Aggregator
அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!
Published By: Digital Desk 1
08 Sep, 2025 | 01:23 PM
![]()
அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர்.
அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை
பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை
Published By: Priyatharshan
08 Sep, 2025 | 05:17 PM
![]()
அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன.
இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார்.
பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் மற்றும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
இந்த பயிற்சியானது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, மருத்துவ தயார்நிலை, வான் பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இலங்கையின் Bell-412, B-212 ஹெலிகப்டர்கள் மற்றும் கிங் எயார் 350 விமானம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த Pac Angel 25 பயிற்சி நடவடிக்கையானது, நடப்பு உலக நெருக்கடிகளுக்கு அவசியமான விரைந்த மற்றும் உறுதியான பதிலளிப்பு செயற்பாடுகளுக்கான அணியமைப்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது.
இந்த பயிற்சி நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பசுபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டில் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சி நடவடிக்கையாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து இதில் கலந்துகொள்பவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம். பேரனர்த்த பதிலளிப்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரையான நடப்பு உலக சவால்களுக்கு தயாராவதன் நிமித்தம் எமது நாடுகள் எப்படி ஒன்றுபட்டு பணிபுரிகின்றன என்பதை இந்த பயிற்சி நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பங்காண்மையாளர்கள் என்ற வகையில், நாம் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தை பேணிப் பாதுகாப்பதுடன், எமது இந்த பிராந்தியம் தங்கியிருக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதன் நிமித்தம் சவால்களுக்கு ஒன்றுசேர்ந்து முகம் கொடுப்பதற்கான எமது ஆற்றலை Pac Angel போன்ற பயிற்சி நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன, என்று தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இந்த பயிற்சி நடவடிக்கையின் நடைமுறை தாக்கத்தை சுட்டிக்காட்டி அதில் கலந்துகொள்பவர்களை அமெரிக்காவின் சார்பில் வரவேற்றார். “Pac Angel நடவடிக்கையானது ஒரு சாதாரண பயிற்சிக்கும் மேலானதாகும். இது நெருக்கடி நிலைமைகளுக்கான துரித மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு செயற்பாடுகளை சாத்தியமாக்கும் எமது நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடனான நடப்பு உலக ஒத்துழைப்பை உருவாக்குவது பற்றியதாகும்.
ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம், அச்சுறுதல்களை தடுக்கிறோம், மற்றும் பேரனர்த்தங்கள் தாக்கும் போது எம்மால் விரைந்தும் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதிபடுத்துறோம். நாம் இன்று ஒன்றிணைந்து கட்டமைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய பொதுவான பாதுகாப்புக்கான அடித்தளமொன்றாகும், என்று அவர் குறிப்பிட்டார்.
பசுபிக் ஏஞ்சல் என்பது அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தலைமையிலும் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command - USINDOPACOM) அனுசரணையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனிதாபிமான பதிலளிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நடவடிக்கையொன்றாகும். இந்த பயிற்சியானது தற்போது அதனது 18 ஆவது ஆண்டில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கையானது, கிரிபாஸ், நவூரு மற்றும் வனுவாட்டு ஆகியவற்றுக்கு முக்கியமான உதவிகளை வழங்கிய அதனது 2007 ஆம் ஆண்டு தொடக்க நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தமது பசுபிக் அயலவர்களுக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலித்து இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் இன்றியமையாத அம்சமொன்றாக Pac Angel உருவெடுத்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கைகளானது அதை நடாத்தும் நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவிருந்தே அது திட்டமிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளானது எந்தவொரு தற்போதைய நடப்பு உலக நெருக்கடிகளுக்குமான பதிலளிப்பு செயற்பாடாக அமையவில்லை. மாறாக இந்த பயிற்சியை நடத்தும் நாடுகள் தமது குடிமக்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் மற்றும் ஏனைய சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிப்பதற்கும் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுடன் அமெரிக்காவும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையின் ஏனைய பங்கேற்பாளர்களின் முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உரையாற்றுவதை இங்கு காணலாம்.

இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவில் இருந்து இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் பசுபிக் ஏஞ்சல் 25 நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!
வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம்.
பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன்.
விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம்.
ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
5 நாட்களில் ரூ.5.8 கோடி இழந்த பெண் - டிஜிட்டல் கைதுகளை வங்கிகள் எப்படி கையாளுகின்றன?
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
Published By: Vishnu
08 Sep, 2025 | 07:54 PM
![]()
இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், சர்வதேச தலையீடுகளை நிராகரிப்பதாகவும் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும், வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார்.
60 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதில்,
அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள்
* 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) மக்கள் அமோக ஆதரவை வழங்கினர்.
* வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை.
* பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
* பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன.
பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள்
* அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன.
* விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
* வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது.
* மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்
* பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
* காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
* பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.
* பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும்.
* மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன.
* சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயல்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள்
* கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை' என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது.
* ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித்த ஹேரத் தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.