Aggregator

கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]

1 month ago
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06 "நான் உன்னை காதலிக்கிறேன்," என்று அவர் ஒரு நாள் சொன்னார். அவள் அந்த உணர்வை நிராகரிக்கவில்லை. உங்களைப் பொறுத்தவரையில், பயமும் இல்லை. மறுப்பும் இல்லை ” என்றாள். அனால் அதன் பின்னணியில் உள்ள திருமணம் என்ற கட்டமைப்பைத் தான் நான் நிராகரிக்கிறேன் என்றாள். " என் இருப்பு, சகிப்புத் தன்மையைச் [பொறுத்துக் கொள்ளும் தன்மையை ] சார்ந்திருக்கும் வேறொரு வாழ்க்கையில் நான் நுழைய மாட்டேன்.[“I will not enter another life where my existence depends on tolerance.”] " என்று மேலும் கூறினாள். கண்மணி தான் விரும்பிய இடத்திலேயே இருந்தாள். தனிமையாக இல்லை. உடைந்து போகவில்லை. முழுமையானவளாக . அவளருகில் மகள் நிம்மதியாக உறங்கினாள் — பயமற்ற சுவாசத்துடன். கண்மணிக்கு இப்போது தெளிவாயிற்று: சில பெண்கள் ஆண்களை விட்டு போவதில்லை. அவர்கள் அமைப்புகளை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த வெளியேற்றத்தில் தான் அவர்கள் தங்களை மீட்டெடுக்கிறார்கள். அதன் பின், ஓய்வு பெற்ற அதிகாரி ஒரு கவிதை அவளுக்கு அனுப்பினார்: "The gentle breath of your memory, A light in my night, Yet love unapproachable, I long to touch you." "உன் நினைவின் - மெல்லிய சுவாசமே என் இரவில் - விளக்காக ஒளிர்கிறது! நெருங்முடியாத காதல் - உன்னுடையது என்றாலும் உன்னைத் தொட - நான் ஏங்குகிறேன்." கவிதை கண்மணிக்கு ஆசையைத் தூண்டியது, ஆனால் அவளின் திருமணக் கதவு மட்டும் மூடியே இருந்தது. அதிகாரி அவளை, அவளுக்கு பொருத்தமான திருமண வாழ்வில் இணைய, அவளுக்கு மீண்டும் அப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் முயன்றார். ஆனால் அவள் ஒரு புரியாத புதிராகவே இருந்தாள். அவள் விவாகரத்து செய்தபோதும், அவளின் கழுத்தில் அவன் கட்டிய தாலி இன்னும் இருக்கிறது. அவன் அவளுக்கு அணிந்த மெட்டி இன்னும் இருக்கிறது. அவள் சொல்லும் காரணம், இந்த சமுதாய அமைப்பில், தான் தனியாக வெளியே போகும் பொழுது, இது பாதுகாப்பானது. அதற்கு மட்டுமே அவை! இணைய ஒளியில் ஒளிர்ந்து முகநூல் கடலில் மிதந்து நலமா எனக் கேட்டு நங்கை இவள் வந்தாள் கவிதை மலரை மணந்து கருத்துப் பல கூறி சுகமா எனக் கேட்டு சுந்தரி இவள் வந்தாள் நெருங்கி இணையத்தில் உறவாடி நெஞ்சம் குளிரக் கதைத்தாள் திருமண வாழ்வின் முறிவை மூடி மறைக்காமல் சொன்னாள் கல்யாண வாழ்வின் வெறுப்பால் மீண்டும் தலைநீட்ட மறுத்தாள் ஆனால் காதல் கவிதை ரசிப்பாள் அதில் பாலியல் உறவும் ரசிப்பாள் மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை சொல்லத்தெரியாத கனவும் உண்டு தீர்க்கமுடியாத ஆசையும் உண்டு அழகான தேவதை அவள் அறியாத பருவம் அல்ல தெரியாத ஒன்றும் இல்லை புரியாத புதிர் அவள் இப்படித்தான் அந்த அதிகாரி, அவளைப்பற்றி தன் நாட்குறிப்பில் அழகான, இலக்கிய நயம் கொண்ட கவிதை வடிவில் பதிவு செய்தார். அவளுக்கு கவிதைகள் பாதுகாப்பான ஆசையாகவும், உரையாடல் தனிப்பட்ட நெருக்கமாகவும் மாறியது. அவள் தினமும் படித்து, உரையாடி அதில் மகிழ்ச்சியைக் கண்டாள். ஆனால் அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கண்மணி தனது தனிமையை வலிமையாக மாற்றினாள். அவள் மீண்டும் திருமணத்தை விரும்பவில்லை. கவிதை, உரையாடல் மற்றும் நெருக்கமான தொடர்பு அவளுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வந்தது. தனது குழந்தை மற்றும் வேலை இரண்டையும் தன்னுடன் சேர்த்து, அவள் தனக்கு என ஒரு முழுமையான வாழ்க்கையை உருவாக்கினாள். அவள் முதல் தடவையாக ஓய்வு பெற்ற அதிகாரிக்கு தானே எழுதி ஒரு கவிதை அனுப்பினாள். அது காதல் கவிதை அல்ல. அதிகாரியின் நாட்குறிப்பு கவிதைக்கு ஒரு பதிலாக. நான் விட்டு வந்தது ஒரு மனிதனை அல்ல. ஒரு வீட்டை அல்ல. ஒரு பெயரை அல்ல. நான் விட்டு வந்தது என்னைச் சுருக்கும் ஒரு கட்டமைப்பை. என்னை நேசித்தவர்கள் இருந்தார்கள். என்னை விரும்பியவர்களும் இருந்தார்கள். ஆனால் என்னை நானாகவே இருக்க விடாத இடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். காதல் எனக்குத் தடை இல்லை. கவிதை எனக்குத் தவறு இல்லை. நெருக்கம் எனக்குப் பயமில்லை. ஆனால் “சகித்துக் கொள்” என்று தொடங்கும் வாழ்க்கைக்கு நான் இனி வாசல் திறக்கவில்லை. என் கழுத்தில் தாலி இருக்கிறது. என் காலில் மெட்டி இருக்கிறது. அவை நினைவுகள் அல்ல — கவசங்கள். இந்தச் சமுதாயம் ஒரு பெண்ணை தனியாக பார்க்கத் தயாரில்லை என்பதால் நான் அவற்றை என் உடலோடு வைத்திருக்கிறேன். என் மனத்தோடு அல்ல. என் அருகில் என் மகள் உறங்குகிறாள். அவளின் மூச்சு எனக்குச் சொல்லித் தருகிறது — பாதுகாப்பு ஒரு ஆணின் நிழலில் அல்ல; ஒரு பெண்ணின் நிம்மதியில் தான். எனக்குக் கவிதைகள் வந்தன. நான் அவற்றைப் படித்தேன். சில வரிகளில் நான் சிரித்தேன். சில வரிகளில் என் உள்ளம் ஈரமானது. ஆனால் என் கதவு அப்படியே இருந்தது. மூடியே. என்னைப் புதிர் என்றார்கள். உண்மையில் நான் தீர்வு. நான் உடைந்தவள் அல்ல. நான் கைவிடப்பட்டவள் அல்ல. நான் தோற்றவள் அல்ல. நான் என்னை மீட்டுக் கொண்டவள். சில பெண்களுக்கு திருமணம் வாழ்க்கை. சில பெண்களுக்கு விவாகரத்து வாழ்க்கையின் தொடக்கம். நான் தொடங்கிய இடத்தில்தான் இப்போது நிற்கிறேன் — என்னுடன். கண்மணி இப்போது ஒரு “விவாகரத்து பெற்ற பெண்” அல்ல. அவள் — தன்னை மீட்டுக் கொண்ட பெண். சில பெண்களுக்கு திருமணம் வாழ்க்கை. சில பெண்களுக்கு விவாகரத்து தான் வாழ்க்கையின் தொடக்கம். கண்மணி இதில் இரண்டாவது வகை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 2021 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/33687281527587062/?

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

1 month ago
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! February 6, 2026 — அழகு குணசீலன் — இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது. சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார். அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது. அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும், தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன், பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா 1957 யூலை 26 இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில் சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே என்பதையும் அடக்கி வாசிக்கிறது. அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம். எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’ போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன் இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும். “சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”. “இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”. சுமந்திரன் பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை. ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது? அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா? இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம், சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது. இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான் டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா? கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது. அதையும் புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள். பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன. எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ” … அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம். இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய விடயங்கள். இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும். 2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும் அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும். 3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல். 4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?), ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள். 5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன் தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக, மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும். 7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக இனவாதமாகவும் நோக்க கூடாது. 8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல் சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…? ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில் எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை. https://arangamnews.com/?p=12657

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

1 month ago

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

February 6, 2026

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!  (மூன்றாவது கண்:VI)

— அழகு குணசீலன் —

இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது.  சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார்.  அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை  கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது.

அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. 

இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை  அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும்,  தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 

1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன்,  பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா  1957 யூலை 26  இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில்  சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே  என்பதையும் அடக்கி வாசிக்கிறது.

அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி  கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்திருக்கிறார்.  “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம்.

 எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’  போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன்  இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும்.

“சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”.

“இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”.   

சுமந்திரன்   பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான  நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை.  ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். 

சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது?  

அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா?

 இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம்,  சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால்   வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து  இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது.

 இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான்  டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா?  கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது.  அதையும்  புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள்.  பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு  தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே  அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. 

தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட   கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை  அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன.

எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ”  …   அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும்,  மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு  வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை  பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும்  சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 

1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற  முக்கிய விடயங்கள்.  இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும்.

2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற  இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும்  அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும்.

3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல்.

4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?),  ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால்  வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள்.

5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன்  தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக,  மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 

6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும்.

7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.  இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக  இனவாதமாகவும் நோக்க கூடாது.

8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல்  சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…?

ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம்  சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். 

இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும்  இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில்  எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை.

https://arangamnews.com/?p=12657

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
ரொம‌ரியோ காட்டிக் விக்கேட்...........ஒரு ஓவ‌ரில் மூன்று விக்கேட் ச‌க‌ வீர‌ர்க‌ள் அவ‌ரை உற்சாக‌ ப‌டுத்தின‌ வித‌ம் த‌னி அழ‌கு......................அதே ஓவ‌ரில் இன்னொரு விக்கேட் மொத்த‌ம் ஒரு ஓவ‌ரில் 4விக்கேட் வேட்டை..................

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

1 month ago
அந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று நியாயமில்லை. ஆனால் ஒரு கொரடூரமான குற்றவாளிக்கு இவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறது.இவர்களைச் சிபாரிசு செய்யும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு நெருடலான விடயம்.எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை.இப்பொழுது வரை அவர்கள் இந்த விடயத்தில் நிபராதிகள்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

1 month ago
அரசியல் தீர்வு தருவதாக யார் யாரிடம் சொன்னது? புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என சர்வதேசத்திடம் கொடுத்த வாக்கையே நிறைவேற்ற முடியவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை இருப்பதெல்லாம் பொருளாதாரப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள் அதே சர்வதேசத்திடம். புலிகளை அழித்தாயிற்று தமிழருக்கு அரசியல் அதிகாரம் என்பது இல்லை, அவர்கள் வந்தேறுகுடிகள், இங்கு வாழ விரும்பினால் வாழலாம் அரசியல் உரிமை எல்லாம் கோர முடியாது என்று கூறியது சிலரின் காதில் விழவில்லையா அல்லது நடிக்கிறார்களா புலிகளை குற்றம் சொல்வதற்காக.

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

1 month ago
நான் தவிக்கவில்லை. இனவெறி தான் இன அழிப்பை உண்டாக்கும் முக்கிய காரணி என்பதை நன்கே அறிந்துள்ளேன். சிங்கள பெண்ணை கற்பழிப்பேன் என ஒரு இனவெறியன் பகீரங்கமாக பேசி ஈழத் தமிழர் போராட்டதையே ஒரு இனவெறி போராட்டமாக மாற்றி அதை வைத்து அரசியல் செய்து வருவதை தொடர்ந்து வருவதை வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தாம் இனவாதத்தல் பாதிக்கப்படாதாக கூறும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் சிலர் தாமே வந்தேறியாக மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு, தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வந்தேறி என்று திட்டுவதன் மூலம் தமது ஈழத்தமிழ் அரசியலானது ஒரு இனவெறி அரசியலே என்று நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் அறியவில்லைப் போலும்.

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

1 month ago
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம் சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/54835

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

1 month ago

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்

தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது.

அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர்  கட்டியமைத்தார்? 

மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது.

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. 

அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/54835

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

1 month ago
அனுரா பாவம், பபா அவருக்கு இனவாதம் இல்லை, பொறுத்திருக்கிறார், காலம் கனிய செய்வார், இன்னும் பலவாறு கடைந்தெடுத்த இனவாதியான இலங்கையின் முப்படை பிரதானியை புகழ்ந்தேத்தும் உங்களுக்கு இதை சொல்லும் தார்மீக உரிமை இல்லை. இப்படி ஒரு 10% விம்பத்தை சிங்களவர் எழுப்பினால் அதை 100% ஆக்க பெருபித்து காட்டுபவர்கள் உங்களை, யுடியூப்பர்ஸ் போன்ற காவடிக்கூட்டம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
நான் கைபேசியில் ஒரு ஆப் மூல‌ம் விளையாட்டை பார்க்கிறேன் இணைய‌த்தில் பார்க்க‌ முடியாது.............அதிக‌ வியூருஸ் ம‌ற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்க‌ள் வ‌ரும்................ உங்க‌ட‌ கைபேசியில் இருந்து இந்த‌ ஆப்பை ட‌வுன்லூட் செய்யுங்கோ.......................

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

1 month ago

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

sumanthiran-721x470.webp

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது.

கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது.

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/358888/

மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்

1 month ago

மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்

07 February 2026

1770458384_3387501_hirunews.jpg

யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. எனினும், யுக்ரைனின் நிலப்பரப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் யுக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும், அதனுடன் இணைந்து அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் யுக்ரைன் தரப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உயர்மட்ட இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/445114/ceasefire-by-march-trump-shows-momentum-on-ukraine-issue