Aggregator
மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Published By: Vishnu
04 Sep, 2025 | 06:30 PM
![]()
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வியாழக்கிழமை (04.09.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் (04.09.2025) பதிவு செய்துள்ளனர்.

35 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.
இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான நிதி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் - ரி.பி. சரத்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான நிதி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் - ரி.பி. சரத்
04 Sep, 2025 | 06:17 PM
![]()
கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரி.பி.சரத்,
யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அந்நிலையில் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை நேரில் ஆராய வந்துள்ளோம்.
கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்றபோது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளதை அவதானித்தோம்.
அதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.
மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளது.
அதனால் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் எனவே அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு கூறினார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) கே.ஜி.பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி
மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி
Published By: Digital Desk 3
04 Sep, 2025 | 11:46 AM
![]()
(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
பொலிஸ் திணைக்களம் 159 ஆண்டுகாலத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. அளப்பரிய சேவையாற்றியுள்ளது.பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான சேவையினால் தான் பொலிஸ் சேவை 159 ஆண்டுகால கௌரவத்தை தனதாக்கியுள்ளது.
பொலிஸ் சேவைக்கு பாராட்டுக்கள் மற்றும் கௌரவம் காணப்படுவதை போன்று விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. ஆகவே பொலிஸ் சேவையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸ் சேவையில் ஈடுபடும் சகலரினதும் பிரதான பொறுப்பாகும். பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்புக்காக பொலிஸார் செயற்பட வேண்டும்.
பொலிஸ் சேவைக்கான கௌரவத்தை உறுதியாக பாதுகாக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பொலிஸ் சேவை தொடர்பில் வெளியாகும் ஒருசில செய்திகள் ஆரோக்கியமானதல்ல, 84 ஆயிரம் பேர் உள்ள பொலிஸ் சேவையில் ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸ் சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொலிஸ் சேவை திறமையானது. சர்ச்சைக்குரிய சம்பவங்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். மிகவும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள். திறமையுடன் மனிதாபிமானத்துடன் செயற்பட கூடியவர்களும் உள்ளார்கள்.
நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய படுகொலைகள் மற்றும் குற்றங்கள் உள்ளன. இந்த படுகொலைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான உண்மை ஏன் வெளிவரவில்லை. பொலிஸ் திணைக்களத்தின் பலவீனமா? நான் ஒருபோதும் அவ்வாறு எண்ணமாட்டேன். குற்றங்களை குறுகிய நேரத்தில் கண்டுப்பிடிக்கும் சிறந்த விசாரணையாளர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள்.
வெளிக்கொண்டு வர முடியாத படுகொலைகள் மற்றும் குற்றங்களின் பின்னணியில் அரசியல் சக்தி மற்றும் அரசியல் அதிகாரம் இருந்துள்ளது. இதுவே உண்மை. பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்தாலும் அரசியல் தலையீடுகளினால் அவை பலவீனடைந்த வரலாறும் உண்டு. விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் பழிவாங்கப்பட்ட கலாசாரமும் இந்த நாட்டில் இருந்தது. எமது அரசாங்கத்தில் அவ்வாறான நிலை ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள்.
குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கப்படும் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். படுகொலைகள் மற்றும் குற்றங்களை காலங்கள் தீர்மானிக்காது. குற்றங்கள் எதனையும் காலவோட்டத்தில் மறக்கடிக்க முடியாது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தாத நிலையில் குற்றங்கள் தூய்மைப்படுத்தப்படமாட்டாது. ஆகவே குற்றங்களுக்குரிய தண்டனைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
ஒருசில குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் காலவோட்டத்தின் பின்னர் அவதானத்துக்குட்படுகிறது. தசாப்த காலங்களுக்கு முன்னரான குற்றங்களின் விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காலவோட்டத்தின் பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். இது ஒருபோதும் வெற்றிப்பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். காலம் தண்டனையை தீர்மானிக்காது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
போதைப்பொருள் வியாபாரம் நகரம் முதல் கிராமம் வரை வியாபித்துள்ளது. பாரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். ஒருசிலர் தமது சுயநலனுக்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கு அரசியல் தலையீடு இருந்ததை அனைவரும் அறிவோம். அரச நிறுவனங்களின் பிரதானிகளும், பொலிஸ் சேவையில் ஒருசிலரும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்பதையும் இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும்.
சகல துறைகளின் கௌரவத்தை அத்துறைகளின் உத்தியோகத்தர்கள் பாதுகாக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே போதைப்பொருள் ஒழிப்பின் வீரர்களாக பொலிஸார் மாற வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் சமூக கட்டமைப்பில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றல் மற்றும் அவர்களை கைது செய்யும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. நீங்கள் சாதாரண குடிமக்கள் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை தோளில் பொறுப்பேற்றுள்ளீர்கள். ஆகவே மக்களுக்காக தைரியமாக செயற்படுங்கள். மக்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வரும் வகையில் மக்களுக்காக செயற்படுங்கள் என்றார்.