Aggregator
ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம்
08 Aug, 2025 | 09:06 AM
யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது.
அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk
நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
08 Aug, 2025 | 09:57 AM
நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.
நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.
அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார்.
நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில் திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர். மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன.
விபத்தில் இறப்பு வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.
நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk
"மூன்று கவிதைகள் / 02"
"மூன்று கவிதைகள் / 02"
'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்'
என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்
அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன்
அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன்
கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்?
வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன்
கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன்
கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன்
எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்?
பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன்
கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
'என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே'
என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே
கண்ணுக்குள் பொத்திவைத்த காதல் தேவதையே
எண்ணத்தில் உன்னைத்தவிர யாரும் இல்லையே
கன்னத்தில் தந்திடவா ஓசையில்லா முத்தம்!
வெண்ணிலாவில் தழுவியது விழிக்குள் நிற்குது
அன்னநடையில் வந்தது இன்பம் பொழியுது
திண்ணையில் உறங்கியது தினமும் வாட்டுது
தேன்குடிக்க வண்ணமலரைச் சுற்றி வருகுது!
பெண்மையின் அழகினைக் கண்ட பின்பே
மண்ணில் பிறந்ததின் பயனை உணர்ந்தேன்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
...................................................
'கொட்டித் தீராதக் காதல்'
கொட்டித் தீராதக் காதல் இதுவோ
முட்டி மோதாத அன்பு நட்போ
கட்டிப் பிடிக்காத அழகு உடலோ
எட்டிப் பார்த்து ஏங்குவது எனோ?
ஒட்டி உடையில் பெண்மை கண்டேன்
வெட்டிப் பேச்சில் வெகுளி பார்த்தேன்
சுட்டி விடையில் அனுபவம் அறிந்தேன்
தட்டிக் கழித்து பாராமுகம் எனோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
"மூன்று கவிதைகள் / 02"
https://www.facebook.com/groups/978753388866632/posts/30743827355265842/?
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை
written by admin August 8, 2025
கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார்.