Aggregator
செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270
400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்
மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு
Published By: DIGITAL DESK 3
07 AUG, 2025 | 01:30 PM
பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,
22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.
11.9 சதவீதமான 13–17 வயதுடைய மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.
18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.
7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.
75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.
அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில்,
நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது.
தற்போது, 100,000 பேரில் 15 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது."
அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள் இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன:
- அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926
- சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570
- லங்கா லைஃப் லைன்: 1375
- CCCline : 1333 (இலவச சேவை)
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
Published By: RAJEEBAN
07 AUG, 2025 | 11:28 AM
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,
ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன்.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது.
பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.
மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.
ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது.
இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும்.
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும்.
நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.
இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும்.
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்
சமையல் செய்முறைகள் சில
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
Published By: VISHNU
07 AUG, 2025 | 01:59 AM
(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது.
பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.
6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம்.
அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது.
இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்.