1 month 2 weeks ago
கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! 28 Nov, 2025 | 05:01 PM இலங்கையில் தற்போதைய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உருவான கடுமையான பாதிப்பு நிலைமையை முன்னிட்டு, இந்திய அரசு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி (INS Udaygiri) ஆகியன இலங்கை கடற்படையின் 75 ஆவது நிறைவு ஆண்டை கொண்டாட கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது பதிவில், “இலங்கையில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பில் தரையிறங்கியுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார். நிவாரணப் பொருட்களில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அவசர மீட்பு உபகரணங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இந்த அவசர உதவி முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் தமது அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை உடனடியாக அனுப்பிவைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக பலர் உயிரிழந்திருப்பதுடன், பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான அனுதாபத்தையும், இக்கடினமான சூழ்நிலையில் இந்தியாவின் உடன்நிற்பையும் வெளிப்படுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 'டித்வா சூறாவளி காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்கிறேன். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் துரித மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'எமது மிகநெருங்கிய அயல்நாட்டுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில் 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை இந்தியா உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. இந்நிலைவரம் தீவிரமடையும் பட்சத்தில் அவசியமான மேலதிக உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 'அயலகத்துக்கு முதலிடம் மற்றும் 'விஷன் மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் பிரகாரம் மிக அவசியமான இத்தருணத்தில் இலங்கையுடன் இந்தியா உடன்நிற்கும் எனவும் பிரதமர் மோடி அப்பதிவில் உறுதியளித்துள்ளார். கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! | Virakesari.lk
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 05:05 PM ( செ.சுபதர்ஷனி) “தித்வா“ சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு, நேற்று கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுபெற்று தற்போது நிலப்பகுதியை ஊடறுத்து வடமேற்கு நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் பொழிந்த கன மழை மற்றும் கடுங்காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றில் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததுடன், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என பலவற்றுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (28) காலை கொழும்பில் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோடமால் தேங்கி வெள்ளம் ஏற்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. காற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட தகரங்கள், வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள், பதாதைகள் என பல பொருட்கள் வீதிகளில் காணக்கிடைத்தன. போக்குவரத்துக்கு தடையாக இருந்த பொருட்களை பொலிஸார், இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அப்புறப்படுத்தியிருந்தனர். அதிகமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் கடவத்தை முதல் கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் வாயில் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க நுழைவாயில் வீதி, எல்விட்டிகள மாவத்த வீதி, ரெஜின வீதி சந்தி, கொட்டாஞ்சேனை மற்றும் பிரேமசிரி கோமதாச மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைபட்டது. வீதிகளில் முறிந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் விழுந்துக் கிடந்த மரங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் மற்றும் இடர் முகாமைத்துவ பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களணி கங்கையை அன்டிய தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. வத்தளை, களணி, வெல்லம்பிட்டி, கொலன்னாவ , சேதுவத்தை, தெமட்டகொடை, நவகம்புர மற்றும் அவிசாவல்லை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவிசாவளையில் உள்ள நீர் மானிப்படி 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. அதனையடுத்து களணி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் களணி கங்கையை அன்மித்த அவதானமிக்க பகுதியிலிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீரற்ற வானிலையால் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Virakesari.lk
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 05:05 PM

( செ.சுபதர்ஷனி)
“தித்வா“ சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு, நேற்று கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுபெற்று தற்போது நிலப்பகுதியை ஊடறுத்து வடமேற்கு நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் பொழிந்த கன மழை மற்றும் கடுங்காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்றில் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததுடன், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என பலவற்றுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை (28) காலை கொழும்பில் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோடமால் தேங்கி வெள்ளம் ஏற்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. காற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட தகரங்கள், வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள், பதாதைகள் என பல பொருட்கள் வீதிகளில் காணக்கிடைத்தன.
போக்குவரத்துக்கு தடையாக இருந்த பொருட்களை பொலிஸார், இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அப்புறப்படுத்தியிருந்தனர். அதிகமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் கடவத்தை முதல் கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் வாயில் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க நுழைவாயில் வீதி, எல்விட்டிகள மாவத்த வீதி, ரெஜின வீதி சந்தி, கொட்டாஞ்சேனை மற்றும் பிரேமசிரி கோமதாச மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைபட்டது. வீதிகளில் முறிந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் விழுந்துக் கிடந்த மரங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் மற்றும் இடர் முகாமைத்துவ பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களணி கங்கையை அன்டிய தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. வத்தளை, களணி, வெல்லம்பிட்டி, கொலன்னாவ , சேதுவத்தை, தெமட்டகொடை, நவகம்புர மற்றும் அவிசாவல்லை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அவிசாவளையில் உள்ள நீர் மானிப்படி 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
அதனையடுத்து களணி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் களணி கங்கையை அன்மித்த அவதானமிக்க பகுதியிலிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சீரற்ற வானிலையால் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Virakesari.lk
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 05:42 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளில் மாத்திம் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். புகையிரத சேவைகள் பாதிப்பு நேற்று காலையில் இருந்து சகல புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதைகளில் மண்மேடு சரிந்து விழல், மரங்கள் முறிந்து விழுதல் தீவிரமடைந்துள்ளதால் பொது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்துள்ளார். மண்சரிவு அபாயத்தினால் மலையகத்துக்கான புகையிரத சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவினால் மலையக புகையிரத பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகளை சீர் செய்து மீள சேவையை ஆரம்பிக்கும் தினத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் கிழக்கு புகையிரத வீதியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரத பொதுகள் விநியோக சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் அவசர அனர்த்த நிலை காரணமாக குருநாகல் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிச் சென்ற புகையிரதம் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அநுதாரபுரம் புகையிரத நிலையத்தில் சுமார் 400 பயணிகள் நேற்று முன்தினம் இரவு இருந்துள்ளதுடன், அநுராதபுரம் நகர சபையின் ஊடாக அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல் குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறுந்தூர புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம் அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் புகையிரத வீதி,மற்றும் வடக்கு புகையிரத வீதிக்கான சகல புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுபயணிகள் பெரும் சௌகரியம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணம் செய்வதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் | Virakesari.lk
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 05:42 PM

(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்து சேவைகள்
இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளில் மாத்திம் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
புகையிரத சேவைகள் பாதிப்பு
நேற்று காலையில் இருந்து சகல புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதைகளில் மண்மேடு சரிந்து விழல், மரங்கள் முறிந்து விழுதல் தீவிரமடைந்துள்ளதால் பொது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயத்தினால் மலையகத்துக்கான புகையிரத சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவினால் மலையக புகையிரத பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகளை சீர் செய்து மீள சேவையை ஆரம்பிக்கும் தினத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் கிழக்கு புகையிரத வீதியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரத பொதுகள் விநியோக சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் அவசர அனர்த்த நிலை காரணமாக குருநாகல் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிச் சென்ற புகையிரதம் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அநுதாரபுரம் புகையிரத நிலையத்தில் சுமார் 400 பயணிகள் நேற்று முன்தினம் இரவு இருந்துள்ளதுடன், அநுராதபுரம் நகர சபையின் ஊடாக அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல் குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறுந்தூர புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம்
அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் புகையிரத வீதி,மற்றும் வடக்கு புகையிரத வீதிக்கான சகல புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொதுபயணிகள் பெரும் சௌகரியம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணம் செய்வதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் | Virakesari.lk
1 month 2 weeks ago
இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு 28 Nov, 2025 | 03:37 PM "இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (28) முற்பகல் முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக தேவைப்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது பரிந்துரைத்ததுடன், அதற்காக முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பணம் தடையல்ல என்று குறிப்பிட்ட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்களைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்ததுடன்,தேவைக்கேற்ப செலவழிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த சுற்றறிக்கையும் அந்த நிதியை செலவிடுவதை தடுக்காது என்றும், அவ்வாறு ஏதேனும் தடைகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுடன் நிதியைச் செலவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நிவாரணக் குழுக்களுக்கு பிரவேசிக்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான ஹெலிகொப்டர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நிவாரண முகாம்களுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும், வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும், வீடுகளுக்கு வெளியே வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தமது மாவட்டங்களில் நிவாரண சேவைகள் கிடைக்காத பகுதிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரினார். மேலும், மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் அபாயகர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/231823
1 month 2 weeks ago
“டித்வா” புயல் - 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கான விசேட அறிக்கை! 28 Nov, 2025 | 05:21 PM டிட்வா புயல் சற்று தீவிரம் பெறுகின்றது.மிகக்கனமழை, வேகமான காற்று வீசுகை மற்றும் கடல்நீர் உட்புகுதல் தொடர்பான எச்சரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ளார். டிட்வா புயலின் வெளி வளையம் வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இன்று இரவு டிட்வா புயலின் மையம் வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது. வெளி வளையம் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும். காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு மிக அதிக நீர் வரத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும். பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள். குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும். மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231854
1 month 2 weeks ago
சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்! 28 Nov, 2025 | 02:52 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திட்வா புயல் காரணமாக முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது. குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. முள்ளிப்பொத்தானை,ஜாமியா நகர்,ஈச்சநகர்,பத்தினிபுரம், புதுக்குடியிருப்பு,கோயிலடி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம்,கோயிலடி பகுதியில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சேர்ந்த 90 பேர்கள் தி/ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத் தங்கல் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் 124 கிராம சேவகர் பிரிவில் இருந்து 5433 குடும்பங்களை சேர்ந்த 16063 நபர்கள் இன்று காலை 11.00 பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231816
1 month 2 weeks ago
இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 தொன் உணவு நன்கொடை! Published By: Digital Desk 1 28 Nov, 2025 | 03:46 PM கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது கையிருப்பில் இருந்து 4.5 தொன் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன், கப்பல் கூடாரங்கள், மின்சார மின்விளக்குகள் மற்றும் மின்னூக்கி கேபிள் கம்பிகள் உள்ளிட்ட இரண்டு தொன் பிற நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் லொரிகளில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231825
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 02:24 PM வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார். 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே, தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர். https://www.virakesari.lk/article/231810
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 02:24 PM

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார்.
தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார்.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.
ஏற்கனவே, தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.
https://www.virakesari.lk/article/231810
1 month 2 weeks ago
2016ஆம் ஆண்டுக்கு பின் மிக மோசமான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! 28 Nov, 2025 | 01:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியீட்டின்படி, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. https://www.virakesari.lk/article/231796
1 month 2 weeks ago
அண்ணை, இன்று தொடக்கம் எமது பகுதியிலும் தொடர்மழை, காற்று வேகமாக வீசி மரங்களை வீழ்த்துகிறது. நாளை வரை இந்த நிலை தொடரலாம். தற்போது கையடக்க தொலைபேசி சேவை இயங்கவில்லை! மின்தடை இல்லை.
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 01:45 PM தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும். மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி மற்றும் What's up இலக்கம்: 070 1222261 https://www.virakesari.lk/article/231805
1 month 2 weeks ago
28 Nov, 2025 | 01:45 PM

தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும்.
மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி மற்றும் What's up இலக்கம்: 070 1222261


https://www.virakesari.lk/article/231805
1 month 2 weeks ago
நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவலையாய் இருக்கிறது . .......! நீங்களும் சிரமம் பாராமல் தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள் .........நன்றி . ......!
1 month 2 weeks ago
சீரற்ற காலநிலையால் யாழில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு - வெளியான நிலவரம் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் காற்றுடன் தொடர்ச்சியான மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது தவிசாளரின் வாகனம் சேதம் மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனின் வாகனம் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் வாகனம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. இன்றையதினம் சேந்தாங்குளம் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக தவிசாளர் அங்கு சென்ற வாகனத்திற்கு மேல் முறிந்து விழுந்துள்ளது. வெள்ள வாய்க்கால் அடைப்பு பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின் வெள்ள வாய்க்கால் மழைகாரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால் வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடக்கலான குழுவினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவாய்க்கால் காணப்படுகிறது. செய்தி - தீபன், கஜிந்தன் https://tamilwin.com/article/746-people-affected-in-jaffna-inclement-weather-1764320991
1 month 2 weeks ago
சீரற்ற வானிலை; பொலிஸின் உதவியை பெற தொலைபேசி இலக்கம்! 28 Nov, 2025 | 01:40 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த நிவாரண உதவிகளை பெறுவதற்கு பொலிஸ் பிரிவின் 071-8591868 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 month 2 weeks ago
சீரற்ற வானிலை ; கிளிநொச்சியில் வெள்ள அபாயம் 28 Nov, 2025 | 01:37 PM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை முதல், இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு அமைந்த பகுதிகளில், வெள்ள பாதிப்புகளை தணிக்க இராணுவத்தின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் நீர் வெள்ளம் ஏற்படும் நிலையில் உள்ளன. அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு, குளத்தின் நீர்மட்டம் அதிகமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயல்படவும் மற்றும் தமது பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231803
1 month 2 weeks ago
மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) மேலும் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் மின் தடைகள் பதிவாகியுள்ளன. 1987 SMS சேவைகள் நேற்று 27 ஆம் திகதி மாலைக்குள், இந்த மின் தடைகளில் சுமார் இருபதாயிரம் மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டதாக சபை சுட்டிக்காட்டுகின்றது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின் தடைகளை மீட்டெடுக்க விரைவாக செயல்பட்டு வருவதாகவும்,நிலவும் மோசமான வானிலை காரணமாக மின் தடைகள் குறித்து அழைப்பு மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, CEB CARE APP மொபைல் பயன்பாடு, Cebcare வலைத்தளம் https://cebcare.ceb.lk/incognito/newcomplain மற்றும் 1987 SMS சேவைகளைப் பயன்படுத்துமாறு மின்சார சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது. https://tamilwin.com/article/urgent-notice-of-electricity-board-1764305998#google_vignette