Aggregator
இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!
இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!
adminDecember 5, 2025

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சூறாவளி, வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அதற்கு எவ்வாறான நிவாரணங்களை கொடுப்பது பற்றியும் முல்லைத்தீவு மன்னாரில் ஏற்பட்டுள்ள மிகப் பாரதூரமான இழப்புக்களுக்கு உடனடியாக என்ன செய்வது என்பது தொடர்பாகவும் இரண்டாவது கட்டமாக என்ன செய்வது என பல விடயங்களை ஆலோசித்து இருந்தோம்.
வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்ததுடன் அதன் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் எவ்வாறு பாரிய பாதிப்புகள் வருவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் இப்போதுள்ள நிலைமைகளை சீர் செய்வது தொடர்பாகவும் பேசியிருந்தோம்.
இந்த அனத்தம் ஏற்பட்ட பின்னர் இந்திய அரசினால் கொழும்பு ஊடாகவும் திருகோணமலை ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம்.
விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதங்களில் நிச்சயமாக பொருளாதார பின்னடைவை சந்திக்கவிருக்கிறோம். வடக்கில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருக்கிறது. அதனுடைய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியாது. அந்த விவசாயிகள், பண்ணையாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை மீள உருவாக்குவதற்கான வேலை திட்டங்களை செய்ய வேண்டும்.
வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை. அவர்களுக்கு உதவுவதற்கு இந்திய செயல்பட வேண்டும். அதற்கு இந்தியா முன் வந்திருக்கிறது. தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாங்களும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதற்கு வரவேற்கிறோம்.
32,000 கோடிக்கு மேல் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. வீதிகள் பாலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்தியா எல்லோருக்கும் முன்பாக நட்பு நாடாக எமக்கு உதவி செய்திருக்கிறது. அதற்கு நன்றி சொன்னதுடன் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பேசியிருக்கிறோம் -என்றார்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரதிநிதிகள் குழு பெலவத்தவுக்கு விஜயம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரதிநிதிகள் குழு பெலவத்தவுக்கு விஜயம்
Published By: Vishnu
04 Dec, 2025 | 10:35 PM
![]()
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் கேங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் ஷெங் குபிங் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இந்தப் பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து, தற்போது முகம்கொடுத்து வருகின்ற இயற்கை அனர்த்த நிலைமை குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் மஹரகம மாநகர சபையின் முதல்வர் சமன் சமரகோன், துணை முதல்வர் ரஞ்சன் நாம்படுன்ன மற்றும் ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்த சீன குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுடன் கலந்துரையாடினர்.
தற்போது இலங்கை முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அவசர அனர்த்த பேரழ நிலைமை குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கும் வெற்றிகொள்வதற்கும் சீனா வழங்குகின்ற ஒத்துழைப்பு குறித்தும் தரவுகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடினமாக சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்கு இதன்போது பிரதி அமைச்சர் நன்றிகளை தெரிவித்தார்.
சீனாவும் இதுபோன்ற பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அந்த நிலைமைகளை தங்களால் நிர்வகித்துக் கொள்ள முடிந்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் தகவல் மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
குறிப்பாக, நிகழ்கால சீனாவை கட்டியெழுப்பும் போது சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விபரித்த சீன பிரதிநிதிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை தற்போது சீனா நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்காக இலங்கையின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய
எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய
எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது ; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய
05 Dec, 2025 | 10:37 AM
![]()
அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது.
டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்துக் கலந்துரையாடுவதற்காக 3,000இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உயர் தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் 350 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட IT மற்றும் BPM துறைக்கான இலங்கை தேசியச் சபையாகிய SLASSCOM சங்கம் ஆகியன இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன.
மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது. அத்தோடு, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகிய முக்கிய துறைகளுக்கு வருகை தந்திருக்கும் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இந்தத் துறைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனை நடைமுறைப்படுத்துவது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தமது முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன.
அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அத்தோடு, ஆவணப்படுத்தல் மற்றும் காலத்திற்கேற்ற கண்காணிப்பு உட்பட இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதிநிதிகள் முன்வந்தனர்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் வரையறுக்கப்பட்டிருந்தது.
இதனால் எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றன.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை விளக்கிய பிரதமர், IT மற்றும் BPM முதலீடுகளுக்கு இலங்கையை ஒரு முன்னணித் தளமாக மாற்றுவது தொடர்பான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, மறுசீரமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான முன்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.
மனித வளத்தை மேம்படுத்துதல், கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தேசியத் திட்டம் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளது.
அரச துறையை டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதையும், முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தொழில்களுக்கான மூலோபாய விரிவாக்கச் சந்தையாக இலங்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட NASSCOM மற்றும் SLASSCOM இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு முயற்சியாகும்.
அத்துடன் 2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் (Technology and Leadership Forum) SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக இது அமைந்தது என்றார்.
இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் SLASSCOM, NASSCOM ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
சுனாமியின் முழு வடிவத்தை முதல் முதலாக படமெடுத்த செயற்கைக்கோள்! - நாசா
சுனாமியின் முழு வடிவத்தை முதல் முதலாக படமெடுத்த செயற்கைக்கோள்! - நாசா
04 Dec, 2025 | 05:17 PM
![]()
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ஜூலை மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு பசுபிக் பெருங்கடலில் சுனாமி அலை எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்போது எழுந்த சுனாமியின் முழு அலை தோற்றத்தையும், செயற்கைக்கோளைக் கொண்டு தெளிவாக எடுத்த காட்சிப் பதிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.
SWOT (Surface Water and Ocean Topography) என்ற செயற்கைக்கோளே இந்த சுனாமி புகைப்படத்தை எடுத்திருக்கிறது. நாசா மற்றும் பிரெஞ்சு ஏஜென்சியின் கூட்டுமுயற்சியில் உருவான இந்த செயற்கைக் கோள் ஆறுகள், ஏரிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
கம்சட்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, பசுபிக் கடலிலும் இலேசான சுனாமி கிளம்பியபோது, SWOT செயற்கைக்கோள் தற்செயலாக சுனாமி எழுந்த கடற்பரப்புக்கு மேல் கடந்து சென்றது. அப்போது சுனாமியின் முழு அலை வடிவத்தையும் மிகத் தெளிவாக படமெடுத்தது.
சுனாமியை மிக உயர்ந்த தெளிவாக படமெடுத்த முதல் செயற்கைக்கோளாக SWOT கருதப்படுகிறது.
சுனாமி என்பது ஒற்றை அலையாக, சீராக சிதறாமல் மேலெழும்புவதாக இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில், சுனாமி ஆற்றலால் நடுக்கடலில் அலைகள் பிளவுபட்டு, சிதறி, பின்னர் மீண்டும் உருவாகும் என்பதையும் சுனாமியானது சிக்கலான ஆற்றல் வடிவத்தை கொண்ட ஓர் இயற்கைப் பேரனர்த்தம் என்பதையும் இந்த செயற்கைக்கோள் துள்ளியமான படத்தின் ஊடாக காண்பித்துள்ளது.

கருத்து படங்கள்
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களை அறிவித்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் இதுவரை 30,470க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகளில் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபா நிதிக்கு பங்களித்துள்ளது.
33 நாடுகளிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை (02) நிலவரப்படி, சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீள்கட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நிதியை வைப்பீடு செய்துள்ளனர்.
பேரிடருக்குப் பிந்தைய நாட்டின் மீள்கட்டமைப்பினை ஆதரிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள் திரண்டு வருவதால், பங்களிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார்.
டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.
அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அமைதித் திட்டம் குறித்து விவாதிக்கும் தனது பேச்சுவார்த்தையாளர்கள், செவ்வாய்க்கிழமை (02) மொஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைவர் “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து புட்டினின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
மேலும் தற்போது மொஸ்கோ உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.
மோதல்களினால் கடுமையான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அண்மைய வாரங்களில், தென்கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படையினர் மெதுவாக முன்னேறி வருகின்றன.