Aggregator
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம்
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம்
30 Nov, 2025 | 02:03 PM
![]()
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.
அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.
நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட சுகாதார அபாயங்களைத் தவிர்க்க அத்தியாவசிய மருத்துவ வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெள்ளநீரில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மருத்துவ குழுக்கள் அனுப்புதல், அவசர மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், மாவட்ட செயலாளர், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அமைச்சர் அவசர ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்தினார். வெள்ளநீர் வெளியேற்றம் செய்யவேண்டிய பகுதிகள், தாழ்வான இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகள், படகு மற்றும் வாகன வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
குறிப்பாக, இன்னும் வட மாகாணத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்பதற்காக கூடுதல் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர், வீதி தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீளமைக்கும் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பே முதலாவது முன்னுரிமை எனவும், அரசு சார்பாக எந்தவித தாமதமும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் முழுவதும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை குறையும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்
30 November 2025

சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
https://hirunews.lk/tm/433451/huge-loss-in-mannar-thousands-of-cattle-washed-away-in-floods
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
நாட்டை உலுக்கிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பலியானவர்களில் எண்ணிக்கை தற்போது 193 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 228 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழழை (30) காலை 11.30 மணிக்கு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில், 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிக எண்ணிக்கையிலான பேரிடர் இறப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதாவது 71 இறப்புகள்.
இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 52 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 20 இறப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 15 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டியில் 105 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இதனால் மீட்புக் குழுவினர் நிலச்சரிவு மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் 53 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 27 பேரும், கேகாலை மாவட்டத்தில் 24 பேரும் காணாமல் போயுள்ளனர்.
https://www.tamilmirror.lk/செய்திகள்/பேரிடர்-மரணங்கள்-193-ஆக-உயர்வு-228-பேர்-மாயம்/175-368781
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை , மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பனவும் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த மத்திய நிலையத்தில் கடமைகளுக்காக நியமிக்கப்பட உள்ளனர். அந்த நிறுவனங்களின் அனைத்து விடயங்ளுக்கும் ஒருங்கிணைத்து வசதிகளை வழங்கும் ஒரு கூட்டு செயல்பாட்டு மையமாக அதன் செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அனர்த்த நிலைமை தணிந்தவுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’
“டித்வா” புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி
வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி
வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி
Nov 30, 2025 - 12:58 PM
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது சிக்குண்டுள்ள செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் அல்லது வீதி விலங்குகளுக்கு அவசர கால்நடை மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கால்நடைவைத்தியர்கள் சங்கம் தயாராக உள்ளது.
இத்தகைய உதவிகள் தேவைப்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் சுகத் பிரேமசந்திர கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:
தொலைப்பேசி இலக்கம்: 071 6000 666
வைத்தியர் மாலக லசந்த: 071 414 5242
வைத்தியர் நிலூஷா: 070 610 3808
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
Published By: Digital Desk 3
29 Nov, 2025 | 11:20 PM
![]()
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக, முக்கியமாக வரி விலக்குடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு பொறிமுறையின் கீழ் செயற்பட்டு, இந்தப் பொருட்களை விடுவிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, இந்நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் பலதரப்பு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படும் உதவிகள் என்று நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்து இனங்காணப்பட்டன.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நாட்டிற்கு அவசரமாகத் தேவைப்படும் பொருட்களின் பட்டியலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெறுநராக பெயரிடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்போது, அந்தப் பொருட்களுக்கான சுங்க வரிகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு அளிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் பொருள் உதவிகளை செயற்திறனாகவும், முறையான வகையிலும் விடுவிக்க முடியும்.
பொருள் உதவிகளைப் பெறுபவராக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெயரிடப்படவில்லை என்றால், சாதாரண நடைமுறையின் கீழ் வரி செலுத்தி விடுவிக்க வேண்டும்.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் திறம்பட அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன் ஏற்பாடுகளுடன், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேற்கொள்ளவுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே மற்றும் ரஸ்ஸல் அபோன்சு மற்றும் இலங்கை சுங்கம் உட்பட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பற்கேற்றனர்.


ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி
ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி
ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி
Nov 30, 2025 - 09:48 AM
சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone
'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது.
சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
#SrilankaRains #SrilankaFlood #Ditwahcyclone
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு