Aggregator

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

1 month 1 week ago
இல்லை, தவறு. அரசியல்வாதிகளின் சுயநலத்தை, கோமாளித்தனத்தை, செயலற்ற பேச்சை சுட்டிக்காட்டினேன். வகைதொகையின்றி, மக்களை மூச்சுவிடக்கூட அவகாசம் கொடுக்காமல், இறந்த உறவுகளை அடக்கம் செய்ய விடாமல் கொன்று குவித்தபோது, ஆதரவு, பாராட்டு, முட்டுக்கொடுத்தவர்களும், அதே கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மூச்சுவிடாமல் நிஞாயப்படுத்தியவர்களும் கூட இயற்கை அழிவை, ஜனாதிபதியின் மேல் குற்றம்சாட்டும் விநோதத்தை கூறினேன், அவ்வளவுதான். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தவுடன் மஹிந்தவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவரது செயற்திட்டங்களில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தவர்கள் எல்லாம், இன்று தமது பொறுப்பை, பங்களிப்பை தட்டிக்கழித்துவிட்டு வெளியேறுகிறார்களே, அது ஏன்? அப்படியென்றால் தமிழரை அழிப்பதற்குத்தான் இவர்களது ஆதரவும் பங்களிப்புமா? என்று கேள்வி எழுப்புகிறேன். இதில் அனுராவை எங்கு நான் பாராட்டினேன்? உங்களின் இந்தக்கருத்தை கண்டவுடன் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டு ஒருவர் ஓடோடி வரப்போகிறார்!

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

1 month 1 week ago
ஒரு தடவை இதே யாழ்களத்தில் தமிழ்நாடு முன்னேறவில்லை என்றேன். அதனால் நான் வாங்கிய ஊமைக்குத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல.😂 பணத்தை வைத்து ஒரு நாடு முன்னேறிவிட்டது என்பவர்களால் யார்தான் என்ன செய்ய முடியும்?😎 இந்த உலகில் தாய் மொழி அழிந்து போகும் நாடாக தமிழ்நாட்டை மட்டுமே பார்க்கின்றேன்.தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதையும்,தனியே ஆங்கிலத்தை பேசுவதையும் பெருமையாக நினைப்பதும் இந்த தமிழினம் மட்டுமே. இந்தியாவிலும் சில இனங்கள் உண்டு. அதை விட பந்தி பந்தியாக தமிழ் கட்டுரைகள் ஆராய்ச்சி விமர்சனங்கள் எழுதிக்கொண்டு இடையிடையே ஆங்கில சொற்களை உபயோகப்படுத்துவதும் ஒரு வித தற்பெருமையே இன்றி வேறொன்றுமுமில்லை. ஏனென்றால் தமிழில் உள்ள சொற்பதங்களை போல் வேறெந்த மொழியிலும் இல்லை. பல நிதர்சனமான தமிழ் ஆக்கங்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவித தமிழ் வரட்சி இருக்கின்றது என்பது கருத்து.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
அன்பரே! உக்ரேன் விடயத்தில் இன்றைய தினங்களில் நடந்து கொண்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தை அல்ல. பேரம் பேசும் பேச்சுவார்த்தை. இதில் அடி வாங்கப்போவது டொனால்ட் ரம்பருக்கு பிடிக்காத நாடுகளாகவும் இருக்கலாம். 😂

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

1 month 1 week ago
மோடி இந்திய கடற்படை விமானப் படைகள் மூலம் இலங்கை பாதிப்புக்கு உதவிகள் செய்து வருகின்றார். மோடியை சந்தோசபடுத்துவதற்காக இலங்கையுடன் நானும் துணை நிற்கிறேன் என்று புட்டின் சொல்லியிருப்பார் அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களும் 20,000 வெள்ள தடுப்பு சாக்குகளும் கொடுத்துள்ளது. நிவாரணக் குழுவுடன் பொருட்களை ஏற்றி செல்லும் இரண்டு C-130 விமானங்கள் வியாழகிழமை வர இருக்கின்றன. 1 மில்லியன் அவுஸ்ரேலிய டொலரை அவுஸ்ரேலியாவும், நேபாளம் 200 ஆயிரம் யுஸ் டொலரையும் , மாலத்தீவு 50,000 அமெரிக்க டாலர்களையும் 25,000 ரின்மீன்களையும் கொடுத்துள்ளன. ஜப்பான் நிவாரணப் பொருட்கள் மருந்துகனை வழங்கியதோடு அவசர மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் கடற்படை மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது மற்றும் மீட்புப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் C-130 விமானம் உட்பட மேலும் நிவாரணப் பொருட்கள் வரும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை மூலம் நிவாரண பொருட்களை கொடுத்துள்ளது

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மக்களே அமைதி அமைதி அமைதி.

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

1 month 1 week ago
அவருடைய. கட்சியின். பெயர். நாம். தமிழர். என்பது. எந்தக்கட்சியும். வைக்க. துணியவில்லை. பெரும்பாலன. தமிழருக்கு. இரத்தம். ஒடுவது. சீமானின். பேச்சைக் கேட்டுத் தான். இல்லையேல். அவர்களுக்கு. இரத்தம். ஒடாது. ஒடாவிடில். உடலில். கலங்களுக்கு. உணவு. சக்தி. எடுத்துச்செல்லப்படாது. அவர்கள். சோம்பேறிகளாத் தான். இருப்பார்கள். சீமான். வீட்டில். தெலுங்கில். பேசலாம். பிள்ளைகள். ஆங்கிலத்தில். படிக்கலாம். ஆனால். சீமான். உணர்ச்சி வசப்பட்டு. பேசாவிடில். தமிழர்களின். ஒரு. பகுதியினர். இயக்கமற்றுப் போவார்கள். ஆகவே. அவர். பேசட்டும். ஒரு. இந்தியா. கடவுச்சீட்டு. வைத்துள்ள. நபர். நான். தமிழன். என்று. சொல்வதா ? இல்லை. நான். இந்தியன். என்பதா. ? உண்மை.

படுபட்சி நாவல்: விசாரணை

1 month 1 week ago
கடந்த வியாழக்கிழமை படுபட்சி நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் (கனடாவில் வாங்க விரும்புகின்றவர்கள் காலம் செல்வம் அண்ணையிடம் இருந்து வாங்க முடியும்). அவலமும் சுவாரசியமும் நிரம்பிய ஒரு நாவல். இலங்கையில் முதலாவது விமானத்தை செய்ய எத்தனித்த ஒரு தமிழ் இளைஞன் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் எவ்வாறு அணுகப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, வாழும் நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, இன்னொரு தேசத்தில் அகதியாக தன் கனவை தொலைத்து விட்டு, தன் மகளின் கனவாவது நனவாகட்டும் என்று மிச்சக் காலத்தை வாழ்கின்றான் என்பதைச் சொல்லும் நாவல். இதனை எழுதிய டிலுக்ஸன் மோகன் இவ் நாவலை Autofiction என்றே குறிப்பிட்டு இருக்கின்றார். கற்பனையும் சுய அனுபவமும் இணைந்த ஒரு நாவல் என. ஆனால் இவர் இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்கலாம். பேட்டிகளிலும், புத்தக வெளியீடுகளிலும் இந்த நாவல் முற்றிலும் தன் சுயசரிதை என அடித்து விட்டமையே இங்கு பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் மற்றும் நெடுமாறன் சொல்வது (இருவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) சரியாகவே எனக்கு தோன்றுகின்றது. அத்துடன் நாவல் முழுதும் காலப்பிழைகள் பல உள்ளன. இறுதி யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படும் கதையில், இறுதி யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் நிகழ்ந்தவையும் கலந்துள்ளன. ந.செ. இதனைக் குறிப்பிட்டும் உள்ளார். இலங்கை அரசு இராவணனின் புஷ்பக விமானத்தை தேடப் போவதாகவும், அது தொடர்பான தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆதாரங்கள் வைத்துள்ளவர்களின் உதவிகள் தேவை எனவும் அறிவித்தது, என் நினைவுகளின் படியும் கூகிள் ஆண்டவரின் தேடல் விடைகளின் படியும் 2009 இன் பின். 2016 இல் நிகழ்ந்த கருத்தரங்கின் பின், 2020 இல் இவ்வாறு அறிவித்தது. ஆனால், டிலுக்ஸன் 2009 இன் முன் நிகழ்ந்த தன் கதையில் இதனை இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல் 1980 இல் முதல் விமானம் Pazmany PL-2 உம் தயாரிக்கப்பட்ட பின் 2009 இன் பின் Lihiniya MK (விமானியற்ற,unmanned aerial vehicle (UAV)), Lihiniya MK II எனும் Medium-range tactical unmanned aerial vehicle (UAV) உம் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞனது கனவு எவ்வாறு இனவாதத்தால் காவு கொள்ளப்பட்டது என்பதையும், அதன் போது நிகழ்ந்த சித்திரவதைகளையும் பேசும் இந்த நாவல், இலக்கிய நேர்மையற்று சொல்லப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. அந்த உண்மையை ந.செ கேள்வி கேட்பது காலத்துக்கு தேவையான ஒன்று. ஒருவர் இரவல் அனுபவங்களின்படி ஒரு நாவலை படைத்து விட்டு, அது தன் சொந்த அனுபவம் என்று சொல்வதை ஏற்க முடியாது.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
அண்ணா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூர்வீகக் குடிகளை அழித்து, குடியேற்றங்கள் நிகழ்த்தி, இன்று வல்லாதிக்கம் செய்வோர்................... ஐரோப்பியர்களே, அண்ணா. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களே. ஆங்கிலயர்களும், ஜெர்மனியர்களும், ஸ்கண்டினேவியர்களும், வேறு பல ஐரோப்பியர்களுமே அமெரிக்கர்கள். அன்றைய ஐரோப்பாவின் நீட்சி தான் இன்றைய அமெரிக்கா. முன்னர் ஜெர்மனியும், இங்கிலாந்தும், பிரான்சும், ஸ்பெயினும், இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் செய்த வல்லாதிக்கத்தையும், கொடுமையையும் தான் இன்றைய அமெரிக்கா வேறு வழிகளில் தொடருகின்றது . இவை எல்லாமே பாவப்பட்ட நிலங்கள் தான். கனடா, ஆஸ்திரேலியா கூட அதுவே. நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன. இதே காரணங்களே, வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட. இவை எங்களுக்கும், எங்களின் பின்னால் எங்களின் சந்ததிக்கும் கிடைக்காது என்று கருதப்பட்ட தேசங்களை நாங்கள் குடியேறுவதற்கு உகந்தவை அல்ல என்று தவிர்த்தோம். இந்த மேற்கு நாடுகளில் எங்களினதும், குடும்பத்தினதும், அடுத்த சந்ததிகளினதும் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்து விட்டு, தார்மீக மற்றும் ஆத்மாந்த ஆதரவுகளை எங்களுக்கு பிடித்தமான தேசங்களுக்கும், தலைவர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது மிகச் சாதாரண ஒரு மனித இயல்பு. ஒரு நாட்டில் குடி இருந்து கொண்டு இன்னோரு நாட்டுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது ஒரு கேள்வியே அல்ல. இது மிக இயல்பானது. ஈழத்தமிழர்களுக்கு தீர்வு என்று இன்று கல்விச் சமூகம் என்ன சொல்கின்றது என்று வசீ சொல்லியிருந்ததை மட்டுமே மேற்கோளாக எடுத்திருந்தேன். இணைந்த மாகாணசபை போராட்டத்தின், நோக்கத்தின் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்லியிருந்தேன். மற்றபடி இந்த விடயத்தில் கருத்து சொல்வதற்கு என்னால் முடியாது. அதற்கு திராணியும், மனப்பலமும் இல்லை. ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

1 month 1 week ago
இதை முதலும் எங்கேயோ எழுதியிருந்தேன். மீண்டும் எழுதுகிறேன். அண்மையில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பெற்ற தாய்மாரை போற்றி பாடல்பாடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி மேடையில் வாசிக்கிறார்கள். கிராமபுறத்தைச் சார்ந்த ஓரிருவரைத் தவிர மற்றையோர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அழகாக வாசித்தார்கள். இந்த கொடுமையை வேறு பெருமையாக என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை காட்டினார்கள்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month 1 week ago
ஆலங்குடி சோமு எழுதிய பாடல். “கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?” என்ற வரிகள் அன்று பலராலும் பாராட்டப்பட்டது. இந்த உவமையை T.ராஜேந்தர் தனது பாடல் ஒன்றில் பயன்படுத்தியதாக ஞாபகம்.

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

1 month 1 week ago
இப்படி. என்றால். இலங்கையில் எவரும். எந்தவொரு. பாடத்திலும். தோல்வி. அடையமாட்டார்கள் அனைவரும். சித்தி அடைவார்கள் தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியார்கள். மற்றவர்களுக்கு. போதிப்பவர்கள். 50. க்கு 20. எடுத்தால். போதுமா ? இவர்கள் எப்படி. மற்றவர்களுக்கு. போதிக்க முடியும். ஜேர்மனியில். படிபிக்க சம்பந்தப்பட்ட. துறையில். கலநிதி. பட்டம். பெறவேண்டும் தமிழ் நாடு. முன்னேற. இன்னமும். 80%. பயணிக்க வேண்டும் இதுக்கை. நிற்க. வெக்கமாக. இருக்கிறது. போய்விட்டு. கொஞ்ச நேரம் கழிந்து வருகிறேன்.

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

1 month 1 week ago
இள வயதினரிடையே எயிட்ஸ் அதிகரிக்க பிரதான காரணங்கள் பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவின்மை, மேலும் எயிட்ஸ் நோய் வைரஸ் தங்கள் உடலில் இருக்கிறதா என்பது தெரியாத நிலைமை. இந்த இரு காரணிகளையும் குறி வைத்து இலங்கையில் எயிட்ஸ் பரவலைக் கட்டுப் படுத்தும் வேலைத் திட்டங்களை USAID என்ற அமெரிக்க அரசின் நிறுவனம் 2025 ஜனவரி வரை முன்னெடுத்திருந்தது. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இலங்கையில் இருக்கும் மருத்துவ அமைப்புகள் இந்த விடயத்தில் திறன்பட செயல்பட்டதாகவும் சில USAID இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். 2025 இல், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடிய முதல் வெளிநாட்டுத் தொண்டு அமைப்பு இந்த USAID அமைப்பு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "ஏனைய நாடுகளில் ஒரு பாலின உறவை ஊக்குவிக்க மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது இந்த அமைப்பு" என்பதாக இருந்தது. இதை இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்து ட்ரம்ப் ஆதரவு "அமெரிக்கர்களாக" மாறி விட்ட சில ஈழத்தமிழ் நண்பர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவர். USAID உண்மையாக இதைச் செய்ததா? இலங்கையில் எயிட்ஸ் பரவலுக்கு பாரிய காரணியாக இருப்போர் beach boys எனப்படும் இளம் ஆண் பாலியல் தொழிலாளர்கள். இதை ஆய்வுகள் மூலம் அடையாளம் கண்ட பின்னர், இந்த பாலியல் தொழிலாளர்களிடையே பாதுகாப்பான உடலுறவு, கிரமமான இரத்தப் பரிசோதனைகள், எயிட்ஸ் இருந்தால் அதற்குரிய மருந்துகள் வாங்க உதவி போன்ற முக்கியமான திட்டங்களை மட்டுமே USAID செயற்படுத்தி வந்தது. இந்த நற்காரியத்தை "ஒரு பாலின உறவை ஊக்குவித்தல்" என்று ட்ரம்ப் தரப்பு சொல்ல, அதை நம்பி எங்கள் ஈழத்தமிழ் அமெரிக்கர்களும் USAID பூட்டப் பட்டதை ஆதரித்தார்கள். இனி இவர்களுள் சிலர் விடுமுறைக்கு இலங்கை போனால், இலங்கை மருத்துவ மனைகளில் இரத்தமேற்ற வேண்டிய (blood transfusion) நிலைமைகள் ஏற்படாமலிருக்க பிரார்த்திக் கொள்ள வேண்டும்😂. ஏனெனில், இரத்தங்கள் பரிசோதிக்கும் வேலைத் திட்டங்களில், அமெரிக்காவின் USAID விட்ட இடைவெளியை வேறெந்த அமைப்பு தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. https://www.tamilguardian.com/content/us-launches-2-million-partnership-end-aids-sri-lanka

படுபட்சி நாவல்: விசாரணை

1 month 1 week ago
அவரது பேட்டி இணைப்புக்களை வழங்குங்கள் என்ன சொல்கின்றார் என கேட்டுப்பார்ப்போம். கிட்டு மாமாவின் காலத்தில் உலங்கு வானூர்தி ஒன்று உருவாக்கும் முயற்சி நடைபெற்றது, அது சில அடிகள் உயரம் எழுந்துவிட்டு விழுந்தது என அப்போது ஆட்கள் சொல்ல கேட்டுள்ளேன்.