Aggregator

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை - வி.எஸ்.சிவகரன்

2 months ago
இங்கே ஏன் "உணர்வுகள்" பற்றிப் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கனியமணல் அகழ்வு நிச்சயம் சூழல் பாதிப்பைத் தரும், எனவே அதை எதிர்க்க வேண்டும். காற்றாலைகளால் என்ன தீமைகள் மன்னாருக்கு ஏற்படும் என எந்த ஆய்வு முயற்சியாவது யாராவது செய்து அதன் அடிப்படையில் அல்லவா பேச வேண்டும். உணர்வை மட்டும் வைத்துக் கொன்டு எதை நிறுவ முடியும்/ எங்கே தீர்வு தேட முடியும்?

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

2 months ago
சில ஆண்டுகள் முன்னர், யாழ் பா.உ ஆக இருந்த அங்கஜன் இவரது பிரதேசத்தில் வீதி புனரமைத்த வேளையில், அது பற்றிய விளம்பரப் பலகையை ஒளித்து வைத்த அதே நிரோஷா இவர்? "வெளிப்படைத்தன்மை" பற்றி வகுப்பெடுக்க சரியான ஆள் தான் இவர்😂!

காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை

2 months ago
வவுனியாவின் தண்ணீரில் இருக்கும் கல்சியம் காபனேற் கூட நீர் ஆவியாகும் போது இவ்வாறு படியலாம். அதை "உப்பு -NaCl" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 months ago
🔴 வடக்கில் தொடரும் AKD’க்கான அன்பு! தனது ஜனாதிபதி பதவியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவும், அங்குரார்ப்பணம் செய்யவும் செப்டம்பர் 1, 2 திகதிகளில் இலங்கையின் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுக்கு மக்களின் நெருக்கமான அன்பும் மரியாதையும் கிடைத்திருப்பதை அங்குள்ள பல்வேறு புகைப்படக்கருவிகள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 months ago
இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர! இந்தியாவுக்கான மறைமுக எச்சரிக்கையா? கச்சைதீவு தொடர்பில் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமாலை கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சி நிரலில் இல்லாத, திடீர்ப் பயணமாக இது அமைந்தது. தமிழகத்தில் எதிர்வரும் வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது பிரதான தேர்தல் பரப்புரைக்களமாக கச்சதீவைப் பயன்படுத்தி வருகின்றன. கச்சதீவை இலங்கையில் இருந்து மீட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதாகவே பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி அநுர கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர். 'கச்சதீவு இலங்கைக்குரியது. அதை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழகத் தலைவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை' என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அநுரவின் நேற்றைய பயணம் அமைந்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

2 months ago
செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணிப் புதைகுழிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார். ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் செம்மணிக்குச் செல்வதை அநுர தவிர்த்துள்ளார். செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி

புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

2 months ago
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

2 months ago

புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.

இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது.

புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!