Aggregator

ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்

2 months 1 week ago

image_41f7654885.jpg

இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது.

200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது.

விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது.

தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக விலங்கை அகற்றி அப்புறப்படுத்தினர்.

சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.  பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர்.


Tamilmirror Online || ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்

மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!

2 months 1 week ago
15 Oct, 2025 | 04:28 PM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk

மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!

2 months 1 week ago

15 Oct, 2025 | 04:28 PM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months 1 week ago
இந்தப் பாடல் கருப்பு பணம் படத்தில் இடம் பெற்றது. கண்ணதாசன் தயாரித்து நடித்த படம். “பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் கூட தலைவனடி…”, “…போராடாச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி..” இந்த வரிகள் என்றும் பொருந்தும்.

கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது

2 months 1 week ago
கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk

கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது

2 months 1 week ago

கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது.

அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது.

S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது.

செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk

கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்

2 months 1 week ago
கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் 15 Oct, 2025 | 11:59 AM மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் | Virakesari.lk

கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்

2 months 1 week ago

கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்

15 Oct, 2025 | 11:59 AM

image

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில்  காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்  தாக்கம் காரணமாக  குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார்   கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். 

குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு'  என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில்  பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு  முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு  இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2025-10-14_at_8.14.40_AM.

WhatsApp_Image_2025-10-14_at_8.14.40_AM_


கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் | Virakesari.lk

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு!

2 months 1 week ago
15 Oct, 2025 | 05:45 PM இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டு பின் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு! | Virakesari.lk

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு!

2 months 1 week ago

15 Oct, 2025 | 05:45 PM

image

இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டு பின் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-10-15_at_5.35.00_PM_

WhatsApp_Image_2025-10-15_at_5.35.02_PM_

WhatsApp_Image_2025-10-15_at_5.35.00_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.35.02_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.59_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.58_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.57_PM.


இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு! | Virakesari.lk

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago
நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி. நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி 15 Oct, 2025 | 05:39 PM “நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். “நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன்” எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர். இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

2 months 1 week ago
வாத்தியார், யாழ் விதிப்படி மூல இணைப்பை நான் கொடுத்ததில் என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா, பொருள் குற்றமா இல்லை இணைத்தவனின் குற்றமா? யாரங்கே....

பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை

2 months 1 week ago
டாக்டர் லீ க்கு வாழ்த்துக்கள். அந்த பெடியனை பார்….நீயும் இருக்கிறியே என சராசரித் தமிழ் பெற்றார் திட்ட இன்னுமொரு உதாரணபுருசர் 🤣

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 1 week ago
இது திமுகவும் தோற்க வேண்டும், பிஜேபியிம் அரசில் அங்கம் வகிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எமக்கு நல்ல தெரிவு. ஆனால் காங்கிரசுக்கு இதில் ஒரு இலாபமும் இல்லை. தவிர அதிமுக பெரும்பான்மைக்கு அதிக சீட்டுகள் எடுத்தாலும் கூட கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித்ஷா எடப்பாடியை வைத்து கொண்டே சொல்லி விட்டார், ஆகவே அதிமுக+பிஜேபி கூட்டணி அமைந்தால் - தமிழ் நாட்டு அரசில் பிஜேபி மந்திரிகள் இருபார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இது விஜை+ காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் சாதிக்க முடியாத விடயம். நிச்சயமாக. One week is along time in politics. இன்னும் 6 மாதம் இருக்கிறது.

38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா

2 months 1 week ago
38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: அதிசிறந்த மெய்வல்லுநர்கள் அயோமல், ஜித்மா; மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) தியமக, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நிறைவுக்கு வந்த 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் அயோமல் அக்கலன்க அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகவும் ஜித்மா விஜேதுங்க அதிசிறந்த பெண் மெய்வல்லுநராகவும் தெரிவாகினர். ஐந்து தினங்களாக நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மேல் மாகாண பாடசாலைகள் முதல் மூன்று இடங்ளைப் பெற்றன. நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 148 புள்ளிகளைப் பெற்று சம்பியனானதுடன் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி 99 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 77 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தின் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 213 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது. மத்திய மாகாணத்தின் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி 93 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மேல் மாகாணத்தின் பன்னிப்பிட்டி தர்மபால கல்லூரி 61 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அகில இலங்கை விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 38 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. ஆண்கள் பிரிவில் 21 சாதனைகளும் பெண்கள் பிரிவில் 17 சாதனைகளும் பதிவாகின. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 49.90 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கம் சுவீகரித்த அம்பகமுவ மத்திய மகா வித்தியாலய வீரர் அயோமல் அக்கலன்க, 1135 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநரானார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.09 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் சுவீகரித்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை ஜித்மா விஜேதுங்க, 1047 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த பெண் மெய்வல்லுநரானார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் 1277 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன் 414 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம் ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. வட மாகாணம் 138 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தையும் கிழக்கு மாகாணம் 67 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தையும் பெற்றன. https://www.virakesari.lk/article/227740

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
கொழும்பு மைதான‌த்தில் இர‌ண்டு விளையாட்டு ஏற்க‌ன‌வே கைவிட‌ப் ப‌ட்ட‌து நேற்று ம‌ழை வ‌ராட்டி இல‌ங்கை வென்று இருக்கும் வாத்தி அண்ணா...................இன்று ம‌ழை வ‌ராட்டி பாக்கிஸ்தான் வென்று இருக்கும்.............இப்ப‌ ம‌ட்டைய‌ கையில் வைத்து இருக்கும் ம‌க‌ளிருக்கு பெரிசா ர‌ன்ஸ் அடிக்க‌த் தெரியாது....................இந்த‌ இர‌ண்டு ம‌களிரும் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்.................இனி வ‌ரும் இர‌ண்டுக்கும் சுத்த‌மாய் ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது , ம‌ழை வ‌ராட்டி பாக்கிஸ்தான் இவையை குறைந்த‌து 110 ல்ல‌து 120க்கை ம‌ட‌க்கி இருக்கும்.....................ம‌ழை விடாம‌ல் பெய்தால் விளையாட்டு முடிவின்றி இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்.........................

சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 months 1 week ago
(2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …) தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்… இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க. அண்ணி கிச்சன்ல இருந்தா… மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்… சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்…. தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்… பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக… அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக…. கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்… அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி… அதுதான் மின் வலு… மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க… விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு…. மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்… இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்… சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார். (கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)