ற தென் ஆப்ரிக்கா நாடுகளில் காடுகளின் வளம் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை அழிக்கும் முறை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெயர் கூற விரும்பாத ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர், ''காட்டைக் காப்பதா, காட்டுயிர்களைக் காப்பதா என்றால் காட்டைக் காப்பதுதான் வனத்துறையின் முதல் பணி. காட்டுயிர்களைக் காக்க வேண்டுமென்று, இயற்கையாக, நோய் வாய்ப்பட்ட காட்டுயிர்களுக்கு எல்லாம் காட்டுக்குள் சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி எடுத்தால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி காடே காலியாகிவிடும். காடழிந்தால் அதன்பின் காட்டுயிர்களும் அழிந்துவிடும். அதனால் காட்டுயிர்கள் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்
07 Jan, 2026 | 04:29 PM
![]()
“அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தியப் பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்” என்றும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்தியது. இதை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரியை அறவிட என்னால் முடியும் என்று ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (5) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
எனக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், இந்தியா அதிக வரி செலுத்துவதால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது கனிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் வலிமையானதாகவும் மரியாதைக்குரிய நாடாகவும் விளங்குகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

Updated on:
06 Jan 2026, 9:50 am
கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்).
மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார்.
அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை.
ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர்.
கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக்.
உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது.
‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார்.
நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு.
“நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.
உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.
https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - 22

எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன.
இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும்.
இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால் மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்
இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Tamilmirror Online || ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்