Aggregator

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 2 weeks ago
புத்திசாலிகளான கிம் ரீம் எப்படி மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் பாருங்கள்😂? இப்படியே சிங்களவனும் இறுகப் பூட்டிய வீடாக இலங்கையை வைத்திருந்திருந்தால் தமிழர்களே அங்கே எஞ்சியிருக்காமல் போயிருப்பர்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 2 weeks ago
இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 2 weeks ago
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இவை நீங்கள் சரியாகச் சுட்டிக் காட்டியது போல சிறந்த வாழ்க்கைத் தரமோ, நீதி முறைமையோ கொண்ட நாடுகள் அல்ல! ஆனால், இவை எவையுமே ஒரு குண்டு மணியைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் தோல்வியுற்ற நாடுகளும் அல்ல! வட கொரியா கடலுக்குள் விட்டு விளையாடும் வாணங்களுக்கு செலவழிக்கும் தொகையை தன் மக்களுக்கு அடிப்படை உணவு, உடை, சுகாதார வசதிகள் கொடுக்க செலவழிக்க வேண்டும். இலங்கை- அதன் குறைபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி - தன் மக்களுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்தாவது கொடுக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் எண்ணம் போல வடகொரிய மொடலில் தனி தமிழர் தேசம் உருவாகியிருக்க வேண்டுமென்றால், அது உருவாகாமல் விட்டது தான் நல்லது!

வணக்கம்

2 months 2 weeks ago
தனக்கெடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்று சொல்வார்கள். அந்தவகையில் அத்துடன் ஆங்கிலமும் சேர்ந்து என் ஆங்கில மொழிபெயர்ப்பு அறிவுக்கு சேதம் விளைவித்து விட்டதே! இருந்தாலும் இணையவன் அவர்களின் தட்டச்சு அவரை என்னுடன் இணைய வைத்து ஆறுதல் அளித்தது.🙏

செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்

2 months 2 weeks ago
அந்த நேரமே செயற்கை நுண்ணறிவு வைத்துப் படமெல்லாம் தயாரித்திருக்கிறார்கள் போல! நிஜம் போலவே இருக்குது 👇! https://dbsjeyaraj.com/dbsj/?p=26627 https://www.colombotelegraph.com/index.php/pm-cameron-meets-cm-wigneswaran-in-jaffna/ "....The Prime Minister was received by Mr. Sampanthan, Mr. sumanthiran and Chief Minister Wigneswaran. He said “he was happy that after 1948, he was the first Head of Government to visit Jaffna”. The venue of the meeting was kept under wraps. Discussions took place in the 1st floor of Jaffna public library. The Prime Minister was accompanied by Edward Llewellyn, Chief of Staff to the PM. On their way back from the meeting, Chief Minister noted that the PM’s car was mobbed by the dear ones of those who were missing. There were shouts and sobs and an open expression of grief. The PM’s desire to meet them was being served." இனி உங்கள் முறை: உங்கள் அம்புலிமாமாக் கதைக்கான ஆதாரங்களை இணையுங்கள். யூ ரியூப் அலட்டல் பேர்வழிகள் தான் ஆதாரம் என்றால் இணைத்து மெனக்கெடாதீர்கள்😎!

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 2 weeks ago
ஒரு ஆரம்பப்பள்ளி பிஞ்சுக்குழந்தையின் உடல் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் செம்மணியின் துயரம்! யாழ்ப்பாணத்தில் (அரியாலை) உள்ள செம்மணி புதைகுழித் தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 4வது நாளாக அகழ்வு பணிகள் நடைபெற்றன. இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் இன்று ஓர் 6 - 8 வயது மதிக்கத்தக்க குழந்தையின் உடல் எச்சம் ஓர் புத்தகப்பை மற்றும் கறுப்பு நிற பாசிமணி கைசங்கிலியோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீல நிற புத்தகப்பையானது UNICEF அமைப்பால் யுத்த முடிவுக்கு முன்னரான காலப்பகுதியில் வட கிழக்கு பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பையோடு ஒத்துப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, செம்மணியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, 22 ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்விற்காக கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த அகழ்வுகளில், மிலேச்சத்தனமாக கொன்று குவித்து புதைக்கப்பட்டுள்ள குழந்தைகள், சிறுவர்கள் என பலரது உடல் எச்சங்களும் தொடர்ச்சியாக கிடைப்பது வேதனைக்குறியதாகும், இதற்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள மனித குலத்தின் பிரார்த்தனையாக இருக்கும்! Vaanam.lk

வைபவ் சூரியவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறும் அறிவுரை என்ன?

2 months 2 weeks ago
பெடிய‌ன் இங்லாந் மைதான‌ங்க‌ளில் த‌ன‌து அதிர‌டி விளையாட்டை வெளிப்ப‌டுத்துகிறார்...................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பைக்கு த‌யார் ஆகும் அணிக‌ளுட‌ன் , இப்ப‌டி சில‌ போட்டிக‌ளை வைப்பின‌ம் , முத‌லாவ‌து விளையாட்டில் சிக்ஸ் ம‌ழை.....................இந்தியா இள‌ம் வீர‌ர்க‌ளை , இங்லாந் இள‌ம் வீர‌ர்க‌ளால் வெல்ல‌ முடியாது 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ அடுத்த‌ வ‌ருட‌ம் இந்தியா சிம்பிலா வெல்லும்............................

செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்

2 months 2 weeks ago
யாரும் யாரையும் வாசலில் போய் சந்திக்கவில்லை. டேவிட் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க யாழ்ப்பாணம் வந்தார். இலங்கை அரசு அவர் வருவதை தடை செய்ய எத்தனையோ காரணங்களை சொன்னது. இருந்தாலும் அவர் அவைகளை கடந்து வந்தார். மக்களை சந்திக்க விடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். அங்கே செல்வராசா கஜேந்திரன், மதகுருக்கள், அனந்தி போன்றோர் மக்களுடன் கலந்து நின்றனர். அப்போ நம்ம தலைகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். அனந்தி பொலிஸாரின் தடைகளையும் தாண்டி ஓடிச்சென்று கார் யன்னல்வழியாக அறிக்கை ஒன்றை டேவிட் கமரோனிடம் கையளித்தார். இந்த சம்பவத்திற்கு பின் காணாமல் போன உறவுகளை சந்திக்க சென்றனர். கோபமடைந்த உறவுகள், அவர்களுடன் உரையாட மறுத்து, எங்கள் பிரச்சனைகளில் எங்களோடு நிற்கவில்லை இப்போ மாப்பிளை அழைக்க வந்தீர்களோ என விசனத்தை தெரிவிக்க, குனிந்த தலையுடன் சுமந்திரன் சம்பந்தர் வெளியேறினர்.

வணக்கம்

2 months 2 weeks ago
வணாக்கம் விக்தனன், உங்கள் மீள்வரவிற்கு நன்றி. நீங்கள் விரும்பினால் உங்கள் பழைய கணக்கினை மிள இயங்க வைக்கலாம். உங்களது கடவுச் சொல்லை மறந்திருந்தால் கீழுள்ள இணைப்பில் உங்கள் மின்னஞ்சல் மூலமாக அதனைப் புதுப்பிக்கலாம். https://yarl.com/forum3/lostpassword/ வேறு பிரச்சனை இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி.

வணக்கம்

2 months 2 weeks ago
உங்கள் பழைய ஐடியை தேடிப்பார்த்தேன், முகநூல் முகம் காட்டியது. அதில்…… (விக்கினன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். பொதுவாக,அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள். அவர்கள் தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். ஆதலால் அவர்கள் தேவர்களையும்,முனிவர்களையும் தொல்லை கொடுத்துவந்தனர். அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா?அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும்,தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர். விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார். முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே! அவரால் என்ன செய்து விடமுடியும்?என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன வலிமையிலும், உடல் வலிமையிலும் தோற்று போய், கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு (யாழ்களத்திலும்) சரணடைந்தான். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.🫱‍🫲😁

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

2 months 2 weeks ago
தான் பெறப்போகும் குழந்தை இவ்வுலகில் மனிதர்களோடு, மனிதத்தோடு சிறப்பாக வாழவேண்டும் என்ற எண்ணம்கூட அந்த கறுப்புசட்டை போட்ட அம்மாவுக்கும் இல்லையோ!🤔

செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்

2 months 2 weeks ago
30 JUN, 2025 | 11:51 AM யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள். வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமாக இது அணுகப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் இந்த விடயங்களை மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218815 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தானே ஐயா?

செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்

2 months 2 weeks ago

30 JUN, 2025 | 11:51 AM

image

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள். 

வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமாக இது அணுகப்பட வேண்டும்.

இதற்கான முயற்சிகளை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் இந்த விடயங்களை மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/218815

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தானே ஐயா?

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 months 2 weeks ago
தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 30 JUN, 2025 | 10:41 AM தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218810