Aggregator

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

2 months 1 week ago
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1450782

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

2 months 1 week ago

images-7.jpg?resize=340%2C148&ssl=1

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1450782

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இவ்வளவு போட்டிகள் பார்க்கிற பையனுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், மற்றவர்கள், என்ன வந்தாலும் சரி என்றுதான் இருப்பார்கள். சில விதிகள் கட்டாயம் தேவைதான், சமநிலையை மேம்படுத்த.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
அப்பிடி இல்லை. குறைந்தது 20 பரிமாற்றங்கள் விளையாடினாப் பிறகுதான், மிச்ச கணக்கு வழக்கெல்லாம். ஆண்கள் என்றாலென்ன, பெண்கள் என்றாலென்ன, இதுதான் முதலாவது நிபந்தனை. 20 பரிமாற்றங்கள் விளையாட முடியாமல் போகும்போதுதான் போட்டி கைவிடப்படும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
முடிவடைந்த போட்டி என்னும் அடிப்படையில், இலங்கைதான் குறைந்த ஓட்டங்களைப் பெற்றது. எத்தினை பந்துப் பரிமாற்றம் என்பது பொருட்டல்ல. 50 பரிமாற்றப் போட்டியே குறைந்த பரிமாற்றங்களில் முடியலாம்தானே. 20 பரிமாற்றத்தில் துரத்தி அடிக்கலாம்தானே.

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 months 1 week ago
புத்தளத்திலிருந்து அந்த போதை மாத்திரை ஏற்றிய லொறி…. தமிழ்ப் பகுதியை நோக்கி வந்தது என்றால், முஸ்லீம்களை தவிர, வேறை யாராக இருக்க முடியும். தமிழன், சிங்களவன் என்றால்…. பெயர், ஊர், விலாசம் எல்லாம் போட்டு செய்தி வந்திருக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
37)இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இந்த கேள்வியை கேட்டு விட்டு எது சரியான பதில் என்று யோசிக்கிறேன். இன்னும் சில போட்டிகள் இலங்கையில் நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் 1) அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. 2) மழை காரணமாக போட்டி 20 ஒவர்களாக குறைக்கப்பட்டதால் இலங்கை அணி 105 ஒட்டங்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புடன் பெற்றது இவற்றில் எது 37 கேள்விக்கு இதுவரை நடந்த போட்டிகளின் படி சரியான பதில் என நினைக்கிறீர்கள்?

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

2 months 1 week ago
சிறிபதி மாஸ்ரர் இறக்கும்வரை எமக்கு அருகிலேயே இருந்தார். இறக்கும் தறுவாயிலும் சிகரட்டும் கையும் தான். மனிசன் ஒரு வழக்கறிஞன் செய்ய வேண்டியதை தானே செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 months 1 week ago
சந்தேகநபர் பெயர் வெளியிடவில்லை ...அப்ப அவர் .... பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த பிள்ளைகளுக்கு எங்கிருந்து காசு கிடைக்குது...

தவிக்கும் தன்னறிவு

2 months 1 week ago
நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
சென்ற சாம்பியன் கிண்ணப்போட்டியில் இந்தியா அணி பாக்கிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்ததினால், ஐசிசி, இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் இடத்தினை பாகிஸ்தானை கேட்டது. பாகிஸ்தான் துபாய் இடத்தை தெரிவு செய்தது. பெண்கள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாட மறுத்ததினால், பாகிஸ்தான் விளையாடும் போட்டியினை கொழும்பில் தெரிவு செய்து இருக்கிறார்கள். சென்னை போன்ற இடங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போட்டிகளை தவிர்க்கும் இந்தியாதான் கொழும்பினை தெரிவு செய்ததா? இல்லை ஐசிசி தெரிவு செய்ததா?

தவிக்கும் தன்னறிவு

2 months 1 week ago
உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா. அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா. பாராட்டுக்கள்.

தவிக்கும் தன்னறிவு

2 months 1 week ago
இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)