1 month 2 weeks ago
நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️ 1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன்,சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றது. நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச் சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2022ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 288ஆவது நிர்வாக வருடமாகும். தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் கோயில் 11ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டலில் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடனான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர். அதுமாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வந்தவர். தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார். ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன்,அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன. தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார். அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார். தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது. இவ்வளர்ச்சிப் படிமுறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. ஈடுஇணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது. கட்டடக்கலை வரைபடங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும். கோயில் திருப்பணிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து நிறைவேற்றுவதை எப்பொழுதும் கோயில் நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துபவர்கள். திருப்பணியின் போது பணியாட்கள் பணத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல், பக்தியை முதன்மைப்படுத்தும் பொருட்டும், கோயில் வளர்ச்சியின் பொருட்டும் வேலைக் கட்டுப்பாடு மற்றும் உடைக்கட்டுப்பாடு என்பவற்றில் சில விதிமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள். ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் திருப்பணியின் பொருட்டு முருகனை பக்தியுடன் நினைந்துருகிக் கொடுக்கும் பணத்துக்கும் பொருட்களுக்கும், அடுத்த கணம் முருகப் பெருமான் அதிபதியாகிறான். தனக்குத் தேவைப்படுகின்ற திருப்பணிகளை வருடா வருடம் நிறைவேற்றும் சர்வ வல்லமை நிரம்பியவன் நல்லூர்க் கந்தன். அதனால்தான் அவன் ஆலயத்திற்கு பெருங்கோயில் என்னும் சிறப்புக் கிடைக்கின்றது. பக்தர்கள் பக்தியால் உருகி, முருகனுக்கு நேர்த்தி வைத்துக் கொடுக்கும் ஒரு பொட்டுத் தங்கமும் ஒன்று சேர்க்கப்பட்டு, முருகப் பெருமானுக்கான புதியதோர் நகையாக மாற்றம் பெற்று, அழகனை அலங்கரிக்கும் சிறப்பு நல்லூருக்கு மாத்திரம் உரித்தானது. வருடா வருடம் நடைபெறும் மகோற்சவ காலங்களில் புதிய அழகான நகையுடன் அலங்காரக் கந்தனாக தேருக்கு எழுந்தருளும் அவன் அழகைக் காணும் போது, கொடுத்தவனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் கண்கள் பனித்து, உள்ளம் உருகும். வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், தையல்காரர், கொல்லாசாரியார் என அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்குவார்கள். நல்லூரில் உற்சவங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும், திருவிழாக்களுக்கும் அபிடேகங்களுக்கும் குறைந்த அளவான கட்டணமே உபயகாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஆயினும் அனைத்துத் திருவிழாக்களும் எவ்வித வேறுபாடுமின்றி நடைபெறுவது நல்லூரின் அழகு. கோடீஸ்வரர் செய்யும் திருவிழாக்களுக்கும் ஏழை செய்யும் திருவிழாக்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. பாரம்பரியமும் பழைமையும் மாறாமல் உபயகாரர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை முற்றுமுழுதாக கோயிலே பொறுப்பேற்று நடத்துவது நல்லூருக்கு மட்டும் உரித்தான சிறப்பு. நல்லூர் கோயில் நடைமுறைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புரியும். நல்லூரில் கோடி கோடியாகப் பணம் குவிவது இல்லை. கோயிலில் திருப்பணி உண்டியல் மற்றும் வெளிமண்டப உண்டியல் என இரண்டு உண்டியல்கள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளமையும் இங்குள்ள இன்னுமொரு சிறப்பாகும். ஆகவே ஒரு ரூபா அர்ச்சனையில் இத்தனை பிரமாண்டமான திருப்பணிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் நடைபெறுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு முருகன் மட்டுமே பதில் அறிவான். நல்லூரானை மனதால் நெருங்குவதற்கு ஒரு செங்கல்லோ அல்லது ஒரு ரூபா அர்ச்சனையோ போதுமானது. கோயில் வளாகத்தில் அமைந்திருந்த வணிக நிலையங்ளையும் வியாபார நிறுவனங்களையும் 1980 களில் அகற்றி, நல்லூரைச் சுற்றி மிகவும் பிரமாண்ட மணற்பரப்பு வெளி உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த காலப்பகுதியில் கோயில் உள்வீதி சிறிது சிறிதாகப் பெருப்பிக்கப்பட்டது. அத்திருப்பணிகளின் போது உள்வீதியின் அமைப்பானது, கோயிலின் ஏனைய கட்டடங்களுக்கும் மண்டபங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உருவாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் இருந்து நேரெதிரில் வெளிவீதியை நோக்கியதாக கோயிலுக்கான வாசல் ஒன்று அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் ஏற்பட்ட சீமெந்துத் தட்டுப்பாட்டின்போதும் திருப்பணிகள் நடந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டு அரசு வீதியின் காணிக்குப் பதிலாக கேணித்திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாறியது. 2008 ஆம் ஆண்டு சுற்றுக் கோயில்களுக்கு தனித் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டதுடன், சபைகள் அமைக்கப்பட்டு, கோயில்கள் உலோகத் தகட்டால் வேய்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டு சண்முகருக்கான இராஜகோபுரத் திருப்பணி நவதானியம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு இந்திய பேரரசர்கள் கட்டிய பெருந்திருப்பணிக்கு ஒப்பான நல்லூர் இராஜகோபுரக் குடமுழுக்கு இடம்பெற்றது. முருகன் பார்வை நல்லவற்றில் முடிய வேண்டும் என்பதற்காக சண்முகருக்கு எதிரில் அமைந்திருந்த கோயில் பூந்தோட்டத்தில் அருணகிரிநாதர் ஸ்தாபிக்கப்பட்டார். தெற்கில் அமைக்கப்பட்ட கோபுரத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு வடக்கில் ஒரு கோபுரம் கட்டப்பட்டு, திருப்பணி நிறைவேற்றப்பட்டது. உமாச்சந்திரா பிரகாஷ்., Babu Babugi
1 month 2 weeks ago

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1441507
1 month 2 weeks ago
இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை! யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் (01) சென்றிருந்தார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் , தொழிலுக்கு மீனவர்கள் செல்வதற்கும் இடர்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்றையதினம் மைலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது அவர் கண்காணிப்பு விடயத்தில் ஆராய்ந்தார். குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக இதன்போது மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர். மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் என்பது இலங்கை துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம். 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கினை வகித்தது. ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1441521
1 month 2 weeks ago

இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை!
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் (01) சென்றிருந்தார்.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் , தொழிலுக்கு மீனவர்கள் செல்வதற்கும் இடர்களை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்றையதினம் மைலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது அவர் கண்காணிப்பு விடயத்தில் ஆராய்ந்தார்.
குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக இதன்போது மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர்.
மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் என்பது இலங்கை துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம்.
1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கினை வகித்தது.
ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது.
இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2025/1441521
1 month 2 weeks ago
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை மக்கள் அடையாளம் காண நடவடிக்கை! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 05ஆம் திகதி மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இதேவேளை, செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்குவதுடன் இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் இன்று (02) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441532
1 month 2 weeks ago
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்! உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார். ஃபாக்ஸ் ரேடியோவுக்கு அளித்த செவ்வியில் அவர், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நிதியளிக்க உதவும் வகையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி விரக்தியடைந்துள்ளார். இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும். மேலும் ரஷ்ய எண்ணெய் அனுமதிக்கப்பட்டதாகவும் மலிவாகவும் இருப்பதால் இந்தியா ரஷ்யாவிலிருந்து அதை வாங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் இந்த நடவடிக்கை உக்ரேன் மீதான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது. எனவே இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு புள்ளியாகும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1441427
1 month 2 weeks ago

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைதி விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1441497
1 month 2 weeks ago
எனக்கொரு சந்தேகம். லலித், குகன் கொலைக்கு டக்கிலஸை பயன்படுத்தியிருக்கலாம் புலனாய்வுக்குழு. மாறி மாறி வந்த முன்னாள் அரசியல்வாதிகள் கொலை கொள்ளைகளை வளர்த்து இராணுவ போலீஸ் துறையை தமது பாதுகாப்பிற்க்கு அரணாக உருவாக்கியுள்ளனர்.இந்த துறைகளில் சுத்தமானவர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கோத்தாவும் நாட்டை விட்டு தப்பியோட வேண்டி வந்தது. அனுரா அரசியலில் வீரம் இருந்தாலும் இந்த நரிகளை சமாளிப்பதற்கு அனுபவம், செல்வாக்கு காணாது. உடனடியாக இவர்களில் கை வைக்க முடியாது. சாட்சிகள், தாங்கள் யார் அதிகாரத்தால் இப்படி நடந்து கொண்டோமென மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், மக்களே இவர்களுக்கு நிரந்தர தீர்ப்பெழுத வேண்டும். இல்லையேல் இவர்களை ஐ .நா.வில் கையளிக்க வேண்டும். அதை அனுரா செய்ய மாட்டார். மக்கள் ஒரு நாள் செய்வார்கள். எங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையிலும் வறுமையிலும் முதுமையிலும் வாடுவதுபோல் அதற்கு காரணமான இவர்களும் தவிக்க வேண்டும், தவிப்பார்கள் விதி வலிமையானது.
1 month 2 weeks ago
ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!