Aggregator
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கட்டுரை தகவல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?
சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது.
மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது.
மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு'

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன.
"தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது.
சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த்.
சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த்.
மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர்.
மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.
மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர்.
மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர்.
அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த்.
தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
குட்டிக் கதைகள்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.






இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!
இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!
கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது.
