Aggregator

செம்மணி மனித புதைகுழி : சப்பாணி நிலையில் மனித எலும்பு கூடு மீட்பு

2 months ago
உயிரோடு இருத்திச் செய்யப்பட்ட படுகொலையாக இருக்குமா? வாசிக்கவே என்னவோ செய்கிறது. அந்த மரணத்தை எதிர்கொண்டவரது நிலை. நீதியற்ற உலகில் நாமொரு இனமாக எப்படி அமைதியாகக் கடந்துபோகின்றோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ.

2 months ago
இன்று கூத்தென்றால், கூத்தா என்று கேட்கும் சூழலில் அதனைப் பேணுகின்ற செயற்பாட்டில் உள்ள கலைஞர்கள்; குறிப்பாக இளைய தலைறையின் கலைச் செயற்பாடு பாராட்டிற்குரியதாகும். இணைப்புக்கு நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months ago
மாசில்லா உண்மைக்கு காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே பேசும் வார்த்தை உண்மை தான பேதையை ஏய்க நீங்கள்போடும் வேஷமா நான் சின்னாக இருக்கும் போது என் தந்தை விடுமுறைக்கு வந்தால் கொஞ்சம்" கள்" அடிப்பார் ..அம்மாவுடன் செல்ல சண்டைபோட்டு இதை பாடுவார் இரண்டுமூன்று வரிகள்தான் ...நினைவில் வந்து போனது இருவரும் பரலோகம் போய்விடடார்கள் .

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

2 months ago
இலங்கை அணி முதல் 4 தெரிவாகும் அணிக்குள் வராது என கருதுகிறேன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் வரலாம் என கருதுகிறேன்.

ராணுவ வலிமையில் அமெரிக்காவை விஞ்சுகிறதா சீனா? - 5 கேள்விகள் மற்றும் பதில்கள்

2 months ago
சீனா மட்டுமல்ல இரஸ்சியாவின் இராணுவ கட்டமைப்பும் இதே போன்ற Top down அமைப்பு கொண்டது, ஆரம்பத்தில் உக்கிரேனும் இதே போன்ற கட்டமைப்பே கடைப்பிடித்ததாக கூறுகிறார்கள், பின்னர் போரின் போக்கில் மேற்கின் தற்போது நடைமுறையில் உள்ள கீழிருந்து மேலான இராணுவ கட்டமைப்பினை உள்வாங்கியது, மிகவும் நவீனமான தன்னிச்சையாக இயங்க கூடிய டிவிசன் கொண்ட அமைப்பான சாதகமான இராணுவ கட்டமைப்பினை விட்டு விட்டு மீண்டும் மேலிருந்து கீழான இராணுவ கட்டமைபினை உக்கிரேன் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உக்கிரேன் அதிகார மட்டங்களின் ஊழல் வசதி காரணமாக இருக்குமா? அல்லது நீண்டகால அடிப்படையில் சோவியத் யூனியன் இராணுவ கட்டமைப்பினை கொண்டமையால் அது தொடர்பான வழக்க முறையா? பிரென்சு நாட்டவரான Jacques Antoine Hippolyte நவீன இராணுவ கட்டமைப்பினை கொள்கை ரீதியாக நிறுவியவர் என கூறப்படுகிறது, அதனை நவீன போரியலின் தந்தை என கூறப்படும் நெப்போலியன் போரில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தினார் என கூறப்படுகிறது, தற்போது நடைமுறையில் உள்ள பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் இராணுவ கட்டமைப்பு மேற்கின் இந்த இராணுவ கட்டமைப்பாக கருதப்படுகிறது.

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

2 months ago
டிரம்ப் ஐயா மீது அபிமானம் உள்ளது உண்மை. ஆனால், அவரது கொள்கைகள், செயற்திட்டங்கள் அனைத்துடனும் உடன்பாடு உள்ளது என்பதற்கில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றல்ல. அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் ஒப்பிட முடியாது.

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

2 months ago
கங்கேரி, ஸ்லோவாக்கியா மட்டுமல்ல ஜேர்மனியும் இதே குழாய் மூலம் எண்ணெய் பெறுகிறது🤣. கசகிஸ்தான் உக்கிரேன் போரின் பின்னர் இரஸ்சியாவின் இடைத்தரகர் போல செயல்படும் நிலை காணப்படுகிறது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எமது நிறுவனம் இரஸ்சியாவிற்கு தமது உற்பத்தி பொருளை ஏற்றுமதி செய்யும் ஒப்ப்பந்தத்தில் ஈடுபட்டது அப்போது கசகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் செய்தார்கள், அதுவரை நிறுவன நுழைவாயிலில் உக்கிரேன் கொடி இருந்தது (நிதியும் சேர்க்கப்பட்டது) அந்த நிகழ்விற்காக பொறியியல் அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த உக்கிரேன் கொடி மீண்டும் கடந்த வாரம் வாசலுக்கு வந்துவிட்டது. இந்த முரன்நகை அரச மட்டங்களில் மட்டுமல்ல அனைத்து மட்டங்களிலும் உள்ளது😁.

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

2 months ago
சேதமடைந்த ட்ருஷ்பா குழாய் வழியாக ஜெர்மனிக்கு எண்ணெய் பாய்ந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதாக ரோஸ்நெஃப்ட் ஜெர்மனி கூறுகிறது. ராய்ட்டர்ஸ் மூலம் செப்டம்பர் 4, 2025 இரவு 10:05 GMT+10 செப்டம்பர் 4, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 1, 2022 அன்று ஜெர்மனியின் ஸ்வெட்டில் உள்ள PCK எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் பதப்படுத்தும் வசதிகளை ஒரு காட்சி காட்டுகிறது. REUTERS/Annegret Hilse/ கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் Neftyanaya Kompaniya Rosneft' PAO பெர்லின், செப்டம்பர் 4 (ராய்ட்டர்ஸ்) - சேதங்கள் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் PCK சுத்திகரிப்பு நிலையத்திற்கு ட்ருஷ்பா குழாய் வழியாக எண்ணெய் ஓட்டம் இந்த வார இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுத்திகரிப்பு நிலையத்தின் மிகப்பெரிய பங்குதாரரான ரோஸ்நெஃப்ட் ஜெர்மனி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தம்போவ் பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்தை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியதால், கடந்த மாதம் ட்ருஷ்பா குழாய் வழியாக விநியோகம் தடைபட்டது. ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . வடகிழக்கு நகரமான ஷ்வெட்டில் உள்ள ஜெர்மனியின் PCK சுத்திகரிப்பு நிலையம், மாஸ்கோ உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்ட பின்னர், குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் கசாக் கச்சா எண்ணெய் மூலம் ஓரளவு வழங்கப்படுகிறது. ரோஸ்நெஃப்ட் ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் பர்கார்ட் வோல்கி கூறுகையில், நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கஜகஸ்தானில் இருந்து 120,000 டன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது, மேலும் 2025 க்கு அப்பால் எண்ணெய் இறக்குமதியை விரிவுபடுத்துவது மற்றும் நீட்டிப்பது தொடர்பாக கஜகஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறினார். ஜெர்மன் செய்தி நிறுவனமான DPA, முதலில் நீர்வரத்து திரும்பியதாக அறிவித்தது. எழுத்து: ரேச்சல் மோர், எடிட்டிங்: ஃப்ரீடெரிக் ஹெய்ன் மற்றும் லுட்விக் பர்கர். https://www.reuters.com/business/energy/oil-flows-germany-via-damaged-druzhba-pipeline-normalise-rosneft-germany-says-2025-09-04/

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

2 months ago
உக்கிரேனின் முக்கிய எண்ணெய் வழ்ங்குனர்களான கிரீஸ் மற்றும் துருக்கியினையும் விட ஸ்லோவாக்கியாவின் உக்கிரேனிற்கான எண்ணெய் வழங்கல் அதிகம், அண்மையில் ட்ருஸ்பா குழாயினை உக்கிரேன் தாக்கி அழித்தது அது கங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு இரஸ்சியாவில் இருந்து எண்ணெயினை எடுத்து செல்கிறது. இந்த தாக்குதல் மூலம் உக்கிரேனும் பாதிப்புள்ளாகின்றது எனும் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதானது எனும் எனது சந்தேகம் வலுக்கிறது என கருதுகிறேன். இந்தியாவும் இன்னபிற நாடுகளும் தமது இரஸ்சிய எண்ணெயினை உக்கிரேன் வாங்குவதனை கூறுவதில்லை, ஆனால் தமக்கு எதிராக களம் திரும்பும் போது உண்மைகளை வெளியே கூறுகிறார்கள், ஒவ்வொரு விடயங்களிலும் ஒன்று அல்ல பல பக்கங்கள் உள்ளது, ஆனால் எழுத்து சுதந்திரம் உள்ளதாக கூறப்படும் இக்கால கட்டத்திலேயே பல உண்மைகள் தெரிவதில்லை, கட்டமைக்கப்படும் பொய்களே வரலாறாகின்றன, அல்லது வரலாற்றின் பக்கத்திலிருந்து சில பக்கங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜேர்மன் ஜப்பான் தமது சொந்த இராணுவத்தினை கட்டியமைப்பது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறிய நாடுகளே தற்போது உக்கிரேனை இராணுவ ரீதியாக பெரிய இராணுவமாக கட்டமைப்பதற்கு இரஸ்சியாவிடம் அனுமதி ஏன் எதிர்பார்க்கவேண்டும் என கூறுகிறார்கள். உலகின் ஒரு பெரிய போரினை ஆரம்பிப்பதற்காக அது நிகழ்த்தப்படுகின்றது, இது ஒரு முட்டாள்த்தனம்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months ago
"ஆடவாங்க அண்ணாச்சி..." "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில் ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா. எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது. பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.