Aggregator
அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
30.06.2025 முதல் 31.08.2025 வரை தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளுக்கு சட்ட விதிகளுக்கு அமைவாக அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கமைய,
இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள் யாராவது இருந்தால், அவர்கள் அந்த அறிவிப்புகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய நிர்வாக அபராதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், ஜூன் 30 ஆம் திகதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளை நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு அவற்றை நிறுவனத் தலைவர்கள் ஏற்க மறுத்தால், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறியத்தருமாறும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://ibctamil.com/article/legal-action-against-government-employees-1754216518
சிரிக்கலாம் வாங்க
"முதுகுக்குப் பின்னால் சதி" : எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்திக்கு இருந்த காரணங்கள்
ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்
வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைப்பு
வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைப்பு
03 Aug, 2025 | 03:39 PM
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க.கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/221685
அங்க தடையாம், இங்க உறுப்பினர்களே குழாய்க்கிணற்றில் போட்டு இறைக்க மோட்டர் வழங்குகினமாம்!
என்னய்யா நடக்குது அங்க?!
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
'வன்மம்" கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல்
எடையைக் குறைக்க ஜூஸ் மட்டுமே குடித்தவர் மரணம் - உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள்
எடையைக் குறைக்க ஜூஸ் மட்டுமே குடித்தவர் மரணம் - உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள்
பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
மோகன்
பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
படக்குறிப்பு, சக்தீஸ்வரன்
இளைஞர்களிடையே டயட் என்பதைப் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். ஒரு மாதத்தில் குறைந்தது 10 பேராவது தவறான டயட் முறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
"டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல. முறையான டயட் என்றால் சரியான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது" எனத் தெரிவித்தார் ரேஷ்மா.
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் குறிப்பாக உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.
மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு சரியாக பின்பற்றப்படாத உணவு முறையால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் இதயநோய் நிபுணரான அசோக் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலையான உணவுமுறை தான் ஆரோக்கியமான இயக்கத்திற்கு உகந்தது. கலோரிகள் உட்கொள்வதை நாம் நிறுத்தினால் அது ஆபத்தானது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான கலோரிகள் உணவு மூலம் உள் எடுப்பது குறைகிறபோது உடலில் கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கலோரிகள் செரிமானம் ஆகத் துவங்கும்."
"கார்போஹைட்ரேட்ஸ், கலோரிகள், நுண் ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே சரியான அளவுகளில் கிடைக்க வேண்டும். இவைகளில் சமநிலை குறைகிறபோது தசைகள் உடைய ஆரம்பிக்கின்றன. நல்ல கொழுப்பும் சரியான அளவில் உடலில் இருக்க வேண்டும். எடை குறைக்க உடற்பயிற்சி செய்கிறபோது தசையும் குறையும்."
"இதய தசைகள் குறைகிறபோது உடலுக்கு ரத்தம் செலுத்தப்படுவது குறையும். இதனால் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒருவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் (pre-existing conditions) இருந்தால் அவை மேலும் மோசமாக்கும்." என்றார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐசிஎம்ஆர்) இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இந்தியர்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை வகைப்படுத்தி பரிந்துரைக்கிறது.
அதன்படி, ஆண்களில் உடல் சார்ந்த வேலைகள் (Sedentary work) அதிகம் செய்யாத பெரிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி தேவைப்படுகிறது. அதுவே, ஓரளவிற்கு உடல் சார்ந்த வேலைகள் (Moderate work) உள்ள ஆண்களுக்கு நாளொன்றுக்கு 2,710 கிலோ கலோரி தேவைப்படுகிறது. கடினமான உடல் சார்ந்த வேலைகள் (Heavy work) செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 3,470 கிலோ கலோரி தேவைப்படுகிறது.
இதே பெண்களில் பெரியவர்களுக்கு முறையே 1,160, 2,130, 2,720 கிலோ கலோரி என இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியிருக்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா. "உடலுக்கு தேவைப்படும் சத்துகள் கார்போஹைட்ரேட், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், புரத உணவான முட்டை அல்லது மாமிசங்கள் போன்ற பல உள்ளன. இவற்றை திரவ உணவுகளால் மட்டும் வழங்க முடியாது" என்றார்.
படக்குறிப்பு, மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை Fad diet என்று அழைக்கப்படுகிறது.
"பழங்களை திரவ உணவாக உட்கொள்கிற போது அதில் உள்ள நார்ச் சத்துகளும் கழிந்துவிடும். ஆகவே இதனை ஃப்ரூட் டயட் எனச் சொல்ல முடியாது. ஜூஸ் டயட் என்று தான் கூற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கும் அளவு
காய்கறிகள்: 400 கிராம்
பழங்கள்: 100 கிராம்
பருப்பு வகைகள், முட்டை அல்லது மாமிசம் - 85 கிராம்
நட்ஸ் மற்றும் விதைகள் - 35 கிராம்
கொழுப்பு மற்றும் எண்ணெய் - 27 கிராம்
தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - 250 கிராம்
சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளும் அளவு இது. உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்து இவை மாறுபடும் என்று தெரிவித்தார் ரேஷ்மி.
இதற்கு ஒரு உதாரணத்தை முன்வைத்த சுஜாதா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு உணவுமுறையில் புரதங்கள் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் என்றார்.
மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை ஃபேடு டயட் (Fad diet) என்று அழைக்கப்படுகிறது.
"இரண்டு நாட்கள் திரவ ஆதாரங்களை எடுத்துக் கொண்டால் எடை சற்று குறையவே செய்யும். ஆனால் அதனால் வேறு சில சிக்கல்களும் வரும்" எனக் கூறினார் ரேஷ்மி
தொடர்ந்து விவரித்த அவர், "ஒருவரின் ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு திட உணவும், திரவ உணவு என இரண்டுமே அவசியம். திரவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டால் மூளை சார்ந்த, உடல் சார்ந்த எந்த வேலைகளையும் செய்வது கடினமாக இருக்கும். திட உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவு குறைந்துவிடும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி அல்லது பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைக்காமல் போய்விடும்." என்று தெரிவித்தார்.
டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா.
ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா.
"ஒருவரின் ரத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவு, நுரையீரல், சிறுநீரகத்தின் நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தில் மரபணு ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவற்றை அறிந்த பிறகே அவருக்கான உணவு முறையைப் பரிந்துரைக்க முடியும்." என்றார்
ஒருவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அறிவுரை பெறுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்தார்.
"மனித உடல் அமைப்பிலே திட உணவுகள் உட்கொள்வது என்பது அடிப்படையானது. திட உணவுகள் இல்லையென்றால் உடல் செரிமானம் மேற்கொள்ளாது. இதனால் உடல் திசுக்களையே செரிமானம் செய்யத் தொடங்குகிறது. அப்போது தான் குடலழற்சி போன்ற சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன." என்றார் அவர்.
உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு டயட் பின்பற்றலாம்?
பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாததைப் போல டயட்டையும் முறையான பரிந்துரை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்கிறார் சுஜாதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சமூக ஊடகங்களைப் பார்த்து உணவு பழக்கங்கள், உணவு முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. தற்போது பலரும் இருவேளை உணவு, ஒருவேளை உணவு எனப் பின்பற்றுகிறார்கள். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இதனுடன் சேர்ந்து தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் அதிகமாகின்றன." என்று தெரிவித்தார்
தசை அளவு குறைவதன் ஆபத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "எடையை குறைக்க உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றினால் உடலில் தசையின் மற்றும் கொழுப்பின் அளவும் பெருமளிவு குறைகிறது. இதில் இதய தசை குறைவது தான் மிகவும் ஆபத்தானது. அப்போது தான் இதய நோய் வருவதற்கான சிக்கல்களும் அதிகரிக்கின்றன." என்றார்.
படக்குறிப்பு, டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது
டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறியவர், "மனிதர்களின் உடல் பரவலாக மூன்று வகைகளின் கீழ் அடங்கும். மெலிதான உடல்வாகு உடையவர்கள், சிலருக்கு உடலிலே கொழுப்பு இருக்கும், சிலருக்கு தசை அளவு கூடுதலாக இருக்கும். மரபணு ரீதியாக இதய நோய் வருகிறது என்றால் அவருக்கு கார்டியோ சார்ந்து தீவிர உடற்பயிற்சி வழங்க முடியாது. ஒருவரின் முழுமையான உடல்நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள பிரச்னைகள், குடும்பத்தில் பரம்பரை ரீதியாக உள்ள சிக்கல்களைப் பொருத்து தான் தகுந்த உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும்." என்று தெரிவித்தார்.
ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தமும் உடற்பயிற்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விவரித்தவர், "ஒருவருக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் உள்ளது, அவரின் வேலை அழுத்தம் என்ன மாதிரி உள்ளது, எந்த அளவிற்கு ஆழமான உறக்கம் அவருக்கு கிடைக்கிறது, அவரின் தனிப்பட்ட மனநிலை, சமூக வட்டம் எப்படிப்பட்டதாக உள்ளது என அனைத்துமே இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்
ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்
03 Aug, 2025 | 10:31 AM
சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.
எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார்.
பணயக்கைதிகளும் பட்டினி கிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி.
இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வழமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று.
மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று.
ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை.
கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார்.
சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம். தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு; ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி.
இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது.
இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா?
அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும். எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும்.
இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார். நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார். அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது.
பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம்.
தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல.
கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார். கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன. அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது.
எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி.