Aggregator

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

1 month 1 week ago
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அனர்த்த காலத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

1 month 1 week ago

அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த அனர்த்த காலத்தில்  முழு நாடும்  ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். 

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 54 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'எதிர்காலத்தில் நடக்கும், தனிப்படட ஒருவரின் சம்பவங்களை முன்னறியும் திறன் உண்மையா?' இந்த நூல்களில், எதிர்காலத்தில் நடக்கும் ஒன்றை நேரத்துடன் முன்னமே பார்க்கும் திறன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை வாய்மொழியாகக் முன்னறிவிக்கும் திறன், மற்றும் அறிவு, பகுப்பாய்வு அல்லது அவதானிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வைப் பற்றி கணிக்கும் திறன் [Foreseeing, foretelling and predicting] ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக புத்தரின் வாயிலிருந்து, 12-30. இல், "மரியாதைக்குரிய ஐயா, புத்தர் உங்களைப் பற்றி முன்னறிவித்துள்ளார்: எதிர்காலத்தில், துறவி மகிந்த தீவுக்கு புத்த மதத்தைக் கொண்டு வருவார். புத்தரின் போதனைகளைப் பரப்புவார், சன்மார்க்கத்தை நிலைநாட்டுவார், துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். வலிமையான மற்றும் நிலையான பாதையில் அவர்களை வழிநடத்துவார். அவருடைய பணி பலருக்கும் நன்மை பயக்கும்." என்கிறது. பௌத்தர்கள் இவற்றை நம்பலாம், ஆனால் இவை நிதானமான, உண்மையான வரலாறு அல்ல. இராமாயணம், மகாபாரதம் போல ஒரு புராணக் கதையே! அது மட்டும் அல்ல அங்கிருந்தும் பல நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தர் இன்னும் ஒரு முன்னறிவித்தலில், 15-73, “அந்த நேரத்தில் தீவு, தம்பபாணி [Tambapaṇṇi] என்ற பெயரில் அறியப்படும்; அந்த மிகச்சிறந்த தீவில் அவர்கள் என் உடலின் ஒரு நினைவுச்சின்னத்தை [தாதுவை] அங்கு வைப்பார்கள்." இந்த குறிப்புகளில் உள்ள நினைவுச்சின்னம் புத்தரின் வலது காறை எலும்பு [right-collar bone] ஆகும், இது இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடமான, தூபாராமயவில் (Thuparamaya) கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நூல் எழுதிய பக்திமான்களுக்கு, சர்வ ஞானியான புத்தர் தனது உடலில் இரண்டு நினைவுச்சின்னங்களை இலங்கையில் வைத்திருப்பார் என்று அன்று அவர்கள் உணரவில்லை போலும்! தீபவம்சத்தில் உள்ளிணைக்கப்பட்ட வலது காறை எலும்பும் மற்றும் அசாதாரண அளவிலான பல்லும் இந்த இரண்டும் ஆகும்! தீபவம்சத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Cūḷavaṃsa) பல்லின் வருகை கண்டு பிடிக்கப்பட்டது; அது புத்தர் இறந்து சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகும். சூலவம்சத்தின் [Culavamsa] வருங்கால ஆசிரியர் ஒருவர், புத்தரின் பல் என்ற மற்றொரு நினைவுச்சின்னத்தின் வருகையை கண்டுபிடிப்பார் என்று தீபவம்சத்தின் ஆசிரியர் அன்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அல்லது முன்னறியவில்லை அல்லது அவரால், இதையும் புத்தரின் வாயிலிருந்து பெற முடியவில்லை? 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' என்ற புத்தகத்தின் பக்கம் 411 இல், பல்லின் அளவை 2 அங்குல நீளம் மற்றும் ஒரு அங்குல விட்டம் எனக் கூறுகிறது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' இல், பக்கம் 176 இல், சிவனொளிபாத மலையின் [ஆடம்ஸ் சிகரம் / Adam’s Peak] மீது ஐந்தடி ஏழு அங்குல நீளமும், இரண்டடி ஏழு அங்குல அகலமும் கொண்ட தடயத்தை கூறுகிறது. இரண்டும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. புத்த துறவிகள் தங்கள் கற்பனைகளில் இவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும், 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கங்கள் 31 மற்றும் 32 இல், பல் நினைவுச் சின்னம் போர்த்துக்கேயர்களால் [Portuguese] கைப்பற்றப்பட்டு, அதைத் தூளாக்கி, பொடியை எரித்து சாம்பலாக்கி, பின்னர் கடலில் கரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட அளவீடு, 1815 இல் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், அதாவது, போர்த்துக்கேயர்களால் அசல் அழிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அளவீடு செய்யப்பட்டது ஆகும். என்றாலும் பல்லை பாதுகாக்கும் துறவிகள், புத்திசாலித்தனமாக இரண்டு கதைகளை கண்டுபிடித்தனர். ஒரு கதையில், அழிக்கப்பட்ட பல் உண்மையில் அசல் மூலத்தின் நகல் என்கிறது. இரண்டாவது கதையில், தூளாக்கி, பொடியாகிய பல், தெய்வீக சக்தியால், ஒன்றிணைத்து அசல் பல்லாகி, முன்னைய வடிவத்திற்கு மீண்டும் வந்தது ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேடம் எலனா பெத்ரோவ்னா பிளவாத்ஸ்கி [Helena Petrovna Blavatsky, அல்லது பொதுவாக எலனா பிளவாத்ஸ்கி அல்லது பிளவாத்ஸ்கி அம்மையார் என்பவர் பிரம்மஞானத்தையும் பிரம்மஞான சபையையும் தோற்றுவித்தவர் ஆவார்.] இலங்கைக்கு விஜயம் செய்தார், மேலும் பல்லின் நினைவுச்சின்னம் அவருக்குக் காட்டப்பட்டது. அப்பொழுது, அது ஒரு முதலையின் பல்லின் அளவு பெரியது என்று உடனடியாக கூச்சலிட்டார். 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கம் 246 இன் கீழே பார்க்கவும். அத்தியாயம் 13 இல் நிறைய அற்புதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. எட்டு நிலநடுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. அத்தியாயம் 13 முக்கியமாக மத விடயங்களைப் பற்றியது, மேலும் மத விடயத்தின் உரிமைகள் மற்றும் தவறுகளை பகுப்பாய்வு செய்வது இங்கு எமது நோக்கம் இல்லை. அத்தியாயம் 14, மத விடயங்கள், பூகம்பங்கள், விகாரைகள் கட்டுதல் போன்றவற்றைப் பற்றியது, மேலும் இது பற்றி கருத்து தெரிவிப்பது எமக்கு அவசியம் இல்லை. தமிழர்களின் நேர்மையான நலனை நேரடியாக பாதிக்காத எந்த மத விடயத்திலும் கருத்து தெரிவிக்கப்படாது. அதில் எமக்கு அக்கறையில்லை. மகிந்த தேரர் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜம்புதீபாவிற்கு (இந்தியாவிற்கு) திரும்பிச் செல்ல விரும்பினார். காரணம், இலங்கையில் வழிபட புத்தரின் நினைவுச்சின்னம் இல்லை என்று சுட்டிக்காட்டினார், 15 - 1 முதல் 5 வரை பார்க்கவும். Part: 54 / Appendix – Dipavamsa / 'Is it true that an individual can predict future events?' Foreseeing, foretelling and predicting happen very often, and especially from the mouth of the Buddha, 12-30. The Buddhists may believe these, but these are not sober history. Buddha foretold, 15-73, “...they will deposit a relic of my body in the most excellent island”. The relic in reference is the right-collar bone of Buddha, which was allegedly interned in the Thuparama. Unfortunately for the pious, the omniscient Buddha didn’t realize that there would be two relics of his body, the right collar bone which was interned in the Dipavamsa and a tooth of abnormal size. The arrival of tooth relic was invented in the Culavamsa which was written about seven hundred years after the Dipavamsa; about one thousand two hundred years after the Buddha’s death. The author of the Dipavamsa never expected a future author of the Culavamsa would invent the arrival of another relic, the tooth of Buddha, and therefore could not get this also from the mouth of the omniscient Buddha. Page 411 of ref - 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' gives the size of the tooth relic as 2inches in length and one inch in diameter. Page 176 of ref - 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the footprint on the Adam’s Peak as five feet seven inches in length and two feet seven inches in breadth. Both could not belong to a human kind. Monks invented these in their flight of fancies. Furthermore, on the pages 31 and 32 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' , it is stated that the tooth relic was captured by the Portuguese and it was ground to powder, burnt the powder into ashes and then dissolved the ashes in the sea. The measurement quoted above was made just after the conquest of Kandy in 1815, more than two hundred years after the destruction of the original by the Portuguese. The custodian monks smartly invented two stories. One storey was that the obliterated tooth was in fact a copy of the original and the other storey was that the ground tooth reformed to its shape by the divine power. Madame Helena Petrovna Blavatsky visited Ceylon during the latter part of the nineteenth century and the tooth relic was shown to her, and she immediately exclaimed that it was as large as that of an alligator. See the bottom of the page 246 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' . Quite a lot of miracles are described in the chapter 13. Eight earthquakes occurred one after the other. Chapter 13 is mainly of religious matters, and it is not intended here to analyse the rights and wrongs of the religious matter. Chapter 14 is also about religious matters, earthquakes, construction of viharas etc., and it is not intended to comment on these. Any religious matter, which is not directly jeopardizing the bona fide interest of the Tamils, will not be commented upon. Mahinda Thera wanted to go back to Jambudipa (India) after about five months, indicating that there is no relic of Buddha in Lanka to worship, 15 – 1 to 5. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 55 தொடரும் / Will follow துளி/DROP: 1924 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54] https://www.facebook.com/groups/978753388866632/posts/32626689843646241/?

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

1 month 1 week ago
இது பகிடிவதை அல்ல சகோதரவதை. “அறியாதார் வாயில் மண்ணு” இதனைத் தீர்க்கப் பெற்றோரிடம் சென்றிருக்க வேண்டும். ஏன் நீதிமன்றம் சென்றார்கள்.???🤔

குட்டிக் கதைகள்.

1 month 1 week ago
கெட்டவன் கருப்பு · Suivre Stsdeporno641h u93t3n8826622t883vo4,082b 01e:gcrmec26acg715g · ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார். அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க. அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க. அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர். கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம். இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் , "நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ.........!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலிலாலி லாலோ (3) லாலிலாலி லாலோ…ஓ.. என் மச்சான… மச்சான…ஆ… பெண் : மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே பெண் : குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில் நான் அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே பெண் : ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் கட்டில் தனியாக அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : {பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க} (2) பெண் : அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள பெண் : கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : {கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் (2) பெண் : புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக பெண் : தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க பெண் : பூ போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்.......! --- மச்சான பார்த்தீங்களா ---

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

1 month 1 week ago
முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.

படுபட்சி நாவல்: விசாரணை

1 month 1 week ago
கிரிதரன் பதிவு 'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி... எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு: "படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது. .. இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால் அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே....தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல், யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது. ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்...யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான் உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காதுஅலட்டும் அரைகுறை 'அறிவுஜீவி'களுக்கு) சொல்லிவிடுகின்றேன். .. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த, அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும் என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு." கதாசிரியரின் நாவலின் நம்பகத்தன்மையை எல்லாம் சுட்டிக்காட்டும் இளங்கோவுக்கு ஏன் நாவலே கட்டமைக்கப்பட்ட கற்பனை என்ற எண்ணம் தோன்றவில்லை? மிகவும் நியாயமாக உருவாகியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் இக்கேள்வி அவரிடத்தில் எழவில்லை. நூலைச் சரியாக விமர்சனரீதியில் அணுகியிருக்கும் இளங்கோவுக்கு ஏன் இச்சந்தேகம் எழவில்லையென்பது ஆச்சரியமானதுதான். கதாசிரியர் தனக்கு இழைக்கப்பட்டதாகக்குறிப்பிட்ட எந்தவொரு சம்பவம் பற்றியும் நான் ஊடகச் செய்திகள் எவற்றிம் வாசித்ததாக நினைவில்லை. அப்படி வந்திருந்தால் அறியத்தாருங்கள். என் கருத்தை மாற்றிக்கொள்கின்றேன். உண்மையில் இக்கதையே தமிழ் மக்களின் துயரைப் பாவித்து , தமிழகத்து இலக்கிய வியாபாரிகளின் நலன்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட விற்பனைப் பண்டமென்றால் அது மிகவும் பாரதூரமானது. கண்டிக்கப்பட வேண்டியது. தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றில் பொய்யைப் புகுத்துமொரு செயலாகவே அது கருதப்படும். அது உண்மையான துயர்மிகு வரலாற்றின் நேர்மையைக் களங்கப்படுத்துமொரு செயலாகவே அமையும். இளங்கோவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் எழுப்பியிருக்கும் முக்கிய கேள்விகள் -உண்மையில் இந்நூலில் குறிப்பிட்ட , நூலாசிரியருக்கு இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா? அவர் அவற்றுக்காக ஒருபோதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையா? அப்படி எடுத்திருந்தால் அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டா? இவற்றுக்கான பதில்கள் தெரியாமல் இந்நூலைச் சரியாக அணுக முடியாது. இனிமேல் இளங்கோவின் நூல் பற்றிய முக்கிய் விமர்சனக் குறிப்புகளை வாசியுங்கள். அவை வருமாறு: 1. இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது. "காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143). நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும். 2. டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>> இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ, அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்.. டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின் கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும். அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம் நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். 3. இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றாய் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம். ஆனால் நாவல் முன்னட்டையில் விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஸன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமைகோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம். 4. மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது. Facebook Profileஇல் பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல், Jan 2011- Jan 2014 இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3]. அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில் 2011-2014 வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்? திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது. 5. டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன். ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க் நூலில் காலம் மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது. அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது, கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்? இளங்கோவின் முகநூற் பதிவை முழுமையாக வாசிக்க - https://www.facebook.com/elanko.dse/posts/pfbid024jMs7sRK7f5Dq9NnASSkQXveZJHt5gEnnLzb3sQKb42z5LD7C7UL6P14w3qzwTxal [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை

1 month 1 week ago
சுனாமி நேரம் சிங்களம் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வருவதை தடுக்க முடியல .

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

1 month 1 week ago
இம்முறை பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் இல்லாமல் மாவீரர் தினம் பழைய காலம் போல அமைதியாக உணர்ச்சிபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. கிருபன் ஜி வழமைபோல் மாவீரர் தின உரையை எங்கோ தேடிப்பிடித்து இணைத்துள்ளார். தலைவரின் புதல்வி என உரிமை கோரும் ஒருவரின் மாவீரர் தின உரையும் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

1 month 1 week ago
சிறப்பான நடவடிக்கை. படிக்க வந்துவிட்டு சொறி சேட்டை செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வியை தொடர அனுமதிக்ககூடாது.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

1 month 1 week ago
திருநெல்வேலி சம்பவம் போதைப்பொருளுடன் சம்மந்தப்பட்டது என இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டபோது கூறினார். பிரான்ஸ் இளைஞர் பற்றிய செய்தி இணைப்பை தாருங்கள். @விசுகு அவர்கட்கு தெரியுமா சம்பவம் பற்றி. தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை விட போதைப்பொருள் பிரச்சனைகளை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டுவதாக இன்னோர் இலங்கை நண்பர் கூறினார்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month 1 week ago
எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் மாநிலம் தமிழ்நாடா அல்லது இலங்கையா?? ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் துள்ளி வருகுவது??

பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்

1 month 1 week ago
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு Dec 1, 2025 - 11:06 AM நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன. குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 88 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும், அனர்த்தங்கள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmimpv7gr028ko29n9qrz4n2s

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை

1 month 1 week ago
மாவிலாறு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மீட்பு 01 Dec, 2025 | 10:46 AM திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, திங்கட்கிழமை (01) நிலவரப்படி, மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர். மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232116

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
கோலியின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை - சாதனை சதத்தின் 3 முக்கிய கட்டங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் 25 பந்துகளிலேயே கோலி 2 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே மூன்றாவது முறை கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து: நாண்ட்ரே பர்கர் வீசிய பந்து 'அவுட் சைட் எட்ஜ்' ஆகி பௌண்டரி எல்லையை அடைந்தது. நான்காவது ஓவரின் நான்காவது பந்து: பந்து பேட்டரின் காலில் பட, தென்னாப்பிரிக்க அணி எல்பிடபிள்யூ அப்பீல் செய்கிறது. ஆனால், நடுவர் மறுத்துவிடுகிறார். நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்து: டிஃபண்ட் செய்ய பேட்டர் முற்பட, 'இன்சைட் எட்ஜ்' ஆகி ஒரு ரன் கிடைக்கிறது. யஷஷ்வி ஜெய்ஸ்வாலை அந்த ஓவரின் முதல் பந்தில் பர்கர் வெளியேற்ற, அந்த ஓவரின் மிச்ச பந்துகளை சந்தித்தது விராட் கோலி. ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவருடைய இன்னிங்ஸ் இப்படி சில எட்ஜ்களும், அப்பீலுமாகத்தான் தொடங்கியது. ஆனால், ஒருசில பந்துகளிலேயே அதையெல்லாம் நிவர்த்தி செய்த விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 52வது சதம். இதன்மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) முறியடித்தார் விராட் கோலி. ஆனால், கோலியின் இந்த இன்னிங்ஸ் சீராக ஒரே மாதிரியானதாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை அவர் மாற்றவேண்டியிருந்தது. அதனால் அவர் தன் ஆட்டத்தை மூன்று கட்டங்களாக வடிவமைத்தார். கட்டம் 1: ஃபீல்டிங் வியூகத்தை தகர்த்த கோலி முதல் பந்தில் எட்ஜ் மூலம் பௌண்டரி கிடைத்த அவருக்கு, அடுத்த 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் சந்தித்த பத்தாவது பந்தில் ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார் கோலி. அதன்பிறகு அவர் கொஞ்சம் வித்தியாசமான பாணியிலேயே தன் இன்னிங்ஸை அணுகினார். முதல் 18 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த கோலி, அடுத்த 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பந்துகளை சிக்ஸரும் அடித்தார். வழக்கமாக ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடியும், பவுண்டரி மூலமுமாகவே பெரும்பாலான ரன்களை சேர்க்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் தான் சந்தித்த முதல் 25 பந்துகளிலேயே இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது இதுவே மூன்றாவது முறை என்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதள தரவு. அதிலும், முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் இதுவே முதல் முறை. தென்னாப்பிரிக்க அணி விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு முயற்சி செய்தது. 30 யார்ட் வட்டத்துக்குள் இருக்கும் முக்கிய ஃபீல்டிங் பொசிஷன்களில், ஃபீல்டர்கள் வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து சற்று முன்னே நின்றார்கள். கோலியின் பிரதான ஷாட்கள் மூலம் வரும் ரன்களைக் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் அந்த முயற்சியை செய்தனர். இந்நிலையில் தான் வழக்கமாக தரையோடு ஆடும் விராட், வான் நோக்கி அதிகம் அடிக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூட இதைப் பற்றி X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "விராட் கோலி இந்த இன்னிங்ஸில் காட்டும் ஆக்ரோஷம் முக்கியமாக ஃபீல்டிங் பொசிஷன்களால் தான். 'உங்கள் ஃபீல்டிங் மூலம் நீங்கள் எதையும் நிர்ணயிக்க முடியாது' என்று அவர் சொல்லும் செய்தி தெளிவாகப் புரிகிறது. அந்த எண்ணம்! அந்த அறிவிப்பு!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சிக்ஸர் அணுகுமுறையை முதல் பவர்பிளேவுக்குப் பின்னருமே கோலி தொடர்ந்தார். கார்பின் பாஷ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி விராட் கோலி ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடிப்பது இது மூன்றாவது முறை. 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 360 என்ற இலக்கை சேஸ் செய்த போது கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அன்று, ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதத்தை (52 பந்துகள்) பதிவு செய்திருந்தார் அவர். பெரிய இலக்கு என்பதால் அந்த அதிரடி தேவைப்பட்டிருந்தது. அதேபோல், 2023ல் இலங்கைக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுகூட சதம் அடிக்கும்வரை அவர் 1 சிக்ஸர் தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 71 ரன்கள் அடித்திருந்தபோதே 5 சிக்ஸர்கள் அடித்துவிட்டார் கோலி. தங்கள் ஃபீல்டிங் மூலம் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் வியூகம், கோலியின் எதிர்பாராத அதீத அதிரடியால் தகர்ந்து போனது. கட்டம் 2: ஆடுகளம் மற்றும் விக்கெட் வீழ்ச்சிக்கு எதிராக நிதானம் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 61 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோலி. அப்போது அவர் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்திருந்தார். ரோஹித்தும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டியதால் இருவரும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது. அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்திருந்தார் கோலி. ஆனால், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ரன்ரேட் குறைந்தது. சரியாக அந்த சமயத்தில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது. அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வேகமாக ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். அதனால் அங்கு தென்னாப்பிரிக்காவின் கையும் சற்று ஓங்கியது போல் தோன்றியது. இப்படியான சூழ்நிலையில் விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்த கோலி, நிதானமாக ஆடத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆடுகளத்தின் தன்மை மாறிய பிறகு அதிரடியைக் குறைத்து நிதானமாக விளையாடினார் விராட் கோலி ரோஹித் ஆட்டமிழந்த பிறகு அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். சிக்சர் ஏதும் அடிக்கவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, "20-25 ஓவர்களுக்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு மெதுவாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். முதலில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்குக்கு ஏற்ப அதிரடி காட்டியவர், அதன்பின் சூழ்நிலையை உணர்ந்து அப்படியே தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருந்தார். இதன்மூலம் விக்கெட் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி ஒருபக்கம் இருந்ததால், மற்றொரு சீனியர் வீரர் கே.எல்.ராகுல் செட்டில் ஆகவும் அது உதவிகரமாக இருந்தது. ஆடுகளம் சற்று மெதுவாகியிருந்தாலும், கோலியின் அணுகுமுறையால் தென்னாப்பிரிக்க அணியால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. இது இறுதி கட்டத்தில் இந்தியா அதிரடி காட்ட உதவிகரமாக இருந்தது. கட்டம் 3: பெரிய இலக்கை நோக்கிய அதிரடி இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பேட்டிங் செய்வது சற்று சாதகம் இருக்கும். அதனால்தான் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதனால், பெரும்பாலான வல்லுநர்கள் இந்திய அணி 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கவேண்டும் என்று கருதினார்கள். 38வது ஓவருக்குப் பின்பான கோலியின் அதிரடி இந்தியாவை அந்த இலக்கு நோக்கிப் பயணிக்கவைத்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,38வது ஓவருக்குப் பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்தார் கோலி. அதனால் இந்தியாவின் ரன்ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது ராகுல் ஓரளவு களத்தில் செட் ஆனபிறகு மீண்டும் வேகமாக ஆடத் தொடங்கினார் கோலி. சுப்ரயன் வீசிய 39வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் (அவர் சந்தித்த 5 பந்துகளில்) எடுத்தார். ஓட்னீல் பார்ட்மேன் வீசிய அடுத்த ஓவரிலுமே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஒருகட்டத்தில் குறைந்திருந்த ரன்ரேட், இந்த இரண்டு ஓவர்களில் காட்டிய அதிரடியால் மீண்டும் அதிகரித்தது. 38வது ஓவர் முடிவில் 6.13 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், 43வது ஓவரில் அவர் அவுட் ஆகும்போது 6.44 ஆக அதிகரித்தது. இதைத் தக்கவைத்த இந்திய அணி கடைசியில் 349 ரன்கள் எடுத்து, போட்டியை 17 ரன்களில் வென்றது. முறியடிக்கப்பட்ட சாதனையும் விமர்சனங்களுக்கான பதிலும் இந்த சதம், சர்வதேச அரங்கில் கோலி அடித்திருக்கும் 83வது சதம். ஒருநாள் போட்டிகளில் 52வது சதம். இதன் மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. கோலி, 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று கருதப்படுவதால், ஒருநாள் போட்டிகளில் அவர் மேலும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோலி கோலிக்கு 37 வயது ஆகியிருந்தாலும், அவருடைய ஷாட்களில் இருந்த துல்லியம், அவரது அணுகுமுறையில் இருந்த உறுதி, ஓடுவதில் இருந்த வேகம், நீண்ட இன்னிங்ஸை ஆடிய ஃபிட்னஸ் அனைத்துமே இன்னும் முன்பைப் போல் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள். சில வாரங்களுக்கு முன், பெரிய இடைவெளிக்குப் பின்பு கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய போது அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அங்கு முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆனதால், விமர்சனங்கள் வலுப்பெற்றன. தொடர்ச்சியாக ஆடாமல் இருப்பதால் அவர் தடுமாறுகிறார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், சிட்னியில் அரைசதம், இப்போது ராஞ்சியில் சதம் என அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய ஃபார்மை நிரூபித்திருக்கிறார் விராட் கோலி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mpw72j7x9o

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு

1 month 1 week ago
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு 01 Dec, 2025 | 10:48 AM மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பொலிஸார் ,இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம் பெயர முடியாத மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை (01) காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232118