Aggregator
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்
2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது.
எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது.
இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும்.
அணிக்காக உழைத்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கள்!
https://www.facebook.com/61550105270847/posts/122320356524003509/?rdid=uIRiwNPYoFHeoH2U#
'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி
படக்குறிப்பு,அரசுப் பள்ளி மாணவியான 17 வயது யோகேஸ்வரி 125 செ.மீ உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி
கட்டுரை தகவல்
சாரதா வி
பிபிசி தமிழ்
26 ஜூன் 2025
உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், 17 வயது யோகேஸ்வரி அடைந்திருக்கும் உயரம் அதிகமானது.
விருதுநகர் மாவட்டம் பரந்தாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான யோகேஸ்வரி. அவரது தந்தை செல்வம் டீக்கடையில் பணி புரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பிரிவில் பொறியியல் படிப்பதற்குத் தேர்வாகியுள்ளார்.
ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் நிறைய தொகையைச் செலவு செய்யும் நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஸ்வரி, அரசு வழங்கிய 40 நாள் பயிற்சியை மட்டும் பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேரவுள்ள யோகேஸ்வரி, ஏழாம் வகுப்பு முதல் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி, "நான் சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி அல்ல நான், சராசரியாகவே படிப்பேன். ஆனால் இந்தப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். நாற்பது நாட்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்" என்கிறார்.
தனது தங்கைக்கு ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோகேஸ்வரியின் அண்ணன் பாண்டீஸ்வரன், "என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எங்களைப் போன்றோருக்கு ஐஐடி எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும்கூட அங்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று என் தங்கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இன்று ஐஐடியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி யோகேஸ்வரியின் குடும்பம் முழுவதும் பரவியிருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது. ஏழாம் வகுப்பு வரை, மற்ற மாணவர்களைப் போலவே காணப்பட்டாலும், அதன் பிறகு யோகேஸ்வரி மற்ற பிள்ளைகளைவிட உயரம் குறைவாக இருப்பது வெளியில் கவனிக்கப்பட்டது.
வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்: பரவலாகும் புதிய அபாயம்! - விளைவுகள் மற்றும் தீர்வுகள்
யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை?
இளமையில் சந்தித்த கேலியும் கிண்டலும்
படக்குறிப்பு, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற யோகேஸ்வரி, ஐஐடி பாம்பேவில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்கத் தேர்வாகியுள்ளார்.
"யோகேஸ்வரியைவிட இளையவர்கள் சில நேரங்களில் அவரைப் பார்த்து, வயதில் சிறியவர் என்று நினைத்துக் கொண்டு 'சொல்லு பாப்பா' என்று கூறிவிடுவார்கள். அவர்கள் தெரியாமல் கேட்டாலும் அதுபோன்ற தருணங்கள் வலி மிகுந்ததாக இருக்கும்" என்கிறார் பாண்டீஸ்வரன்.
விழாக்கள், திருமணங்களுக்குச் செல்லும்போது இன்னும் வேதனையாக இருக்கும் என்கிறார் பாண்டீஸ்வரன். "அவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார், உயரம் குறைவாக இருக்கிறார் என்று கூறியவுடன், அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். ஏன் இதைச் சரி செய்ய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று எங்களிடம் கேட்பார்கள். ஒரே பதிலை குறைந்தது 20 முறையாவது சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் வலியை மறைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையுடன் பதில் சொல்வது இன்னும் துயரம்" என்கிறார் அவர்.
யோகேஸ்வரிக்கு 11 அல்லது 12 வயதாகும்போது அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பதைக் கவனித்த பெற்றோர்கள், அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் அவருக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறுகின்றனர்.
அவரது தாய் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து துறையில் பணியாற்றி வருகிறார். "எப்படி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவது உறுதி கிடையாதோ, அதே போலத்தான் எங்கள் அம்மா வீடு திரும்புவதும். அந்த ஆலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை பயமாகவே இருக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பல லட்சம் ரூபாய் கடன் உள்ளது" என்கிறார் பாண்டீஸ்வரன்.
யோகேஸ்வரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படித்து வரும் எஸ்.ரேகா, அவருக்கு ஐஐடியில் சீட் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார்.
"நாங்கள் இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாக இருப்போம், நான் கணினி பாடப்பிரிவு படித்ததால், உயிரியல் வகுப்பில் மட்டும் அவரும் நானும் தனியாகச் செல்ல வேண்டியிருக்கும். தினமும் காலையில் நான் அவரது வீட்டுக்குச் செல்வேன், அங்கிருந்து இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து செல்வோம். அவரது அம்மா மிகவும் அன்பாகப் பேசுவார். எனக்கு என் வீட்டில் இருப்பது போலவே தோன்றும்," என்றார் ரேகா.
அவருக்கு சீட் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், அவர் தன்னை விட்டு வெகுதொலைவாகச் செல்லப் போவது குறித்த வருத்தம் சற்று இருப்பதாகக் கூறுகிறார் ரேகா.
யோகேஸ்வரியின் 12ஆம் வகுப்பு கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி, அவர் வகுப்பில் மிகவும் அமைதியானவராக இருப்பார் என்கிறார். "யோகேஸ்வரி மிக அமைதியாக இருப்பார், யாரிடமும் தேவையின்றிப் பேச மாட்டார். அவரால் வகுப்பில் எந்தத் தொந்தரவும் இருக்காது. பாடங்களைச் சிரத்தையுடன் கவனிப்பார்" என்கிறார்.
அரசுப் பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தவர்
படக்குறிப்பு, பொது இடங்களில், விழாக்களில் வலி மிகுந்த வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக யோகேஸ்வரியின் சகோதரர் பாண்டீஸ்வரன் கூறுகிறார்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளியில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி கூறுகிறார்.
"ஜேஇஇ தேர்வுப் பயிற்சிக்கு விருப்பமாக இருக்கும் மாணவர்கள் பற்றிக் கேட்டவுடனே ஆர்வத்துடன் யோகேஸ்வரி முன்வந்தார். இன்று கிடைத்திருப்பது அவரது முயற்சிக்கான அங்கீகாரம்" என்கிறார் அவர்.
உயரம் தனக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி கூறினார். இதே கருத்தை அவரது தோழியும், ஆசிரியரும் குறிப்பிட்டனர்.
"அவர் எப்போதும் போலவே, எல்லா மாணவர்களையும் போலவே இருப்பார். படிப்பில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் தைரியமாக முதல் ஆளாக நிற்பவர். காலையில் மாணவர் கூட்டங்களில் பாடுவது, விழாக்களில் ஆடுவது என அனைத்திலும் பங்கேற்பார். ஒரு முறை சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சில விளையாட்டுகளில் உயரம் காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஒரு நிகழ்வு தவிர வேறு எங்கும் அவருக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பதை நான் பார்த்ததில்லை" என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.
யோகேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அவரது உயர் கல்விக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளதாக யோகேஸ்வரி கூறினார்.
உயரம் குறைவானவர்கள் யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
வயது வந்தோரில் ஒருவர், அவர் எந்தப் பாலினமாக இருந்தாலும், 147 செ.மீக்கு (4 அடி,10 அங்குலம்) குறைவான உயரம் கொண்டவராக இருந்தால் அவர் உயரம் குறைவானவர் (dwarf) என்று கருதப்படுவதாக மத்திய அரசு வரையறுக்கிறது. இது மரபணு காரணமாகவோ அல்லது மருத்துவக் காரணங்களாலோ ஏற்படலாம்.
நான்கு அடி, 10 அங்குலம் உயரத்தில் இருந்து ஒவ்வொரு அங்குலம் குறையும்போதும், அது 4% இயலாமை என்று கருதப்படும். உதாரணமாக, 4 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 4% இயலாமை இருப்பதாகவும், 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 8% இயலாமை இருப்பதாகவும் கணக்கிடப்படும்.
அகோண்ட்ரோபிளாசியா என்பது எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு. மனிதர்கள் குள்ளமாக இதுவே 70% காரணமாக இருக்கிறது. மேலும் பலருக்கு, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். இவை தவிர வேறு சில காரணங்களும் இருக்க வாய்ப்பு உண்டு.
குள்ளமாக இருப்பவர்களில் இரண்டு வகை உண்டு. சிலருக்கு, உடலின் எல்லா பாகங்களும் சிறியதாக இருக்கும். சிலருக்கு தலை பெரிதாகவும், கை கால்கள் மட்டும் சிறியதாகவும் இருக்கும்.
குள்ளமாக இருப்பவர்களின் அறிவுத்திறனும் சராசரி வாழ்நாளும் இயல்பாகவே இருக்கும். பொதுவாக அவர்களால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று மத்திய அரசின் இயலாமை அறியும் வழிகாட்டு நெறிகள் கூறுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி
யாழில் ஆபத்தான நிலையில் உள்ள வீதி மின் விளக்கு கம்பம் – உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
யாழில் ஆபத்தான நிலையில் உள்ள வீதி மின் விளக்கு கம்பம் – உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published By: DIGITAL DESK 2
03 JUL, 2025 | 10:43 AM
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய வகையில் அமைந்துள்ள வீதி மின் விளக்கு கம்பம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க மின்சார சபையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதி மின் விளக்கு கம்பத்தின் மிக அருகே உயர் மின் அழுத்த மின் வடம் செல்கின்றது. இந்த மின் வடம், பலமான காற்று காரணமாக தொய்வு நிலையில் காணப்படுவதால், அது குறித்த மின் விளக்கு கம்பத்திற்கு மிக நெருக்கமாக செல்கிறது.
இந்த நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக உள்ளதுடன், ஏதேனும் நேரில் தொடுதலாகும் சூழ்நிலை உருவானால், மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரிக்கலாம் என அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மின் விளக்கு கம்பத்தில் பழுதடைந்த மின் விளக்கை திருத்த முற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் ஊழியர், உயர் மின் அழுத்த மின் வடத்தில் இருந்து ஏற்பட்ட மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியாற்றியதாலேயே, அவர் உயிரிழப்பதிலிருந்து தப்பியுள்ளார். தற்பொழுது அவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னர் தட்டாதெரு சந்திக்கு அருகில் உள்ள வீதி மின் விளக்கு கம்பத்தில் படர்ந்திருந்த தாவர கொடியை மாடொன்று உணவாக எடுத்துக் கொள்ள முயன்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
எனவே, இவ்வாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம் தொடர்பில் மின்சார சபையினர் உடனடியாக கவனம் செலுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
கீழடி: 2500 ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓட்டை மனித முகமாக ஆய்வாளர்கள் வடிவமைத்தது எப்படி?
சிரிக்கலாம் வாங்க
சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர
சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர
Published By: DIGITAL DESK 3
03 JUL, 2025 | 03:11 PM
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.