Aggregator

தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்

2 months 1 week ago
தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம் written by admin October 19, 2025 யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில், தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு. 1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. 2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம். தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2025/221709/

தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்

2 months 1 week ago

தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்

written by admin October 19, 2025

Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

 

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை  அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு  , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.  1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.  2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம்.

தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

https://globaltamilnews.net/2025/221709/

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
ஓப்புவிக்கும் விற்பன்னர் உருவாக்கும் பரிகாசத்துக்கும், அந்தோ பாவம் தன்னிலை அறியாத எண்ணெய் பேர்வழியே ஒப்புதல். (அப்படி தன்னிலை அறியாதவர்கள் ஒப்புவிப்பது இல்லை. அவர்கள் சொல்வது தங்களின் சிந்தனையை) . அனால், எந்த விற்பன்னர் ஆயினும், வெளிப்படையான கேள்விகளுக்கு ஆயத்தமாக இருந்து இருக்க வேண்டும். ஒரேயொரு கேள்வி இப்போதும், ஆங்கிலம் மற்றும் சட்டம் சராசரிக்கு மேல் தெரிந்ததாக காட்டி கொள்ளும் ஒப்புவிக்கும் விற்பன்னர், எப்படி UK அரசாங்கம் கேந்திர முக்கியத்துவம் உள்ள, தேசிய நலனுக்கு முக்கியமான கட்டுமானம் ஒன்றை வழங்கியது? இவர்கள், இவர்களின் நிதி மூலம் சர்ச்சைக்கு உட்பட்டு இருந்து இருப்பின்? எப்படி 728 மில்லியன் கடனை HSBC ஏற்பாடு செய்த கொடுத்தது ? கேட்டது / சொல்லியது எல்லாமே மிகவும் குறித்த அடிப்படை கேள்விகள். தன்னை போல மற்றவர்களும் ஒப்புவிப்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், பொல்லை கொடுத்து, வாங்கும் அடியால் தன்னிலை இழந்து தன்னிலை அறியாதவரிடம் தஞ்சம் கேட்கும் (மதிக்காலனித்துவத்துக்கு உட்பட்டு இருப்பது உணராத, அதனால் காலனித்துவப்பட்ட மதியை விடுவிக்க முடியாத ஒப்புவிக்கும்) விற்பன்னர்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இலங்கை இந்தியாவுடன் இணைந்து இப்போட்டியினை நடத்துகிறதா அல்லது இந்தியா இலங்கயுடன் இணைந்து நடத்துகிறதா என தெரியவில்லை ஆனால் போட்டிகளை நடத்தும் இரு அணிகளும் இறுதியில் இல்லாமல் போனால் என்னவாகும்? அவுஸ்ரேலியாவுடனான இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் எனும் பதாகையினை வைத்திருந்த போது தொடங்கிய சனி இது இந்தியாவுக்கு, இன்று இலங்கை அணிக்கு மழை வந்து வழமை போல காப்பாற்றாவிட்டால் வங்க அணியிடம் செமையாக வாங்குவார்கள் அனைவருக்கும் முட்டை கிடைக்கும். அவுஸ்ரேலியாவில் இந்திய ஆண்கள் அணி மண்ணை கவ்வி விட்டது, இந்திய இரசிகர்கள்தான் இந்தியணிக்கு பிடித்த சனி.😠

தன்னறம்

2 months 1 week ago
நீங்கள் ஒரு அடிப்படையில் நல்ல மனிதராக இருப்பீர்கள் எனும் புரிதல் உங்கள் கதைகளை வாசிக்கும் போது உருவாகிறது.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 months 1 week ago
சரி... இன்று என்ன நடக்கின்றது? சிங்களம் தான் தமிழர் பிரச்சனையில் முரண்டு பிடிக்கின்றது என்றால் சர்வதேசமும் சிங்களம் சார்பாகத்தானே நிற்கின்றது. ஒரு காலத்தில் சமாதானம் பேச வந்த நாடுகள் கூட தமிழர்கள் ஆரம்பகாலங்களில் கேட்ட உரிமைகளையே வாங்கிக்குடுக்க வக்கில்லாமல் நிற்கின்றார்கள். ஆனால் நீங்களோ அரைத்த மாவையே அரைப்பது போல் தமிழருக்குள்ளேயே குற்றங்களை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 months 1 week ago
அதாவது பாய்வது தாவுவது தொங்குவது இதை செய்யும் அனைவரும் உங்கள் கருத்துப்படி அப்படியானவர்கள் அதுவும் வெறி பிடித்தவர்களாக இருந்தால் இன்னும் மோசம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால் அன்று ஒரு கூட்டம் இப்படித்தான் கூடியது. மரங்கள் மதில்கள் கூரைகள் எல்லாமே இப்படித்தான் இருந்தது ஆனால் அதன் பின்னர் அந்தக் கூட்டம் எப்படிப் பாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 months 1 week ago
நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 months 1 week ago
அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் மதிலில் பாய்வதும் கரண்ட் கம்பியில் தொங்குவதும் வீடுகள் மற்றும் கூரைகள் மீது தாவுவதும் எதுவோ?? அதிலும் இவை வெறி பிடித்த கூட்டம் வேறு.

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 months 1 week ago
நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு சரியாகவே தெரிகின்றது. ஏனெனில் நானும் நீங்கள் கூறும் நடைமுறையைத்தான் நானும் பின்பற்றுகின்றேன். என்னதொரு ஒற்றுமை பார்த்தீர்களா? 😂 எனக்கு இன்னும் சுகர் வருத்தம் வரவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கொரு முறை வைத்திய அம்மா என்னை சுகர் போடர்ல நிக்குது என பயமுறுத்துவார். ஆனால் நான் பயப்பிடுவதில்லை.காரணம் உணவு விடயங்களில் நான் விட்டுப்பிடிப்பதுதான். இனிப்பு சாப்பாடுகள் சாப்பிடும் போது ஒரேயடியாக காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்த மாதிரி சாப்பிடுவதில்லை.உதாரணத்திற்கு சோறு போன்ற மாச்சாப்பாடுகள் சாப்பிட்டால் ஏனைய சீனி எந்த சாப்பாடுகளும் சாப்பிடுவதில்லை.தற்சமயம் அப்படி சாப்பிட்டாலும் நீண்ட நேர நடராசா நடைப்பயணம் நிச்சயம் உண்டு. மேலே ஒரு பெரியவர் எழுதியது போல் ஆசைகள் வரும் போது இரண்டு பேரீச்சம் பழங்களுடன் வெறும் தேனீர் குடிப்பதுண்டு. அந்த நாளில் நான் வேறு எந்த மா உணவுகளையும்.இனிப்பு சாப்பாடுகளையும் அறவே சாப்பிடுவதில்லை. அதை விட.... இரவு வேளைகளில் கவுனி அரிசியில் காய்ச்சிய கஞ்சி குடிப்பதுண்டு. என்ன இருந்தாலும் சுகருக்கான மருந்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் என்னிடம் உள்ளது.போராடி பார்க்கலாம் என்றுறிருக்கிறேன்.பிரசருக்கு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு சுகர் வரும்/வரலாம் என்ற தத்துவங்களும் பரவலாக உலாவுகின்றது. பார்க்கலாம். உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.🙏 இதெல்லாம் என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரங்கள் கேட்டு அலுப்பு குடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 months 1 week ago
உண்மையான கருத்து இது தான் அதையே இங்கே உல்ட்டாவாக மாற்றும்போது சகல இயந்திரங்களையும் ஒன்றாக கைவசம் வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி எல்லாம் உல்ட்டா செய்யும்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 months 1 week ago
காவல்துறை எச்சரித்தது என்பதில் உண்மை இல்லை விஜயை அவர்கள் தான் கருவூர் எல்லையிலிருந்து வரவேற்றிருக்கின்றார்கள் குறிப்பிட்ட இடத்தில் பேரூந்தை நிறுத்தி அங்கிருந்து தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் அதாவது அரசு தன் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டத்தை அங்கெ பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றது உங்கள் கருத்தின்படியே தி மு க பழிக்கு அஞ்சி மக்களை பலிக்கடாவாக்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது ஒரு முப்பதாயிரம் பேரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துஇருக்க முடியாத ஒரு காவல்துறை ..... அதற்கு ஒரு அமைச்சர் ... ஒரு அரசு

Muslim Homeguard Attacks on Tamil Civilians in Sri Lanka

2 months 1 week ago
இந்த விக்கி முன்மொழிவிற்கான கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பல தாக்குதல்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் 1984ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட 12 தாக்குதல்களை நான் இரட்டை சரிபார்ப்பிற்குட்படுத்தினேன். இவை முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அவர்தம் ஆற்றுகையாலும் செய்யப்பட்டதாக அவ் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு முன்மொழிவாளரால் வழங்கப்பட்டிருந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக வாசித்தேன். அதில் மூதூரில் திசம்பர் 25, 1985 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்புணர்ச்சி மட்டுமே (ஒன்றே ஒன்று) நான் ஆய்வுக்குட்படுத்திய 12 தாக்குதல்களில் முஸ்லிம் "ஊர்காவல் படை" ஆல் மேற்கொள்ளப்பட்டுள்ளது (வழங்ககப்பட்டுள்ள ஆதாரம், pg18). ஏனையவை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மேலும் முல்லைத்தீவில் தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்றும் எழுந்தமானமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் "ஊர்காவல் படை" என்ற சொல் ஆதாரங்களில் வருவதாலே அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம்கள் செய்தவையென்று, ஊகிக்கிறேன். மேலும் மொழிப்பொத்தானை என்ற இடத்தில் சூலை 10, 1986 அன்று தவிபு ஆல் கொல்லப்பட்டார்கள் என்று ஐயப்படும் 11 பேரின் விபரமும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது! முஸ்லிம்களால் தமிழர்கள் மீது 1954ம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவை படுகொலைகளாக, விரட்டியடிப்புகளாக, வன்புணர்ச்சிகளாகவென்று பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் தெளிவாக எடுத்துரைத்தால், ஈழத்தீவில் முதன் முதல் தமிழர்களை அழித்தது இந்த முஸ்லிம்கள் தான்; 1954ம் ஆண்டு வீரமுனை ஊர் எரியூட்டப்பட்டது! இது இவ்வாறு இருக்கையில் அவர்கள் மேல் வலிந்து குற்றமேற்ற வேண்டிய தேவை இருக்கவேண்டியதில்லை. நடந்ததை அவ்வாறே வரலாற்றில் பதிக்க வேண்டும். சோடினைகள் வேண்டியதில்லை. முஸ்ளிம்களால் தமிழருக்கு மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் குறித்து கட்டுரையொன்று விக்கியில் ஏற்றப்பட வேண்டும் தான், எனினும் அதற்காக பொய்யான சோடிக்கப்பட்டவற்றை ஏற்றுதல் மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். அதன் பின்விளைவுகள் வளரி போன்று எமக்கே திரும்ப வரக்கூடும் முயற்சியாளருக்கு வாழ்த்துக்கள், எனினும் தெரிந்தே பொய்களை ஏற்றியுள்ளதால் அவரின் கட்டுரைக்கு "- 1" சிவப்பு புள்ளி வழங்கியுள்ளேன். உண்மையில் தங்களுக்கு ஏற்ற விருப்பமிருந்தால் கீழுள்ள எனது இந்த ஆவணக்கட்டை தாராளமாக பாவித்து விக்கியில் ஏற்றுங்கள். இதற்குள் 1954ம் ஆண்டு முதல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் காலவரிசையில் பதிக்கப்பட்டுள்ளது. நன்றி

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣. இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

Books on Tamil Eelam Liberation Struggle aka Sri Lankan Civil War

2 months 1 week ago
Sri Lanka: The Untold Story The following are links to a series of articles published by Asia Times On Line. Authored by K.T. Rajasingham, it is essentially a synopsis on the post colonial history of Ceylon (Sri Lanka). The first chapter explains the ancient history of the island as a thread to the current conflict. The ensuing chapters are descriptive of the colonial and post-colonial history. https://www.sangam.org/ANALYSIS/AsiaTimes.htm