Aggregator

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு

1 month 1 week ago

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு

Published By: Vishnu

02 Dec, 2025 | 03:58 AM

image

(நா.தனுஜா)

மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன.

அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

'மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்' என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/232189

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

1 month 1 week ago
கோப்பாய் பொலிஸ் பிரிவில் நபரொருவர் கொலை — சந்தேக நபர்கள் கைது! 02 Dec, 2025 | 11:14 AM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வாகனத்தில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடைய காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அதற்கு பழிதீர்க்கும் முகமாக விளக்கமறியலில் சிறையில் உள்ள நபரின் வழிகாட்டலுக்கமைய தெல்லிப்பழையில் வட்டி தொழில் செய்யும் ஒருவரிடம், கொலை செய்யப்பட்டவருக்கான தாக்குதலுக்கான திட்டம் கொடுக்கப்பட்டது. இதன்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்கள் இணைக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளதுடன் பிரத்தியேக கையடக்க தொலைபேசிகள், சிம்கள் வாங்கப்பட்டு அதன் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) திட்டமிட்டபடி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை திட்டத்தை மேற்கொண்ட வட்டித் தொழில் செய்பவர் தனது ஹயஸ் வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பதிவான காணொளி, கொல்லப்பட்ட நபரின் பின்ண்ணி என்பவற்றை வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டிய வர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232200

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார். இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை. 'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள். இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா................... இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா................... இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே........... புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

1 month 1 week ago
இன அழிப்பிற்கு மட்டும் தான் சிங்களவன் ஒற்றுமையானவன்.. இதர கொசுறு வேலைகளுக்கெல்லாம் தமிழனுக்கு நிகரானவன்கள்.😂

ரஷ்யாவிற்கு தூதர் பயிற்சி அளிப்பதாக கசிவு தோன்றியதை அடுத்து, டிரம்ப் விட்காஃப்பைப் பாதுகாக்கிறார்

1 month 1 week ago
ஐரோப்பிய ஒன்றியம் என ஒன்று இல்லாதிருந்தால் உக்ரேன் போர் வந்திருக்காது.அப்படி வந்திருந்தாலும் ஓரிரு மாதங்களில் நிறுத்தப்படிருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month 1 week ago
சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென..... காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
நான் அப்படி நினைக்கவில்லை இந்தியர்களை எடுத்து கொள்வோம் ரஷ்யா கெட்டது என்று தெரிந்தாலும் இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா என்று அதற்க்கு தானே விசுவாசமாக இருக்கின்றார்கள் . (பூட்ரின் இம்மாதம் இந்தியா வருகிறார் என்று சொன்னார்கள் ) வெளிநாடு வந்த பின்பு மதம் மாறி இலங்கை தமிழர்களை எடுத்து கொள்வோம் அவர்கள் நம்பி மாறிய புதிய மத கட்டனை படி விசுவாசமாக தானே நடக்கின்றனர். கண்டால் தொடங்கிவிடுவார்கள் Everything is happening according to the .......🤣 அவர்கள் அப்படியொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள். அனால் மற்றவர்களுக்கு ரஷ்யா தான் நேர்மையானவன் நல்லவன் வெஸ்டர்ன் நாடுகள் மோசமான கள்ளர்கள் என்று பிரசாரம் செய்வார்கள். கள்ளு உடலுக்கு தீங்கு என்று நான் குடிக்க மாட்டேன் ஆனால் மற்றவர்களுக்கு அது தான் சத்துணவு நீண்டகாலம் வாழ்வதற்கு ஏற்ற பானம் என்று வழி காட்டுவேன் 😂

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை

1 month 1 week ago
சிங்கள அரசுகள் இது வரைக்கும் இயற்கை/செயற்கையான அழிவுகளை வைத்து உலக நிதி/நிவாரணங்களை வைத்தே ஓடிக்கொண்டிருந்தது. இன்றைய அழிவுகள் இன்னொரு வரப்பிரசாதம். இதை வைத்து இன்னொரு பத்து வருடத்தை ஓட்டி விடுவார்கள். ஆனால் இடத்திற்கிடம் புத்தர் சிலை காவுதல் மட்டும் நிறுத்தப்பட மாட்டாது. புத்தர் சிலை உள் நாட்டு அரசியலுக்கு... இயற்கை அழிவுகள் வெளிநாட்டு அரசியலுக்கு...

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month 1 week ago
ஔவையார் நன்னெறிகளையும் திருவள்ளுவர் குறள்களையும் மனப்பாடம் செய்து பரீட்சையில் வெற்றி பெறுபவன் ஈழத்தமிழன்.அவை இரண்டும் உலகில் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் பொய்யான மகாவம்சத்தை படித்து பட்டதாரிகளாக வேண்டிய அவசியம் ஈழத்தமிழனுக்கு இல்லை.எனவே இலங்கை தமிழனுக்கு சகல தகுதியும் இருக்கு. அது போல் அவன் மண்ணுக்கும் பெறுமதி இருக்கு. மற்றும் படி குறை சொல்லும் பழக்கம் இந்த உலகில் யாருக்குத்தான் இல்லை?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
@ரசோதரன் குடிபெயர்ந்து நாடு தேடியோர் ஒரு நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வீக குடிகளை அழித்து அமெரிக்கா எனும் பெயரில் உலகையே வல்லாதிக்கம் செய்யும் நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள். 😂 இது பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்பது போல் இருக்கின்றது.😎 ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்காமைக்கான வெளிப்படையான உண்மையை பேசாமல் வெறுமனே ஒரு தற்போதைய தீர்வு சாத்தியமானது என்கிறீர்கள். அது என்ன குறைந்த /சாத்தியமான தீர்வு? உக்ரேனின் தற்போதைய போக்கு தனக்கு பாதுகாப்பில்லை என ரஷ்யா வெளிப்படையாக சொல்லியது. அதை யாரும் கேட்கவில்லை. அதற்காக கருங்கடல் கரையோரங்களை தன் பாதுகாப்பிற்காக சுவீகரித்துக்கொண்டுள்ளது.சுவீகரிக்கப்பட்ட பகுதி ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ள நிலப்பரப்பு. அதை விட பல தடவைகள் உக்ரேனிய அரசால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலப்பரப்பு. உங்கள் அன்பு அமெரிக்கா 🤣இந்த உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் இராணுவ முகாம்களை நிறுவி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.ஆனால் ரஷ்யா உலகம் முழுவதும் தன் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களை அமைக்கவில்லை.எனவே ரஷ்யா தன் பாதுகாப்பிற்காக தனக்கு வேண்டிய பகுதியை தன் அரணாக்கிக்கொண்டுள்ளது. எனக்கு உக்ரேன் விடயத்தில் மேற்கின் மீதான கருத்து விசுவாசமும் நன்றி விசுவாசமும் என்றுமே வரப்போவதில்லை. காரணம் எல்லாம் சுரண்டல் அரசியல்.அதை விட எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்றால் அது வாழ்க்கை அல்ல.நான் பெரும்பாலான ஜேர்மனியர்கள் பக்கம் நிற்கின்றேன். அவர்கள் உக்ரேன் போரை விரும்பவில்லை.அரசியல்வாதிகள் உக்ரேனுக்காக அதிக நிதி ஒதுக்குவதை விரும்பவில்லை.ஏனைய நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.எனவே நானும் அவர்கள் பக்கம் நிற்கின்றேன்.ஜேர்மனியில் பல கட்சிகள் உக்ரேன் போரை எதிர்க்கின்றார்கள்.அந்த கட்சிகளில் நானும் ஒருவன். உக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ஆதரிப்பவன் ஏன் ரஷ்யாவில் குடியேறவில்லை என்ற கேள்வி வரும் போது...... ஸ்ரீலங்காவில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறிநார்கள்? அங்கிருந்து போராடியிருக்க வேண்டும் என்றொரு கேள்வி வரும் இல்லையா? எனவே கருத்துக்கள்/சரி பிழைகள் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.சம்பந்தப்பட்ட மண்ணில் நின்றுதான் களமாடவேண்டும் என்ற சிந்தனை ஒருவித பம்மாத்து மட்டுமே.😎

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month 1 week ago
பௌத்த. மாக. சங்களும். லட்சக்கணக்கான. பிக்குமாரும். என்ன. ? செய்து கொண்டிருக்கிறார்கள். ? களத்தில். இறங்கி. உதவ்வில்லை. இந்தியாவையும். குறை சொல்லவில்லை. எல்லா. விடயங்களிலும். இப்படியிருந்தால். நல்லது.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month 1 week ago
இல்லை. என்று. தான். நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தன். உதவினாலும். குறை. சொல்லுவன் உதவாவிட்டாலும். குறை. சொல்லுவன். மேலும். அண்மையில். ஒரு. விளம்பரம். பார்த்தேன். கந்தர்மடத்தில். ஒரு. பரப்பு. காணி. ஒரு. கோடி. ரூபாக்கள். இப்படி. காணி. வேண்டுவோர். விற்ப்பவர்களுக்கு. உதவி. தேவையா. ?

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

1 month 1 week ago
நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.

"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.

1 month 1 week ago
இந்த இணைப்புகளில் எந்தப்படத்தையும் என்னால் பார்க்க முடிவதில்லை. நான் தாமதித்து பார்க்க முயற்சிக்கிறேனோ தெரியவில்லை. ஒருதடவை இங்கே சொல்லியும் பார்த்தேன் யாரும் பதிலிறுக்கவில்லை. ஒருவேளை அந்த இணைப்பின் கால வரையறை குறுகியதாக இருக்கலாமென எண்ணி அவர்கள் இடும் பதிவுகளை மட்டும் வாசித்தறிந்து கொள்வேன்.