Aggregator
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
“இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
எவ்வாறாயினும் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் குறித்து ட்ரம்ப் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
https://oruvan.com/ceasefire-between-israel-and-hamas-within-a-week-trump/
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது.
இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிற்க வேண்டி வரும் ; கலாநிதி கயான் ஜயதிலக்க
இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிற்க வேண்டி வரும் ; கலாநிதி கயான் ஜயதிலக்க
27 JUN, 2025 | 05:20 PM
(எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை.
ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவதற்கு முன்னர் நாட்டுக்கு தெரிவிக்கவும் இல்லை. கைச்சாத்திட்ட பின்னரும் அதனை தெரிவிக்க மறுத்து வருகிறது.
கரம்போட் விநியோகித்த குற்றச்சாட்டுக்காக அண்மையில் நீதிமன்றம் 25 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அப்படியானால் இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தளவு காலம் சிறைத்தண்டனை வழங்கப்படும்?
நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் வெறு நாடொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மாத்திரமல்லாமல், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்துமாறு கேடடால், அதனையும் வழங்க முடியாது என தெரிவிப்பது பாரிய விடயமாகும்.
அதனால் இந்த விடயங்களை எப்போதாவது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டி ஏற்படும். இந்தியாவுடன் இணைந்து ஆயுத உற்பத்திக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்துக்கு புதுமையான மன நிலையே இருக்கிறது.
அத்துடன் இந்தியாவுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதாக இருந்தால், அதில் ஏதாவது ஒருவிடயம் இருக்க வேண்டும்.
அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது, இந்த அரசாங்கத்தை முற்போக்கான அரசாங்கம் என நான் ஒருபோதும் தெரிவிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்கவைவிட வலதுசாரி வெளிநாட்டுக்காெள்கை மற்றும் தொடர்புகளே இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது.
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த அரசாங்கத்தினால் அவ்வாறான கண்ட அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போயிருக்கிறது.
இறையாண்மையுள்ள நாடொன்றுக்கு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வது தவறு என்றாவது தெரிவித்திருக்க முடியும். ஈரான் எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடு.
மேலும் இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் எமது நாட்டுக்கு வந்து பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். எமது நாட்டில் யுத்தத்தின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடியுள்ளார்.
ஆணையாளர் அரசாங்கத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
ஆனால் காசாவில் உணவுக்காக வரிசையில் இருப்பவர்கள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்துவதை காண்கிறோம். அங்கு பாரிய இனப்படுகொலை இடம்பெற்று வருகிறது.
இது தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீங்கள் இறுதியாக காசாவுக்கு எப்போது சென்றீர்கள் என ஆணையாளரிடம் இவர்கள் கேட்டிருக்கலாம்.
காசாவில் நாளாந்தம் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகளில் காணும் நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல், இலங்கையில் முடிவடைந்த யுத்தம் தொடர்பில் கதைத்து எமக்கு ஆலாேசனை வழங்கிச்செல்லும்போது வாய்மூடி இருக்கும் அளவுக்கு பலவீனமான அரசாங்கமா இந்த நாட்டில் இருக்கிறது என கேட்கிறேன் என்றார்.
யாழில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை - தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி
யாழில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை - தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி
27 JUN, 2025 | 07:21 PM
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்.
தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடிய பொதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேயே வந்துள்ளதாகத் தெரிவித்த சபையின் தலைவர் ஜூலை மாதம் இரு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் (High power water gun) கொண்டு வரப்படவுள்ளன.
அத்துடன் அதை இயக்குவதற்கான ஆட்களும் அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களுடன் நான் உட்பட உயர் அதிகாரிகளும் இங்கு வரவுள்ளோம்.
சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.
படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
27 ஜூன் 2025
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
"நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்."
கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன?
அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல்
சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
"அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா.
"நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார்.
போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை
படக்குறிப்பு, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார்.
தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார்.
இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார்.
ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார்.
அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார்.
சமாதானம் ஏற்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES
இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார்.
"எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.
"சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா.
அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார்.
"ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார்.
'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்'
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா (சித்தரிப்புப் படம்)
தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா.
"அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா.
தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார்.
தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள்
மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர்.
பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது.
திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார்.
தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள்
தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது.
தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல்
தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல்
வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல்
தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல்
தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம்,DR MALAIYAPPAN
படக்குறிப்பு, மருத்துவர் மாலையப்பன்
மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார்.
"தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன்.
தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார்.
"போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார்.
"பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
"உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன்.
உதவி எண்கள்
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
இஸ்ரேலுடனான மோதலை தொடர்ந்து ஈரானில் தொடர்ச்சியான கைதுகள் மரணதண்டனைகள் - மொசாட்டிற்கு உதவியவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
இஸ்ரேலுடனான மோதலை தொடர்ந்து ஈரானில் தொடர்ச்சியான கைதுகள் மரணதண்டனைகள் - மொசாட்டிற்கு உதவியவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
27 JUN, 2025 | 01:32 PM
bbc
இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர்.
முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன.
மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என ஈரான் கருதுகின்றது.
இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர். நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
12 நாள் மோதலின் போது இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன.
ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் - CIA மொசாட் மற்றும் MI6 எதிராக "இடைவிடாத போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி "இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது". 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் "இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை" கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர். இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் தாய்ப் புலி, 3 குட்டிகள் சந்தேக மரணம் - மேய்ப்பர்கள் காரணமா? முழு பின்னணி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
பெ.சிவசுப்ரமணியம்
பிபிசி தமிழுக்காக
27 ஜூன் 2025
தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது.
இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது.
இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.
மூன்று வயது குட்டிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன.
நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார்.
இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.
"புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.
'புலிகள் - வன வளத்தின் குறியீடு'
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது
தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ்.
மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார்.
ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார்.
மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார்.
புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு
பட மூலாதாரம்,GETTY IMAGES
புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார்.
ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார்.
மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு