2 months ago
அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுஆயுத ஏவுகணை 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, புதின், ஜின்பிங் மற்றும் கிம் முதல் முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பின் முடிவில் பறக்கவிடப்பட்ட பலூன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன ராணுவ ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் ராணுவ உலங்கு வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன போர் விமானங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் கப்பல் மாதிரி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் வாகனத்தில் சென்று ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் நீருக்கடியில் சென்று தாக்கும் ஆயுதம் (டொர்பீடோ) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்எஸ்யு என்கிற சீன கடற்படையின் நீர்மூழ்கி ஏவுகணை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வானில் சாகசம் செய்த போர் விமானங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அணிவகுப்பில் பங்கேற்ற சீன பீரங்கிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட தலைவர்களின் குழு புகைப்படம் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9w9x28z72o
2 months ago
புதின், கிம் உடன் தோன்றிய சீன அதிபர்: அமெரிக்கா கவலை அடைந்துள்ளதா? - டிரம்ப் பதில் பட மூலாதாரம், Bloomberg via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங்கில் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், சீனா நடத்திய மிகப்பெரிய வெற்றி தின அணிவகுப்பு விழா குறித்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்." என்று அவர் பதிவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் மாற்றம் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பது போன்ற கருத்துகளை டிரம்ப் முன்னதாக நிராகரித்தார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு அளித்த "பெரும் ஆதரவு மற்றும் 'உயிர்த் தியாகம்'" பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியையும் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகம் சரியான முறையில் கௌரவிக்கப்படும் மற்றும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்!" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கிம் மற்றும் புதின் உட்பட 26 நாட்டுத் தலைவர்கள் ஜின்பிங்குடன் இந்த ராணுவ அணிவகுப்பில் இணைந்தனர். டிரம்பின் வரிகள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை உலுக்கிய பிறகு, அமெரிக்காவுக்கு சாத்தியமான மாற்றாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளது. பட மூலாதாரம், Sputnik/Pool via Reuters படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங் அமெரிக்க நலன்களையும் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கு இந்த வரிகள் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக, எந்தவொரு இராஜதந்திர ரீதியான இழப்பையும் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சீனாவும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்க ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக நம்புகிறீர்களா என்று பிபிசி கேட்டதற்கு, "இல்லை. இல்லவே இல்லை. சீனாவுக்கு நாங்கள் தேவை." என்று டிரம்ப் கூறினார். "ஜின்பிங்குடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு சீனா எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆகவே, எனக்கு அப்படி நடப்பதாக தெரியவில்லை." செவ்வாயன்று ஒரு வானொலி நேர்காணலில், ரஷ்யா - சீனா கூட்டணி உருவாவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று டிரம்ப் கூறினார். ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் ராணுவத்தை எங்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார். "அது அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும்" என்று அவர் கூறினார். கடந்த மாதம் அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தவறிய பின்னர், புதினிடம் "மிகவும் ஏமாற்றமடைந்ததாக" டிரம்ப் அந்த நேர்காணலில் கூறினார். "புதினிடம் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை உறுதியாக சொல்ல முடியும்," என்று டிரம்ப் கூறினார். யுக்ரேன் மக்களுக்கு உதவ அமெரிக்கா ஏதாவது செய்யும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்டு எதையும் கூறவில்லை. புதினின் முழு அளவிலான படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை. சீனா இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலமும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை சீனா மறுக்கிறது. இதற்கிடையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போர்முனையின் சில பகுதிகளில் புதிய துருப்புகளை குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். "[புதின்] சமாதானத்துக்கு உடன்பட மறுக்கிறார்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgv44r882mo
2 months ago
“கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்! 03 Sep, 2025 | 05:29 PM இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரின் தலைமையில் நுவரெலியா பிரதேசத்தில் இயங்கி வரும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224132
2 months ago
இலங்கை ஜனாதிபதி முதன் முறையாக 'கச்சத்தீவு' செல்ல விஜய் பேச்சு காரணமா? முழு பின்னணி பட மூலாதாரம், PMD SRI LANKA 3 செப்டெம்பர் 2025, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ''எமது கடற்றொழிலாளர்களுக்கு மிக முக்கியமான இடமாக கச்சத்தீவு காணப்படுகின்றது. இந்த கச்சத்தீவை கேந்திரப்படுத்தி இன்று பாரிய கலந்துரையாடலொன்று எழுந்துள்ளது. இந்த கடல் எமது மக்களுக்கானது. எமது தீவுகள் எமது மக்களுக்கானது. எமது நிலப்பரப்பு எமது மக்களுக்கானது. எமது வானம் எமது மக்களுக்கானது. எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணிய மாட்டோம் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மயிலிட்டி மீனவத்துறை முகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடந்த முதலாம் தேதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு பற்றி தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது? பட மூலாதாரம், TVK கச்சத்தீவு பற்றி விஜய் பேசியது என்ன? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். ''எம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை கண்டிக்க எதையும் செய்ய சொல்லவில்லை. சின்னதா ஒன்னே ஒன்று மட்டும் செய்து கொடுங்க. இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கச்சத்தீவை இலங்கைகிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க. அது போதும்.'' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். விஜய் பேச்சுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில் கச்சத்தீவு தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்து இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறு கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்கள் மத்தியிலும் பிரபலமான விஜய், இவ்வாறு கருத்து வெளியிட்டமை இலங்கையில் பலத்த விவாதத்தை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், விஜயின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த மாதம் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார். 'கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவு. அது எந்த விதத்திலும் மாறாது. தென் இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொரு கருத்துகளை கூறுவார்கள். இது முதலாவது சந்தர்ப்பம் இல்லை. இதுக்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறி இருந்தார்கள். இந்த தேர்தல் மேடைகளில் கூறுவது நிறைவேறாது. தேர்தல் மேடையில் விஜய் கூறியதை நானும் பார்த்தேன். அதை பெரிதுபடுத்த தேவை இல்லை. மத்திய அரசாங்கம் அல்லது இராஜதந்திர ரீதியில் இவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அன்றும் இன்றும் என்றும் கச்சத்தீவு இலங்கை வசமே காணப்படும்.' என இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA கச்சத்தீவு சென்ற இலங்கை ஜனாதிபதி இதன் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அது தொடர்பில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். கச்சத்தீவுக்கு அரசத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் கச்சத்தீவுக்கு சென்று கச்சத்தீவு தொடர்பில் ஆராய்ந்திருந்தார். கச்சத்தீவு விஜயத்தில் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன? கச்சத்தீவு விஜயத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகின்றார் என்பது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது. ''கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் என்ன தான் சொன்னாலும், அவர்களின் கோரிக்கை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை தான் அவர் நேரடியாகவே சொல்ல வருகின்றார். தானே அந்த இடத்திற்கு சென்று தானே விஜயம் செய்து, அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதை அவர் நிரூபிக்க முயல்கின்றார். அங்கு சென்றமையின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும், கச்சத்தீவு எங்களுக்கு தான் சொந்தம் என்பதையும், அது எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைத்த நேரம் செல்லலாம் என்ற கருத்தையும் கூறும் வகையிலேயே அவர் அங்கு சென்றார். '' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். "மீனவப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீள பெற்று விட்டால் தீர்வு வரும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். ஆனால், அதை இவர் விட்டுக் கொடுக்கமாட்டார். தானே அதை கையாளுகின்றேன் என்ற செய்தியை சொல்கின்றார். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் அமைதியாக இல்லை. அரசாங்கம் நேரடியாகவே இதை கண்காணித்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தான் இவர் சொல்கின்றார்.'' எனவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம், SIVARAJA படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா விஜயின் பேச்சு எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் அடிக்கடி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதேபோன்று தான எடப்பாடி பழனிசாமியும் கருத்து வெளியிடுகின்றார். ஆனால் விஜயை பொறுத்தவரையில் அவர் கூறிய கருத்து இளைஞர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. விஜய்க்கு இந்தியாவில் எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ? அதேபோன்று இலங்கையின் தமிழ், சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஆகவே, விஜயின் அந்த கருத்து வலுவாக எடுபடும் என அரசாங்கம் நம்புகின்றது. இந்த பிரச்னைக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.'' எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் - அரசாங்கம் என்ன சொல்கின்றது? கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் அமைந்திருந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் க.கிருஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது ஆராய்ந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g0gnvxlgxo
2 months ago
மனித உரிமை பற்றித் தேரருக்கு மட்டுமல்ல தமிழர் உட்பட இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு என்னவென்று தெரியாது. கடவுள் பக்தி உள்ளவர்கள் மிருகங்களைப் பாதுகாப்பவர்கள் மனித உரிமையை மதிப்பவர்கள் என்று கூற முடியாது. முதலில் ஒரு மனிதனை அவனது இனம், மதம், சாதி, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி சக மனிதனாக மதிக்கத் தெரிய வேண்டும். அது எம்மிடம் கிடையாது.
2 months ago
2 months ago
2 months ago
2 months ago
இந்த தாயின் பரிதவிப்பை நாங்கள் உணர்வதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்! இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவம் மட்டும்தானே பங்குபற்றியது? பிரிகேடியர் வருண கமகே நழுவல் பதிலை கூறியுள்ளார்.
2 months ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!
2 months ago
செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து! யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வலியுறுத்தியுள்ளது. சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது. சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது. இந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பாகங்கள் ஆடைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டு ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. இது நீதிக்குப் புறம்பான கொலைகள் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1445906
2 months ago

செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து!
யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வலியுறுத்தியுள்ளது.
சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது.
சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
இந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
90 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பாகங்கள் ஆடைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டு ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
இது நீதிக்குப் புறம்பான கொலைகள் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
https://athavannews.com/2025/1445906
2 months ago
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன. இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1445900
2 months ago

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன.
இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
https://athavannews.com/2025/1445900
2 months ago
விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது! சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர் இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர். 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது. இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர். விமான கட்டணம், விசா செயலாக்கம் மற்றும் பிற தளவாட ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமிருந்தும் ரூ. 580,000 வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களை விமான நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து, இன்று காலைக்குள் விசாக்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இருப்பினும், சீனாவுக்கான விமானம் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேலும் கூட்டமைப்பு தேவையான விசாக்களை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு நம்பிக்கைகள் பொய்த்துப் போயின. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கராத்தே விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். https://athavannews.com/2025/1445889
2 months ago

விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது!
சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர்
இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை.
இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர்.
23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது.
இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.
விமான கட்டணம், விசா செயலாக்கம் மற்றும் பிற தளவாட ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமிருந்தும் ரூ. 580,000 வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களை விமான நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து, இன்று காலைக்குள் விசாக்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இருப்பினும், சீனாவுக்கான விமானம் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மேலும் கூட்டமைப்பு தேவையான விசாக்களை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு நம்பிக்கைகள் பொய்த்துப் போயின.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கராத்தே விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.
https://athavannews.com/2025/1445889
2 months ago
ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853
2 months ago

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி.
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1445853
2 months ago
பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. https://athavannews.com/2025/1445883
2 months ago