Aggregator

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

1 month 2 weeks ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்! 29 Nov, 2025 | 12:16 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்கும் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். "டிட்வா" புயலின் விளைவாகத் தொடர்ந்து மோசமான கலாநிலை,வெள்ளம், மண்சரிவு என்பன பதிவாகிவரும் நிலையில் இலங்கையர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள். உயிரிழந்தோருக்காகப் பிரார்த்திப்பதுடன் தொடர் மீட்பு உதவிகளை வழங்கிவருவோருக்கு நன்றி எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231907

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

1 month 2 weeks ago
ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்! 29 Nov, 2025 | 12:09 PM இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231906

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

1 month 2 weeks ago
இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார். https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

1 month 2 weeks ago

இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

25-692aa29bd3afc.webp

'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர்.

இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார்.

https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்

1 month 2 weeks ago
Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்

1 month 2 weeks ago

Courtesy: Rajugaran

மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரும்பி வந்த இராணுவத்தினர் 

இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள் | Mannar Maanthai Eaxtreme Flood 40 Trapped

இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

25-692ad7007840c.webp

25-692ad70122b57.webp

25-692ad701bf0dc.webp

https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்!

1 month 2 weeks ago
29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்!

1 month 2 weeks ago

29 Nov, 2025 | 01:47 PM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய  அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே, சுத்தமான நீரை  பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது.

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk

அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு!

1 month 2 weeks ago
29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk

அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு!

1 month 2 weeks ago

29 Nov, 2025 | 02:51 PM

image

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது.

அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4.jpg


அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

1 month 2 weeks ago
29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. . பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

1 month 2 weeks ago

29 Nov, 2025 | 02:57 PM

image

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம்  மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்  பாதுகாப்பாக  மீட்கப்பட்டு நொச்சிகாமம்  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர  மாவட்ட  செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும்  மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக  மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல மாவட்ட அரச அதிபர்களுடனான  ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி  விடயம்  ஜனாதிபதியின் கவனத்திற்கு  கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின்  செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  .

பல்வேறு நெருக்கடிகள்,  இடர்பாடுகளுக்கு  மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk

நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

1 month 2 weeks ago
வடக்கு - கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு.. வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு நாளாக செயலிழந்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நேற்றிலிருந்து இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன. தற்போதைய நிலைமை.. இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த தொடர்பு சேவைகள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மீண்டும் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/telephone-calls-down-cyclone-ditwah-intensifies-1764424845

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்

1 month 2 weeks ago
குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! 29 Nov, 2025 | 05:24 PM குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்

1 month 2 weeks ago

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு!

29 Nov, 2025 | 05:24 PM

image

குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய  முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk

சீரற்ற வானிலை; நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிப்பு!

1 month 2 weeks ago
வெள்ளம் மற்றும் மண்சரிவு: நாடு முழுவதும் 206 வீதிகள் தடை Nov 29, 2025 - 07:12 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 10 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmikcclsq0265o29nj5tbh7mf

வழமைக்கு திரும்பும் வவுனியா

1 month 2 weeks ago
29 Nov, 2025 | 05:33 PM கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன. இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. நீரில் அகப்பட்டு மரணங்கள் வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய 306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது. வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள் இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது குளங்களின் நிலை இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது. இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது. தொலைத்தொடர்புகள் இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk

வழமைக்கு திரும்பும் வவுனியா

1 month 2 weeks ago

29 Nov, 2025 | 05:33 PM

image

கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன.

இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீரில் அகப்பட்டு மரணங்கள்

வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய  306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்

இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

குளங்களின் நிலை

இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது.

இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து

இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற  காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது.

தொலைத்தொடர்புகள்

இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள்  பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர்.

1000688290__1_.jpg


வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது

1 month 2 weeks ago
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம். 9 Nov, 2025 | 05:31 PM சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார். சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார். அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார். இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது

1 month 2 weeks ago

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்.

9 Nov, 2025 | 05:31 PM

image

சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன்  விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய  மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம்  வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார்.

சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள்  இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு  சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும்  இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு  நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும்  காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார்.

இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது   நீங்கும் எனவும் அதன்  பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk