Aggregator

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

2 months ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

1581307342.jpg

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. 

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://newuthayan.com/article/அரசியல்_கைதிகளின்_விடுதலையை_வலியுறுத்தி_இந்தியாவில்_இருந்து_வந்த_விடுதலை_நீர்!

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2 months ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! 06 Sep, 2025 | 02:48 PM சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224371

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

2 months ago
“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது! 06 Sep, 2025 | 02:26 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224368

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

2 months ago
யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம் யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர். பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

2 months ago

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர்.

பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! 06 Sep, 2025 | 02:48 PM சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224371

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!

2 months ago
பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சிவில் செயற்பாட்டாளரால் முன்வைப்பு 06 Sep, 2025 | 01:15 PM (ஆர்.ராம்) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சிவில் செயற்பாட்டாளரான சிரந்த அமெரிக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் கோரிக்கையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின், இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டது?, இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்) இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம் என்ன? ஆகிய வினாக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224364

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

2 months ago
சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! Published By: Digital Desk 1 06 Sep, 2025 | 11:29 AM தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 22 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல - கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சஷீந்திர ராஜபக்ஷ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224353

அழகான புத்தகக்கடை

2 months ago
“புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 months ago
காசாவின் கான் யூனிஸில் மனிதாபிமான மண்டலத்தை நிறுவ தீர்மானம்! Published By: Digital Desk 1 06 Sep, 2025 | 12:28 PM காசாவின் கான் யூனிஸின் அல் - மவாசி பகுதியில் ஒரு மனிதாபிமான மண்டலத்தை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை (இன்று) அதிகாலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கள வைத்தியசாலைகள், நீர் குழாய்கள், உப்புநீக்கும் வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற உட்கட்டமைப்புகள் இந்தப் பகுதியில் இருக்கும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதிக்கு வெளியேறுமாறு இராணுவத்தின் செய்தியாசிரியர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224359

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2 months ago

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

06 Sep, 2025 | 01:23 PM

image

காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது.

பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/224365

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

2 months ago

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

adminSeptember 6, 2025

UN-Human.jpg?fit=900%2C487&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது

இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை https://globaltamilnews.net/2025/220156/

The Shawshank Redemption

2 months ago
இந்த திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதனை இந்த காட்சியின் இறுதியில் வரும் நகைச்சுவையினை பார்த்த பின்பே புரிந்தது.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். (இரண்டாம் கட்டம் 44 வது நாள்) ST Suman - Journalist

The Shawshank Redemption

2 months ago
மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும். அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.

The Shawshank Redemption

2 months ago

மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம்.

முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம்.

பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம்.

இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும்.

அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.