Aggregator
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா
Published By: VISHNU
09 JUL, 2025 | 01:53 AM
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர்.
அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார்.
அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Published By: VISHNU
09 JUL, 2025 | 01:43 AM
யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை
யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை
09 JUL, 2025 | 09:51 AM
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி
கருத்து படங்கள்
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!
வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,
மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது.
இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது.
மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம்.
நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும்.
தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார்.
பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!
பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!
பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!
சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார்.
ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை.
ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,
சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன.
பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார்.
இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது.