Aggregator

கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை

1 month 2 weeks ago

கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை

written by admin November 30, 2025

4e-2.jpeg?fit=867%2C434&ssl=1

 

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல்  நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை  காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.   ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

IMG_1905.jpg?resize=800%2C450&ssl=1IMG_1923.jpg?resize=800%2C450&ssl=1


https://globaltamilnews.net/2025/223286/

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

1 month 2 weeks ago
கொட்டும் மழையிலும் யாழில் இளைஞர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை #info4tamil #tamilnewsupdates #TopNews #BreakingNews #TamilNews #srilanka #SriLankaNews #lka #lkanews #jaffnanews கொட்டும் மழையிலும் ஒரு இளைஞர் திருநெல்வேலி சந்திக்கு அணமையில் துரத்தி துரத்தி வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தியை இன்போ தமிழ் வெளியிட்டுள்ளது.

யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர்

1 month 2 weeks ago
யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.

 ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ - வரலாற்றின் குற்றக் கிடங்கு

1 month 2 weeks ago
வரலாற்றின் குற்றக் கிடங்கு November 29, 2025 — கருணாகரன் — ‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள். இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழப்படுகிறது. இதில் இதுவரையில் 225 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெண்கள், குழந்தைகளுடையவையும் உண்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 1990களில் இலங்கைப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1996 இல் இதே இடத்தில், இப்படியொரு புதைகுழியில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பள்ளிக்கூட மாணவி, படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டாள். அவளைத் தேடிச்சென்ற அவளுடைய தாயும் தம்பியும் அயலவரும் கூடக்கொன்று புதைக்கப்பட்டனர். இந்தக் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியும், இதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்திய சூழலும் வரலாற்று முக்கியவத்துக்குரியது. இந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்டவரான இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், செம்மணி புதைகுழியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார். இது மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். இதையெல்லாம் குறித்து முன்பொரு கவிதை நூல் ‘செம்மணி’ என வந்தது. இப்பொழுது ‘வாசலிலே கிரிசாந்தி’ என இன்னொன்று வந்துள்ளது. இதற்கு முன் 1990 ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில், யாழ்ப்பாண நகரத்திற்கு கிட்டவாக உள்ள – இன்னொரு பக்கத்தில் இருக்கும் தீவுப்பகுதியில் (லைடன் தீவிலும் மண்டைதீவிலும்) இலங்கை அரச படைகளின் ‘திரிவித பலய’ கூட்டுப்படை நடவடிக்கையின்போது 163 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கைக்கும் படுகொலைக்கும் தலைமை தாங்கியவர் இலங்கை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிய மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ. (இவர் பின்னாளில் (1992.08.02) கண்ணிவெடித் தாக்குதலொன்றில் இதே தீவுப்பகுதியில் இறந்தார்). இந்தப் படுபாதகச் செயலைக் குறித்த ஒரு நூல் ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என எழுத்தாளர் ஷோபாசக்தியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஷோபாசக்தி, இந்தக் கொலைகள் நடந்த கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், இந்தப் படுகொலை நடந்தபோது ஷோபாசக்தி, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். (அந்த நாட்களில் அல்லைப்பிட்டியில் இருந்திருந்தால் அந்தப் படுகொலையில் அவரும் சிக்கியிருக்கக் கூடும்). அதில் தப்பிப்பிழைத்ததால் இப்பொழுது, இந்தப் படுகொலைகள் நடந்து 35ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படுகொலைகளை அதற்கான சாட்சியங்களோடும் விவரங்களோடும் தொகுத்து ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் அநீதியிழைப்பொன்றின் சான்றாதாரமாகவும் நீதி கோரும் மக்களின் ஆன்மாவாகவும் இருநிலைகளில் தொழிற்படுகிறது. இந்த நூலில், ‘இந்தப் பேரழிப்பின்போது இராணுவத்தினரால் உண்டாக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மண்டைதீவில் உள்ளன’ எனப் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் பகிரங்கச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ‘இந்தக் கொலைகளையும் புதைகுழிகளையும் குறித்து வெவேறு இடங்களிலும் வெளிவந்த ஆவணங்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும்’ இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷோபாசக்தி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பதைப்போலவே, இந்த நூலின் அனைத்து விவரங்களும் தெளிவாகவும் சான்றுகளோடும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசைப்படுத்தி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. படுகொலைகளின் பின்னணி, பணயக்கைதிகள், படுகொலைக்களம், காணாமலாக்கப்பட்டவர்கள், லைடன் தீவில் படுகொலையான பொதுமக்கள், மண்டைதீவில் படுகொலையான பொதுமக்கள், உண்மையைப் புதைத்த குழிகள் என்ற ஏழு அத்தியாயங்களின் தலைப்புகளே போதும் இந்தப் படுகொலைகளின் சித்திரத்தை உங்களுடைய மனதில் எழுப்புவதற்கு. இவற்றுக்கு அப்பால், இவற்றைச் சான்றாதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் நிழற்படத் திரட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடவே, நீதி மிகத் தொலைவில் என்ற முற்பகுதியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது தலைப்புகள். இது நீதிகோரும் ஒரு முதன்மையான வெளிப்பாடு. சமனிலையில் நீதியின்மைக்கான எதிர்ப்புக் குரல். இலங்கை அரசினதும் அதனுடைய படைகளினதும் மானுட விரோத, அரசியல் விரோதச் செயலை உலகின் முன்வைக்கும் வலுவான ஆவணம். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்தக் கொலைகளைப்பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தங்களுக்கு நீதிகோரிப் பலரையும் சந்தித்திருக்கின்றனர். நடந்த சம்பவங்களைப்பற்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியிருக்கின்றனர். ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்களுடைய மனதில் அந்தத் துயரமும் அங்கே சுவாலை விட்டு எரிந்த நெருப்பும் அவர்களுடைய மனதிலும் நினைவுக் கண்களிலும் அப்படியே ஆறாச் சூட்டோடுதான் உள்ளன. ஆனால், ‘இந்தக் கொலைகள் எதற்குமே நீதி வழங்கப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரச படைகள் செய்த இந்தப் படுகொலைகளுக்கு இலங்கை அரசு இதுவரையில் பொறுப்புக் கூறவில்லை’. ஷோபாசக்தியே இந்த நூலில் கூறியிருப்பதைப்போல, இந்தப் படுகொலைகள் வரலாற்றின் இருண்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டு விடக் கூடாது. அப்படியொரு எண்ணத்தோடுதான் இவை அந்தக் கொலைகளுக்கு எதிரான சாட்சியமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைக் கோரும்போது தமக்கேற்பட்ட பாதிப்புகளையும் தமக்கிழைக்கப்பட்ட அநீதியின் சான்றுகளையும் வலுவாகத் திரட்டி முன்வைக்க வேண்டும். அறத்துக்குப் பதிலாக நலன்களே முதன்மை நோக்கமாகக் கொண்டியங்கும் உலகில், உலோகத்தையும் விடக் கனத்துத் தடித்திருக்கும் இதயத்தின் சுவர்களை உடைகக் கூடிய கூரிய ஆயுதங்களாக இருப்பவை பாதிப்புகளின் – அநீதிகளின் சான்றுகளே! ஆகவே அவற்றை நீதியைக் கோரும் மக்கள் தமக்கான வலிய கருவிகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஈழத்தமிழ்ச் சூழலில் இது மந்தநிலையில் (மந்தைத் தனமாக) உள்ளது. இந்த மந்தைத் தனத்தையே கொலையாளிகளும் அரசும் அதையே விரும்புகின்றன. இதற்கு எதிராக இயங்குவதே, எதிர்ப்புச் செயற்பாட்டை எந்த நிலையிலும் மேற்கொள்வதே கொலை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான ஒரே நீதிச்செயற்பாடாகும். ஷோபாசக்தி இவற்றை அந்த நீதியுணர்வோடும் அது எதிர்நோக்கும் அறிவியல் – அற வினாக்களோடும் இங்கே திரட்டி முன்வைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்தக் கொலைகளைப் பின்னணியை கொரில்லா நாவலில் ஒரு அத்தியாயத்திலும் தேசத்துரோகி என்ற கதையிலும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி. இதைவிட இந்தக் கொலை ஷோபாசக்தியினால் வலுவான இலக்கியப் பிரதியாக்கப்பட்டிருப்பது மிக உள்ளக விசாரணை என்ற சிறுகதையில். அந்தக் கதை தமிழில் மட்மல்லாமல், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படுகொலை நடந்த ஊர்வாசியாகவும் படுகொலைக்கு எதிரான மனித உரிமைப்போராளியாகவும் அநீதிக்கு எதிரான இலக்கியப் படைப்பாளியாகவும் என வெவ்வெறு நிலைகளில் நின்று இந்தப் பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷோபா. முந்தியவை புனைவின் வழியானவை. இது நேரடியான சான்றுகள், சாட்சியங்களோடானவை. ஆக ஷோபாசக்தியினுள்ளே அந்தக் கொலைகள் தணலாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இப்படி வேறு சில எழுத்தாளர்களும் தங்களுடைய காலத்திலும் சூழலிலும் எதிர்கொள்ள நேரிட்ட இத்தகைய கொலைகளையும் அநீதிச் செயல்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரதரின் கற்பு கதை தொடக்கம், நிலாந்தனின் கடலம்மா கவிதை உள்ளடங்கலாக இதற்கான ஒரு நெடும் பாரம்பரியமே ஈழத்திலக்கியத்தில் உண்டு. அவை வெறுமனே பதிவுகளல்ல. நீதிக்கான குரல்கள். சிங்கள ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வரலாற்றின் முன்னே நிறுத்தி விசாரணை செய்யும் கலகப்பிரதிகள். ஆனால் இவை புனைவும் நிஜமும் கலந்த இலக்கியப் பிரதிகள். இங்கே இப்பொழுது ஷோபாசக்தி திரட்டி அளித்திருப்பது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றிய நிஜமான ஆவணம். இப்படி ஒரு ஆவணத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டி முன்வைக்க முயற்சிக்கும்போது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, இவை அல்லது இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்பட்ட சூழல் என்பது ஒன்றில் போர் நிகழ்ந்த பகுதியாக இருக்கும். அல்லது ஒடுக்குமுறைத்தரப்புகளான அரச படைகளும் அவற்றின் துணை இராணுவக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளாக இருக்கும். இதனால் முறையான தகவல்களை – விவரங்களை – ப் பெறுவதில் (சேகரிப்பதில்) சிரமங்கள் உண்டு. அடுத்தது, இந்தச் சம்பவங்களின்போது உடனிருந்து தப்பியவர்கள், இவற்றை அறிந்தவர்கள், இவை பற்றிய விவரங்களைத் திரட்டிய ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எல்லாம் கால நீட்சியில் மரணித்தும் வேறு இடங்களுக்குச் சென்றும் விட்டதாகும். மட்டுமல்ல, இந்தக் கொலைகளைப் பற்றியும் இவை போன்று ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் உள்ள தகவல் – விவர – ஆணமாக்கல்களில் குழப்பங்களும் குறைபாடுகளும் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு அவலச் சூழலில் இருந்து கொண்டே இந்த மாதிரியான சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. போரினாலும் மிக மோசமான ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் தனக்கான தீர்வையும் நீதியையும் கோரும் போராட்டத்தில் – அரசியல் முன்னெடுப்பில் தீவிரமாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக முன்வைக்கக் கூடிய இவ்வாறான படுகொலைகள், இனவழிப்புச் செயற்பாடுகள், ஒடுக்குறைச் சான்றுகள் போன்றவற்றைச் சரியாக உருவாக்குவதில் பின்னடைந்தே இருக்கிறது. இதைச் செய்வதற்குத் தாராளமான – ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளோடு ஈழத் தமிழ்ச் சமூகம் உலகம் முழுவதிலும் பரந்திருக்கிறது. ஆனால், செயற்பாட்டில் மிகப் பிந்தங்கிப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இதனை நடைமுறையில் இந்தப் பிரதியின் உருவாக்கத்தின்போது ஷோபாசக்தியும் உணர்ந்திருக்கிறார். ‘வரலாற்றை ஆவணமாக்கி வைத்திருப்பதில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெருமளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது…. இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிவதற்காக அல்லது ஆய்வு செய்வதற்காக தமிழ் இணையச் செய்தி ஊடகங்களை நாடிச் செல்லும் ஒருவர் ஏராளமான தவறான மற்றும் குழப்பமான தகவல்களைக் கண்டடைய முடியும்..’ எனக் கவலையோடு அவர் சொல்வதைப்போல, வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) திரட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ஆவணமாக்கல் – வெளிப்படுத்தல் மூலங்களிலும் தகவல் பிழைகள் உள்ளன. ஆனாலும் இவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. இவற்றிலிருந்தும் நேரடியான வாய்மொழிச் சாட்சியங்கள், பிற அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், மனித உரிமை அமைப்புகள், நிர்வாக ரீதியான அரசாங்கப் பதிவேடுகள் எனப் பலவற்றிலிருந்தும் பெறக் கூடிய தகவல்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு காலத் தாமதம் கூடாது. அப்படியே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது இதை உணர்கிறோம். அத்துடன், இவற்றின் ஊடாக நாம் மிக மோசமான முறையில் நம்முடைய காலடியின் வழியே கடந்து சென்ற காலத்தை மீளத் திறந்து பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு. எல்லாக்கொலைகளும் ஒன்றல்ல. மரணம் வேறு. கொலை வேறு. மரணம் தரும் துக்கம் வேறு. கொலை உண்டாக்கும் துக்கம் வேறு. கொலையினால் ஏற்படும் துக்கம் கோபத்தையும் தன்னுள் கொண்டெரிவது. அந்தக் கோபம் அநீதியினால் உருவாகியது. அநீதிக்கு எதிரானது. ஈழத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பல நூறு கூட்டுக் கொலைகளின் நினைவாகவும் அவற்றுக்கு எதிரான அடையாளமாகவும் பல்வேறு இடங்களிலும் நினைவுத்தூபிகளும் கல்வெட்டுகளும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைக்குள்ளான பதினொரு பேரின் நினைவுச் சின்னம் யாழ்ப்பாண நகரத்தில் வீரசிங்கம் மண்டபதற்கு முன்பாக, முற்றவெளியில், கோட்டைக்கு எதிர்த்திசையில் உள்ளது. இப்படியே மட்டக்களப்பு மகிழடித்தீவில், முல்லைத்தீவு மாத்தளனில், முள்ளிவாய்க்காலில், நாகர்கோயிலில், நவாலியில், மன்னார் – முருங்கனில் வல்வெட்டித்துறையில்.. எனப் பல இடங்களிலும் உள்ளன. இன்னொரு நிலையில் எழுத்தாவணங்களும் வீடியோப் பதிவுகளும் ஒளிப்படங்களும் ஏராளமாக உண்டு. வல்வை ந. அனந்தராஜ் தொகுத்துப் பதித்த ‘வல்லைப் படுகொலைகள்’ கலாநிதி முருகர் குணசிங்கத்தின் “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்” மற்றும் நிஜத்தடன் நிலவன் எழுதிய “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)”போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல கொலைகளைப் பற்றிய ஆவணப்படங்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆவணப்பிரிவும், நிதரம்சனமும் அரங்கம் நிறுவனமும் தயாரித்து வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பை சோமீதரன் ‘எரியும் நினைவுகள்’ (Burning memories) ஆவணப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசின் மீதும் அது மேற்கொண்டுவரும் இனவாத அரசியலின் மீதும் அதற்கு எந்தக் கேள்வியுமற்று ஆதரவைக் கொடுத்து நிற்போரின் மீதும் தங்களின் எதிர்ப்பு அடையாளத்தைப் பதிவு செய்கின்றன. நீதியற்ற ஆட்சியே நீடித்தது என்பதற்கான சாட்சியங்களே அவை. அத்தகைய சாட்சியங்களில் ஒன்றே 1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும் ஆகும். இது புதைகுழிகள் தோண்டப்படும் காலம். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரமும் பேசப்படும் நாட்களிவை. நீதியைக் கோரும் மக்களுக்கு – பாதிக்கப்பட்டோருக்கு – இவை, இந்தச் சான்றாதாரங்கள் வலுவானவை; மிக மிக அவசியமானவை. ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்கள் மீண்டும் தங்களுடைய ஊர்களில் மீளக் குடியேறி விட்டார்கள். (எல்லோரும் அல்ல. எல்லா இடங்களும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டவையும் அல்ல). ‘மாற்றத்துக்கான ஆட்சி’யை நடத்துவதற்குப் புதிய அரசாங்கம் (NPP) வந்து விட்டது என்று பலரும் கருதவும் கூடும். வெளித்தோற்றத்துக்கு இப்படித் தெரியலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதே நிலையில்தான் உள்ளனர். அவ்வாறுதான் நடத்தப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாற்றப்பட்டுள்ளன. குண்டுச் சத்தங்களும் சுற்றிவளைப்புகளும் கொலையும் இடப்பெயர்வும் இப்போதில்லைத்தான். ஆனால், ஏனைய அனைத்து நெருக்குவாரங்களும் சுமைகளும் ஒடுக்குமுறைகளும் அந்நியமாக்கலும் அப்படியேதான் உள்ளன. புத்தர் சிலைகளை முன்னிறுத்தி நில ஆக்கிரமிப்பு நடக்கிறது. படைகள் எல்லாம் ஊர்களில் சாவகாசமாகவே இருக்கின்றன. என்பதால்தான் இவற்றையெல்லாம் – தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் – நாம் வலுவோடு பேச வேண்டியுள்ளது. அந்த வகையில்தான் ஷோபாசக்தியும் இந்த நூலை மிகக் கடுமையாக உழைத்து, மிகுந்த சவால்களின் மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இது எளிய பணியல்ல. இந்தக் கொலை நாடகம் நடந்த நாட்களில் நான் யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் (ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில்) பதறும் நெஞ்சோடிருந்தேன். சிறைப்பிடிக்கப்பட்ட மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை அன்றிருந்தது. புங்குடுதீவிலிருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போக முடியாமல் யாழ்ப்பாண நகரில் தவித்தலைந்து கொண்டிருந்தார் கவிஞர் சு. வில்வரெத்தினம். வீட்டுக்குப் போக முடியாமல் மட்டுமல்ல, அங்கே உள்ள தன்னுடைய குடும்பத்தின் நிலை என்ன என்பதையே அறிய முடியாமல் தவித்தார். அந்தத் தவிப்பில் இரவெல்லாம் அவர் எழுதிய கவிதைகளைச் சைக்கிள் மிதித்து வந்து படிப்பார். அவருடைய கண்களும் நெஞ்சும் மட்டும் கலங்கவில்லை. எங்களுடைய கண்களும் நெஞ்சும் கலங்கியது. அந்தக் கவிதைகள்தான் பின்னாளில் ‘காற்றுவழிக்கிராமம்‘, ‘காலத்துயர்‘ என்ற கவிதை நூல்களாகின. அதில் ஒரு கவிதை இப்படியிருந்தது – உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம் உமியின் கரிச்சட்டி ஒருபுறம் ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள் கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி. வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு சுடலைக்கே பாத்திரமாய்ப் போக நானிங்கு எதனுடைய முதிசம் காக்க? யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில் எல்லாவழிகளும் மயானத்திற்கே இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில் உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு… இதையே – இந்த அவல நாடகத்தையே – ஷோபாசக்தி, தன்னுடைய பல கதைகளில் புனைவாக்கினார். இன்னும் அவை இலக்கியமாக வரலாம், வரும். அந்தப் புனைவுகளில் பேசியவற்றுக்கும் அப்பால் இந்த உண்மைகள் இன்னொரு வகையில் உலகோடு பேச விளைகின்றன. அதற்கு உலகம் தயாராக உள்ளதா? இந்த நூலைப்படிக்கும்போது அந்த நாட்கள் பதற்றத்தோடு நினைவில் எழுகின்றன. அப்பொழுது (1994 இன் முற்பகுதியில்) யாழ்ப்பாணக் குடாநாட்டைப் படைகள் முற்றுகையிட்டுச் சிறைப்பிடிக்க முயன்றன. இதனால் குடாநாட்டைச் சுற்றி முற்றுகைப்போர் மூண்டது. அதை முறியடிக்கும் முனைப்போடிருந்தனர் புலிகள். இரண்டு தரப்புக்குமிடையில் பெரும்மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் படையினரும் புலிகளும் மட்டும் பலியாகவில்லை. பொதுமக்களும் கொல்லப்பட்டனர். படைகள் திட்டமிட்டே பொதுமக்களைப் படுகொலை செய்தன. “ஆயுதமேந்திய தரப்புகள் மோதிக் கொள்வதற்குப் பதிலாக ஏன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? போராளிகளை இலக்கு வைப்பதற்குப் பதிலாக எதற்காக மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்?“ என்று இன்றைய வாசகர்களும் இளைய தலைமுறையினரும் கேட்கக் கூடும். காஸாவில் மக்களின்மீதும் அவர்களுடைய வாழிடங்களின் மீதும் இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதையேதான் இலங்கையில் – இந்தத் தீவுகளில் – இலங்கைப் படையினர் செய்தனர். உள்நாட்டுப்போரில் எப்போதும் மக்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில்தான் அதிகமாக மக்கள் கொல்லப்படுவதுமுண்டு. மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு தரப்பும், அந்த ஆதரவை இல்லொதொழிப்பதற்காக இன்னொரு தரப்பும் இலக்கு வைப்பது மக்களேயே. ஆகவேதான் மக்கள் எப்போதும் தங்களுடைய தலைகளை இழக்க வேண்டியேற்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒன்றும் வெறும் புள்ளி விவரக் கணக்கல்ல. அல்லது இந்த மாதிரிப் படுகொலைகள், புதைகுழிகளைப் பற்றிய கதைகள் வெறும் செய்திகளோ தகவல்களோ அல்ல. அதற்குமப்பால், இந்த நவீன உலகில் நாமெல்லாம் நீதி, அறம், விழுமியம், வாழ்க்கை குறித்த பல்வித நோக்குகள், மனித மாண்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு முன்னே நிகழ்ந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் பெருக்கெடுக்க நிகழ்த்தப்பட்ட மனித அழிப்பு நடவடிக்கைகளாகும். அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அப்பாவிச் சனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், காணாமலாக்கப்படுதல்களாகும். அதாவது கீழ்மை அரசியலின் வெளிப்பாடுகள். இந்த அநீதியை – கொடூரத்தை – மானுட அழிப்பை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாரும் மறந்து விட முடியாது; மறந்துவிடக் கூடாது. இதைப் பேசியே ஆக வேண்டும். அநீதியை, கொடூரத்தை, மானுட அழிப்பை, மனித விரோதத்தைப் பேசாமல் விட்டால் அது அநீதிக்கும் கொடூரத்துக்கும் மனிதகுல விரோதத்துக்கும் உடன்பட்டுப்போவதாகவே இருக்கும். என்பதால்தான் ஷோபாசக்தி இதைப்பேசுகிறார். புனைவிலும் இவ்வாறான ஆவணப்படுத்திலும் என இரு தளங்களிலும் இவற்றைப் பேசியுள்ளார். இது அவருள் அடங்காதிருக்கும் தாகமும் அணையாதிருக்கும் நெருப்புமாகும். இரண்டினுடைய முக்கியத்துவமும் பெறுமதியும் வேறு. இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்துச் சுதந்திரமான, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணைகளை விரைந்து நடத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் காலம் கடந்து இப்போதாவது நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் மீதான மவுனமும் புறக்கணிப்பும் மூடி மறைத்தலும் தட்டிக் கழித்தலும் உண்மையான சமாதானத்தை உண்டாக்கிவிடாது. கடந்த காலங்களில் போர்கள் நிகழ்ந்து இன்று அமைதி நிலவும் உலகிலுள்ள பல்வேறு நிலங்களில் பொறுப்புக் கூறலும் நீதி வழங்கலுமே நீடித்த சமாதானத்தையும் பகை மறப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. இலங்கையிலும் அது நிகழ வேண்டும்.” என்ற நோக்கில் இதனுடைய வரலாற்று முக்கியத்துவமும் பெறுமானமும் அமைகிறது. ஆம், நீதியைப் பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. நீதி நமக்குக் கிடைப்பதற்காக – நாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக – நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த உண்மைகளை, ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தனக்குச் சாத்தியமான வழிகளில் ஷோபாசக்தி அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்போல சாத்தியமான அனைவரும் தொழிற்படுவது அவசியம். விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் கூட்டுச் செயற்பாட்டின் விளைவாலானவை. கூட்டுச் செயற்பாடு, கூட்டுக் குரல் போன்றனவே உலகத்தின் கவனத்தைப் பாதிக்கப்பட்டோரின் பக்கமாகத் திருப்புவதற்கான அழைப்பு அடையாளமாகும். இந்த நூல் மேலும் பல குரல்களை – உண்மைகளை – மேலுர்த்திப் பேச வைக்கும் என நம்புகிறேன். அதற்கான தூண்டல்களை, முன்மாதிரிகளை உருவாக்குகிறது. இதனைச் சரியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘கருப்புப் பிரதிகள்‘ பதிப்பகத்துக்கு பாராட்டுகள். ஷோபாசக்திக்கு நன்றி. நீதிக்கான பயணத்தில் இப்படிப் பல தரப்புகளும் இணைந்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ (பக்கங்கள்: 144). நூல் கிடைக்குமிடம்: கருப்புப் பிரதிகள் பதிப்பகம் – சென்னை (WhatsApp : +91 9444272500). https://arangamnews.com/?p=12464

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

1 month 2 weeks ago
பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன் “நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான். அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின. பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன். அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு. நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள். சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும் எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ? இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ? இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத் தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக் கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர் சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார். பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது. இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது? அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான். இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார். மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று. எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா? https://www.nillanthan.com/7955/#google_vignette

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

1 month 2 weeks ago

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

Old_Kachcheri_Old_Park_Jaffna-cccc-1024x

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான்.

அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது.

மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின.

பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன்.

அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு.

நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள்.

சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும்  எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ?

இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ?

இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத்  தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக்  கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய  காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர்  சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது  தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின்  பிரதிநிதிகள்  அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார்.

20170103_044031535_iOS-1024x768.jpg

பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த  பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட  நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது.

இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே  யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது?

அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான்.  இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.

மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று.

எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட  ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய  முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா?

https://www.nillanthan.com/7955/#google_vignette

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை

1 month 2 weeks ago
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பு - தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின! 30 Nov, 2025 | 12:43 PM திருகோணமலை மாவட்டம் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று (30) அதிகாலை உடைப்பெடுத்ததால் வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன. மகாவலி கங்கையின் நீர்வரத்து அப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் அங்கிருந்து அனர்த்தப் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232031 மாவிலாற்றுப் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர்கள் 30 Nov, 2025 | 12:52 PM மாவிலாற்றுப் பகுதியில் இலங்கை விமானப்படையானது ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிக்கொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிக்கொப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிக்கொப்டர் ஆகியன மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. https://www.virakesari.lk/article/232032

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
இலங்கையை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு மும்முனை ரி - 20 தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:22 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் எதிர்பார்த்தவாறு மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு இலகுவாக அமையவில்லை. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 115 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சிரமத்துக்கு மத்தியில் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பயினானது. பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 36 ஓட்டங்களையும் சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவிச்சில் பவன் ரத்நாயக்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை துடுப்பாட்டத்தில் காமில் மிஷார மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார். அவரது சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது.ஆனால், இலங்கையின் எஞ்சிய 9 விக்கெட்கள் 31 மேலதிக ஓட்டங்களுக்கு சரிந்தன. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது.பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231983

போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா: படைகளை திரட்டும் வெனிசுவேலா - என்ன நடக்கிறது?

1 month 2 weeks ago
வெனிசுவேலாவை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? டிரம்ப் அறிவிப்பால் பதற்றம் பட மூலாதாரம்,Getty Images 30 நவம்பர் 2025, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெனிசுவேலா வான்வெளி மூடப்பட்டிருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'காலனித்துவ அச்சுறுத்தல்' விடுப்பதாக வெனிசுவேலா குற்றம்சாட்டியுள்ளது. அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம், டிரம்பின் கருத்துகளை வெனிசுவேலா மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற தாக்குதல் என்று கூறியுள்ளது. போக்குவரத்துத் துறையில் நிச்சயமற்ற சூழல் உருவாகவும், விமான நிறுவனங்கள் அங்கு விமானங்களை இயக்காமல் தவிர்க்கவும் டிரம்பின் இணையதள பதிவு, காரணமாக அமையக்கூடும். கரீபியன் தீவுகளில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இது போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள், 'தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி' என்று கூறி நிராகரித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவில், "விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகிய அனைவரும், வெனிசுவேலாவின் வான்வெளியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் முழுவதும் மூடப்பட்டிருப்பதாகக் கருதவும்" என்று பதிவிட்டிருந்தார். இதுபற்றி கருத்து கேட்க பிபிசி தொடர்புகொண்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை. "வெனிசுவேலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக"அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விமான நிறுவனங்களை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் இந்த கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. "இந்த ஒழுக்கமற்ற தாக்குதல் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகத்தையும், உலகின் சுயாட்சி அரசுகளையும், ஐநாவையும், இது தொடர்புடைய பல்தரப்பு அமைப்புகளையும் நேரடியாக அழைக்கிறோம்" என்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் வெனிசுவேலாவின் வெளிநாட்டு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது. முன்னதாக, 48 மணி நேர காலக்கெடுவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க தவறியதால், ஐபீரியா, டிஏபி போர்ச்சுகல், கோல், லாடம், ஏவியன்கா மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்க வெனிசுவேலா புதன்கிழமை தடை விதித்தது. உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் கப்பலையும் சுமார் 15,000 படையினரையும் வெனிசுவேலாவுக்கு அருகில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 1989-ல் பனாமாவை ஆக்கிரமித்த பிறகு இந்தப் பகுதிக்கு இவ்வளவு பெரிய படையை அனுப்புவதற்கான காரணம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதே என்று அமெரிக்கா கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் (கோப்புப் படம்) வெனிசுவேலாவில் தரைவழி போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் மிக விரைவில் தொடங்கும் என்று டிரம்ப் வியாழனன்று எச்சரித்தார். அமெரிக்கப் படைகள் போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாகக் கூறி படகுகள் மீது குறைந்தது 21 தாக்குதல்களை நடத்தி எண்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன. எனினும், அந்த படகுகள் போதைப்பொருள் கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை. வெனிசுவேலா அரசாங்கம், இந்த அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் மதுரோவை பதவி நீக்கம் செய்வதே என்று நம்புகிறது. கடந்த ஆண்டு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெனிசுவேலா எதிர்க்கட்சியும் பல வெளிநாடுகளும் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டின. மதுரோ தலைமையில் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் அல்லது கார்டெல் ஆஃப் தி சன்ஸ் என்ற குழுவை, ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒரு அமைப்புக்கு பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அமெரிக்க சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதை குறிவைத்து அகற்றுவதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4d262100yo

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 2 weeks ago
அண்ணா உங்களுக்கு இந்தியர்கள் பற்றி மிக அதிகம் தெரியும் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்தது அவர்கள் ரஷ்யா எங்கள் உண்மையான நண்பன் ஆகவே ரஷ்யா எப்படியாவது உக்ரேனை அடித்து அழித்து பிடித்துவிட வேண்டும் என்ற நிலையில் இருப்பார்களம் அது திராவிட தமிழனாகவோ சீமான் தமிழனாகவோ ஹிந்திகாரக இருந்தாலும் . ஆனால் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பு தேடி வந்து வாழ்கின்ற ரஷ்ய விசுவாசிகள் எம்மவர் சிலரின் நிலை தான் விசித்திரமானது. எமது நாடுகளில் ரஷ்யா பற்றிய செய்திகள் வந்தா அது எல்லாம் சாதிகார வெஸ்டர்ன் நாடுகளின் திட்டமிட்ட சூழ்ச்சி ரஷ்யா என்ற நல்லவனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் எந்த பின்புலமுமில்லாமல் செய்தி. ஆனால் புடினின் தகவல் toolbox ல் இருந்து வருகின்ற ரஷ்ய சார்பு தவறான தகவல்களை பரப்புகின்ற தளங்கள் பிராவ்தா நெட்வொர்க் செய்திகள் தான் உண்மையானவை.

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

1 month 2 weeks ago
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன் வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது. இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத் தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று. அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான். அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று. நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல. அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர். ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான். சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு. ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல. விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும் சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி. ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள் நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார். ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார். அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது. தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது. இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன் மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத் கனேடிய தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான். https://www.nillanthan.com/7959/

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

1 month 2 weeks ago

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

590766592_824918727098699_52485070505619

வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது.

இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய  தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத்  தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில்  மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று.

அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான்.

அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று.

நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

AKD-JVP-commemoration.jpg

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல.

அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர்.

ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து  சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல.

ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான்.

சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு.

589343022_1305779798257307_1048150586159

ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல.

விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும்  சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி.

ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள்  நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும்.

ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார்.

ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது.

தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது.

இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன்  மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு  நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத்   கனேடிய  தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான்.

https://www.nillanthan.com/7959/

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

1 month 2 weeks ago
வடமராட்சி கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் கால்நடைகள் 30 Nov, 2025 | 11:22 AM நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்துள்ளன. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை. https://www.virakesari.lk/article/232019

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை

1 month 2 weeks ago
Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 12:38 PM மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232018 மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு Nov 30, 2025 - 01:38 PM மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell-412 மற்றும் MI-17 ஆகிய இரண்டு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmilfuau90276o29nnnccan8m

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை

1 month 2 weeks ago

Published By: Digital Desk 3

30 Nov, 2025 | 12:38 PM

image

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232018

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

Nov 30, 2025 - 01:38 PM

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

 இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell-412 மற்றும் MI-17 ஆகிய இரண்டு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmilfuau90276o29nnnccan8m

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்!

1 month 2 weeks ago
வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்! 30 Nov, 2025 | 10:37 AM வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது. அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை. பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை. இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள். முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/232012

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்!

1 month 2 weeks ago

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்!

30 Nov, 2025 | 10:37 AM

image

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது.

அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை.

 பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை.  இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள்.

முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். 

590741175_10225183198486271_442353911307

https://www.virakesari.lk/article/232012

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

1 month 2 weeks ago
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில் 30 Nov, 2025 | 01:38 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைதான 19 மாணவர்களும் நேற்றையதினமே யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உசைன் உத்தரவிட்டார் https://www.virakesari.lk/article/232037

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

1 month 2 weeks ago

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

30 Nov, 2025 | 01:38 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைதான 19 மாணவர்களும் நேற்றையதினமே  யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உசைன் உத்தரவிட்டார்

https://www.virakesari.lk/article/232037

மறு அறிவித்தல் வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

1 month 2 weeks ago
A/L உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு Nov 30, 2025 - 01:39 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார். மின்சாரத் தடை மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாகப் பரீட்சைகள் குறித்து வினவி பரீட்சை திணைக்களத்திற்குப் பொதுமக்களிடமிருந்து அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதன் காரணமாகவே, பரீட்சை ஒத்திவைப்பு குறித்த இந்தத் தீர்மானத்தை மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எனவும், புதிய திகதிகள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmilfwg900277o29nmdld9vq8