Aggregator

அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன?

2 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது) 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார். மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் இருக்கும் கோபத்தை பார்த்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அதை கண்டித்ததுடன், ஐஏஇஏவின் பணிகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளார். ஐஏஇஏவுக்கு எதிரான இரானின் கடுமையான நிலைப்பாடு, அதன் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதை மேலும் சிக்கலானதாக மாற்றக்கூடும். பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/REUTERS படக்குறிப்பு, அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஃபோர்டோ மலை க்ரோஸி வருகைக்கு மறுப்பு தெரிவித்த இரான் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஜூன் 24ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பாஸ் அரக்சியை சந்தித்து ஐஏஇஏ-இரான் இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி முன்வந்தார். ஆனால்,"இன்றைய சூழலில் ரஃபேல் க்ரோஸியை அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை," என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசு தொலைக்காட்சி சேனல் ஐஆர்ஐஎன்என்னுக்கு ஜூன் 26ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார். "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய அவர் விரும்புகிறார்," என அவர் தெரிவித்தார். ஐஏஇஏ தலைவரின் அண்மைக் கால நடவடிக்கைகள், குறிப்பாக இரானுக்கு எதிராக ஐஏஇஏ ஆளுநர்கள் குழு தீர்மானம் நிறைவேற்ற காரணமான அறிக்கை போன்றவையே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கியமான காரணம் என அரக்சி குற்றம்சாட்டினார். "க்ரோஸி தனது அறிக்கையில் நேர்மையாக செயல்படவில்லை. எங்களது அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டபோது, முகமையால் அந்த தாக்குதலை கண்டிக்கக்கூட முடியவில்லை," என்று அரக்சி கூறினார். ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்துவதற்கு இரான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் அரக்சி தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து, தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகியிருக்கிறது," என அரக்சி கூறுகிறார். இந்தச் சட்டம் ஒத்துழைப்புக்கான கதவை முழுமையாக மூடவில்லை என்றும் எதிர்காலத்தில் இது இரானின் உச்ச பாதுகாப்பு அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவின் அடிப்படையில் அமையும் என அவர் தெளிவுபடுத்தினார். பட மூலாதாரம்,ASKIN KIYAGAN/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி அமெரிக்காவின் வலுவான பதிலடி மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் எழுப்பப்படும் குரல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. "ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸியை கைது செய்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இரானில் எழுந்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, கண்டிக்கத்தக்கது. இரானில் ஐஏஇஏவின் முக்கியமான விசாரணைகளையும், கண்காணிப்பு பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஏஇஏவின் கடுமையான உழைப்பையும் தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டுகிறோம். ஐஏஇஏ ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவேண்டும் என இரானை வலியுறுத்துகிறோம்," என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார். இரானின் 2015ஆம் ஆண்டு ஜேசிபிஒஏ அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளையும் அரக்சி கடுமையாக எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் தற்போது கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. 'ஸ்நாப்பேக் மெக்கானிசம்' என சொல்லப்படும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டாம் என அவர்களுக்கு கூறினார். "அந்த தூண்டும் நடைமுறையை பயன்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் இரானின் அணுசக்தி விவகாரத்தில் அவர்களின் பங்கை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என அவர்களிடம் தெளிவாக கூறினேன்," என அராக்சி தெரிவித்தார். ஸ்நாப்ஃபேக் மெக்கானிசம் என்பது ஒரு விதிமுறையாகும். இதன்படி அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இரான் மீறியதாக கருதப்பட்டால், 2015-க்கு முன்பு இருந்த ஐக்கிய நாடுகளின் கடுமையான தடைகள் தானாகவே மீண்டும் அமலுக்கு வரும். ஐஏஇஏவின் வரலாறு மற்றும் இரானில் அதன் பங்கு சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency - IAEA) என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இது உலகளவில் "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அணுக்கள்" (Atoms for Peace and Development) என்றும் அறியப்படுகிறது. இது அணுசக்தி துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பின் மையமாக விளங்குகிறது, இதன் உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கூட்டாளிகளுடன் இணைந்து அணு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக, நம்பகமாக, மற்றும் அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. ஐஏஇஏ 1957 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இந்தியாவும் அப்போதிலிருந்து இதன் உறுப்பினராக உள்ளது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953 டிசம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) உரையில் இந்த அமைப்புக்கான கரு உருவானது. வடகொரியா 1974 இல் இதன் உறுப்பினராக இணைந்தது, ஆனால் 1994-இல் விலகியது. தற்போது ஐஏஇஏ-வில் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இரானின் அணுசக்தி திட்டத்தை ஐஏஇஏ கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருகிறது. 2015 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தவும், பன்னாட்டு ஆய்வுகளை அதிகரிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது, ஆனால் 2018-ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய தடைகளை விதித்த பின்னர், இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை குறைத்துக்கொண்டது. அது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்ததுடன், ஐஏஇஏ ஆய்வுகளை பல இடங்களில் குறைத்ததுடன், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துவிட்டது. இரான் தனது முக்கிய அணுசக்தி மையங்களுக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty) மீறியதாக குற்றம்சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ ஆளுநர்கள் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. முன் அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது குறித்து முகமைக்கு போதுமான பதில்கள் அளிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என இரான் தெரிவித்தது. இதற்கு ஒருநாள் கழித்து இஸ்ரேல் இரானின் பல அணுசக்தி நிலைகளின் மீது தாக்குதலை தொடங்கியது, இதனால் ஏற்கனவே இருந்த பதற்றம் மேலும் அதிகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn94k11y7o

அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன?

2 months 2 weeks ago

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது)

8 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார்.

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் இருக்கும் கோபத்தை பார்த்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அதை கண்டித்ததுடன், ஐஏஇஏவின் பணிகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.

ஐஏஇஏவுக்கு எதிரான இரானின் கடுமையான நிலைப்பாடு, அதன் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதை மேலும் சிக்கலானதாக மாற்றக்கூடும்.

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/REUTERS

படக்குறிப்பு, அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஃபோர்டோ மலை

க்ரோஸி வருகைக்கு மறுப்பு தெரிவித்த இரான்

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஜூன் 24ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பாஸ் அரக்சியை சந்தித்து ஐஏஇஏ-இரான் இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி முன்வந்தார்.

ஆனால்,"இன்றைய சூழலில் ரஃபேல் க்ரோஸியை அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை," என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசு தொலைக்காட்சி சேனல் ஐஆர்ஐஎன்என்னுக்கு ஜூன் 26ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

"அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய அவர் விரும்புகிறார்," என அவர் தெரிவித்தார்.

ஐஏஇஏ தலைவரின் அண்மைக் கால நடவடிக்கைகள், குறிப்பாக இரானுக்கு எதிராக ஐஏஇஏ ஆளுநர்கள் குழு தீர்மானம் நிறைவேற்ற காரணமான அறிக்கை போன்றவையே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கியமான காரணம் என அரக்சி குற்றம்சாட்டினார்.

"க்ரோஸி தனது அறிக்கையில் நேர்மையாக செயல்படவில்லை. எங்களது அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டபோது, முகமையால் அந்த தாக்குதலை கண்டிக்கக்கூட முடியவில்லை," என்று அரக்சி கூறினார்.

ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்துவதற்கு இரான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் அரக்சி தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து, தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகியிருக்கிறது," என அரக்சி கூறுகிறார்.

இந்தச் சட்டம் ஒத்துழைப்புக்கான கதவை முழுமையாக மூடவில்லை என்றும் எதிர்காலத்தில் இது இரானின் உச்ச பாதுகாப்பு அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவின் அடிப்படையில் அமையும் என அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,  அணுசக்தி திட்டங்கள்,

பட மூலாதாரம்,ASKIN KIYAGAN/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி

அமெரிக்காவின் வலுவான பதிலடி

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் எழுப்பப்படும் குரல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

"ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸியை கைது செய்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இரானில் எழுந்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, கண்டிக்கத்தக்கது. இரானில் ஐஏஇஏவின் முக்கியமான விசாரணைகளையும், கண்காணிப்பு பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஏஇஏவின் கடுமையான உழைப்பையும் தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டுகிறோம். ஐஏஇஏ ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவேண்டும் என இரானை வலியுறுத்துகிறோம்," என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

இரானின் 2015ஆம் ஆண்டு ஜேசிபிஒஏ அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளையும் அரக்சி கடுமையாக எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் தற்போது கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை.

'ஸ்நாப்பேக் மெக்கானிசம்' என சொல்லப்படும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டாம் என அவர்களுக்கு கூறினார். "அந்த தூண்டும் நடைமுறையை பயன்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் இரானின் அணுசக்தி விவகாரத்தில் அவர்களின் பங்கை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என அவர்களிடம் தெளிவாக கூறினேன்," என அராக்சி தெரிவித்தார்.

ஸ்நாப்ஃபேக் மெக்கானிசம் என்பது ஒரு விதிமுறையாகும். இதன்படி அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இரான் மீறியதாக கருதப்பட்டால், 2015-க்கு முன்பு இருந்த ஐக்கிய நாடுகளின் கடுமையான தடைகள் தானாகவே மீண்டும் அமலுக்கு வரும்.

ஐஏஇஏவின் வரலாறு மற்றும் இரானில் அதன் பங்கு

சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency - IAEA) என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இது உலகளவில் "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அணுக்கள்" (Atoms for Peace and Development) என்றும் அறியப்படுகிறது.

இது அணுசக்தி துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பின் மையமாக விளங்குகிறது, இதன் உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கூட்டாளிகளுடன் இணைந்து அணு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக, நம்பகமாக, மற்றும் அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

ஐஏஇஏ 1957 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இந்தியாவும் அப்போதிலிருந்து இதன் உறுப்பினராக உள்ளது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953 டிசம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) உரையில் இந்த அமைப்புக்கான கரு உருவானது.

வடகொரியா 1974 இல் இதன் உறுப்பினராக இணைந்தது, ஆனால் 1994-இல் விலகியது. தற்போது ஐஏஇஏ-வில் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இரானின் அணுசக்தி திட்டத்தை ஐஏஇஏ கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருகிறது.

2015 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தவும், பன்னாட்டு ஆய்வுகளை அதிகரிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது,

ஆனால் 2018-ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய தடைகளை விதித்த பின்னர், இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை குறைத்துக்கொண்டது. அது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்ததுடன், ஐஏஇஏ ஆய்வுகளை பல இடங்களில் குறைத்ததுடன், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துவிட்டது.

இரான் தனது முக்கிய அணுசக்தி மையங்களுக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty) மீறியதாக குற்றம்சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ ஆளுநர்கள் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

முன் அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது குறித்து முகமைக்கு போதுமான பதில்கள் அளிக்கப்படவில்லை.

இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என இரான் தெரிவித்தது. இதற்கு ஒருநாள் கழித்து இஸ்ரேல் இரானின் பல அணுசக்தி நிலைகளின் மீது தாக்குதலை தொடங்கியது, இதனால் ஏற்கனவே இருந்த பதற்றம் மேலும் அதிகரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgn94k11y7o

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

2 months 2 weeks ago
திருகோணமலை பத்தாம் குறிச்சியில் அணையா விளக்கு தீப்பந்த போராட்டம் Published By: VISHNU 29 JUN, 2025 | 09:51 PM செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதியை வலியுறுத்தி திருகோணமலை பட்டணத்தெரு மக்களால் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சுடர்கள் ஏற்றப்பட்டு பின்பு தீபந்தங்களை கைகளில் ஏந்தி ஊர்சுற்றி கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விடப்பட்டன. https://www.virakesari.lk/article/218796

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 2 weeks ago
செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள் - அக்மீமன தயாரத்ன தேரர் கூறும் விடயம் யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கூட அங்கு இருக்கக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இந்த விகாரம் மீளத் தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்த நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது, மக்கள் கொல்லப்பட்டனர். படையினர் கொல்லப்பட்டனர். அழிவுகள் ஏற்பட்டன. கடைசியில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர். செம்மணி மனிதப் புதைகுழியில் இருப்பவை யாருடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆனையிறவு மோதலின்போது படையினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். பொறுப்புடன் செயற்பட வேண்டும் சில உடல்களே கிடைக்கப் பெற்றன. எனவே, செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும். எனவே, அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/venerable-akmeemana-dayaratne-thera-statement-1751175374#google_vignette குழந்தைகளும் இராணுவத்தில் இருந்தவர்களோ?!

காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! –  முனைவர். பா. ராம் மனோகர்

2 months 2 weeks ago
காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி மென் பொருள் நிறுவனங்கள் பெருக்கம், போன்ற, நவீன திட்டங்கள், வேலை வாய்ப்புகள் அதிகமாக, உருவாக்கும் நிலை, தவிர்க்க இயலாது. எனினும் இயற்கை சார்ந்த பகுதிகளில், இத்தகைய வளர்ச்சிப் பணிகள், அதிகமாக மேற்கொள்வதை, முழுமையாக அனுமதிக்கக்கூடாது. பொது மக்கள் வாழ்வாதாரம் இதனால் நிச்சயம் அங்கு பெருகும். ஆனால் குறிப்பிட்ட இயற்கை பகுதியில்,அதிக மாசுபாடு, குப்பைகள், போக்குவரத்து நெரிசல், அதிகரித்து அடர் காடுகள் அழிக்க வாய்ப்புகள் வரும். அங்கு வசித்து வந்த உயிரினங்கள், வாழ்விடம் இல்லாமல், தவித்து அருகில் உள்ள நகர்புற மனித வாழ்விடங்கள் நோக்கி செல்ல துவங்கும். ஒட்டு மொத்தமாக அங்கு சுற்றுசூழல் பாதிக்கும் என்பது நிதர்சன உண்மை. மேலே சொல்லப்பட்ட நிகழ்வு கதையல்ல. சமீபத்தில் நம் அண்டை மாநிலத்தில் நடக்க இருந்த ஒரு காடழிவுக்கு, ஒரு தற்காலிக தடை, நீதித்துறை மூலம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் நான் தெலுங்கானா, மாநிலத்தின் ஹைதராபாத் சென்றிருந்தபோது அருகில் உள்ள, கச்சி பௌலி என்ற அழகிய காட்டுப் பகுதிக்கு, போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆம், இந்த வனப்பகுதி 400 ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் அருகில் உள்ளது. நகரின் சுவாச நுரையீரலாக, விளங்கிடும் இந்த காட்டினில், புள்ளி மான்கள், உடும்பு, நட்சத்திர ஆமை போன்ற முக்கிய விலங்குகள், மற்றும் மயில், பெலிக்கன் என்ற கூழைக்கடா பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. 220 பறவை சிற்றினங்கள், 15 ஊர்வன சிற்றின விலங்குகள், 10,பாலூட்டி இனங்கள், 734 பூக்கும் தாவர வகை 72, வகை காட்டு பாரம்பரிய தாவரங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேலும் 40000 எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதாகவும், டைனோசர் காலத்திற்கு முந்தைய நாட்களில் உருவான, காளான் பாறைகள் இங்கு காணப்படுகின்றன. மயில் ஏரி, எருமை ஏரி, மற்றும் சின்ன, சின்ன நீர் தேக்கங்களும் இந்த வனப்பகுதியில், காணப்படுகின்றன. தெலுங்கானா, மாநில, ரங்கா ரெட்டி மாவட்டத்தில், சிரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் உள்ள கச்சி பௌலி காட்டில்,அரிய இனம் “ஹைதராபாத் மரத் தண்டு சிலந்தி “இருப்பது ஒரு சிறப்பு ஆகும். உயிரின வேற்றுமைக்கு முக்கிய பகுதியாக இந்த (BIODIVERSITY HOTSPOT) காடு விளங்குகிறது. நகரப்பகுதியில், நூற்றுக்கணக்கான வகையில் வேறுபட்ட தாவர, விலங்குகள் இருப்பது மிகவும் சிறப்பு என்பதை நாம் அனைவரும், உணரவேண்டும். மேலும் இந்த காடுகள், நிலத்தடி நீரினை தக்க வைத்து மாநகரத்திற்கு உதவுகிறது. அடர் காடுகள் நம் வாகனங்கள், தொழிற் சாலை, மனித செயல்பாடுகள் மூலம் வெளியேறும் கரி அமில வாயு என்ற கார்பன் டை ஆக்ஸ் சைடு வாயுவின் உறிஞ்சு தொட்டியாக விளங்கி வருகிறது. முன்னரே 14% வனப்பகுதி” காண்கிரீட் அமைப்புகளாக “மாறிவிட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டில்” ஹரிதாஹரம் “ என்ற திட்டத்தின் மூலம் பசுமை பரப்பி னை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்திய வன நிலை அறிக்கை யின் படி 2015 ஆம் ஆண்டு இம்மாநிலத்தில் 1727 ச.கி. மீ பரப்பாக இருந்து வந்த காடுகள், 2021 ஆம் ஆண்டு 2518 ச. கி. மீ. ஆக மாற்றம் பெற்ற நிலை பாராட்டக்கூடியது. இந்த மாநிலத்தில் 10% பட்ஜெட் பசுமை நோக்கம் கொண்டு மேற்கொள்ள ப்படுவது சிறப்பு ஆகும். அதாவது, ஆயிரக்கணக்கான ஏக்கர், நிலங்களை பசுமையாக்க கிராமங்களில், NURSERY செடி,நாற்றங்கால் அமைக்க திட்டங்கள் இடப்பட்டுள்ளது. எனினும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், கச்சி பௌலி காடுகள் அழிக்க முடிவு எடுத்த நிலை கண்டு, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள், சமீபத்தில் போராட்டம் நிகழத்தினர். அவர்கள் அரசு எடுத்த முடிவு இயற்கை பாதிக்கும் என்று உணர்ந்து தொடர்ந்து நீதி மன்றம் சென்று” இடைக்கால தடை “பெற்று வந்துள்ளனர். இதன் மூலம் தற்காலிக தீர்வு கிடைத்து, பசுமை பகுதி காப்பாற்றப்பட்டுள்ள நிலை மகிழ்ச்சி தான், எனினும் எதிர்காலத்தில், கச்சி பௌலி காடுகள் அழிந்து போய்விடுமோ!? என்ற அச்சமும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இயற்கை பற்றிய புரிந்துணர்வு,கல்வியாளர்கள், கூரிய அறிவு கொண்ட இளம் தலைமுறை அரசு நிர்வாக உயர் அலுவலர்கள், தொழில் நுட்பம் பயின்ற பொறியியல் வல்லுநர்கள், ஆகியோருக்கு இல்லை என்று நாம் நிச்சயம் கூறவோ, வாதாடவோ இயலாது. ஏனெனில் 1990 ஆம் ஆண்டு முதல் தொடக்க கல்வி முதல்,கல்லூரி உயர் கல்வி, பொறியியல் உட்பட அனைத்து பட்ட வகுப்புகளில், “சுற்று சூழல் அறிவியல் “ கட்டாய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதுவே உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தொடர்ந்து அதற்குரிய பாடத்திட்டம், தேர்வு என்று வரையறுக்கப்பட்டு கல்வி நிலையங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், உடன் பொருளாதார லாப நோக்கம் கொண்டு, அரசு, துறைகள் பசுமை பகுதிகளை பகட்டான காண்கிரீட் காடுகளாக மாற்ற ஆர்வம் கொண்டு இருக்கும் நிலை வருந்துதற்குரியது. நாம் சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் கற்று அறிந்து, உரிய விழிப்புணர்வு பெற்று, அன்றாடம் தனிப்பட்ட மனிதர்கள் கூட சுற்றுசூழல், நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய வாழ்வியல் முறைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்வியாக, அறிவியல் பூர்வ மாக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை, காடுகள் பற்றி நோக்கினாலும், பேரிடர் காலத்தில், (வறட்சி,வெள்ளம், மழை, புயல்,) மட்டுமே நாம் இயற்கை யின் சீற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும் நிலை நகைப்புக்குரியது அல்லவா!!? வாழ்வின் அடிப்படை யான இயற்கை அழிந்து செயற்கை அமைப்புகள் உருவாகும் போது, அந்த அழகிய இயற்கை அமைப்புகள் மாசுப்படுகின்றன, திடக்கழிவுகள் பெருகிவிடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு அவர்களின் அடிப்படை தேவைகளுக்கும், உணவுப்பொருள் பற்றாக்குறையுமஏற்படும். இந்த உண்மைகள் அறிந்தும் நாம், மேலும், மேலும் இயற்கை க்கு எதிராக தவறுகள் செய்வதை ஏன்!? தவிர்க்க முடிவதில்லை! சற்று சிந்திக்க நேரம் ஒதுக்குவோமே! பொருளாதார மேம்பாடு மிக அவசியம் என்றாலும், ஹைதராபாத் போன்ற நகரங்களில் மீண்டும் இதனைப்போன்ற பாரம்பரிய காடுகள் அழிக்க திட்டம் இடுவது, நாமே நமக்கு, ஆபத்தினை வரவழைக்க வழி ஏற்படுத்தி கொள்வது போல் ஆகும். பாரம்பரிய காடுகளை அழித்துவிட்டு, புதிதாக மரக்கன்றுகள் நட்டு உடனடியாக புதிய சூழல் அமைப்பு உருவாக்க நினைப்பதும் நிச்சயம் விரும்பத்தக்க, அல்லது நாம் எதிர்பார்க்கும் பலன்கள் தரக்கூடிய தீர்வு அல்ல!. தெலுங்கானா மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களில் தொழில் பெருக்கம் என்ற பெயரில் இயற்கை காடுகள் அடியோடு அழித்தல் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். மீண்டும் பொதுமக்களும், அரசு களும் சிந்திக்க முன்வருமா!!!? எழுதியவர் : – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் https://bookday.in/will-it-disappear-telangana-kancha-gachibowli-forest-based-article-written-by-pa-ram-manohar/

அமெரிக்காவில் இடம்பெற்ற நூதன மோசடி : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2 months 2 weeks ago
அமெரிக்காவில் இறந்தவர்களின் அஸ்திகளில் இடம்பெற்ற மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுமார் 190 சடலங்களை பதுக்கி வைத்துவிட்டு, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடல்கள் சிதைந்த நிலையில் இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வரும் ஜோன் ஹோல்போர்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள், கடந்த 2023இல் பொலிஸில் முறையிட்டிருந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 190இறுதிச்சடங்குகளுக்கான உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, கோவிட் காலத்தின்போது, 2019 முதல் 2023 வரை, ஹால்போர்ட் மற்றும் அவருடைய மனைவி கேரி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு உடல்களை எரிக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அரசிடம் இருந்து பல மில்லியன் டொலர் அத்துடன், கோவிட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அரசிடம் இருந்தும் அவர்கள் பல மில்லியன் டொலர்களை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதேநேரம் உடல்களை எரித்ததாகக் கூறி உறவினர்களிடம் போலி அஸ்தியை வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜோன் ஹோல்போர்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. https://tamilwin.com/article/new-scam-in-united-states-1751166933

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை

2 months 2 weeks ago
நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை. போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாது” என்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம். ஒரு கேள்வி எழுகிறது – போருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது. நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள் “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு” என யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும் யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது. கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும் அங்கிருப்பவர்களிடம் இல்லை. பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை

மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷன நியமனம்; தவறானதொரு எடுத்துக்காட்டு - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

2 months 2 weeks ago
Published By: VISHNU 29 JUN, 2025 | 06:19 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இவ்விரு செயற்பாடுகளும் மிக மோசமான எடுத்துக்காட்டாகும். நாட்டின் நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரபல்யமான நாட்டுக்கு நேரடியாக செலுத்தும் பதவிகளை வகித்தவர்கள் ஓய்வுப்பெற்றதன் பின்னர் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுமாயின் சேவைக்காலத்தின் போது அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாதிப்பு ஏற்படும். பிரதான அமைச்சுக்களான நிதி, வலுசக்தி, மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகித்தோருக்கு கவர்ச்சிகரமான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் உயர் சலுகைகளை வழங்கி, அவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது தேசிய மட்டத்திலோ உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும். நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட பரிந்துரைத்துள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பிறிதொரு தவறான எடுத்துக்காட்டு. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இலங்கை வங்குரோத்து நிலையடைய போகிறது என்பதை முன்கூட்டியதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதியின் வசம் தான் நிதியமைச்சு உள்ளது. தனக்கு இணக்கமாகவரையே ஜனாதிபதி நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வசம் பாதுகாப்பு மற்றும் நிதி பொருளாதார அமைச்சுக்கள் உள்ளன. இந்த அமைச்சில் 94 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதியால் அமைச்சர் என்ற அடிப்படையில் கண்காணிக்கவோ அல்லது ஆராயவோ முடியாது. ஆகவே பூரணத்துவமித்த வகையில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ சூரியபெருமவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்தமை அரசியல் நியமனமாகும். நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் தேர்ச்சிப்பெற்ற அரச உத்தியோகத்தர்கள் எவரும் இல்லையா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பதவி வகிக்கிறார். இவர் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் இருந்தவர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் போது இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டார் என்றும், ஊழல் மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன. இதனை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் இன்று அதனையே செய்கிறார்கள். நாட்டு மக்கள் இவ்வாறான அரசியல் நியமனங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218788

மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷன நியமனம்; தவறானதொரு எடுத்துக்காட்டு - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

2 months 2 weeks ago

Published By: VISHNU

29 JUN, 2025 | 06:19 PM

image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இவ்விரு செயற்பாடுகளும் மிக மோசமான எடுத்துக்காட்டாகும்.

நாட்டின் நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரபல்யமான நாட்டுக்கு நேரடியாக செலுத்தும் பதவிகளை வகித்தவர்கள் ஓய்வுப்பெற்றதன் பின்னர் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுமாயின் சேவைக்காலத்தின் போது அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாதிப்பு ஏற்படும்.

பிரதான அமைச்சுக்களான நிதி, வலுசக்தி, மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகித்தோருக்கு கவர்ச்சிகரமான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் உயர் சலுகைகளை வழங்கி, அவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது தேசிய மட்டத்திலோ உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும்.

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட பரிந்துரைத்துள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பிறிதொரு தவறான எடுத்துக்காட்டு.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இலங்கை வங்குரோத்து நிலையடைய போகிறது என்பதை முன்கூட்டியதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதியின் வசம் தான் நிதியமைச்சு உள்ளது. தனக்கு இணக்கமாகவரையே ஜனாதிபதி நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வசம் பாதுகாப்பு மற்றும் நிதி பொருளாதார அமைச்சுக்கள் உள்ளன. இந்த அமைச்சில் 94 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதியால் அமைச்சர் என்ற அடிப்படையில் கண்காணிக்கவோ அல்லது ஆராயவோ முடியாது. ஆகவே பூரணத்துவமித்த வகையில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ சூரியபெருமவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்தமை அரசியல் நியமனமாகும். நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் தேர்ச்சிப்பெற்ற அரச உத்தியோகத்தர்கள் எவரும் இல்லையா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பதவி வகிக்கிறார். இவர் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் இருந்தவர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் போது இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டார் என்றும், ஊழல் மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன. இதனை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் இன்று அதனையே செய்கிறார்கள். நாட்டு மக்கள் இவ்வாறான அரசியல் நியமனங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/218788

இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்கள்

2 months 2 weeks ago
நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. புதிய மையங்கள் இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://tamilwin.com/article/3-new-centers-for-rehabilitation-of-drug-addicts-1751167165

இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்கள்

2 months 2 weeks ago

நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

புதிய மையங்கள்

இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.

25-6860b2b06014d.webp

நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கணக்கெடுப்பு

இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும்.

25-6860b2b12b41a.webp

அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://tamilwin.com/article/3-new-centers-for-rehabilitation-of-drug-addicts-1751167165

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

2 months 2 weeks ago
கல்லூண்டாயில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றமை உறுதியானது! Published By: VISHNU 29 JUN, 2025 | 06:00 PM யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கழிவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன. இதற்கு எந்திர்ப்பு தெரிவித்து 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்தனர். இதனால் மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் குறித்த பகுதியை பார்வையிடுவதற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்லூண்டாய் பகுதி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர். அங்கு மக்கள் குறிப்பிட்டது போன்று ஏராளமான மருத்துவ கழிவுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாக கொட்டப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/218787

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!

2 months 2 weeks ago
Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார். Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த கல்வியாளர் அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமைகளை உடையவர். அவரது புகழ்பெற்ற தொழில் வாழ்க்கை ஒரு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிகழ்கின்றது. மேலும் அவரது நியமனம் Northern Uni இல் வளர்ச்சி, புதுமை மற்றும் மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. வரலாற்று மைற்கற்கள் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1981 இல் BSc (First Class) பட்டத்தினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து உயிர்வேதியியல் துறையில் 1989ல் PhD பட்டத்தினையும் பெற்றுள்ளார். 1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். 2005ல் உயிர்வேதியியலின் மூத்த பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கை பல வரலாற்று மைற்கற்களை குறித்து நிற்கின்றது. மருத்துவ பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதி (2000 - 2003) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் (2011 - 2017) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதல் பெண் உறுப்பினர் (2018 - 2024) யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிர் வேதியல் துறையின் ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியராகவும் முன்னை நாள் துணை வேந்தராகவும் விளங்கும் வசந்தி அரசரத்தினம் அவர்கள் தனது பணிக்காலத்தில் விஞ்ஞான ஆய்வின் வளர்ச்சிக்கும் நிர்வாக துறையின் விருத்திக்கும் உள்ளடங்கிய கல்வி முறைமையின் சீரிய எழுச்சிக்கும் வித்திட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். அவரது மேலாண்மை மிக்க தலைமைத்துவம் வடக்கு மாகாணத்தின் உயர்கல்வித்துறையை தேசிய ரீதியில் மிளிரச் செய்துள்ளதுடன் அவரையும் நாடறிந்த சிறந்த கல்விமானாகப் புகழ் பெறச் செய்துள்ளது. Northern Uni இற்கு பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது. மேலும், அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் Northern Uni இன் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்களை வாழ்த்தி வரவேற்று அவரது தலைமைத்துவத்தில் கல்விக் கொள்கைகளையும் இலக்குகளையும் அடையும் பயணத்தில் Northern Uni சமூகம் பெருமிதத்துடன் கைகோர்க்கின்றது.''என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/northern-uni-vice-chancellor-vasanthy-arasaratnam-1751201429

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!

2 months 2 weeks ago

Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார்.

Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறந்த கல்வியாளர்

அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமைகளை உடையவர்.

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்! | Northern Uni Vice Chancellor Vasanthy Arasaratnam

அவரது புகழ்பெற்ற தொழில் வாழ்க்கை ஒரு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிகழ்கின்றது.

மேலும் அவரது நியமனம் Northern Uni இல் வளர்ச்சி, புதுமை மற்றும் மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது.

வரலாற்று மைற்கற்கள்

பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1981 இல் BSc (First Class) பட்டத்தினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து உயிர்வேதியியல் துறையில் 1989ல் PhD பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்! | Northern Uni Vice Chancellor Vasanthy Arasaratnam

2005ல் உயிர்வேதியியலின் மூத்த பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கை பல வரலாற்று மைற்கற்களை குறித்து நிற்கின்றது.

மருத்துவ பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதி (2000 - 2003)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் (2011 - 2017)

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதல் பெண் உறுப்பினர் (2018 - 2024) 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிர் வேதியல் துறையின் ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியராகவும் முன்னை நாள் துணை வேந்தராகவும் விளங்கும் வசந்தி அரசரத்தினம் அவர்கள் தனது பணிக்காலத்தில் விஞ்ஞான ஆய்வின் வளர்ச்சிக்கும் நிர்வாக துறையின் விருத்திக்கும் உள்ளடங்கிய கல்வி முறைமையின் சீரிய எழுச்சிக்கும் வித்திட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

அவரது மேலாண்மை மிக்க தலைமைத்துவம் வடக்கு மாகாணத்தின் உயர்கல்வித்துறையை தேசிய ரீதியில் மிளிரச் செய்துள்ளதுடன் அவரையும் நாடறிந்த சிறந்த கல்விமானாகப் புகழ் பெறச் செய்துள்ளது.

Northern Uni இற்கு பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது.

மேலும், அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் Northern Uni இன் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்களை வாழ்த்தி வரவேற்று அவரது தலைமைத்துவத்தில் கல்விக் கொள்கைகளையும் இலக்குகளையும் அடையும் பயணத்தில் Northern Uni சமூகம் பெருமிதத்துடன் கைகோர்க்கின்றது.''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25-68613cef40024.webp

25-68613cfeaaaac.webp

https://tamilwin.com/article/northern-uni-vice-chancellor-vasanthy-arasaratnam-1751201429

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

2 months 2 weeks ago
"அணு குண்டுக்கான யுரேனிய செறிவூட்டலை சில மாதங்களில் இரான் தொடங்கலாம்" - எச்சரிக்கும் ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார். கட்டுரை தகவல் ஸ்டூவர்ட் லாவ் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடந்த வாரம் மூன்று இரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதே தவிர முழுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இது இரானின் அணுசக்தி மையங்கள் "முழுமையாக அழிக்கப்பட்டன" என்கிற டிரம்ப்பின் கூற்றுக்கு முரணாக உள்ளது. "அனைத்தும் மறைந்துவிட்டன என்றும் அங்கு எதுவுமே இல்லை என யாருமே வெளிப்படையாக கூற முடியாது" என சனிக்கிழமையன்று க்ரோஸி தெரிவித்தார். இரான் அணு ஆயுத தயாரிப்பை நெருங்கிவிட்டது எனக்கூறி கடந்த ஜூன் 13ம் தேதி அந்நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவ நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின்னர் இந்த மோதலில் இணைந்த அமெரிக்கா ஃபோர்டோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஷான் ஆகிய இரானின் அணுசக்தி நிலைகள் மீது குண்டுகளை வீசியது. அப்போதிலிருந்து பாதிப்பின் உண்மையான அளவு என்னவென்பது பற்றி தெளிவு இல்லை. "இன்னும் சில மாதங்களில் இரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிப்பதை துவங்கக் கூடும்" என க்ரோஸி சனியன்று சிபிஎஸ் நியூஸிடம் (பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளி) தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபோர்டோ இரான் தற்போதும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது. எனவே அவர்கள் விரும்பினால், அவர்களால் மீண்டும் தொடங்க முடியும் என அவர் தெரிவித்தார் இரானின் அணுசக்தி திறன்கள் தொடரக்கூடும் என கூறும் முதல் அமைப்பு ஐஏஇஏ அல்ல. இந்த வாரத்தின் தொடக்கத்தில் கசிந்த பெண்டகனின் முதல்கட்ட ஆய்வு, அமெரிக்க தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே பின் தள்ளி வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது சாத்தியமானது தான். எனினும், எதிர்கால உளவு அறிக்கைகள் இந்த நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள வேறு விதமான பாதிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை உள்ளடக்கலாம். இதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த டிரம்ப் இரானின் அணுசக்தி நிலைகள் 'முழுமையாக அழிக்கப்பட்டன' என்றும் ஊடகங்கள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதலை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார். இப்போதைக்கு இரானும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இரான் கவலையளிக்கக்கூடிய அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுகிறது என உளவுத்துறை கண்டறிந்தால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீசுவதைப் பற்றி நிச்சயம் யோசிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இரான் உச்ச தலைவர் காமனெயி பேச்சு பற்றி அரேபிய ஊடகங்கள் கூறுவது என்ன? அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன? இஸ்ரேலால் கொல்லப்பட்டோருக்கு இரானில் இறுதி அஞ்சலி - சபதமெடுத்த மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ஃபஹான் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படும் என இரானுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி அப்தொல்ரஹீம் மௌசவி ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார். "நாங்கள் போரைத் தொடங்கவில்லை, ஆனால் எங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவருக்கு பதிலடி கொடுத்துள்ளோம். எதிரி போர்நிறுத்தம் உள்ளிட்ட தனது உத்திரவாதங்களுக்குக் கட்டுப்படுவார் என தனக்கு சந்தேகம் இருப்பதால், மீண்டும் தாக்கினால் முழு படைபலத்துடன் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என அவர் கூறியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரான் மறுபுறம் பாதிப்புகள் பற்றி முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளது. வியாழன் அன்று நிகழ்த்திய உரையில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க தாக்குதல்கள் எதையுமே சாதிக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அகாக்சி "அதிகமான மற்றும் தீவிரமான" பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஐஏஇஏ உடன் இரான் ஏற்கெனவே நலிவடைந்த உறவைக் கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை அணுசக்தி கண்காணிப்பகமான ஐஏஇஏ இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் சாய்வதாக குற்றம்சாட்டி அதனுடனான ஒத்துழைப்பை ரத்து செய்யும் மசோதா இரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அப்பாஸ் அகாக்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்கிற ஐஏஇஏவின் கோரிக்கையை இரான் நிராகரித்துள்ளது. "பாதுகாப்பு என்கிற போர்வையில் குண்டு வீசப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என க்ரோஸி வலியுறுத்துவது அர்த்தமற்றது மற்றும் தவறான நோக்கம் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது" என வெள்ளியன்று எக்ஸ் பதிவில் அராக்சி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இரான் 20 ஆண்டுகளில் முதல் முறையாக தனது உத்திரவாதங்களை மீறியுள்ளது என ஐஏஇஏ கண்டறிந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானைத் தாக்கியது. இரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸி தெரிவித்துள்ளார். "நான் இரானுடன் அமர்ந்து இதை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இறுதியில் ராணுவ தாக்குதல்களுக்குப் பிறகு நீடித்த தீர்வு வேண்டும், அவை ராஜாங்க ரீதியான ஒன்றாகத் தான் இருக்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலக நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி இரான் 3.67% (வணிக அனுமின் நிலையங்களை இயக்குவதற்கான எரிவாயுவிற்கு தேவையான அளவு) என்கிற அளவிற்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்ட அனுமதி இல்லை. அது போக ஃபோர்டோ ஆலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த விதமான செறிவூட்டல் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை. எனினும் டிரம்ப் 2018ம் ஆண்டு தனது முதல் ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இதற்குப் பதிலடியாக இரான் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியது. ஃபோர்டோ ஆலையில் 2021-ல் இருந்து செறிவூட்டலைத் தொடங்கியது, ஒன்பது அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் குவித்துள்ளது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24v9gzengmo

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்

2 months 2 weeks ago
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:25 PM உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது. ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார். உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும் முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/218792

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்

2 months 2 weeks ago

Published By: VISHNU

29 JUN, 2025 | 08:25 PM

image

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.

IMG-20250629-WA0067.jpg

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது.

IMG-20250629-WA0064.jpg

ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

IMG-20250629-WA0061.jpg

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

IMG-20250629-WA0063.jpg

யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

IMG-20250629-WA0062.jpg

இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும் முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

IMG-20250629-WA0059.jpg

IMG-20250629-WA0050.jpg

IMG-20250629-WA0054.jpg

https://www.virakesari.lk/article/218792