1 month 1 week ago
உக்ரேனுக்கும், ஈழத்திற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது அல்லவா, வசீ. ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை உருவாக்க ஈழ மக்கள் போராடினார்கள், அதே வேளையில் சுதந்திரநாடாக இருக்கும் உக்ரேன் அதன் மீது இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றது. ஈழ மக்களுக்கு தனிநாட்டை விட குறைந்த ஒரு தீர்வு தான் தற்போதைக்கு சாத்தியமானது என்பது ஈழத்திற்கான போராட்டத்தின் ஒரு மைல் கல் ஆகலாம். ஈழத்துக்கான போராட்டம் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். ஆனால் உக்ரேன் தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுக்கும் ஒரு தீர்விற்கு சம்மதிப்பது ஒரு மைல் கல் அல்லவே........... இதில் அடுத்த கட்டம் என்ன........... முழு இறைமையையும் ஆக்கிரமிப்பாளருக்கு விட்டுக் கொடுப்பதா.............. சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன், விளங்க நினைப்பவன். கருத்துகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்ற நிலை இது. 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வகையினரே, நான் உட்பட. கருத்துகள் என்பது நாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சுய அடையாளம், பெரும்பாலும் கற்பனையான ஒன்றே. பின்னர் அந்த அடையாளத்துடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாங்கள் வாழும் வாழ்க்கைகளுm, எங்களின் பல கருத்துகளும் மலையும், மடுவும் போல. உலகெங்கும் ஒரு ஒற்றை இலக்குடன் போராடும் போராளிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்..............🙏. ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை. 'படித்தவர்கள் எல்லோரும் கழனிப் பானைக்குள் விழுந்தார்கள்..................' என்று என் வீட்டில் அன்று பலரும் சொல்லிச் சிரிப்பார்கள். வீட்டிலோ அல்லது சொந்த பந்தத்திலோ பெரிதாக படித்தவர்கள் என்று, 10 வகுப்பு சித்தி அடைந்தவர்கள் கூட, கிடையாது. அவர்கள் எல்லோருமே சேர்ந்து உருவாக்கிய அடையாளம் தான் இந்தக் கழனிப் பானை. ஒரு மன ஆறுதலுக்கு போல. ஆனால் வீட்டில் நடைமுறை வேறாக இருந்தது.............. நாங்கள் எல்லோரும் எப்படியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று தங்களால் ஆன எல்லாவற்றையும் அந்த இடர் மிகுந்த காலங்களிலும் மிகவும் செய்தார்கள். எங்களை கழனிப் பானைக்குள் விழுத்த முயன்றார்கள், ஆனாலும் எங்களில் பலரும் பானைக்குள் விழாமல் தப்பிவிட்டார்கள்...................🤣. இது போலவே ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.
1 month 1 week ago
கண்ணதாசன் இருக்கும் இடம்😊
1 month 1 week ago
வாலி எழுதிய சிவாஜி படப் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று👍🏾
1 month 1 week ago
12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படை கப்பல் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 03:09 PM இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது. இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார். "சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232145
1 month 1 week ago
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:03 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232147
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:03 PM

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.




https://www.virakesari.lk/article/232147
1 month 1 week ago
புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மூலமாக அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான 50 லக்ரோஜன் மாப்பெட்டிகள், 50 சமபோச பொதிகள் யாழ்ப்பாணம் சிற்றி மெடிக்கல் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய தனுசன் தலைமையிலான மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு 84250 ரூபா. நன்கொடையாளர்கள் விபரம் 1) செல்வி மதுரா சிவகுமார் [டென்மார்க் (சுழிபுரம் கிழக்கு)] அவர்களின் 9 ஆம் ஆண்டு (01/12/2025) நினைவாக 30000 ரூபா தந்தையார் இராசையா சிவகுமார் வழங்கியுள்ளார். 2) சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை (அமரர் திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக) ஊடாக 30000 ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றது. 3) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம் (சுழிபுரம் கிழக்கு, ஏழாலை) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸ்மா றுக்மன்(UK) 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளார். இந்த பணிகளுக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கும் சகோதரர் கொலின், உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய மாணவர்கள் தனுசன் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இந்த நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கு எடுத்து சென்று வழங்கப்படும்.
1 month 1 week ago
சுனாமியின் போதும் தமிழர்களின் அழிவின் பின்னும் இலங்கை வங்கு ரோத்து நிலையின் பின்பும் சிங்களத்தின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எள்ளளவும் குறையவில்லை இனியும் குறையும் என்று நம்புவது அடி முட்டாள் தனத்தையே குறிக்கும் . இங்கு அனுரா அரசு என்ன எந்த அரசை நம்பி பணம் அனுப்பினாலும் பணத்தை வாங்கி தின்று விட்டு கொழுப்பெடுத்து இன்னும் நாலு புத்தர் சிலையை தமிழர் பகுதிகளில் வைத்து இனவாத விசர் ஆடுவினம்.
1 month 1 week ago
Mantras and Miracles · Suivre ersotnSopd2brh951 n1924e7fl2m02l9cuh 1gm6e5vft08t6i,of9c:262 · அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி! நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்டவர்கள் , அங்கு தங்கி ஊர் வேலை செய்வர். ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர் களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை பலர் கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. சொந்தமாக நிலங்கள் ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ? ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.அவை எங்குள்ளது என்று தேட அவகாசம் இல்லை! ஒரு நாள் கணக வழக்கு சரிபார்க்க சில மட ஊழியர்கள் ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ கொஞ்சம் வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது. வாசலில் ,வந்திருந்தது 75 வயது மதிக்கத் தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்த பெண்மணி, ‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். மடத்தில் ஒரு பெரியவர் யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார். ‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர். ‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். மடத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் மடத்து பெரியவர் ! ‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள். மட சிப்பந்திகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், மடத்துக்கும் என்ன சம்பந்தம் ? ‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் மடப்பெரியவர் . ‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக பெரியவர் சொன்னார். கோவில் தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன அன்று கொடி இறக்கப்பட்டது. அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்த வெளியூர் வாசிகளுக்கு 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பி னார் மடப் பெரியவர் திரும்பிப்பார்த்தால் எதிரே அந்த முஸ்லிம் அம்மாள். ‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் அவர்களுக்கும் நினைவு வந்தது. ‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பெரியவர் .அப்போது அவரே பேசினார். ‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7–8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன். ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன். தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயர் கி்ட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள். பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது. அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை கனவில் அந்த முஸ்லீம் மூதாட்டிக்கு உணர்த்தி மீட்டுள்ளார் என்று அங்குள்ள மடத்து சிப்பந்திகளுக்கு புரிந்து விட்டது ! இந்த முறை மடத்திலிருந்து ஒருவர் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றார். அவரது பேரனும் மனைவியும் இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத் தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்துக் காலமா னதாகவும் சொன்னார்கள். சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது. பெருமாள் சொத்து பொல்லாதது ........!
1 month 1 week ago
1 month 1 week ago
எமது பாடசாலை குழுமத்தில் அரசாங்கம் வழங்கிய வங்கி விபரம் பற்றிய தகவலை இணைத்தார்கள். நானும் இதைத்தான் கூறினேன். பாதிக்கப்பட்ட எமது உறவுகள், சொந்தங்களிற்கு நேரடியாகவே நாம் உதவி செய்யலாம். அரசாங்கம் ஊடாக செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அபாய அறிவிப்புக்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சில தினங்கள் முன் பார்த்தேன்.
1 month 1 week ago
இந்த இளைஞன் இறுதி வரை மற்றவர்களை பாதுகாப்பாக வெளியேற உதவி செய்து விட்டு கடைசியில் ஆபத்தில் சிக்கிக் கொண்டவர் என சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர்.
1 month 1 week ago
1 month 1 week ago
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு 01 Dec, 2025 | 02:21 PM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பத்மநிகேதனின் உடல் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அனுதாபங்கள். கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:50 PM (எம்.மனோசித்ரா) தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார். இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:50 PM

(எம்.மனோசித்ரா)
தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார்.
இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk
1 month 1 week ago
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு 01 Dec, 2025 | 03:53 PM நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதேநேரம் நுவரெலியா - கண்டி வீதி, நுவரெலியா - இராகலை வீதி, நுவரெலியா - வெலிமடை வீதி, தலவாக்கலை - பூண்டுலோயா வீதி, லிந்துலை - அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பாதைகளும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு | Virakesari.lk
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:44 PM மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk
1 month 1 week ago
01 Dec, 2025 | 04:44 PM

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை.
மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை.
ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க.
இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள்.
டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார்.
மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk