Aggregator

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

1 month ago

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

1 month ago
தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம் தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் - மருத்துவர் அறிவூட்டல்

1 month ago
சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப் பிரியா பிபிசி தமிழுக்காக 8 பிப்ரவரி 2026, 02:38 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம். கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. எச்சரிக்கை அறிகுறிகள்: தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி 4-5 மணி நேரம் தொடரும் வலி 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி முதுகு பகுதிக்கு பரவும் வலி பசியின்மை மற்றும் வாந்தி சோர்வு மற்றும் மயக்கம் ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு இரும்புச்சத்து குறைவு ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன? பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல. கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா? Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டி20 உலகக் கோப்பை: அமெரிக்க அணியில் விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள் அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்குவது வார நாட்களில் சிறப்பாக செயல்பட உதவுமா? ஆய்வில் புதிய தகவல் இந்தியாவின் அதிரடி வீரர்களை கட்டிப்போட்ட பந்துவீச்சு - கடும் சவால் தந்த 'கத்துக்குட்டி' அமெரிக்கா End of அதிகம் படிக்கப்பட்டது பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது. இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா? பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம். கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும். இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது. சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால் குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome) உணவு சாப்பிடும்போது குமட்டல் குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome) குடல் புற்றுநோய் பார்கின்சன் நோய் மனச்சோர்வு தோல் ஒவ்வாமை மூட்டுவலி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா? பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம். சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு. 20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம். கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் - மருத்துவர் அறிவூட்டல்

1 month ago

சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்?

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சண்முகப் பிரியா

  • பிபிசி தமிழுக்காக

  • 8 பிப்ரவரி 2026, 02:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம்.

கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

எச்சரிக்கை அறிகுறிகள்:

  • தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி

  • சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி

  • 4-5 மணி நேரம் தொடரும் வலி

  • 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி

  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி

  • முதுகு பகுதிக்கு பரவும் வலி

  • பசியின்மை மற்றும் வாந்தி

  • சோர்வு மற்றும் மயக்கம்

  • ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு

  • இரும்புச்சத்து குறைவு

  • ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி

கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன?

பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல.

கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது.

இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது.

காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா?

பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும்.

இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

  • மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது.

  • சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால்

  • குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome)

  • உணவு சாப்பிடும்போது குமட்டல்

  • குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome)

  • குடல் புற்றுநோய்

  • பார்கின்சன் நோய்

  • மனச்சோர்வு

  • தோல் ஒவ்வாமை

  • மூட்டுவலி

ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம்.

சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு.

20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம்.

கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 month ago
நெதர்லாந்தின் சவாலை முறியடித்து பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் பாஹீம் அஷ்ரப் 07 Feb, 2026 | 05:20 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தின் சவாலை முறியடித்து 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. போட்டியின் 18ஆவது ஓவர் முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த பாகிஸ்தான் அணியை பாஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடி மீட்டெடுத்தது. பாகிஸ்தானில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் வன் பீக்கின் பந்துவீச்சில் 6, 2, 6, 0, 6, 4 என 24 ஓட்டங்களைக் குவித்த பாஹீம் அஷ்ரப் அணியை வெற்றிப்பாதையில் இட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாஹீம் அஷ்ரப் கொடுத்த இலகுவான பிடியை ஓ'டௌட் தவறிவிட்டது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக திருப்பு முனையாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கில் 2016 நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் முதல் நான்கு பந்துகளில் கார்லோஸ் ப்றத்வெய்ட் குவித்த சிக்ஸ்களை பாஹீம் அஷ்ரப்பின் அதிரடி நினைவுபடுத்தியது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சய்ம் அயூப் (24), அணித் தலைவர் சல்மான் அலி அகா (12) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சாஹிப்ஸதா பர்ஹான் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாபர் அஸாமுடன் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பர்ஹான் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் பாபர் அசாம் (15) களம் விட்டகன்றார். உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 17ஆவது ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக நெதர்லாந்தின் கை ஓங்கி இருந்தது. எனினும் லோகன் வன் பீக் வீசிய 19ஆவது ஓவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பாஹீம் அஷ்ரப் 24 ஓட்டங்களை விளாசி ஆட்டத்தின் பிடியை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.கடைசி ஓவரில் ஷஹீன் ஷா அப்றிடி, பாஹீம் அஷ்ரப் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 4 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பாஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களுடனும் ஷஹீன் ஷா அப்றிடி 5 ஓட்டங் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களில் நால்வரே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர். இதன் பலனாக 15ஆவது ஓவரில் நெதர்லந்து 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடைசி 6 விக்கெட்கள் 21 ஓட்டங்களுக்கு சரிந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (37), பாஸ் டி லீட் (30), மைக்கல் லெவிட் (24), கொலின் அக்கமன் (20) ஆகியோரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சல்மான் மிர்ஸா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாஹீம் அஷ்ரப். (பட உதவி: எஸ். நாதன்) https://www.virakesari.lk/article/238093

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

1 month ago
கமலுக்கு தெரியவில்லை உண்மையில் அண்ணா சோழவம்சதின் நேரடி நீட்சி என்று. அண்ணா காஞ்சிபுரம் (கஞ்சிவரம்) முதலியார் - இவர்கள் இப்போதும் தென்கரை மூலநாத சாமி கோயிலில் இருக்கும் சவான் கல்லை (நவகாண்டத்துக்கு எழுப்புபப்பட்டு இப்போதும் உள்ள, நவகாண்டம் அநேகமாக அரச உறவுகளில் ஒருவரே செய்வது) பூசிப்பவர்கள். அனால் இதன் ஆதி வரலாறை சொல்வது கந்தபுராணம் - வீரவாகுதேவர் மற்றும் சோகோதர்கள் முருகனால் அனுப்பப்பட்டது, முசுகுந்த சோழ இராச்சியத்தை மீட்பதற்கு , பரப்புவதற்கு (சுருக்கமாக). அதில் முடிவின் தறுவாயில் இருந்த (சிறிய) சோழவம்சத்தை, வீரஆகுதேவரின் மகளான சித்திரவல்லியை முசுகுந்த சோழன் மணம் முடித்து தொடங்கி, பின் விருட்சமாகிய சோழவம்சம் என்று (சுருக்கமாக). (இந்த (அரச) இறைவரம் என்ற பகுதி பாண்டியர், சேரருக்கு இல்லை) ஆம் அண்ணா (வரலாற்றில் சரியாகத் தான்) குறிப்பீடான அரியணையில் ஏற்றப்பட்டார்.

கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

1 month ago
கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன. அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே. இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. அதாவது -- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது. குறிப்பாக -- பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது. அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள். அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக -- தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது. பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச. அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன. சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. “வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது. அது மாத்திரமல்ல -- 13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார். கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது. ஆகவே -- இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் -- இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால் --- 13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு. அதேவேளை -- இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது. அதாவது -- கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது. அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே -- 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது. குறிப்பாக -- அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது, ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது. ஆகவே -- ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது. அதாவது --- கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆகவே --- 'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது. எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் --- குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால். அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262

கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

1 month ago

கிவுல் ஓயா திட்டமும்

13 ஆவது திருத்தச் சட்டமும்

--- --- ---

*உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை

*பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது

*ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன?

--- ---- ---

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம்.

ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது.

இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன.

அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே.

இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

அதாவது --

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது.

குறிப்பாக --

பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது.

அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள்.

அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.

ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக --

தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது.

பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது.

கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச.

அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன.

சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

“வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது.

அது மாத்திரமல்ல --

13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது.

ஆகவே --

இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும்.

ஏனெனில் --

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால் ---

13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு.

அதேவேளை --

இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது.

அதாவது --

கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது.

அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆகவே --

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது.

குறிப்பாக --

அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது,

ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது.

ஆகவே --

ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.

ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது.

அதாவது ---

கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆகவே ---

'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது.

எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில் ---

குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது.

ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால்.

அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
அடிச்ச சிக்ஸ்சரில் 3 பந்துகள் காணமல் போயிட்டாம்....( மைதான் வெளிப்புறத்தி வீழ்ந்து) பையன் என்னத்தை சாப்புடுறானோ தெரியாமல்தான் கேட்கின்றேன் ..அந்த கார் ஓடுற நேரத்தவிட... இந்த போட்டி நடத்திறதுக்கு ஒரு தில் வேணும் ..அப்ப பக்கத்திலை என்னதை வைத்துக்கொண்டு படுக்கிறியள்... இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இந்த ரசோதரன் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலகிடக்கு

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
நான் அயர்லாந்தையும் தெரிவு செய்திருந்தால், இந்த மூன்று போட்டிகளிலேயே ஒரு ஹாட்ரிக் அடித்து விடுவேன் போல..............🤣. அடிமுடி, இதில் ஏதோ ஒன்று, இப்பவே தெரியுதே..................😜.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

1 month ago
பிகு கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா? சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர். ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன். யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும். இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை? நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

1 month ago
என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.

Different types of boats used by Tamils historically

1 month ago
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represents an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

1 month ago
இந்த வழக்கும் வைகோதான் போட வேண்டும். ஆனால் பாலியல் புகாரில் இருந்து தப்ப டெல்லி உச்ச நீதிமன்று வரை பிஜேபி வக்கீல்களை வைத்து வாதாட முடியும் 😂.