Aggregator
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை!
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை!
ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
2021 ஜூலை சயீத் அனைத்து பிரிவுகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக பல நபர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
துனிசியாவின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனை இருந்தபோதிலும், சிவில் நீதிமன்றங்கள் எப்போதாவது மரண தண்டனைகளை வழங்கினாலும், 1991 இல் ஒரு தொடர் கொலையாளி தூக்கிலிடப்பட்டதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!
-ச.அருணாசலம்

நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப் காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா? அமைதி நாயகன் வேடம் டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்;
அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன?
# தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல் இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம்.
# மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம்.
# அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Peace) ஏற்படுத்தி அக் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காசா பகுதியை கொண்டு வருவதாம். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைவராம்! டோனி பிளேர் போன்ற உலகத் தலைவர்கள் இதில் உறுப்பினர்களாம்!
# இத்தகைய ஆட்சிமுறை , புதிதாக ஏற்படுத்தவுள்ள சீரமைக்கப்பட்ட பாலத்தீன குழு முதிர்ச்சி பெறும் வரை – கால வரையிரை இன்றி தொடருமாம்!
# ஹமாஸ் அமைப்பிற்கு இனி மேல் காசாவை நிர்வகிப்பதில் எந்த பங்கும் அளிக்கப்பட மாட்டாதாம். அவர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களது அமைப்புகளை கலைத்து விட்டால், அவர்களுக்கு உயிர்பிச்சை தருவார்களாம்.
# காசா பகுதியை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு முதலாளிகளின் கீழ் காசா மக்கள் உழைத்து பிழைக்கலாமாம்.

# பாதுகாப்பிற்காக சர்வதேச உறுதிப்படுத்தும் படைகள் (International Stabilisation Force) உருவாக்கப்படுமாம். இந்த படை காசாவின் எல்லைகளையும் உள்ளூர் காவல் கடமைகளையும் நிறைவேற்றுமாம்.
இந்த படைகள் வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தற்போது விலகாதாம்.
# அடுத்து அமைதியை நிரந்தரமாக்க சக வாழ்வையும் ஒற்றுமை உணர்வையும் தூண்ட உரையாடல்களை(dialogue) இரு பிரிவு மக்களிடையே இத்திட்டம் ஊக்குவிக்குமாம். காசா பகுதி இன்றிருக்கும் பின்னடைவிலிருந்து மீளும் பொழுது அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களிடையே அரசியல் பேச்சு வார்த்தைகள்- பாலத்தீனர்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அரசை ஏற்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தைகள் – நடத்தப்படும். பாலத்தீனீய அதிகார அமைப்பு அத்தகைய பேச்சு வார்த்தைகளை நடத்துமளவிற்கு சீரமைக்கப்பட்டு பக்குவமும் அடைந்திருக்க வேண்டுமாம்….என்று இத் திட்டம் நீட்டி முழக்குகிறது!

சொல்லமறந்த அல்லது தவிர்த்துவிட்ட அம்சங்கள்என்னென்ன?
# இந்த அமைதி திட்டம் ஐ நா சபை யின் முயற்சியிலோ, அதன் கண்காணிப்பிலோ நடைமுறைக்கு வரும் திட்டமல்ல. இத்திட்டத்தில் ஐ நா விற்கு எந்த பங்கும் இல்லை!
இத்திட்டம் இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கு எந்தவித தண்டனையையும் அளிக்கவில்லை.
# இஸ்ரேல் இதுவரை பறித்த உயிர்களுக்கும், அழித்த சிறார் மற்றும் மகளிர்களுக்கும், சிதைத்த கட்டிடங்களுக்கும் அமைப்பு முறைகளுக்கும் இழப்பீடோ, நிவாரணமோ, இஸ்ரேல் கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை.
# இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய இஸ்ரேலின் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தாமல் உதவிகள் வழங்குவதைக் கூட இத்திட்டத்தை ஏற்றால் தான் வழங்குவோம் என்று கூறுகிறது இந்த அமைதி திட்டம்.
# அடுத்து, இத் திட்டம் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திலோ காசா மக்கள் இத் திட்டத்தில் பங்கு கொள்ள எந்த வகையான ஜனநாயக வழி முறைகளையும்வழங்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு அவர்களதுதலைவிதியை நிர்ணயிப்பதில் எந்தவித பங்கையும்அளிக்கவில்லை இந்த திட்டம்.

ஆயுதங்களை கீழே போடும் பாலத்தீனர்களுக்கு எந்தவிதபாதுகாப்பையும் வழங்க மறுக்கும் இத்திட்டம் , இஸ்ரேலியகுடியமர்த்தல்களுக்கும் தடை விதிக்கவில்லை, பாலத்தீனர்களின் நிலங்கள் உடமைகள்பறிக்கப்படுவதையும் தடுக்கவில்லை.
இத்தகைய திட்டம் உண்மையில் அமைதிக்கான திட்டமா அல்லது உலகத்தினரின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியா?
ஒருபுறம் எப்படியும் சமாதான நாயகன் என்ற பட்டத்தை பெற்றுவிட துடிக்கும் தலைக்கனமிக்க கோமாளி டிரம்ப், மறுபுறமோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் 65,00 மக்களை கொன்று குவித்தாலும் பிணைக் கைதிகளை போரின் மூலம் மீட்கவோ, ஹமாஸ் அமைப்பை ராணுவரீதியாக முறியடிக்கவோ முடியாத நெத்தன்யாகு ஆகிய இரு நபர்களும் தங்களின் கொடூரங்களை தொடரவும் அதற்கான பழியை ஹமாஸ் மீது போடவும் துணிந்தே இத்தகைய நகைப்பிற்கிடமான திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த அடிமை சாசனத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்காது என்ற துணிச்சலில் தான் எத்தன் நெத்தன்யாகு டிரம்ப்பின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளான் . இதை ஹமாஸ் நிராகரித்தால் நெத்தன்யாகு , நான் அமைதிக்கு முயற்சி செய்தேன். ஆனால், ஹமாஸ் ஒத்துக் கொள்ளவில்லை என பழியை ஹமாஸ் அமைப்பின் மீது போட்டுவிட்டு தனது இனப்படுகொலையை தொடர்ந்து நடத்துவான். அதே நேரத்தில் தன் மீதான இஸ்ரேலிய மக்களின் கோபத்தை மடைமாற்றி தப்பித்து கொள்ளவே இந்த அமைதி திட்டம்.

நேதன்யாகுவிற்கு எதிராக அமைதியை விரும்பும் யூத மக்கள்
இத்தகைய மோசடி திட்டத்தை, இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று அறிக்கை விட்டுள்ளார். இந்திய அரசின் நீண்ட நாள் கொள்கையும் , சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரால் ஐநா சபையில் அறிவிக்கப்பட்ட இரண்டு அரசு தீர்வுகளும் ( Two State Solution to Palestine) என்னவாயிற்று? அக் கொள்கையை அடைய இத்திட்டம் வழிவிடவில்லையே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பதிலில்லை. நெத்தன்யாகு இஸ்ரேலிய மக்களை ஏமாற்றுவது போலவே, மோடி இந்திய மக்களை ஏமாற்றுகிறார்.
அமைதி திட்டத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் இந்தியாவின் நெடுநாளைய கொள்கையானபாலத்தீன சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இஸ்ரேல்ஆக்கிரமித்துள்ள பாலத்தீன பகுதிகளில் இருந்துவெளியேறுதலை வற்புறுத்துதல், பாலத்தீன அரசிற்குஅங்கீகாரம் அளித்தல் , பாலத்தீன அரசு , இஸ்ரேல் அரசு எனஇரண்டு சுதந்திரமான அரசுகளே பாலத்தீனபிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்றகொள்கைநிலையை மறந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்பை காட்டும் வண்ணம் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளார் மோடி.
டிரம்ப் அறிவித்துள்ள இத்திட்டத்திற்கு அரபு நாடுகளான சௌதி அரேபியா, யு ஏ இ, கத்தார், எகிப்து, ஜோர்டான் துருக்கி போன்ற நாடுகள் ‘ஆரம்ப கட்ட’ ஆதரவை தெரிவித்துள்ளன. பல் பிடுங்கப்பட்ட, சோரம் போன , பொம்மை அரசான பாலத்தீனிய அதிகார அமைப்பும் (Palestine Authority) இத்திட்டத்தை வரவேற்றுள்ளது என்றாலும், ஹமாஸ் அமைப்பு தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்ட நெத்தன்யாகு தனது இனப் படுகொலையை இந்தப் போர் நிறுத்த்தின் மூலமாக நிறுத்துவான் என்பது பகல் கனவு. உலகெங்கிலுமுள்ள மக்களின் கோபத்திற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் பல – பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்றவை- பாலத்தீன அரசை இப்பொழுது அங்கீகரித்து உள்ளன.
அமைதி திட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக , காசா பகுதியை செல்வங் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ரிவர்ரியாக மாற்றவே இத்திட்டம் முன் வைக்கப்படுகிறது எனலாம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் முயல்கிறார்.
ஐநா சபை தீர்மானங்களை, ஐ நா வின் வழிகாட்டுதல்களை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மதித்தது உண்டா? இத்தகைய தான்தோன்றிதனத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா ?

ஹமாஸ் தலைவர்களும், பாலஸ்தீன மக்களும்
நீதி என்பதை யாரிடமும் யாசகமாகப் பெற முடியாது, அது போராடி பெரும் வெற்றியின் விளைவாக கிட்டும் கனியே ஒழிய தோற்றவனுக்கு வழங்கப்படும் பிச்சையல்ல. ஹமாஸ் இயக்கம் பாலத்தீன மக்களின் நாடி நரம்பு என்பதை உலகம் புரிந்து கொள்ளும்நாள் விரைவில் வரும்.
இஸ்ரேலையும் உள்ளடக்கிய பரந்த பாலத்தீனத்தில் இன்றும் யூத இன மக்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாமல் பாலத்தீனர்கள் வாழ்வதை மறந்து விட்டு, பாலத்தீனம் முழுமையுமே யூத இனத்திற்கு கடவுள் அளித்த புண்ணிய பூமி என்று கதையளக்கும். யூதமதவெறித் தனத்தை (ஜியோனிசத்தை) கைவிட்டு யூதர்களுக்கான தேசமாக இஸ்ரேல் அரசும் , பாலத்தீனர்களுக்கான பாலத்தீன அரசும் ஏற்படுத்தி சுதந்திரமாக இயங்க (Two States) இஸ்ரேல் ஒத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
பரந்த பாலத்தீனத்தில் அனைத்து மக்களுக்கும்( யூதர்கள்,பாலத்தீன இஸ்லாமியர்கள், ட்ரூஸ் கிறித்தவர்கள், ஜொராஸ்ட்ரிய மத்த்தினர்) இயைந்து வாழும் ஒற்றை மத சார்பற்ற அரசை ஏற்படுத்த (One Secular State) இஸ்ரேல் முன்வரவேண்டும்.
இழப்பதற்கு ஏதுமற்ற பாலத்தீன மக்கள் தங்களது அடையாளத்திற்காக தங்களது கண்ணியத்திற்காக களத்தில் நிற்பார்கள் என்பது உறுதி!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.
இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன.
அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலுக்கான களப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
அதன்படி தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து, கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் (ஐபிஎல்) இரா.ஐயனார் கூறுகையில், “நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை தேர்தலையொட்டி 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படும். அந்தவகையில் 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் தலா 117 பெண்கள், 117 ஆண்கள்
நிறுத்தப்பட உள்ளனர்.
குறிப்பாக இந்தமுறை அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண்களுக்கே வாய்ப்பளிக்கப்பட உள்ளது. அதேபோல் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் முன்னெடுக்காத வகையில் முதல்முறையாக 5 இடங்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம். இதற்கு முன்பு தமிழக அரசியல் வரலாற்றில் கும்பகோணம் அல்லது மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டுமே பிராமணர்களுக்கு இதர கட்சிகளில் வாய்ப்பளிக்கப்படும்.
ஆனால் 2026 தேர்தலில் முதல்முறையாக பிராமணர்களுக்கு அதிகப்படியான இடங்களை நாம் தமிழர் கட்சி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 5 பேரில் நான்கு பேர் பெண்களாவர்.
இந்த வேட்பாளர்கள் சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இவர்கள் உட்பட சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நிறைவடைந் துள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் !
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் !
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் !
04 Oct, 2025 | 11:09 AM
![]()
டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்கனவே தேடல் வரலாறுகள் நீக்கப்பட்ட புதிய தொலைபேசிகளில், 13 வயதுடையவர்களைப் போல உருவகிக்கும் 7 புதிய டிக் டொக் கணக்குகளை இங்கிலாந்தில் உருவாக்கியது. டிக்டொக் கணக்கை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயதெல்லை 13 ஆகும்.
டிக்டொக் இன் ஆதரவுப் பக்கத்தின்படி, 'கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறை' (Restricted Mode) என்பது "பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள்" உட்பட "அனைவருக்கும் வசதியாக இருக்காது" என்று கருதப்படும் உள்ளடக்கத்தை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும், 13 வயதுடையவர்கள் என்று குறிப்பிட்டும், கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்தியும் உலாவிய பயனாளர்களுக்கு, டிக்டொக் இன் தேடல் பரிந்துரைகள் "அதிக பாலியல் தன்மையுடன்" இருந்ததாக குளோபல் விட்னஸ் தெரிவித்துள்ளது.
குளோபல் விட்னஸ் உருவாக்கிய சோதனை கணக்குகளில் மூன்றிற்கு, பயனர் முதல் முறையாக தேடல் பட்டியை கிளிக் செய்தபோதே பாலியல் ரீதியான தேடல் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மேலும், கணக்கைத் தொடங்கிய பிறகு சில கிளிக்குகளில் அனைத்து ஏழு சோதனை பயனர்களுக்கும் ஆபாச உள்ளடக்கத்தை டிக்டொக் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்ததாக அறிக்கை கூறுகிறது.
"டிக்டொக் ஆபாச உள்ளடக்கத்தை சிறுவர்களுக்குக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல எங்கள் வாதம். டிக்டொக் -இன் தேடல் வழிமுறைகள் இளையவர்களை ஆபாச உள்ளடக்கத்தை நோக்கி செயலூக்கத்துடன் தள்ளுகின்றன" என்று குளோபல் விட்னஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
டிக்டொக் -இன் சமூக வழிகாட்டுதல்கள் நிர்வாணம், பாலியல் செயல்பாடு மற்றும் பாலியல் சேவைகள் கொண்ட உள்ளடக்கத்தையும், இளையவர்களை உள்ளடக்கிய பாலியல் ரீதியான ஆலோசனைகள் அல்லது கணிசமான உடல் வெளிப்பாடு கொண்ட உள்ளடக்கத்தையும் தடை செய்கின்றன.
இந்த அறிக்கை குறித்து, டிக்டொக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, "இந்த கூற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக அவற்றை விசாரணை செய்யவும், எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், எங்கள் தேடல் பரிந்துரை அம்சத்தில் மேம்பாடுகளை ஆரம்பிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டிக்டொக் இளம் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அம்சங்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிக்டொக், வயது கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்தி உலகளவில் மாதந்தோறும் சுமார் 6 மில்லியன் வயது குறைந்த கணக்குகளை அகற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட
04 Oct, 2025 | 04:11 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்)
அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு இதுதொடர்பில் ஆலாேசனை வழங்கிய அரசாங்கமும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அதனை செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்து. ஆனால் இந்த நடவடிக்கையில் தலையிட்டிருந்த நாணய நிதியம் தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கிறது.
அதாவது 2028ஆகும்போது நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நாங்கள் 2028இல் பாரியதொரு தொகை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அதேநேரம் கடன் மறுசீரமைப்பு குறைகிறது. 2028இல் எங்களுக்கு கடன் மீள செலுத்த முடியாமல் போனால், எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. கடன் குறைப்பும் வட்டியும் கணக்கிடப்படுவது, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருட சராசரிக்கு அமைவாகும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க (டைம் பாம்) நேரம்பார்த்து வெடிக்கும் குண்டுகளை புதைத்து விட்டுச்சென்றுள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.சில குண்டுகள் 2025 இறுப்பகுதியில் வெடிக்கும் வகையிலும் இன்னும் சில குண்டுகள் 2028இல் வெடிக்கும் வகையிலே புதைத்துள்ளார். இந்த டைம் பாம்களை எடுத்துக்கொண்டு விழுங்க வேண்டாம் என இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தெரிவித்திருந்தோம்.
அதுமாத்திரமல்ல, எங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகினாலும், வாக்குறுதியளித்த கடன் உரிமையாளர்களுக்கு கட்டாயமாக கடன் தவணைகளை செலுத்த வேண்டும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதனால் கடன் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் எங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகிறது. அதற்காக மக்களின் சொத்துக்கள் வளங்களை விற்பனை செய்தாவது பணம் தேட வேண்டிவரும்.
அதனால் அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில், சர்வதேச நாணய நிதியம், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷ்வினர் இணைந்து பொறி ஒன்றை வைத்திருந்தனர். அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அழகான முறையில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்றார்.
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!
04 Oct, 2025 | 09:59 AM
![]()
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.



யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
04 Oct, 2025 | 10:59 AM
![]()
யாழ் மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.
யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது.
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், "யாழ்ப்பாணம் - 4" (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்வில் "யாழ் முத்து" விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை மாவட்ட செயலர் இமெல்டா சுகுமார் மற்றும் அவரது கணவர் கே. சுகுமார் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சனும், கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல் கேதீஸ்வரன் கலந்து கொண்டனர்.






யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
04 Oct, 2025 | 10:00 AM
![]()
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
ஆய்வு மாநாடு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்முறையாகும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் கல்விசார் ஆய்வுகளில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு தடங்களில் தமது ஆய்வு நாட்டத்தைக் காண்பித்து வருகிறார்கள்.
அந்தவகையில், கலைப்பீடத்தின் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது.
இம்முறை நடைபெறும் ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.
இளங்கலைமாணி கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
