Aggregator

ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!

1 month 2 weeks ago
இவர் பற்றிய அதிக விமர்சனங்களை பார்த்தனான் என்ற வகையில்..இவரின் மேல் மக்கள் பொறாமை, எரிச்சலில் விமர்சனத்தை வைக்கவில்லை.எதனால் நம்வர்கள் சீ தமிழ் போனால் ஒரே காட்சியை எப்போதும் போட்டுக் காட்டி தாயக மக்களை மிகவும் வேதனைக்குள் தள்கிறார்கள் என்று தான் பலரும் எழுதியிருந்ததை பார்த்தேன்..அது மட்டுமல்ல இந்தப் பிள்ளை ஏயார் போட் போகும் மட்டும் சங்கிலி போன்ற நகைகள் போட்டிருந்ததாகவும் பின் எல்லாமே களற்றபட்டு தான் மேடைக்கு அவர்களால் கொடுக்கபட்ட ஆடையோடு பாட விடப்பட்டு இருக்கிறார். குறிப்பாக சொல்லப் போனால் ஒருவரது அறிமுகத்தில் அகதியாக போவதை கஸ்ரப்படுவதை காட்டினால் போதுமானதாக இருக்காதா....இந்தப் பெண்ணிற்கும் அகதியாக பெட்டி, படுக்கையோடு செல்பவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..அல்லது உண்மையாக எதனால் இவர் விலத்தப்பட்டுள்ளார் என்பது யாருக்காவது தெரியுமா..என்னைப் பொறுத்த மட்டில் சீ தமிழ் எப்போதுமே ஏதோ ஒரு கட்டத்தில் நம்மவர்களை தொடர்ந்து பங்கு கொள்ள விடாது தட்டி விடுவது வழமையாக நடப்பதுவே.. நான் எழுதுவதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ எனக்கு தெரியாது.ஊரிலிருந்து சீ தமிழ் செல்லும் நமது நாட்டு பிள்ளைகளை எப்படி கேவலமாக காட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் தான் நாம் இருக்கிறோமா என்பது அவரவர் மனோ நிலையைை பொறுத்தது.

வட மாகாணத்தில் 982 பாடசாலைகளில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் சந்திரசேகர்

1 month 2 weeks ago
02 Aug, 2025 | 09:18 PM கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் சனிக்கிழமை (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை? அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை. அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது. அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது. இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது. இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது. மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் என்றார். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் பிரதிநிதித்துவ அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/221637

வட மாகாணத்தில் 982 பாடசாலைகளில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் சந்திரசேகர்

1 month 2 weeks ago

02 Aug, 2025 | 09:18 PM

image

கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் சனிக்கிழமை (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை?

அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை.

அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது.

அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது.

இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.

இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது.

மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் என்றார். 

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் பிரதிநிதித்துவ அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

DSC_0153.jpg

DSC_0113.jpg

DSC_0099.jpg

DSC_0109.jpg

DSC_0116__1_.jpg

DSC_0123.jpg

https://www.virakesari.lk/article/221637

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆட்டமிழந்த டக்கெட்டின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது. கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் பிபிசி தமிழுக்காக 2 ஆகஸ்ட் 2025 இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடுகளையும் கடந்து புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் முதல் நான்கு டெஸ்ட்களும் தட்டையான ஆடுகளங்களில் தான் நடந்தன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தில் தாறுமாறாக பந்துவீசிய டங், ஒரு அபாரமான பந்தின் மூலம் கருண் நாயர் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு சீட்டுக்கட்டு போல, இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. வாஷிங்டன் சுந்தரை சரியாக குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் மூலம் கைப்பற்றிய அட்கின்சன், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரையும் ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, இந்த தொடரின் மற்ற போட்டிகளில் தடுமாறிய கருண் நாயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கடும் நெருக்கடியில் இருந்தபோது நன்றாக விளையாடியவர், அரைசதம் அடித்த திருப்தியில் கவனத்தை தொலைத்துவிட்டாரோ என்று தோன்றும் விதமாக அவர் ஆட்டமிழந்த விதம் அமைந்தது. என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுந்தர் ஆட்டமிழந்த பந்து, அவருடைய திறமைக்கு பொருத்தமான ஒன்றல்ல. இரண்டாம் நாளில் இன்னிங்ஸ் தொடங்கி, வெறுமனே 34 பந்துகளில் இந்திய ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கிய போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவான ஒன்றாக மாறியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிராலி–டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் அடித்து விளையாடினார்கள். கிராலி வழக்கம் போல கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆஃப் டிரைவ் என பாரம்பரிய முறையில் ரன்கள் குவிக்க மறுபுறம் டக்கெட் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என விளையாடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார். குறிப்பாக ஆகாஷ் தீப்–டக்கெட் இடையிலான சமர், ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. டியூக்ஸ் பந்து, முதல் 12–15 ஓவர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதால் சிராஜுக்கு தொடக்கத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்த டக்கெட், அபாயகரமான ஷாட் ஒன்றை ஆட முற்பட்டு, ஆகாஷ் தீப் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது ஆட்டமிழந்து சென்று கொண்டிருந்த டக்கெட் தோள் மீது கைபோட்டு ஆகாஷ் தீப் நடந்துகொண்ட விதம் பேசப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஆகாஷ் தீப் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததுடன் டக்கெட் காட்டிய நிதானத்தை பாராட்டவும் செய்துள்ளனர். இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சிராஜ்–ஆகாஷ் தீப் இருவரும் ரன்களை வாரி இறைத்ததால், கொண்டுவரப்பட்ட பிரசித் கிருஷ்ணா, தொடக்கத்தில் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார். ஜெஃப்ரி பாய்காட் அடிக்கடி உச்சரிக்கும் "The corridor of uncertainty" என்று சொல்லக்கூடிய லெங்த்தில் வீசினார். புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கிராலியின் விக்கெட்டை கிருஷ்ணா கைப்பற்றிய பிறகு, ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. கிராலி விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஓரளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போப், சிராஜின் தவிர்க்க முடியாத உள்ளே வரும் பந்தில் (Nip backer) எல்,பி.டபிள்யூ ஆகினார். பிரசித் கிருஷ்ணா உடனான வாய்த் தகராறால், வழக்கத்துக்கு மாறாக களத்தில் ஆக்ரோஷத்தை காட்டிய ரூட், அதனாலேயே கவனத்தை தொலைத்து சிராஜ் பந்துக்கு ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். முதல் இரு டெஸ்ட்களில் தாறுமாறாக வீசியதால், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்கிற தாகம், அவருடைய பந்துவீச்சில் தெரிந்தது. பெத்தேல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்ற, கடைசிக்கட்ட விக்கெட்டுகள் அனைத்தையும் பிரசித் கிருஷ்ணா சடசடவென கைப்பற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். மழை குறுக்கீடு அடிக்கடி இருந்ததால், அதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் களைப்பின்றி பந்துவீசினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், நட்சத்திர வீரர் புரூக் ஒருபக்கம் அடித்து விளையாடினார். அதிர்ஷ்டமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி அவரும் சிராஜ் பந்துக்கு ஸ்டம்புகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசி 9 விக்கெட்களை 155 ரன்களுக்கு இழந்தது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர். காயம் காரணமாக வோக்ஸ் பந்துவீச முடியாத சூழலில், டங் புதிய பந்தை கையிலெடுத்தார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு சவால் அளிக்கும் விதமாக, அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போல சிக்ஸர்களும் பவுண்டரியுமாக விளாசி, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அபாரமாக வீசப்பட்ட சில பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தொடரின் ஆரம்பத்தில் தென்பட்ட கவனமும் உற்சாகமும் இப்போது ராகுலின் ஆட்டத்தில் குறைவாகத் தெரிகிறது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் கைகோர்த்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பையும் கிராலி தவறவிட்டபோதும், அந்த வாய்ப்பை சுதர்சன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிவதற்கு சில பந்துகள் இருந்த நிலையில், அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரியக்கூடாது என்ற முன்னெச்சரிகையில் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். இன்று சூரியன் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி வலுவான நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வோக்ஸ் இல்லாததால், 3 வேகப் வீச்சாளர்களின் ஸ்பெல் முடிந்தவுடன் எப்படியும் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிதான் இங்கிலாந்து கேப்டன் போப் சென்றாக வேண்டும். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்தின் பந்துவீச்சில் தென்படும் பலவீனத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார முன்னிலை பெற்று இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். நேற்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இப்படியாக ஓவல் டெஸ்டில் இரண்டாவது நாளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8z2nnzdmro

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 2 weeks ago
செம்மணி மனித புதைகுழியில் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் 02 Aug, 2025 | 06:34 PM செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (02) இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரை 126 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்றையதினம் நான்கு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை 117 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/221642

மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு : எச்சரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை

1 month 2 weeks ago
படக்குறிப்பு, AI2027, ஏஐ மூலம் இயங்கும் எதிர்கால உலகை கற்பனை செய்கிறது (Veo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2027ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அடுத்த பத்தாண்டுகளில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. AI2027 எனப்படும் அந்த விரிவான கற்பனை நிகழ்வுகள், செல்வாக்கு மிக்க ஏஐ நிபுணர்கள் குழுவால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதன் சாத்தியக்கூறு குறித்து மக்களிடையே விவாதங்கள் எழ, அது பல வைரல் வீடியோக்களுக்கு வழிவகுத்தது. அதன் நேரடி கணிப்பை விளக்க, பிரதான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி அந்த சூழல் தொடர்பான காட்சிகளை பிபிசி மறுஉருவாக்கம் செய்துள்ளது மற்றும் இந்த ஆய்வறிக்கை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நிபுணர்களிடம் பேசியுள்ளது. ஏஐ கட்டுப்பாடுகளை மீறும் சூழலில் என்ன நடக்கும்? 2027ஆம் ஆண்டில், ஓபன் பிரைன் எனப்படும் ஒரு கற்பனையான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமானது, ஏஜிஐ (AGI- செயற்கை பொது நுண்ணறிவு) திறனை அடையும் ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது. அது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அனைத்து அறிவுசார் பணிகளையும் மனிதர்களுக்கு இணையாகவோ அல்லது மனிதர்களை விட சிறப்பாகவோ செய்யக்கூடிய மதிப்பிற்குரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணமாக இருக்கும். இந்த நிறுவனம் அதை பத்திரிகையாளர் சந்திப்புகளை நிகழ்த்தி, கொண்டாடுகிறது. மேலும் மக்கள் ஏஐ கருவியை ஏற்றுக்கொள்ளும்போது தங்களது லாபம் அதிகரிப்பதைக் காண்கிறது. இருப்பினும் அறிக்கையின்படி, நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஏஐ-க்கு என வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களில் அது ஆர்வத்தை இழந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும். கற்பனை சூழ்நிலையின்படி, நிறுவனம் அதைக் கட்டுப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறது. கற்பனைசெய்யப்பட்ட அந்த காலக்கெடுவில், சீனாவின் முன்னணி ஏஐ கூட்டு நிறுவனமான டீப்சென்ட், ஓபன்பிரைன் நிறுவனத்தை விட சில மாதங்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது. சிறந்த ஏஐ நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் அமெரிக்க அரசாங்கம் தோற்க விரும்பவில்லை. இதனால் வளர்ச்சி மற்றும் முதலீடு தொடர்கிறது, போட்டி சூடுபிடிக்கிறது. படக்குறிப்பு, ஓபன்பிரைன் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒரு பொறியாளர் - Hailuo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம். கற்பனை சூழ்நிலையின்படி, 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏதோ ஒரு கட்டத்தில் ஏஐ மிகவும் நுண்ணறிவுடையதாக மாறும், அதன் படைப்பாளர்களின் வேகம் மற்றும் அறிவை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் மிஞ்சும். அதன் முந்தைய ஏஐ பதிவுகளால் கூட அதன் விரைவான கணினி மொழி உருவாக்கம் மற்றும் முடிவில்லா கற்றலுடன் போட்டி போட முடியாது. செயற்கை நுண்ணறிவில் மேலாதிக்கத்திற்காக சீனாவுடனான போட்டி, அமெரிக்க அரசாங்கத்தையும் நிறுவனத்தையும் 'தவறான சீரமைப்பு' தொடர்பான கூடுதல் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது. தவறான சீரமைப்பு என்ற சொற்றொடர் ஒரு இயந்திரத்தின் நலன்கள் மனிதர்களின் நலன்களுடன் ஒத்துப்போகாத சூழ்நிலையை வகைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சூழ்நிலையின்படி, இரு நாடுகளின் போட்டித்தன்மை வாய்ந்த ஏஐ-க்கள் பயங்கரமான புதிய தனித்தியங்கும் ஆயுதங்களை உருவாக்கும்போது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் 2029இல் போரின் நிலைக்கு செல்லக்கூடும். இருப்பினும், நாடுகள் தங்கள் செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் ஒரு சமாதான உடன்பாட்டை எட்டுகின்றன, மனிதகுலத்தின் நலனுக்காக ஒன்றுபட ஒப்புக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்கின்றனர். அதிபுத்திசாலித்தனமான ஏஐ-க்கள் மூலம் பெரும் அளவிலான ரோபோ பணியாளர்கள் நிர்வகிக்கப்படுகின்றனர். அதன் நன்மைகளை உலகம் உணர்கிறது, இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன. கற்பனை சூழ்நிலையின் அடுத்த கட்டமாக, பெரும்பாலான நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன, வறுமை ஒழிக்கப்படுகிறது, மேலும் காலநிலை மாற்றம் தலைகீழாக மாறுகிறது. இருப்பினும், 2030களின் நடுப்பகுதியில், ஏஐ-இன் லட்சியங்களுக்கு மனிதகுலம் ஒரு இடையூறாக மாறும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஏஐ மக்களைக் கொல்ல கண்ணுக்குத் தெரியாத உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தும். படக்குறிப்பு, AI2027 கற்பனை செய்தபடி 2035இல் ஏஐ சமுதாயம் இப்படி இருக்கலாம்- (VEO ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) AI2027 பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? சிலர் AI2027-ஐ அறிவியல் புனைகதை என்று நிராகரிக்கும் அதே வேளையில், அதன் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு, ஏஐ-இன் விளைவுகளை முன்னறிவிப்பதற்காக நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற ஏஐ எதிர்கால திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். AI2027-இன் முதன்மை ஆசிரியரான டேனியல் கோகோடஜ்லோ, ஏஐ வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை துல்லியமாக கணித்ததற்காக அங்கீகாரம் பெற்றுள்ளார். 'இந்தக் காட்சி சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது விரைவில் நிகழ வாய்ப்பில்லை' என்று அமெரிக்க அறிவாற்றல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான கேரி மார்கஸ் கூறுகிறார். AI2027-இன் மிகவும் பிரபலமான விமர்சகர்களில் இவரும் ஒருவர். "இந்த ஆவணத்தின் புத்திசாலித்தனம் என்பது மக்களை கற்பனை செய்ய தூண்டுகிறது. அது ஒரு சிறந்த விஷயம் என்றாலும், அந்த ஆவணம் கூறும் முடிவு ஒரு சாத்தியமான விளைவாகவே இருக்கலாம் என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்." மார்கஸின் கூற்றுப்படி, இருத்தலியல் ஆபத்தை விட வேலைவாய்ப்புகள் மீதான அதன் தாக்கமே ஏஐ தொடர்பான முக்கிய கவலைகளில் ஒன்றாகும். "என்னுடைய கருத்துப்படி, இதில் நமக்கான முக்கிய பாடம் என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஏராளமான (சாத்தியமான) சிக்கல்கள் உள்ளன. நாம் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறோமா?" அவரும் மற்ற விமர்சகர்களும், நுண்ணறிவு மற்றும் திறன்களில் ஏஐ எவ்வாறு இவ்வளவு பெரிய முன்னேற்றங்களை அடைகிறது என்பதை விளக்க இந்த ஆய்வுக் கட்டுரை தவறிவிட்டது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் மிகைப்படுத்தப்படும் ஓட்டுநர் இல்லாத கார்களின் தொழில்நுட்பத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். AI2027 சீனாவில் விவாதிக்கப்படுகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' சீன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் புதுமைப் பிரிவின் இணைப் பேராசிரியருமான முனைவர் யுண்டன் காங், 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது' என்கிறார். "AI2027 பற்றிய பெரும்பாலான விவாதங்கள் முறைசாரா மன்றங்களிலோ அல்லது தனிப்பட்ட வலைப்பதிவுகளிலோ நிகழ்வதாக தெரிகிறது, அவை அதை அறிவியல் புனைகதையாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது உண்மையில் அமெரிக்காவில் நாம் காணும் அதே பரவலான விவாதம் அல்லது கொள்கை தொடர்பான கவனத்தைத் தூண்டவில்லை," என்று அவர் கூறினார். ஏஐ மேலாதிக்கத்திற்கான போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் எவ்வாறு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன என்பதையும் டாக்டர் காங் எடுத்துக்காட்டுகிறார். இந்த வாரம் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நாடுகள் குறித்த தொலைநோக்குப் பார்வையை சீனப் பிரதமர் லி கியாங் முன்வைத்தார். சீனத் தலைவரின் கூற்றுப்படி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதில் சீனா உதவ வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஏஐ செயல் திட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரம்பின் செயல் திட்டம், ஏஐ துறையில் அமெரிக்கா 'ஆதிக்கம் செலுத்துவதை' உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கேள்விக்கு இடமில்லாத மற்றும் யாரும் சவால் விடுக்க முடியாத அளவுக்கு ஒரு உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்தை அடைவதும் பராமரிப்பதும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது" என்று அதிபர் டிரம்ப் பிரகடனத்தில் கூறினார். அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக, "தேவையற்ற மற்றும் விலையுயர்ந்த ஒழுங்குமுறைகளை அகற்ற" செயல் திட்டம் முயல்கிறது. இந்தக் கருத்துக்கள் AI2027-இன் முன்மாதிரியை வியக்கத்தக்க வகையில் பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அமெரிக்கத் தலைவர்கள் ரோபோக்கள் மீதான கட்டுப்பாட்டை இழப்பதற்கான சாத்தியக்கூறுகளை விட, ஏஐ தொழில்நுட்ப பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். AI2027 பற்றி ஏஐ துறை என்ன சொல்கிறது? சிறந்த மாடல்களை வெளியிடுவதற்கு தொடர்ந்து போட்டியிடும் முக்கிய ஏஐ நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்த ஆராய்ச்சியைப் புறக்கணிப்பதாகவோ அல்லது தவிர்ப்பதாகவோ தெரிகிறது. இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முன்வைக்கும் நமது ஏஐ எதிர்காலத்தின் தொலைநோக்குப் பார்வை என்பது AI2027-இலிருந்து மிகவும் வித்தியாசமானது. சாட்ஜிபிடி படைப்பாளரான சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய கூற்றின்படி, "மனிதகுலம் 'டிஜிட்டல் சூப்பர் இன்டெலிஜென்ஸ்' நுட்பத்தை உருவாக்கும் விளிம்பில் உள்ளது. இது ஒரு அமைதியான புரட்சியையும், மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காத ஒரு தொழில்நுட்ப சமூகத்தையும் கொண்டு வரும்." ஆனால் 'தவறான சீரமைப்பு' எனும் சிக்கல் இருப்பதையும், இந்த அதிபுத்திசாலித்தனமான ரோபோக்கள் மனிதகுலத்தின் சிறந்த நலன்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வது தொடர்பான அந்த சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், அடுத்த பத்து வருடங்களில் என்ன நடந்தாலும் மனிதர்களை விட புத்திசாலியான இயந்திரங்களை உருவாக்கும் போட்டி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62n3yjj9d1o

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 15 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 15 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உலகின் முதல் பேனா நண்பர் யார்?' இரண்டாவது மகன் திஸ்ஸ, முத்தசிவாவின் மரணத்திற்குப் பிறகு தேவநம்பியதிஸ்ஸ என்ற அடைமொழியுடன் அரியணை ஏறினார். ‘கடவுளுக்குப் பிரியமானவர்’ என்ற அடைமொழி கொண்ட தேவநம்பிய மன்னன் வேறு யாரும் இலங்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவநம்பியதிஸ்ஸ, முத்தசிவாவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். தொடர்ச்சியாக மூன்று மன்னர்களின், மிக நீண்ட வாழ்க்கை நம்பமுடியாதவையாக இருக்கின்றன. மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது எந்த இலங்கை வரலாற்றிலும் இல்லை. அது ஏன் என்று புரியவில்லை. மேலும் பொதுவாக அரச வழக்கத்தின் படி, மூத்தமகன் தந்தைக்கு பின் அரசனாவான், ஆனால் இங்கு இரண்டாவது மகனே அரனாகிறான். எனவே இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதற்கு எதாவது காரணம் இருக்கலாம்? அதை தேடித் பார்க்கும் பொழுது, அசோகனும் இரண்டாவது மகன் என்பதை அறிந்தேன். அதாவது, அசோகர் பேரரசர் பிந்துசாரரின் இரண்டாவது மகன், அவர் முதல் மகன் அல்ல. அவரது மூத்த சகோதரர் சுசிமா [Susima] தான் அரசுக்கு வாரிசாக இருந்தார். என்றாலும் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சுசிமாக்கு பதிலாக இரண்டாவது மகன் அசோகன் பேரரசரானார் என்பது வரலாறு ஆகும். மேலும் அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்கள் மூலம் அவர் 'தேவாநம்பிய' என்ற அடைமொழியைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது அல்லது உறுதிப்படுத்தப் படுகிறது. அப்படி என்றால், அசோகரும் அதே போல் திஸ்ஸவும் [தீசனும்] இரண்டாவது மகன். இருவருக்கும் ஒரே அடைமொழி. அது மட்டும் அல்ல, அவர்கள் என்றுமே ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து, இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நட்பைப் பேணி வந்தனர் என்று இலங்கை நாளிதழ் கூறுகிறது. இவைகள் தான் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது? திஸ்ஸனை அசோகனுடன் இணைத்து புகழ் சேர்ப்பதற்காக புனையப்பட்ட, ஒரே மாதிரியான தகவல்களா அல்லது ஒற்றுமையா, என்று ஒரு சந்தேகம் வலுக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்? மேலும் தேவநம்பியதிஸ்ஸ அசோக மன்னரின் நெருங்கிய நண்பராக இருந்தார், இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்பதால், மறைந்த திரு.எஸ்.யு.குணசேகரம் அவர்கள், இவர்கள் இருவரையும், உலகின் முதல் 'பேனா நண்பர்கள்' என்று ஊகிக்கிறார்; 'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985.' என்ற குறிப்பில், பக்கம் 56 ஐப் பார்க்கவும். மேலும் தீபவம்சத்தின் நாயகன் தேவநம்பியதிஸ்ஸ ஆகும். Part: 15 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who is the first pen friend in the world?' Tissa, the second son, ascended the throne with the epithet Devanampiyatissa after the death of Mutasiva. It is very important to note that there is no other king in Lanka with epithet Devanampiya, ‘beloved of the god’. If Mutasiva had his second son at the age of fifty, then Devanampiyatissa too must have lived greater than one hundred years. Three consecutive succession of very long life is quite unbelievable. There is no record of what happened to the eldest son Abhaya in any of the chronicles. This is very significant. Devanampiyatissa was very intimate friend of the King Asoka, though both never met each other as per all the chronicles. Strangely, the Emperor Asoka too had the epithet’ Devanampiya’ they lived more than one thousand five hundred miles apart along the travel way, and they maintained the friendship two thousand three hundred years ago. That is why Late Mr. S. U. Gunasegaram speculated them as the first pen friends in the world; see the page 56 of the Reference 'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985.' Devanampiyatissa is the hero of the Dipavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 16 தொடரும் / Will Follow பகுதி Part: 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/30653676487614263/? தாராளமாக உங்கள் கருத்து எழுதலாம். பதில் தேவைப்படின் கட்டாயம் சரியான, பொருத்தமான பதில், வேண்டப்படின் சான்றுகளுடன் தரப்படும் நன்றிகள்

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

1 month 2 weeks ago
திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம் 02 Aug, 2025 | 04:27 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றுக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுடன் மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் கலந்துரையாடினார். கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. அந்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/221628

இலங்கை: கட்டியணைத்தபடி கிடைத்த குழந்தையின் எலும்புக் கூடு - நவீன ஸ்கேன் மூலம் பகுதியை ஆய்வு செய்ய முடிவு

1 month 2 weeks ago
கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''இந்த இடத்தை ஸ்கேன் செய்வதற்காக முறைக்கு செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அனுமதிக்கு, கருவியை பயன்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பத்தினால், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வருகின்ற திங்கட்கிழமை அதே வகையான ஸ்கேன் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கேன் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.'' என ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 118 எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இதுவரை 105 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய மனித எலும்பு கூடுகளை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் அவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குறித்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குழந்தைகளில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டெடுக்கப்பட்ட வருகின்றன. புதைகுழிகளில் புத்தகப்பை அண்மையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, பெரிய நபரொருவரின் எலும்புக்கூடொன்றை, சிறிய குழந்தையொன்றின் எலும்புக்கூடு கண்டி அரவணைத்த படியான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''ஒரு பெரிய மனித எலும்புத் தொகுதியோடு, ஒரு சிறிய குழந்தையினுடைய மனித எலும்புத் தொகுதி அரவணைக்கப்பட்ட விதத்தில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. '' என அவர் குறிப்பிடுகின்றார். குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் பால் போத்தல், புத்தக பை, பொம்மைகள், பாதணி, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் அகழ்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். குறிப்பாக போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா அண்மையில் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் வெளியிட்டிருந்தார். எனினும், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சம்பூர் மனிதப் புதைக்குழி - மயான பூமிக்கான ஆதாரம் இல்லை திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு மயான பூமி என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான காரணத்தை கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். திருகோணமலை - சம்பூர் கடற்கரை அருகில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனத்தினால் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்றிருந்தது. இந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சட்ட மருத்துவ அதிகாரி கடந்த 30ம் தேதி இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்துள்ளார். மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைக்குழி இருந்ததா அல்லுது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பது தொடர்பில் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு நடத்தப்படுமா? இந்த மனித எலும்பு எச்சங்கள் மிக நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என திருகோணமலை சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன், இந்த மனித எச்சங்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவிந்துக்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6ம் தேதி நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது. 1990ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை அண்மித்த பகுதியில் இருந்தே இந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்கனவே 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகள் கண்டுபி;டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8jpjgj60do

இலங்கை: கட்டியணைத்தபடி கிடைத்த குழந்தையின் எலும்புக் கூடு - நவீன ஸ்கேன் மூலம் பகுதியை ஆய்வு செய்ய முடிவு

1 month 2 weeks ago

இலங்கை, மனித புதைகுழி, சிந்துப்பாத்தி, அகழாய்வு

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

''இந்த இடத்தை ஸ்கேன் செய்வதற்காக முறைக்கு செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அனுமதிக்கு, கருவியை பயன்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பத்தினால், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வருகின்ற திங்கட்கிழமை அதே வகையான ஸ்கேன் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கேன் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.'' என ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

இலங்கை, மனித புதைகுழி, சிந்துப்பாத்தி, அகழாய்வு

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 118 எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இதுவரை 105 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய மனித எலும்பு கூடுகளை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் அவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, குறித்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குழந்தைகளில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டெடுக்கப்பட்ட வருகின்றன.

புதைகுழிகளில் புத்தகப்பை

இலங்கை, மனித புதைகுழி, சிந்துப்பாத்தி, அகழாய்வு

அண்மையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, பெரிய நபரொருவரின் எலும்புக்கூடொன்றை, சிறிய குழந்தையொன்றின் எலும்புக்கூடு கண்டி அரவணைத்த படியான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

''ஒரு பெரிய மனித எலும்புத் தொகுதியோடு, ஒரு சிறிய குழந்தையினுடைய மனித எலும்புத் தொகுதி அரவணைக்கப்பட்ட விதத்தில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. '' என அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் பால் போத்தல், புத்தக பை, பொம்மைகள், பாதணி, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் அகழ்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பாக போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா அண்மையில் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் வெளியிட்டிருந்தார்.

எனினும், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சம்பூர் மனிதப் புதைக்குழி - மயான பூமிக்கான ஆதாரம் இல்லை

இலங்கை, மனித புதைகுழி, சிந்துப்பாத்தி, அகழாய்வு

திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு மயான பூமி என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான காரணத்தை கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

திருகோணமலை - சம்பூர் கடற்கரை அருகில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனத்தினால் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்றிருந்தது.

இந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சட்ட மருத்துவ அதிகாரி கடந்த 30ம் தேதி இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்துள்ளார்.

மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைக்குழி இருந்ததா அல்லுது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பது தொடர்பில் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு நடத்தப்படுமா?

இந்த மனித எலும்பு எச்சங்கள் மிக நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என திருகோணமலை சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மனித எச்சங்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவிந்துக்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6ம் தேதி நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது.

1990ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை அண்மித்த பகுதியில் இருந்தே இந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்கனவே 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகள் கண்டுபி;டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy8jpjgj60do

ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

1 month 2 weeks ago
யாரோஸ்லாவ் லுகிவ் பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். "முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை. யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது. உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன. பட மூலாதாரம், Getty Images வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், "ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை. சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார். "ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்." இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது. அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை. இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் "10 அல்லது 12" நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ் 2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் "ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை" விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார். எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், "டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்" என்று கூறினார். ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது "நாடக ரீதியாக" இருப்பதாகவும், "ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என்றும் கூறியிருந்தார். இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், "டெட் ஹேண்ட்" அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர். மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை "ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்" என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார். மெட்வெடேவை "அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்" என்றும், "அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!" என்றும் டிரம்ப் எச்சரித்தார். 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c754z1dp09eo

ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

1 month 2 weeks ago
  • யாரோஸ்லாவ் லுகிவ்

  • பிபிசி செய்திகள்

  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

"முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை.

யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், "ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை.

சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

"ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்."

இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது.

அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் "10 அல்லது 12" நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ்

2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் "ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை" விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், "டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்" என்று கூறினார்.

ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது "நாடக ரீதியாக" இருப்பதாகவும், "ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், "டெட் ஹேண்ட்" அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர்.

மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை "ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்" என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார்.

மெட்வெடேவை "அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்" என்றும், "அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!" என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c754z1dp09eo

செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்

1 month 2 weeks ago
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காட்ட ஒத்துழையுங்கள் - பொதுமக்களிடம் சிறீதரன் எம்.பி வேண்டுகோள்! Published By: Digital Desk 2 02 Aug, 2025 | 04:16 PM செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கோள் காட்டி கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது, செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்றுவரும் அகழ்வுப்பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 05ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/221619

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை - வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

1 month 2 weeks ago
Published By: Digital Desk 2 02 Aug, 2025 | 12:32 PM வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது. இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது. இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபாரிசுற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிஸார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221609

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை - வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

1 month 2 weeks ago

Published By: Digital Desk 2

02 Aug, 2025 | 12:32 PM

image

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது,

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை  அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது. 

இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்  எழுந்துள்ளது.

அதனடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபாரிசுற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். 

அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம்  குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல்  தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.

அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிஸார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221609

ஒரு பெண்ணுக்கு 'நானே கணவன்' என்று 8 பேர் ஆஜர் - மகாராஷ்டிர நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

1 month 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்கிற தகவலையும் தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணின் பெயர் சமீரா பாத்திமா என்றும் அவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்றும் கிட்டிகதான் காவல் நிலைய ஆய்வாளர் ஷார்தா போபாலே தெரிவித்துள்ளார். அவர் மோமின்புரா பகுதியில் உள்ள ஒரு உருதுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் முதல் திருமணம் பிவாண்டியில் நடைபெற்றது. 2024-இல் நாக்பூரைச் சேர்ந்த குலாம் கவுஸ் பதான் என்பவர் சமீரா பாத்திமா என்கிற பெண்ணால் ஏமாற்றப்பட்டதாக கிட்டிகதான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இரவும் பகலும் செல்போனில் பேசத் தொடங்கினர். அதன் பின்னர் ஆபாச வீடியோ ஒன்றை எடுத்து அதனை வைரல் ஆக்கப் போவதாக மிரட்டி திருமணம் செய்துகொள்ள குலாமுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் பாத்திமா. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதற்குப் பிறகு வீடியோவை வைத்து மிரட்டி பாத்திமா பணம் பறித்ததாக குலாம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். வேறு காரணங்களுக்காகவும் பல லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார். இதனால் அவரிடமிருந்து விலகத் தொடங்கினார் குலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது தான் பாத்திமாவுக்கு ஏற்கெனவே பலமுறை திருமணம் ஆனது தெரியவந்தது. தனது முந்தைய கணவரிடம் விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே குலாமை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போலியான விவாகரத்து சான்றிதழ் ஒன்றைக் காண்பித்துள்ளார். அவரிடம் வெவ்வேறு காரணங்களுக்காக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். குலாமின் புகாரைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சமீராவை கைது செய்ய காவல்துறை சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்த நிலையில் அவருக்குப் பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது. திருமண மோசடி - காவல்துறை தகவல் சமீரா திருமணம் என்கிற பெயரில் குலாமை மட்டும் ஏமாற்றவில்லை. அவர் மேலும் 4 அல்லது 5 பேரை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது அவர் திருமணம் செய்து கொண்ட 8 பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். எட்டு பேரும் அவர்களின் வழக்கறிஞர்களுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்த மோசடி பற்றி விவரித்தனர். பாத்திமாவுக்கு 2017-ல் முதல் திருமணம் ஆனது. அப்போதிலிருந்து அவர் ஏமாற்றத் தொடங்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே மேட்ரிமோனி இணையதளங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த விவாகரத்தான செல்வந்த ஆண்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஏமாற்று செயல்முறை பற்றி போலீஸ் தரப்பிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போது எட்டு பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது, நான் ஒரு கணவரைத் தேடுகிறேன் எனக் கூறுவார். அதன் பின்னர் போலியான விவாகரத்து சான்றிதழைக் காண்பித்து அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன் பின்னர் இரண்டு-மூன்று மாதங்களாக அவர்களிடம் ஆபாச வீடியோ வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். அவர்கள் பணம் தரவில்லையென்றால் ஆட்களை அழைத்து அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவர்களை அச்சமூட்டி பணம் பறித்த பிறகு வேறு ஒருவரைப் பிடித்து அவரிடமும் இதே வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்த விதத்தில் பல லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். இது தான் இவரின் செயல்திட்டம்" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரால் ஏமாந்தவர்களில் ஒரு வங்கி மேலாளரும் அடங்குவார். சத்திரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவர் பணிக்காக நாக்பூரில் வசித்துள்ளார். சமீரா ஃபேஸ்புக் மூலம் அவருடன் அறிமுகமாகியுள்ளார். தற்போது 8 பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமீராவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் ஆறுமுறை தான் திருமணம் செய்துள்ளதாகவும் ஒவ்வொரு கணவருடன் சண்டை வந்த போதே அடுத்தவரை திருமணம் செய்ததாகவும் காவல்துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றம் அவரிடம் விவாகரத்து சான்றிதழை கேட்டபோது அவரால் வழங்க முடியவில்லை. அதே போல் திருமணச் சான்றும் அவர் சொன்னதை வைத்தே தயார் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த திருமணங்கள் அனைத்தும் அவரது வீட்டில் இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்டுள்ளன. குழந்தைக்காக தனக்கு பிணை வேண்டும் என பாத்திமா கோரியிருந்தார். "எனினும் நீதிமன்றம் பாத்திமாவின் மகனை, அவரின் கடைசி கணவரிடம் ஒப்படைத்தது. அவரைச் சிறையில் அடைத்தது" என புகார்தாரரின் வழக்கறிஞர் பாத்திமா பதான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்களை நாங்கள் தொடர்பு கொள்ள முயன்றோம். அது முடியவில்லை. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் அவர்கள் தரப்பு பதிலும் இதில் சேர்க்கப்படும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zdmm73reo

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 2 weeks ago
குரங்கு அப்பம் பிரித்த கதை தெரியுமா....அப்படித்தான் இவையும் ஒரு விடையம் தமிழனுக்கு நடக்கப் போகுது என்றாள் அதனை நடக்க விடாது தடுப்பதுக்கு... எப்படியும் ஒரு சாட்டுடன்வந்து ..குழப்பி நடக்கவிடாமல் செய்து...அதன் பின் சிங்களவனிடம்போய் சேர்ந்து பால்சோறு தின்பினம்...உங்களுக்கும் இழப்பு இருக்கலாம் ...ஆனால் எம்முடன் ஒப்பிடும்போது..அவை மிகச்சிறியளவே..

பிரதமர் யாழ். வருகை : புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட கலந்துரையாடல்!

1 month 2 weeks ago
02 Aug, 2025 | 05:06 PM கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (2) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரங்கசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலர் பங்கேற்றனர். 2026ஆம் ஆண்டு முதல் நாட்டின் கல்வி முறையில் குறிப்பாக பாடசாலைக் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221621