1 month 2 weeks ago
வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! 27 Nov, 2025 | 07:05 PM வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பலர் இடம்பெயரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக நீர் வான்பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகைதந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெயரும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்து நடைமுறைகள் தடைப்பட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண்மூடைகளை நிரப்பி பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! | Virakesari.lk
1 month 2 weeks ago
27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் | Virakesari.lk
1 month 2 weeks ago
முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள் பாதுகாப்பாக மீட்பு! 27 Nov, 2025 | 03:56 PM முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள், கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு நேற்று புதன்கிழமை இரவு (26) காவல் பணிக்குச் சென்றிருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பிற்பகல் 2.30 மணியளவில் கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் சேர்ந்துகொண்டு ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அந்த 16 விவசாயிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்புக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனரென முல்லைத்தீவு மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/231660
1 month 2 weeks ago
திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை, ஜனாதிபதி அவசர சந்திப்பு - என்ன நிலவரம்? பட மூலாதாரம், KRISHANTHAN கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 27 நவம்பர் 2025, 11:28 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.) இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஐந்து பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. எந்தெந்த பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன? ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, லுணுகல, பஸ்ஸர, கந்தேகெட்டிய, ஊவா பரணகம, சோரணாதொட்டை, எல்ல ஆகிய பகுதிகளில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கடுவன பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட மூலாதாரம்,DINESH VADIVEL பட மூலாதாரம்,DINESH VADIVEL சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள இப்பாகமுவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலபனை பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதேவேளையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 பேர் காணாமல் போயுள்ளனர். பட மூலாதாரம்,KRISHANTHAN மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் கொழும்பு - அவிசாவளை ரயில் மார்க்கத்தில் கற்கள் சரிந்து மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை - கல்கெட்டியாவ வீதியிலுள்ள பாலமொன்று வெள்ளத்தால் உடைந்துள்ளது. அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பகுதியிலுள்ள 40 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது. வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையால் நெடுங்கேணி மருத்துவமனை நீரில் மூழ்கியுள்ளது. வவுனியாவின் தென் பகுதியிலுள்ள ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 6 பேர் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DINESH VADIVEL பதுளை மாவட்டத்தின் வெலிமடை பகுதியில் மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அந்தந்த வீடுகளில் இருந்த அனைவரும் போலீஸாரினால் காப்பற்றப்பட்டுள்ளனர். பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸரை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தின் மனம்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மலையகத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதன்படி, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,DINESH VADIVEL அதிகளவான மழை வீழ்ச்சி எங்கு பதிவானது? பட மூலாதாரம்,DINESH VADIVEL கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றூகம பகுதியிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, றூகம பகுதியில் 300.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,DMC SRI LANKA தேர்வுகள் ஒத்திவைப்பு இலங்கையின் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள பரீட்சைகளை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நவம்பர் 27 முதல் 29 வரையிலான தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் பரீட்சைகள் வழமை போன்று நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், PMD படக்குறிப்பு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல் ஜனாதிபதி அவசர சந்திப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கூட்டமொன்றை நடத்தினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அவசரக்கால நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதோடு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் உடனடியாகத் தலையிடுமாறும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdn814lg8o
1 month 2 weeks ago
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து! தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன், “ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று” என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்தன , போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததது, காணி அபகரிப்புக்களும் இல்லை, எனவே, தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது, நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலாவக்கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்றுப் பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகுவை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர். அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று (நேற்று) பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகுவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2025/1453959
1 month 2 weeks ago
அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டில் சும்மா இருந்தான். ஆனால் அவன் தாய் இறந்ததும், அவனுக்கு “ஒரு வேலை” கிடைத்துவிட்டது. அது, தனது தாயைப் போல வேடமிட்டு வாழும் வேலை. வேசம் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும்? ஒருநாள் அது கலைந்து உண்மை வெளிவராமல் இருக்காது. 56 வயது மதிக்கத்தக்க அவன், தனது 82 வயதான தாய் இறந்தபின், அவரது உடலை மம்மி போல ஒரு sleeping bagஇல் சுற்றி வீட்டிலேயே மறைத்து வைத்தான். பின்னர் தாயைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மாதந்தோறும் அவனது தாயின் ஓய்வூதியத்தையும் வருமானங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான். மூன்று வீடுகளின் உரிமையாளரான தாயின் பெயரில் வருடத்துக்கு சுமார் 60,000 யூரோ வருமானம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது தாயின் அடையாள அட்டையை அரச அலுவலகத்தில் புதுப்பிக்கப் போனபோது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தப்பித்துவிட்டான். ஆனால் ஒரு விற்பனை நிலையத்தில். ஒரு ஊழியரின் கழுகுக் கண்களுக்குள் மாட்டிக் கொண்டான். தடித்த கழுத்து, குரல், ஆண் உடலமைப்பு,எதுவும் பெண்ணை ஒத்திருக்காததால், ஊழியர் அவன் வேஷத்தை உடனே சந்தேகித்தார். போலீசார் அவன் வீட்டை சோதனை செய்ய வந்தபோது அவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தற்போது அவன் மீது ஆள்மாறாட்டம் செய்தது, உடலை மறைத்து வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.