2 months ago
‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! Bookday20/05/2025 அ. குமரேசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில் வெளியான ‘யுலிசிஸ்’ (Ulysses)., அந்நாளிலேயே புராணக் கதாபாத்திரத்தை வைத்து மாற்றுச் சிந்தனை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டுகளைப் பெற்ற படைப்பு. அயர்லாந்து நாட்டின் ஜேம்ஸ் ஜாய்ஸ் – James Joyce (1882–1941) எழுதிய இந்தக் கதை, தொடக்கத்தில் கடுமையான முரண் விமர்சனங்களைச் சந்தித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இலக்கியவாதிகளின் கருத்துகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் படிப்படியாகத் தடை விலக்கப்பட்டது, அமெரிக்காவில் பதிப்பாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1934இல் தடையை நீக்கியது. முரண்களாகக் கூறப்பட்டவை – வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட நடை, ஆகவே வாசிப்பதற்கு எளிதாக இல்லை. திடீர்த் திடீரென்று தத்துவம், உளவியல், அறிவியல், வரலாறு, மொழி இலக்கணம் என்று எங்கெங்கோ போகிறது, ஆகவே கதை என்னதான் சொல்கிறது எனப் புரியவில்லை. தடைக்கான காரணங்களாகக் கூறப்பட்டவை –பாலியல் உறவுகளைச் சித்தரிக்கிறது, அது அன்றைய சமூகக் கருத்துகளுடன் முரண்படுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுகிறது, அது ஒழுக்க நெறிகளை மீறுகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) & யுலிசிஸ் (Ulysses) இந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை என்று எழுத்தாளரும், கதையின் புதுமையை ரசித்துக் கருத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகளும் நிறையவே வாதிட வேண்டியிருந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது. நாவல் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சுவையானவை. மூன்று பாகங்களாக வந்த இந்த நாவலில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் என்று சொல்வது தவறு, ஏனென்றால் புத்தகத்தில் காட்சி (எபிசோட்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கப் பதிப்புகளில், காட்சிகளுக்குத் தலைப்புகளோ, வரிசை எண்களோ தரப்படவில்லை. ஆனால் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவது வெவ்வேறு முறைகளில் உணர்த்தப்பட்டிருக்கும். ஒரு காட்சி உரைநடையாக இருக்கும், இன்னொரு காட்சி நாடக உரையாடலாக இருக்கும், மற்றொரு காட்சி கவிதை வடிவில் இருக்கும், வேறொரு காட்சி சொல் விளையாட்டுகளோடு ஆங்கில மொழியின் வரலாறு பற்றிப் பேசும்! பல இடங்களில் வாக்கிய அமைப்புகள் கரடு முரடாக இருக்கும். இதையெல்லாம் ஜேம்ஸ் ஜாய்ஸ் திட்டமிட்டே செய்திருந்தார். மூவரின் கதை 1904 ஜூன் 16 , அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்த ஒரு நாளில் நடைபெறுகிற, குறிப்பாக மூன்று பேரின் அனுபவங்களும் சிந்தனைகளுமே கதை. பத்திரிகை விளம்பர முகவரான லியோபோல்ட் ப்ளூம் அதன் விற்பனையாளர். அவரது மனைவி மோல்லி ஒரு பாடகர். இளம் ஆசிரியரான ஸ்டீபன் டெடலஸ் ஓர் எழுத்தாளர். நகரத்தின் ஒரு கோபுரக் கட்டடத்தில் நண்பர்களோடு குடியிருக்கும் ஸ்டீபன் டெலஸ் தனது தாயின் மரணத்தை எண்ணி வருந்துகிறான். நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்குச் சென்று வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்தும் ஸடீபன் பின்னர் கடற்கரைக்குச் சென்று தனியாக அமர்ந்து சிந்தனையில் மூழ்குகிறான். தனது தந்தையுடன் நல்ல உறவில் இல்லாத ஸ்டீபன் தனக்கொரு ஞானத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறான். லியோபோல்ட் ப்ளூம் தனது மனைவிக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுக்கிறார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து நகரத்தில் சுற்றுகிறார். மனைவிக்கு பிளேசஸ் போய்லான் என்ற, இசைக்குழு மேலாளருடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அவரை அப்படிச் சுற்ற வைக்கிறது. ஆனால், மார்தா கிளிஃபோர்ட் என்ற பெண்ணுக்குப் புனைப் பெயரில் காதல் கடிதங்கள் அனுப்புகிறவரான அவருக்கு, அந்தப் பெண்ணிடமிருந்து கடிதம் வருகிறது. தொழில் சார்ந்தும் நட்பு முறையிலும் பலரோடு உரையாடுகிறார். இன்னொரு பக்கம், தனது மகனை இழந்த துயரத்தில் இருக்கும் அவரும், தனக்கொரு ஞானப் புதல்வன் வேண்டுமென நினைக்கிறார். மோல்லிக்கு உண்மையிலேயே போய்லானுடன் தொடர்பு இருக்கிறது. அவருடைய பாலியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது காரணமா அல்லது மிகுதியான வேட்கை கொண்டவரா என்பது வாசகர்களின் கருத்துக்கு விடப்படுகிறது. சிறுவயதில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக ஒரு தோழியுடன் பழகியவர் என்று நாவலின் பிற்பகுதியில் தெரியவருகிறது. ஊரைச் சுற்றி வருகிற ப்ளூம் தனது செயல்கள் பற்றித் தனக்குத் தானே விமர்சித்துக்கொள்கிறார். தனிமை, மனைவியின் மீது சந்தேகம், தானே சந்தேகத்துக்கு உரியவராக நடந்து கொள்வது, மோல்லியின் விருப்பங்கள் பற்றிய மதிப்பீடு, மனசாட்சியின் விசாரணை ஆகியவற்றால் உந்தப்படும் உணர்ச்சி மேலீட்டுடன் அவர் அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு மதுபானக் கூடத்தில் ப்ளூம், ஸ்டீபன் இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒருவர்க்கொருவர் பிடித்துப்போக பல சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தான் தேடுகிற ஞான மகன் ஸ்டீபனாக இருக்கலாம் என்று ப்ளூமும், ஞானத் தந்தை ப்ளூமாக இருக்கலாம் என்று ஸ்டீபனும் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்டீபனை ப்ளூம் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னோடு தங்கச் சொல்கிறார். ஆயினும் தனது சுதந்திரமான பாதையில் பயணிக்க விரும்பும் ஸ்டீபன் மறுத்துவிட்டு மறுபடி தனிமையில் நகரத்திற்குள் செல்கிறான். ஒருநாள் பழக்கம்தான் என்ற நிலையில் வீட்டில் தங்குகிற அளவுக்கு நெருங்க வேண்டாம் என்ற எண்ணத்தாலோ, மோல்லியின் வெளிப்படைத் தன்மையால் ஏற்பட்ட தயக்கத்தாலோ ஸ்டீபன் அந்த முடிவை எடுத்திருப்பான் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம். கடைசிக் காட்சியில், மோல்லியும் ப்ளூமும் சேர்ந்தே படுத்திருக்கிறார்கள். அப்போது மோல்லி தனது கடந்தகால நினைவுகளுக்குள் பயணிக்கிறார். தன்னுரையாடல் வடிவில் அந்த நினைவுகள் வாசகர்களுக்குப் பகிரப்படுகின்றன. தனது பாலியல் வேட்கை, கணவரைப் பற்றிய மதிப்பீடு, அவருடைய பக்குவம், போய்லான் மீதான உடல் சார்ந்த கவர்ச்சி, அதற்கு முன் பல ஆண்களுடன் பழகியது, இளவயதினளாக இருந்தபோது ஒரு நண்பியிடன் தன்பாலின ஈர்ப்பு, திருமணத்திற்கு முன் ப்ளூம் தன்னை அணுகி சேர்ந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தியது, அப்போது நெருக்கமாக இழுத்தணைத்துத் தனது ஒப்புதலை அளித்த விதம்… இப்படியாக அந்தத் தன்னுரையாடல் வெளிப்படுகிறது. செய்து வைத்தவர்களா? இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துப்படி – மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு இது. கதையின் ஓட்டமே, இயற்கையான பாலியல் விருப்பத்தைச் சார்ந்திருப்பதால் அது பற்றிய சித்தரிப்புகளில் தவறில்லை. மேலும், ஒரு கதாபாத்திரம் என்றால் முழுக்க முழுக்க நல்லவர், அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவர் என வார்க்கப்படுவதிலிருந்த இந்த நாவல் மாறுபடுகிறது. அத்துமீறும் ஆசைகளும் அதைப் பற்றிய சுயவிமர்சனங்களுமாக இயல்பான மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ப்ளூம் மனைவியின் மீது ஆத்திரப்படும் வழக்கமான கணவராக இல்லாமல், மோல்லியைப் புரிந்துகொள்ள முயல்வதும், தனது நிலையை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய உளவியல் நுட்பங்கள். மோல்லியின் நினைவோட்டம் ஒரே சீராக இல்லாமல், தொடர்ச்சியாக அமையாமல் ஏறுக்கு மாறாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் தனியாகச் சிந்திக்கிறபோது எழுதிவைத்தது போலத் தொடர்ச்சியாக இருக்காது, ஒன்றைப் பற்றி யோசிக்கிறபோதே இன்னொன்றைப் பற்றிய யோசனை தொற்றிக்கொள்ளும். அதை அலசுகிறபோது தொடர்பே இல்லாத வேறொரு நிகழ்வு நிழலாடும். இதை ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார். அந்த நீண்ட தன்னுரையாடலில் எங்கேயும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி என எந்த நிறுத்தற்குறியும் இருக்காது. அது வாசிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், அதுவே ஒரு புதிய உத்தியாகவும் அமைந்தது. நினைவுப் பகிர்வில் மோல்லி இடையிடையே “ஆமா” (யெஸ்) என்ற சொல்லை அடிக்கடி சொல்வதாக வரும். “ஆமா… அவன் என்னிடம் நெருங்கி ஆமா அப்படிக் கேட்டான் ஆமா நான் அவனை ஆமா அப்படியே அணைச்சிக்கிட்டேன்…” இப்படி. இந்த “ஆமா” மிகவும் புகழ்பெற்ற சொல்லாக மாறியதாம். ஸ்டீபன் என்னாகிறான்? ப்ளூமும் மோல்லியும் இணக்கமானார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்கு கதையின் போக்கை வைத்து அவரவர் கண்ணோட்டத்தில் பதில் காண வைக்கிறது நாவல். இதன் மூலம் வாசகர்களைப் படைப்பின் பங்காளியாக்குகிறார் நாவலாசிரியர். தனிமனித சிந்தனையோட்டம், உளவியல் ஆய்வு, நகர வாழ்க்கை என இந்த நாவலை மூன்று கோணங்களில் ஆராயலாம். இப்படிப்பட்ட படைப்பு வெளியானபோது தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. ஸ்டீபன் மதுபானக்கூடத்தில் இருக்கிறபோது, தேசப்பற்று பற்றிய காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. அப்போது அவன் பிரிட்டிஷ் மன்னரைக் கடுமையாக விமர்சிக்கிறான். அயர்லாந்தில் சுதந்திரத்திற்கான கிளர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த விமர்சனம் அரசு மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காரணத்திற்காகவும் இங்கிலாந்தில் நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிற்காலத்தில் அதே இங்கிலாந்தில் பல நாடகக்குழுக்கள் நாவலை மேடையேற்றியிருக்கின்றன. வானொலி நாடகத் தொடராகவும் ஒலிபரப்பானது. 1967இல் பிரிட்டன்–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக ‘ யுலிசிஸ் (Ulysses) ’ என்ற தலைப்பிலும், 2003இல் அயர்லாந்து–கனடா கூட்டுத் தயாரிப்பில் ‘ப்ளூம்’ என்ற தலைப்பிலும் திரைப்படங்களாக வந்தது. முதல் படம் வணிக அடிப்படையிலும் நல்ல வெற்றியைப் பெற்றது, இரண்டாவது படம் சுமாராகவே போனது. பெயரிலேயே ஒரு கலகம் 1914இல் டப்ளின் நகர வாழ்க்கையைப் பல வகைகளில் பிரதிபலித்த ‘டப்ளினர்ஸ்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு, 1916இல் தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எ போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேனி’ என்ற நாவல், 1939இல் சிக்கலான மொழி விளையாட்டுக்காகப் பெரிதும் பேசப்படும் ‘ஃபின்னேகன்ஸ் வேக்’ என்ற நாவல் ஆகியவை ஜாய்ஸ்சின் குறிப்பிடத்தக்க இதர சில படைப்புகளாகும். டப்ளின் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. செவ்வியல் தன்மை, புதுமை முயற்சி, ஒரு காலத்தில் முரணாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்கள், நுட்பமான அரசியல்–சமூக விமர்சனம், மொழி விளையாட்டுகள், அறிவியலும் வரலாறும் உள்ளிட்ட தேடல்கள், உளவியல் வெளிப்பாடுகள் இவற்றுக்காக இன்றளவும் இலக்கியம் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது ‘ யுலிசிஸ் (Ulysses) ’. யுலிசிஸ் (Ulysses) கிரேக்கப் புராணக் கதைகளில் வருகிற ஒரு வீரர். ஹோமர் எழுதிய ‘ஒடிஸி’ காவியத்தில், பல சாகசங்களைச் செய்கிற முக்கியமான கதாபாத்திரம். அந்த வீரரின் பெயரை, ஜேம்ஸ் ஜாய்ஸ், எந்தப் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அசாத்தியமான சாகசங்களும் இல்லாத ஒரு சராசரி மனிதரான ப்ளூமின் ஒரு நாள் நிகழ்வுகளைக் கூறும் ஒரு நாவலுக்குச் சூட்டியதே கூட பேசுபொருளானது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஒன்றும் சாதாரணமாதல்ல என்று உணர்த்தவே இந்தப் பெயராம்! https://bookday.in/books-beyond-obstacles-14-james-joyces-ulysses-a-neglected-novel-based-article-written-by-a-kumaresan/
2 months ago
காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446035
2 months ago

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!
காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.
அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
https://athavannews.com/2025/1446035
2 months ago
மணலில் கட்டப்பட்ட பாலம் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கத் துவங்கினார் . அந்த இடமானது , பரத்வாஜ முனிவரின் மகனான யவக்ரீதா தன் அழிவை தேடிக்கொண்ட இடமாகும் . அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா. தானும் அது போன்ற புகழைப் பெற வேண்டி இந்திரனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான் . அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய இந்திரனும் அவன் முன் தோன்றி எதற்கு இத்தகைய தவம் இயற்றுகிறாய் என கேட்டான். அதற்கு யவக்ரீதா “இந்திரனே ! இந்த உலகில் உள்ள வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவன் ஆக விரும்புகிறேன் . ஆனால், ஒரு குருவிடம் சென்று இவற்றை கற்க நான் விரும்பவில்லை . எனவே, எனக்கு அந்த வேதங்களின் அறிவை கொடுப்பாயாக” எனக் கேட்டான் . அதைக் கேட்ட இந்திரனோ “வேதங்களை அறிய அவற்றை கற்பதே ஒரே வழி . எனவே , இந்த தவத்தை விடுத்து ஒரு குருவிடம் சென்று அவற்றைக் கற்றுக்கொள்” எனக் கூறி மறைந்தான் . ஆனால் , தன் முயற்சியை கைவிட விரும்பாத யவக்ரீதா, மீண்டும் முன்னை விட கடுமையான தவத்தை மேற்கொள்ள துவங்கினான். இம்முறையும் இந்திரனிடம் மீண்டும் அதே வரத்தை கேட்க , இந்திரனும் முன்பு சொன்ன அதே பதிலைக் கூறினான் . பின் ஒரு நாள் காலையில் யவக்ரீதா குளிக்க ஆற்றங்கரைக்கு சென்றான். அங்கே ஒரு முதியவர் கரையில் இருந்த மணலை எடுத்து ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தார் . அவர் என்ன செய்கிறார் என புரியாத யவக்ரீதா அவரிடம் வினவினான் . அதற்கு அந்த முதியவர் “ஆற்றில் இந்த மணலைப் போடுவதன் மூலம் , இக்கரையில் இருந்து அக்கரை செல்ல பாலம் எழுப்புகிறேன்” என பதில் உரைத்தார் . அதைக் கேட்ட யவக்ரீதா சிரித்துக் கொண்டே “கையில் மணல் எடுத்து பாலம் கட்டப் போகிறாயா? உனக்கு இது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ” என கேலியாக கேட்டான். “வேதங்களை கற்காமலேயே அந்த அறிவு வேண்டும் என நினைப்பதை விடவா இது முட்டாள்தனம்?” என திருப்பிக் கேட்டார் முதியவர். அந்த முதியவர் வேறு யாருமில்லை . இந்திரன்தான் முதியவரின் வடிவில் யவக்ரீதாவிற்கு பாடம் புகுத்த வந்திருந்தான். தன் தவறை உணர்ந்த யவக்ரீதா, இந்திரனின் காலில் விழுந்து “நான் நன்கு கற்றறிந்தவன் ஆக ஆசிர்வதிப்பீர்களாக” என கேட்டான். இந்திரனும் அவனது மனமாற்றத்தால் மகிழ்ந்து “நீ வேதங்களை நன்கு கற்றறிந்து புகழுடன் வாழ்வாயாக” என ஆசிர்வதித்தார். அழிவை உண்டாக்கிய தற்பெருமை யவக்ரீதாவின் கதையை லோமேஸர் தொடர்ந்து சொல்லலானார் . இந்திரனிடம் ஆசி பெற்ற யவக்ரீதா மெல்ல மெல்ல வேதங்களைக் கற்று தேர்ந்தான். இந்திரனின் ஆசியால்தான் தான் தனக்கு வேதங்களின் அறிவு கிட்டியதாக எண்ணி கர்வமடைந்தான். தனது மகன் செல்லும் பாதையை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பரத்வாஜர் அவனை அழைத்து அவனை எச்சரித்தார். ரிஷி ரைபயாவையும் அவரது மகன்களையும் குறைத்து எடை போடுவது அவனது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது அவனது மனதில் பதியவே இல்லை . ஒரு நாள் காலையில் , பரவஸுவின் அழகிய இளம் மனைவி , ரைபயாவின் ஆசிரமத்திற்கு அருகே நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனது உணர்வுகளையும் மனதையும் அடக்க முடியாத யவக்ரீதா, மிருகமாய் மாறினான். தனிமையான இடத்திற்கு அவளை இழுத்து சென்று அவளை மானபங்கப்படுத்தினான். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த ரிஷி ரைபயா, அங்கே தனது மருமகள் அலங்கோலமாய் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் விசாரிக்கத் துவங்கினார். அவள் நடந்ததை சொல்ல, அதைக் கேட்ட ரிஷி ரைபயா மிகவும் ஆத்திரம் கொண்டார். தனது ஜடாமுடியில் இருந்து இரு முடிகளை பிடுங்கி மந்திரம் ஜெபித்து அங்கே இருந்த அக்னியில் வீசினார். அந்த அக்னியில் இருந்து அழகிய பெண் ஒருத்தியும் , கோர உருவம் கொண்ட அரக்கியும் உருவானார்கள். யவக்ரீதாவை கொல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார் ரைபயா. யவக்ரீதா காலை நேர கடன்களை கழித்துக் கொண்டிருக்கையில் , அவனை நோக்கி வந்த அந்த அழகிய பெண் அவனை மயக்கி அவன் தண்ணீர் வைத்திருந்த கமண்டலத்தை அவனிடமிருந்து பறித்து சென்றது. இப்பொழுது அந்த அரக்கி தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொல்ல வந்தது. யவக்ரீதா மந்திரங்கள் மூலம் அந்த அரக்கியை விரட்ட இயலும் என்றாலும், அதற்கு முன் அவன் தன்னை நீரால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். அவனின் கமண்டலம் பறிபோனதால், அருகில் இருந்த குளத்தை நோக்கி ஓடினான். ஆனால்,அவன் அதனருகே சென்றவுடன் அந்த குளம் வறண்டுவிட்டது. பின், அருகில் இருந்த ஓடையை நோக்கி ஓட அதுவும் அவன் அங்கே சென்றவுடன் காய்ந்து போனது. தன் உயிரை காத்துக் கொள்ள, அவனது தந்தை பரத்வாஜர் தவம் புரிந்துக் கொண்ட குடிலை நோக்கி ஓடினான். ஒவ்வொரு இடமாய் ஓடியவனின் சிகை அவிழ்ந்து முகம் வியர்த்து அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். பாரத்வாஜரின் குடிலை காத்து நின்ற வயதான காவலாளிக்கு யவக்ரீதாவின் இந்த கோலம் அடையாளம் தெரியவில்லை. யாரோ பாரத்வாஜரின் தவத்தை கெடுக்க வருவதாக எண்ணி அவனை தடுத்து நிறுத்த அவன் பின்னாலேயே வந்த அந்த அரக்கி , தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொன்றது. https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/
2 months ago

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!
தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன.
பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன.
தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
https://athavannews.com/2025/1446031
2 months ago
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனவும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால்,பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445915
2 months ago

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு!
பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனவும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால்,பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1445915
2 months ago
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
September 3, 2025 5:22 pm

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான்,
கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட கலைஞர் என்ன செய்தார். கச்சதீவு கொடுக்கப்பட முன்னர் அதுகுறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன.
இந்தியமும் திராவிடமும் தமிழனத்துக்கும் தமிழத் தேசியத்துக்கும் எப்போதும் எதிரான என்பதை இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் உறுதியாக கச்சதீவு மீட்கப்படும். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
கச்சதீவை இந்தியா மீட்காவிடின் தமிழ்நாடு பிரியும். சிங்களவர்கள் நண்பர்கள் என்றாம் நாம் யார் எனக் கேள்வியெழுப்புகிறோம். அவர்கள்தான் முக்கியம் என்றால், எம்மை பிரித்து விடுங்கள் எனக்டி கோருவோம். இந்திய விடுதலைக்காக போராடியது தமிழர்கள். எம்மைவிட அவர்கள்தான் முக்கியம் என்றால், அவர்களுடன் இந்தியா நட்பு பாராட்டிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார்.
https://oruvan.com/auto_awesome-translate-from-english-1829-5000-tamil-nadu-will-secede-from-india-if-kachchadive-is-not-recovered-from-sri-lanka-seaman-warns/
2 months ago
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா?
இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது.
அவர்கள் பேசியதாவது,
ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.
புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.
ஷி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.
இருவருடன் நடந்து சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஷி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்” என்று புதின் கூறினார்.
https://akkinikkunchu.com/?p=339524