Aggregator
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது.
இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார்.
இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜெர்மனி பயணத்தில் மொத்தம் 7,020 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தனது உரையில், ஜெர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
02 Sep, 2025 | 10:12 AM
![]()
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார்.
இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேச பிரமுகர்களுடன் இலங்கை முன்னாள் தலைவர்களை ஒப்பிட்டு வேறுபடுத்தி இதன்போது அவர் உரையாற்றியுள்ளார்.
தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடந்த கால சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது கருத்துக்களை சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகால பகுதியில் சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தையும் இதன்போது அவர் நினைவுப்படுத்தினார்.
அந்த பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உத்தியோகபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை அவர் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை ஆதரிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என நான் கூறவில்லை. அவரது நிலையை பார்ப்பது எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இதன்போது சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் கடந்த கால சிறைத்தண்டனை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.
இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது சரத் பொன்சேகா நிகழ்வில் உரையாற்றும்போது குற்றம் சுமத்தியுள்ளார்
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
02 September 2025
மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/417818/landslide-destroys-village-in-sudan-over-1000-dead
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு

எஸ்.ஆர்.லெம்பேட்
இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான N.கெஸ்ரோன் , K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
இம் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கு பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள்.
எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர்.
புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை.
விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. ஆனால், படையினருக்கு அமைத்தால் அதை இனவாதமாக காட்ட முற்படுகின்றனர்.
முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார்.
இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகிறது.
எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_தோற்கடிக்கப்படவில்லை_-_நாமல்_தெரிவிப்பு!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது.
பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
2005 முதல் 2009வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட ஐவருக்கு எதிரான தடை விதித்திருந்தது.
https://newuthayan.com/article/முன்னாள்_கடற்படைத்_தளபதி_வசந்த_கரன்னாகொடவின்_புத்தகத்துக்கு_தடை!
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது.
https://newuthayan.com/article/புலனாய்வு_அதிகாரிகளுக்கு_'தண்ணிகாட்டிய'_ஜனாதிபதி!