Aggregator

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

2 months 1 week ago
ம்ம்ம்… இந்தியா அல்லவா…. அப்படித்தான் இருக்கும். சடுதியாக பிரேக் போடுவது என்பது வாகனம் ஓட்டும் போது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதுதான் டிரைவிங் டெஸ்டில் இதையும் சோதிப்பார்கள். யூகே சட்டப்படி ஒரு வாகனத்தை பின்னால் இருந்து அடித்தால் அடித்தவர் மீதுதான் பிழை. மிக, மிக அரிதாக சிசிடிவி போன்ற சாட்சிகள் இருந்தால் மட்டுமே அடிவாங்கியவர் மீது குற்றம் காணப்படும். அப்போது கூட 50:50 என்றே முடியும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 months 1 week ago
ஜெனீவாவின் இயலாமை. ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

2 months 1 week ago
என்ன போதைபொருள் கடத்தல்மன்னர்கள் மட்டுமா தேசிய ந்ல்லிணக்கத்துடன் செய்ல்பட வேணும் என்ற சட்டம் இருக்கா? மார்று கொள்ள்கை மாணிக்கங்கள் நாங்களும் தேசிய நல்லிணக்கத்துடன் செயல் பட்டு தீவை வளர்ர்சி பாதையில் நடத்துவோமல்ல...

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா

2 months 1 week ago
இனவாதம்,மத வாதம்,ஐஸ்வாதம்,கஞ்ஞாவாதம்,பாதால உலகவாதம்,கடத்தல் வாதம்,கப்ப வாதம் போன்றவை இல்லாத படை வீரர்களாக வாங்கோ என்று சொல்லுறார்

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

2 months 1 week ago
விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

2 months 1 week ago
வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 months 1 week ago
ஏன் ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் எந்த இடத்தில் வரும்? இந்தியா சீனா எல்லாம் பின்னால தான் வரும். நாட்டுக்கு நாடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தான் முன்னணியில் நிற்க வேண்டும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 months 1 week ago
வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்? ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான். சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு... நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.